Sunday, December 7, 2025

காமராஜரை தொடர்ந்து இழிவு செய்யும் திமுக - ஸ்டாலின் அமைச்சர்கள் - சில்லறை முக்தார் எதிர்த்து போராட்டம்

 காமராஜரை தொடர்ந்து இழிவு செய்யும் திமுக - ஸ்டாலின் அமைச்சர்கள் - சில்லறைக்கு கூவும் முக்தார் எதிர்த்து போராட்டம்

https://www.youtube.com/watch?v=298xR0PHAwM

"காமராஜர் ஆட்சியில்தான் ஊழலும் தொடங்கியது, க*ள்ளநோட்டுகளும் புழக்கத்தில் வந்தது"
என்று அழுத்தம் திருத்தமாக தனது youtube சேனலில் பதிவு செய்துள்ளார், பத்திரிக்கையாளர் முக்தார்..
காமராஜரை ஒருஊழல்வாதி என்று இவர் பதிவு செய்ய ஒருமுக்கிய காரணம் உண்டு.. அது என்ன என்று இந்த பதிவின் கடைசியில் பார்ப்போம்....
காமராஜர் பற்றி இதுவரை யாரும் படிக்காத, பார்க்காத ஒருபக்கத்தை இங்கே பதிவிட விரும்புகிறேன்..



https://www.youtube.com/watch?v=savcy5EfHaM
"காமராஜரின் தாய் சிவகாமி அம்மாள் இ*றந்தவுடன் கண்ணதாசன் ஒருபதிவு செய்கிறார்..
"தனது தாயின் ம*ரணத்தின் போது இன்னொருவர் பணம் கொடுக்கிறார், பல்லாக்கு கட்டுபவர்கள் இலவசமாக கட்டிக்கொடுக்கிறார்கள்..
வந்தவர்களுக்கு ஒருவேளை சோறு போட இடமும் இல்லை, பணமும் இல்லை. 10 வருஷம் ராஜாங்கம் நடத்தினான் மகன் பெற்ற தாய் வாழ்ந்த கதை இப்படி".. இது கண்ணதாசன் காமராஜரின் தாய் சிவகாமியம்மாள் மறைந்த போது எழுதிய வாக்கியம்..
குமுதம் எழுத்தாளர் மணா மணா அவர்கள் 1995 ஆம் ஆண்டு காமராஜர் பற்றி குமுதம் வார இதழில் எழுத விருதுநகரில் உள்ள காமராஜர் வீட்டிற்கு போய் உள்ளார்.
அப்போது காமராஜரின் வீடு அரசுடைமை ஆக்கப்பட்டுள்ளது..
காமராஜர் வீட்டின் அருகில் இன்னொரு வாடகை வீட்டில் காமராஜரின் தங்கை நாகம்மாளின் மகளான கமலாதேவி வசிப்பதாக சொன்னதும், அங்குபோய் உள்ளார் குமுதம் பத்திரிக்கையாளர்.
இதோ குமுதம் பத்திரிக்கையாளர் மணா மணா அவர்கள் தன் குறிப்பில் பதிவு செய்தவை..
"அது மிக எளிய வீடு..
காமராஜர் மறைந்த பிறகு காமராஜருக்கு "பாரத ரத்னா" விருது கொடுக்கப்பட்ட போது அதைப் பெற்றுக் கொண்டவர்கள் நாகம்மாள் குடும்பத்தினர்கள்தான்..
63 வயதான காமராஜரின் மருமகளான கமலாதேவி வறுமையின் பிடியில் போயிருந்தார்..
கணவர் இ*றந்து விட அவருடைய மகன்கள் தீப்பெட்டி தொழிற்சாலையில் ரூ500 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.. அது மிகக்குறைந்த வருமானம்தான், அதனால் அவர்கள் குடும்பத்தை தவிக்க வைத்திருந்தது..
அந்தத்தாய் கமலாதேவி இந்த பத்திரிக்கையாளரிடம் கண்ணீர் மல்க சொன்னது..
"நாங்க ஏழு பேர் இருக்கோம், சாப்பிடவே கஷ்டமா இருக்குதுப்பா.. கஷ்டம் தாங்காமல் கலெக்டர் காலில் கூட விழுந்து அழுது கூட கேட்டுப்பார்த்து விட்டோம் எந்த வேலையும் கிடைக்கவில்லை தம்பி.. என்றபோது அருகில் அமர்ந்திருந்த காமராஜரின் தங்கையான நாகம்மாளின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது..
தன்மகள் அருகில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று, பெருக்கும் வேலை, பாத்திரம் கழுவும் வேலை, துணி துவைக்கும் வேலை செய்து வருகிறார்.. என்று மெல்லிய குரலில் தனது மகளின் நிலை குறித்து சொல்கிறார் காமராஜரின் தங்கை நாகம்மாள்..
பின், கமலாதேவி கையெடுத்து கும்பிட்டபடி குமுதம் பத்திரிக்கையாளரிடம் ஒருவேண்டுகோள் வைக்கிறார்..
"ஐயா, அருகிலுள்ள எங்கமாமா வீடு அரசுடமையாக்கப்பட்டுள்ளது.. அந்த வீட்டில், வீட்டை சுத்தம் செய்கிற வேலையாவது வாங்கி கொடுங்கள்,உங்களுக்கு புண்ணியமாக இருக்கும்..
அந்த வேலை செய்தாளாவது,கையில் ஐம்பதோ நூறோ கூலியாக கிடைக்கும் இல்லையா?..
ஆனால் எனது தாய் இதை அவமானம் என்கிறார்.. எனது மாமா காமராஜர் இருந்த நேர்மைக்கு கெட்ட பெயர் உண்டாகும் என்றும் கூறுகிறார்..
ஆனால் எங்கள் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறபோது எங்கள் மாமா வீட்டை சுத்தம் செய்வதால் என்ன அவமானம் இருக்கப் போகிறது எங்களுக்கு"
என்று அழுதபடி ஒரு முதல்வராக இருந்தவரின் மருமகள், சேலை முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டே சொன்னார்..
பத்து ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட ஒரு முதல்வரின் மருமகள் ஒரு பத்திரிக்கையாளரை கையெடுத்து கும்பிட்டு உதவி கேட்ட போது..
அந்த சூழ்நிலையில் உடல் எல்லாம் முள் குத்துவது போல உணர்ந்தேன் என்று பதிவு செய்துள்ளார் எழுத்தாளர் மணா மணா.
பின் 1995 ஆம் ஆண்டு மே மாதத்தில் குமுதத்தில்.. "வீட்டு வேலை செய்யும் காமராஜரின் மருமகள்" என்ற தலைப்பில் பத்திரிகையாளரின் கட்டுரை வெளியானது..
குமுதத்தில் இந்தக்கட்டுரை வெளிவந்த மறுவாரத்தில் ஒருஆச்சரியம் நிகழ்ந்தது..
அப்போது முதல்வராக இருந்த செல்வி.ஜெயலலிதா அவர்கள் காமராஜரின் குடும்பத்திற்கு ஒரு சொந்த வீடும்,அரசு வேலையும், அந்த குடும்பத்தின் பெயரில் வங்கியில் 11 லட்சம் ரூபாய் டெபாசிட் பண்ணுவதாகவும் அறிவித்தார்..
இந்த மகிழ்ச்சியான தகவலை விருதுநகரில் உள்ள கமலாதேவியின் வீட்டிற்கு நேரில் சென்று சொல்ல,சென்றார் பத்திரிக்கையாளர் மணா மணா,
இந்த பத்திரிக்கையாளரை கண்டவுடன் அந்த குடும்பத்தினர் அனைவரும் கையெடுத்து கும்பிட்ட படி கண்ணீர் மல்க நன்றி சொன்னார்கள்.. அப்போது தனது பிறவிப் பயனை அடைந்ததாக அந்த பத்திரிகையாளர் பதிவுசெய்துள்ளார்..
ஒரு பத்திரிக்கையாளரின் தரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு..
1967-ல் நடந்த தேர்தலில் காமராஜர் தோற்கவில்லை, மக்கள் தோற்று விட்டோம்.. என்பதுதான் நிதர்சனமான உண்மை..
காமராஜர் ஆட்சி, ஊழல் செய்தார் என்றால் தன் குடும்பம் அல்லவா செல்வாக்காக வாழ்ந்திருக்க வேண்டும்.. காமராஜர் ஆட்சியில் அவர் கண் முன் தெரிந்து எந்த தவறும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக நாம் சொல்லலாம்..
சரி, முக்தார் ஏன் அவ்வாறு பதிவு செய்கிறார் என்று பார்ப்போம்.. சிலமாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் முக்தார் பற்றிய ஒரு வீடியோ வைரலானது.. ஒரு மிகப்பெரிய பாரில் இன்றைய பல போலிபத்திரிக்கையாளர்கள் ஒன்றாக இருந்தார்கள்,மது அருந்தியப்படியான வீடியோ அது.. பலர் பார்த்திருப்பீர்கள்.. அதில் முத்தாரும் ஒருவர்.. அதில் அவர் பேசியிருந்தது "யாரின் பெயரை கெடுக்க வேண்டும் என்று நீங்கள் கூறி என்னிடம் பணம் கொடுத்தால், அதை நான் சிறப்பாக செய்வேன்' என்று சிரித்தபடி கூறினார்" நாங்கள் சொல்வதை எல்லாம் மக்கள் வேதவாக்கு போல் நம்புகிறார்கள் என்று மற்றொரு பத்திரிகையாளர் கூறினார்"..
இப்போது நம்நாட்டில்,இந்த சமுதாயத்தில் சத்தம் இல்லாமல் வரலாற்றை மாற்றும் வேலை நடந்து வருகிறது.. அதற்காக பல்லாயிரம் கோடிகளும் செலவு செய்யப்பட்டும் வருகிறது.. என்று சமுதாயத்தை நேசிக்கும் சமூக ஆர்வலர்கள் வேதனையுடன்பதிவிட்டு வருகிறார்கள்.. உதாரணமாக நம்மிடம் அரசியல்வாதிகள் சொல்வது காமராஜரின் ஆட்சியை நான் அமைப்பேன் என்று.... அந்த பிம்பம் உடைய வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்.. இதற்காகவே பத்திரிக்கையாளர் என்ற போர்வையில் பலர் பேர்கள் களத்தில் இறக்கப்பட்டுள்ளார்கள்..
ஆனால் அவர்கள் எல்லாம் ஒன்றை மட்டும் மறந்து விட்டார்கள்..
"பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை.. உண்மை எப்போதும் தூங்குவதுமில்லை" என்பதை..
என்னுடைய கருத்தாக அனைத்து உறவுகளுக்கும் இங்கு நான் இறுதியாக சொல்வது..
நேதாஜி அவர்கள் சொன்னதைத்தான்..
"ஒரு கட்சியின் பின்னால் நின்று கொண்டு அந்தக் கட்சி சொல்வதற்கெல்லாம் சரி என்று தலையாட்டுவது என் செருப்பிற்கு சமம்" என்பதை மனதில் வைத்துக் கொண்டு இணையத்தில் வரும் இதுபோன்ற தவறானசெய்திகளை ஆராய்ந்து பார்த்து உண்மையை அறிந்து கொள்ளுங்கள்.. (pic Help-AI)
நன்றி..
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்..
சத்தியவர்மன்.VN.
(Aththanoortex)

காமராஜர்/கள்ள நோட்டு [Fact Check]
காமராஜர் அவர்கள் கள்ள நோட்டு அடித்தார் என்றும் அதுவும் தனது நாடார் இனமக்களை முன்னேற்றுவதற்காக அவ்வாறு செய்தார் என்றும் சில கிறுக்கு பயலுங்கோ உளறுவது என்பது ரொம்ப நாளா நடந்துகொண்டு தான் இருக்கு. இதுபோன்ற பல வதந்திகளை பரப்பி தான் விஞ்ஞான ஊழல் புகழ் கருணாநிதி காமராஜரை தோற்கடித்தார். சரி காமராஜரை தோற்கடித்த பின்னர்?
காமராஜர் எண்ணலாம் தப்பு செய்ததா திருவாளர் கருணாநிதி பொய் சொன்னாரோ அந்த தப்புகளைலாம் கருணாநிதி பின்னர் உண்மையிலேயே செய்ததாக சிலபேர் பேசிக்கறாங்க.
சரி விஷயத்துக்கு வருவோம்.
காமராஜர் ஆட்சியில் உண்மையில் நடந்தது என்ன?
கள்ளநாேட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்கள்.
1] ஜி.கிருஷ்ணன் நாயுடு முதல் குற்றவாளி
2) பத்மநாபன்
காவல் ஆய்வாளர் அருப்புக்காேட்டை
3) கே.எஸ்.பி. மணி நாயர்
4]கே.ஆர். ஆண்டனி
5]எம்.சி. குரியகோஸ்
6]கே.ஏ. ஹமீத்
7]தம்பு செட்டி
8]பெரியசாமி
மருதாச்சல கவுண்டர்
9]பாலகிருஷ்ணா முரளிதர் ரெட்டி
மற்றும்
10] கே.ஸ்ரீதரன் நாயர் ஆகியாேர்
பின்ன எதுக்கு இவனுங்க ளாம்
காமராஜர் கள்ளநோட்டு அடித்தார், ரூலட், அன் ரூலட் நோட்டு அடித்தார் என்று சொல்லி விழுந்து புரளுறாங்க?
ஏன் என்றால் நம் நாட்டின் சுதந்திரத்திற்கு முன்பிலிருந்து இந்த வேலையை செய்துகொண்டிருந்த மிகப்பெரும் திருட்டு கும்பலை கூண்டோடு பிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுத்ததே காமராஜர் தானே.
அந்த கடுப்பில் தான் இந்தக்கேடுகெட்ட கும்பலை சார்ந்தோர்கள், அதன்வழிவந்த பலர் இன்னமும் காமராஜரின் நற்பெயரை களங்கப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.
சமீபத்தில் டெல்லியில் ஆக்கிரமிப்புகள் கெடுக்காலத்திற்கு பின்பும் அகற்றப்படாமல் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பொழுது RSS கார் பார்க்கிங்கிற்காக 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு கோவிலை டெல்லி அரசாங்கம் இடித்ததாக ஒரு வதந்தி பரவியது. உண்மையில் டெல்லியில் அவ்ளவு பழமைவாய்ந்த கோவில் இல்லை. அதுபோன்ற பல பழமைவாய்ந்த கோவில்களை தகர்த்து அந்த மாதிரியான இடங்கள் தான் குதுப்மினார் போன்ற இடங்களாக மாறியது என்று சொன்னால் சிலருக்கு கோபம் வரும். கோபம் வந்தாலும் உண்மை அது தானே. எதற்கு இதை இப்பொழுது சொல்கிறேன் என்றால் இன்றைய நவீன காலத்திலேயே இதுபோன்ற புரளிகள் வேகமாக பரவுகிறது. சம்பந்தப்பட்ட தகவல்கள் உண்மையா, பொய்யா என்பதை Chat GPT போன்ற AI ஆப்களில் நாமே Fact Check செய்து உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். இந்த காலத்திலேயே இவ்ளவு வதந்திகளை பரப்புககிறார்கள் என்றால் அன்று காமராஜர் ஆட்சி நடந்த காலத்தில் இந்த திருட்டு திராவடியா கும்பல் எண்ணலாம் வதந்திகளை பரப்பி இருப்பார்கள்?
இதற்கு முன்பு லேகியம் விற்றுக்கொண்டிருந்த முக்தார் எனும் தற்குறி சமீபத்தில் காமராஜர் குறித்து அவதூறு பரப்பியதன் விளைவாக கடந்த 3 நாட்களில் இந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது.
முக்தார் திமுக கைக்கூலி என்பதால் அவன் மீது பல்வேறு தேசபக்தர்கள் மற்றும் நாடார் சங்கம் சார்ந்தவர்கள் புகார் அளித்தும் இன்னும் முக்தாரை கைது செய்யவில்லை.
உண்மையில் காமராஜர் மீது பற்று உள்ள தேசப்பற்றாளர்கள் மற்றும் காமராஜரின் நாடார் ஜாதியை சேர்ந்தவர்கள் என்ன செய்யணும்?
இதற்கு காரணமான திமுக & கூட்டணி கட்சிகளை தோற்கடிப்போம் என்று சபதம் ஏற்க வேண்டும்.
அதை விட்டுட்டு முக்தார் இப்படி பேசியதற்கு பின்னால் தேவர் இனத்தை சேர்ந்த சிலர் சதி இருக்கு என்றும் அதனால் திரு நயினார் நாகேந்திரன் போன்ற தேவர் இனத்தை சார்ந்த நபர்களை அரசியலில் தோற்கடிக்க வேண்டும் என்று சில அல்லக்கைகள் நாடார்கள் போர்வையில் கதறிக்கொண்டு இருக்கிறார்கள்.
திமுக சார்பாக வரும் சட்டசபை தேர்தலில் நிற்கும் தேவர் சமுதாயத்தை சார்ந்த வேட்பளார்களை தோற்கடிப்போம் னு லாம் அவுங்க சொல்ல மாட்டாங்க. கூவத்தூர் மாமா என்று அன்போடு அழைக்கப்படும் கருணாஸ் திமுக சார்பாக அரசியலுக்கு ரீ என்ட்ரி கொடுத்தாலும் கொடுக்கலாம். சரி அதுலாம் இருக்கட்டும்.
நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தேவர் சமுதாயம் தான். அவர் இறுதிவரை தமிழரான காமராஜரை மட்டுமே ஆதரித்தார். அதுவும் எந்த ஒரு பிரதிபலனும் இல்லாமல். அத்தகைய காமராஜரையும் தோற்கடித்து அவரை ஆதரித்த சிவாஜி அவர்களையும் மிக கேவலமாக தோற்கடித்த ஆட்டு மந்தை கூட்டம் நம்மை சுற்றி நிறைய வாழ்ந்து கொண்டிருக்கு.
ஒரு விஷயத்தை அனைவரும் நன்றாக புரிந்துகொள்ளுங்கள். அடிப்படையில் எனக்கு தேசப்பற்று நிறைய உண்டு என்பது என் நண்பர்கள் பலருக்கு தெரியும். அதாவது இந்தியன் எனும் ஒருமைப்பாட்டை ஜாதி, மத, மொழி ரீதியாக பிரித்து பிரித்தாளும் சூழ்ச்சியை சில தேச விரோதிகள் செய்வதை போல் தமிழர்களின் விரோதிகளான திராவடியா கும்பல் தமிழன் எனும் ஒற்றுமையை சீர்குலைக்க நம்மை ஜாதி ரீதியாக பிரித்து குளிர்காயும் வேலையை செய்கிறார்கள். மத ரீதியாக தமிழ்நாட்டில் செய்வது அடுத்த கட்டம் தான். தமிழனாகவும் நாம் ஒருங்கிணைந்து விடக்கூடாது. தமிழ்நாட்டில் பெரும்பான்மையாக உள்ள ஹிந்துக்கள் ஜாதி, மொழி இந்த அடையாளங்களை கடந்து ஹிந்துவாகவும் ஒன்றிணைந்து விடக்கூடாது என்பது தான் இந்த தீய திராவடியா கும்பலின் எண்ணம்.
கோட்ஸே காந்தியை கொன்றது என்னை பொறுத்தவரை மன்னிக்க முடியாத தவறு கோட்ஸேவை நான் ஆதரிக்கவில்லை. அதே சமயம் கோட்ஸே தனது கையில் இஸ்மாயில் னு பச்சைகுத்திக்கொண்டு தான் காந்தியை சுட்டுக்கொன்றான் அவ்வாறு அவன் செய்ததற்கு காரணம் ஹிந்து- இஸ்லாமியர்களுக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கோட்ஸே அப்படி செய்தான் எனும் இந்த வாட்ஸ் அப் வசந்தி சீ வதந்தி இதுவரை பல லக்ஷம் முறை வாட்ஸ் அப் மற்றும் முகநூலில் பரப்பப்பட்ட ஒன்று. இது உண்மையா என்று Chat GPT கிட்ட கேட்டால் சாட்டே காண்டு ஆகிவிட்டது.
அடேய் யாருடா நீங்களாம் கோட்ஸே தனது கைகளில் இஸ்மாயில் னு பச்சைக்குத்தி கொண்டான் எனும் தகவல் சம்பந்தப்பட்ட FIR அல்லது ஜட்ஜ்மென்ட் என எதிலுமே இல்லை. எனக்கே தெரியாத பல வரலாறுகளை எனக்கு சொல்லி தருகிறீர்களே என்று Chat GPT நம்பளை கலாய்க்கறான்யா.
இதுபோல் எவ்ளவு விஷயங்களை நானே கடந்த காலங்களில் உண்மை னு நம்பி ஏமாந்து இருக்கேன்.
அதுவும் தமிழ்நாட்டில் தான் சமீபகாலங்களில் ஜாதி ரீதியான பிரிவினைகளை செய்யும் சக்திகள் தலைவிரித்து ஆடுகிறது. முதலில் தேவர், கவுண்டர், வன்னியர், உடையார், கோனார், நாடார், செட்டியார், முதலியார் இதுபோல் பல்வேறு இனங்களை பட்டியல் பிரிவுகளுக்கு எதிராகவும், பட்டியல் பிரிவுகளை இதுபோன்ற சமூகங்களுக்கு எதிராகவும் சிண்டு மூட்டி விட்டு கலவரம் செய்வது.
முதலில் தேவர்- தேவேந்திரர் சமுதாயத்துக்கு எதிராக சில மோதல்களை ஏற்படுத்த முயற்சி இப்பொழுது ஏற்கனவே எரிந்து புதைந்து போன தேவர்- நாடார் மோதலை மீண்டும் உருவாக்க சில அல்லக்கைகள் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். சௌத்ரி தேவர் போல் சில போலிகள் தேவர் ஜாதி வேடமிட்டு இத்தகைய கலவரங்களை உருவாக்க முயற்சி செய்கிறார்கள்.
தமிழக பாஜக தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் அணைத்து சமுதாய மக்களிடமும் ஜாதி, மொழி கடந்து அன்பாக பழகுபவர். தான் பெரிய பண்ணையார், 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட சொத்து என்கிட்ட இருக்கு எனும் பந்தா, Body Language கொஞ்சம் கூட இல்லாதவர். 2017 இல் ஜெயா ஆக்டிவா இருந்த பொழுதே அதிமுகவில் இருந்து பாஜக க்கு வந்தார். சரி அந்த கதை லாம் இருக்கட்டும்.
என்னை நீங்களாம் பாஜக காரன் என்று நினைத்தாலும் எனக்கு கவலையில்லை. ஏன் என்றால் தற்சமயம் அது தான் உண்மை. அதே சமயம் நான் எதிர்கட்சியாகவே இருந்தாலும் நயினார் போன்ற நல்லவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று தான் நினைப்பேன். PTR திமுக காரர் என்றாலும் அவர் ஒரு மிஸ்டர் கிளீன் எனும் முறையில் அவர் மீது என்றும் எனக்கு ஒரு தனி மரியாதை உண்டு. சரி அதுலாம் இருக்கட்டும்.
ஒரு மிகப்பெரிய ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் விதத்தில் கேவலமான சில்லறை வேலை செய்த முக்தாரை தமிழ்நாடு அரசாங்கம் ஒன்று கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் சார்ந்தோர்கள் அந்த எச்ச மீது நீதிமன்றங்களில் பல வழக்குகளை தொடுத்து அவனை உள்ளே தள்ள வேண்டும்.
அணைத்து வீட்டு பிள்ளைகளும் படிக்க தான் ராஜாஜி காலத்தில் மூடப்பட்ட 6 ஆயிரம் அரசு பள்ளிகளை திறந்தது மட்டும் அல்லாமல் புதிதாக 12 ஆயிரம் அரசு பள்ளிகளை காமராஜர் கட்டினார் மேலும் பல்வேறு நீர் மேலாண்மை திட்டம், வேலை வாய்ப்பு திட்டம் இப்படி காமராஜர் அவர்கள் செய்த பல்வேறு நல்ல விஷயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அவ்வாறு இருக்க காமராஜர் வந்ததற்கு பின்னர் தான் தமிழ்நாட்டில் நாடார்கள் தொழில்துறையில் சாதித்தார்கள் என்பதுபோல் சிலர் பேசுவது வன்மத்தின் உச்சம்.
காமராஜர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தொழிலில் உச்சம் தொட்ட Standard பட்டாசு, தினத்தந்தி பத்திரிகை இதுபோல் நாடார்களின் 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை பட்டியலிட முடியும்.
தமிழை தாய்மொழியாக கொண்ட ஒருவன் முன்னேறினால் ஒரு தமிழன் முன்னேறி இருக்கான். பல ஆயிரம் பேருக்கு அவன் வேலை வாய்ப்பை கொடுக்கிறான் நாம் பிறந்த இந்த மண்ணை வளப்படுத்துகிறான் என்று மகிழ்ச்சி அடைந்து வாழ்த்தாமல் அவன் என்ன ஜாதி என்று பார்த்து நமது ஜாதியாகவோ அல்லது நமக்கு பிடித்த ஜாதியாகவோ இருந்தால் வாழ்த்துவது வேறு ஜாதியாகவோ நமக்கு பிடிக்காத ஜாதியாகவோ இருந்தால் எதாவது குறை சொல்வது எதற்கு இந்த மானம்கெட்ட பிழைப்பு?
செஸ்ஸில் மிகப்பெரிய சாதனைகளை செய்திருக்கும் குகேஷ், பிரக்யானந்தா ஆகட்டும் அல்லது சமீபத்தில் கபடியில் மாபெரும் சாதனை செய்திருக்கும் நமது சென்னை மண்ணின் தவப்புதல்வி சகோதரி கார்த்திகா ஆகட்டும் இதுபோன்றவர்கள் லாம் National Treasure. இவர்கள் எல்லாம் ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான பொக்கிஷங்கள். அதை விட்டுட்டு நம் நாட்டின் விளையாட்டுத்துறையில் யாராவது ஏதாவது சாதனை செய்தால் கூட அதை ஒட்டுமொத்த இந்தியாக்கான அங்கீகாரமாக பார்க்காமல் சம்பந்தப்பட்ட அந்த விளையாட்டு வீரர் அல்லது வீராங்கனை ஆகியோரின் ஜாதி, மதம், மொழி இதைலாம் பார்த்துட்டு அதுக்கு அப்புறம் எடுக்கற ஒரு ஸ்டாண்ட் இருக்கு இல்ல. அந்த மாதிரி கேவலமான ஸ்டான்ட் எடுக்கக்கூடிய, இந்த மாதிரி நாட்டுக்கு தேவை இல்லாத இந்த உலகத்துக்கே தேவை இல்லாத பூமியின் பாரங்களை மட்டும் தேடிப்பிடித்து கொல்லும் ஒரு புதிய வகை வைரஸ் உருவானால் அது ரொம்ப நல்லா இருக்கும் என்று நினைக்கிறேன்.




No comments:

Post a Comment