Friday, January 16, 2026

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைகழக 31 ஏக்கர் க்கிரமித்த நிலத்தை கையகப்படுத்த உச்ச நீதிமன்றம் இடைகால தடை

தமிழத்தில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பன்னாட்டு அளவில் பேசப்படும் ஒன்றான சாஸ்த்ரா பல்கலைகழகம்; தொடர்ச்சியான நிலம் என தனக்கு உரிமையான இடத்தின் இடையில் இருந்த இடத்தையும் பயன்படுத்தி அதை அனுமதிக்க கொடுத்த கோரிக்கைகளை தமிழர் விரோத திராவியார் அரசுகள் நிராகரித்ததே இதற்கு காரணம்.

எனக்கு நினைவில் பல அரசு உதவி பெறும் அன்னிய மதவாதிக்கள் பள்ளிகள் கோவில்/அரசு நிலத்தில் உள்ளதை வெளியேற உயர்நீதிமன்ற உத்த்ரவை திமுக நிறைவேற்றாமல் சட்ட ஓட்டைகளால் காப்பாற்றி வருகிறது. உ-ம்: விக்ரமசிங்கபுரம் அமலி பள்ளி 2014ல் தீர்ப்பு, கடலூர் தேவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் இடத்தில் செயி.ஜோசப் பள்ளி 5 ஐஏஎஸ் அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு என மன்னிப்பு கேட்டனர்

தஞ்சாவூர் அருகே உள்ள சாஸ்த்ரா பல்கலைகழகம் ஆக்கிரமித்துள்ள 31 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறபித்த ஆணைக்கு, உச்ச நீதிமன்றம் இடைகால தடை விதித்துள்ளது. இந்த நிலத்திற்கு பதிலாக வேறு மூன்று இடங்களில் சாஸ்த்ரா பல்கலைகழகம் தமிழக அரசுக்கு அளிக்க முன் வந்த நிலங்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்யும்படி தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்த தீர்ப்பு பற்றி பல்வேறு பதிவுகளில் பேசப்பட்டாலும், ஒரு முக்கிய அம்சம் கவனப்படுத்தப்படவில்லை. ’லாப நோக்கில் நடத்தப்படும் ஒரு தனியார் நிறுவனம் இது போன்ற நில ஆக்கிரமிப்பை செய்திருந்தால், அதை அணுகும் முறை வேறாக இருந்திருக்கும். நிலத்தை மீட்க்க உத்தரவிட்டிருப்போம். ஆனால் லாப நோக்கமில்ல்லாமல், கல்வி சேவை வழங்கி வரும் ஒரு கல்வி நிறுவனத்தை அப்படி அணுக முடியாது, எனவே விதிவிலக்காக அதற்கு இந்த சலுகையை அளிக்கிறோம்’ என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆனால் சாஸ்த்ரா உள்ளிட்ட அனைத்து தனியார் பல்கலைகழகங்களும் லாபம் ஈட்டும் நிறுவனங்கள் தாம். இது ஒரு open secret. ஆனால் சட்டப்படி இவை அனைத்தும் தர்ம ஸ்தாபனங்களாக, educational charitable trustகளாக தான் பதிவு செய்யப்பட்டு, இயக்கப்படுகின்றன. இந்தியாவில் தனியார் கல்வி நிறுவனங்கள் லாபம் ஈட்ட சட்டபப்படி அனுமதி இல்லை. ஆனால் சட்ட விரோதமாக லாபம் ஈட்டிக்கொள்ளலாம். அதில் ஒரு பங்கை லஞ்சமாக உயர் கல்வி துறையினருக்கும், வருமான வரித் துறையினருக்கும் கொடுத்து, சமாளிக்கலாம். இது தான் பல ஆண்டுகால நடைமுறை !!

மாணவர் சேர்க்கையின் போது கருப்பு பணத்தில் அதிக தொகைகளை ‘நன்கொடையாக’ பெறுவது, பொய்யான செலவு கணக்கு எழுதி, டிரஸ்ட்களில் இருந்து ‘லாபத்தை’ கள்ளத்தனமாக வெளியே எடுத்து, டிரஸ்டீகள் பிரித்துக் கொள்வது ஆகியவை இங்கு சகஜமான நடைமுறைகள்.

இதற்கு ஒரே தீர்வு, தனியார் மருத்துவமனைகள் போல, தனியார் கல்வி நிறுவனங்களையும் லாபத்தில் இயங்க சட்டப்படி அனுமதித்து, அவற்றின் மீது வருமான வரி விதிப்பது தான். தற்போது தர்ம ஸ்தாபனங்களாக இயங்கும் கல்வி நிறுவனங்கள் மீது வருமான வரி விதிக்கப்படுவதில்லை. இந்த சீர்திருத்தத்தை செய்ய எந்த அரசும் தயாரில்லை. கல்வி ‘வணிகமயமாக்கப்படுகிறது’ என்று பெரும் எதிர்ப்பு கிளம்பும் என்பதால். எனவே ‘the emperor has no cloths’ என்ற கதையைப் போல, கல்வி நிறுவனங்கள் லாப நோக்கமற்ற தர்ம ஸ்தாபனங்கள் என்று அனைவரும் pretend செய்து கொண்டே, கருப்பு பணத்தில் லாபத்தை வெளியே எடுப்பது தொடரும். இத்தகைய உச்ச நீதிமன்ற தீர்ப்புகளும் வெளியாகும்..


No comments:

Post a Comment

பொள்ளாச்சி 1965 ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ராணுவம் வந்த பின் 10 பேர் மட்டுமே சுட்டுக் கொல்லப்பட்டனர் - ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி எம்.ஜி. தேவசகாயம்

பராசக்தி (2025) படத்தில் காண்பிக்கப்பட்ட காட்சிகளில், 1965ம் ஆண்டு பொள்ளாச்சியில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பில் போராட்டத்தில் கலந்து கொண்ட 200...