Saturday, November 29, 2025

6,000 ஏர்பஸ்-ஏ320 சேவை தற்காலிக நீக்கம் -பாதுகாப்பு குறைவு சிக்கல் நீக்க வேண்டும்

 6,000 'ஏர்பஸ்' விமானங்கள் நிறுத்தம்: இந்தியாவிலும் சேவை பாதிக்கும் ஆபத்து  நமது நிருபர் ADDED : நவ 30, 2025 

 


பாரிஸ்: உலகம் முழுதும் 'ஏர்பஸ் ஏ320' ரக விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதன் மென்பொருளை புதுப்பிக்க நிறுவனம் கூறியிருந்த நிலையில், அவற்றை புதுப்பிக்காத 6,000 'ஏர்பஸ் ' விமானங்கள் சேவையில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் 'ஏ320' ரக 'ஏர்பஸ்' விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தின் கணினி சில நிமிடங்களுக்கு செயலிழந்தது.

இதனால் ஆட்டோ பைலட் எனும் தானியங்கி இயக்கம் தொடர்ந்து இயங்கியதாகவும், விமானம் பறக்கும் உயரம் சிறிது குறைந்து பின் சமநிலைக்கு திரும்பியதாகவும் தகவல் வெளியானது.

இது விமானத்தின் சாதாரண பயணத்தை பாதிக்கவில்லை என்றாலும், பயணியரின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது என்பதால் இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இதில் கணினி மென்பொருள் மற்றும் வன்பொருளில் ஏற்பட்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டது. விமான நிறுவனங்கள் உடனடியாக மென்பொருள் அல்லது வன்பொருள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி  ள்ளது.

இதையடுத்து, உலகளவில் உள்ள விமான சேவை நிறுவனங்கள் தங்களிடம் உள்ள 'ஏ320' ரக ஏர்பஸ் விமானங்களின் மென்பொருள் மற்றும் வன்பொருளை புதுப்பித்துக்கொள்ளுமாறு ஏர்பஸ் நிறுவனம் அறிவுறுத்தியது.

இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றாலும், கட்டாயம் புதுப்பிக்க வேண்டும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

இதற்கான காலக்கெடு இன்றுடன் முடிகிறது. இந்நிலையில், புதுப்பித்தல் பணி மேற்கொள்ளாத விமானங்களை இயக்குவதற்கு ஐரோப்பிய யூனியன் விமான பாதுகாப்பு முகமை தடை விதித்தது.

இந்நடவடிக்கை விமான இயக்கத்தில் இடையூறுகளை ஏற்படுத்தும் என்றாலும், பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய இந்த புதுப்பிப்பு அவசியம் என விமான பாதுகாப்பு முகமை வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய யூனியன் விமான பாதுகாப்பு முகமையின் நடவடிக்கையை இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகமும் கடைப்பிடிக்கிறது. தேவையான புதுப்பித்தல்களை செய்யாத எந்தவொரு ஏர்பஸ் விமானத்தையும் இயக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் இண்டிகோ விமான நிறுவனம் 370; ஏர் இந்தியா 167; என்ற எண்ணிக்கையில் 'ஏர்பஸ் ஏ320' விமானங்களை இயக்கி வருகின்றன. இந்த மூன்று நிறுவனங்களும் ஏற்கனவே மென்பொருள் புதுப்பிப்பு பணிகளை துவங்கிவிட்டன.

இதனால் பயண அட்டவணையில் அடுத்த சில நாட்களுக்கு மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பயணியருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்திய விமான நிறுவனங்கள் வெளியிட்ட அறிக்கை: விமானத்தின் மென்பொருள் புதுப்பிப்பு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. 40 சதவீதத்துக்கும் அதிகமான விமானங்களில் ஏற்கனவே புதுப்பிப்பு பணிகள் முடிந்துவிட்டன. ஐரோப்பிய யூனியன் விமான பாதுகாப்பு முகமை விதித்த காலக்கெடுவுக்குள் இந்த புதுப்பிப்புகள் நிறைவடையும். இதன் காரணமாக எந்த விமானமும் ரத்து செய்யப்படமாட்டாது -இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நோபல் பரிசு பெற்ற தமிழர் விஞ்ஞானி சு.சந்திரசேகர் ஐயாவை போற்றும் அமெரிக்க அறிவும், மதிக்காத திராவிடம்

  சுப்பிரமணியன் சந்திரசேகர் — ஒரு தமிழரின் மறைக்கப்பட்ட பெருமை https://x.com/kevinpaulshow/status/1995862971164361161 சுப்பிரமணியன் சந்திரசே...