Thursday, November 27, 2025

பணிந்த ஜோசப் விஜய் & சன் பிக்சர்- #சர்கார் - இலவசம் எதிரான சீன்கள்- நீக்கம்

பணிந்தது விஜய் சர்கார்... நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா? Published by:  Last Updated:November 09, 2018 சர்கார் படத்தில் இலவசங்களை தீயிட்டுக் கொளுத்தும் 5 நொடியுள்ள காட்சி நீக்கப்பட்டு மறுதணிக்கை செய்யப்பட்டுள்ளது.

https://tamil.news18.com/news/entertainment/sarkar-has-been-re-censored-and-controversial-scene-have-been-removed-67661.html


சர்கார் படத்தில் இலவசங்களை தீயிட்டுக் கொளுத்தும் 5 நொடியுள்ள காட்சி நீக்கப்பட்டு மறுதணிக்கை செய்யப்பட்டுள்ளது.
 
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் சர்கார். 
இந்தப் படத்தை சர்ச்சைகளும் விடாது துரத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசின் இலவசத் திட்டங்களை படம் விமர்சிப்பதாகவும் , கோமளவல்லி என்ற ஜெயலலிதாவின் இயற்பெயர் படத்தில் பயன்படுத்தியிருப்பதற்கும் அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் படம் மீண்டும் மறுதணிக்கை செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி இலவச பொருட்களை தீயிட்டுக் கொளுத்தும் 5 நொடி காட்சி நீக்கப்பட்டிருக்கிறது. இந்த காட்சியில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் நடித்திருந்தார்.

சர்கார் படத்தில் இடம்பெற்ற சர்ச்சை காட்சிகள் நீக்கம் Byமாலை மலர்9 நவம்பர் 2018

விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘சர்கார்’ படத்தில் இடம் பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் மறுதணிக்கையில் நீக்கப்பட்டுள்ளது. #Sarkar #Vijay
“சர்கார்” திரைப்படத்தில் அ.தி.மு.க.வை விமர்சனம் செய்யும் வகையில் வசனங்களும், காட்சிகளும் அமைந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது. ஜெயலலிதாவின் இயற்பெயரான “கோமளவல்லி” எனும் பெயர் வரலட்சுமி நடித்துள்ள வில்லி வேடத்துக்கு வைக்கப்பட்டிருப்பதால் அ.தி.மு.க.வினர் கோபம் அடைந்துள்ளனர்.
மேலும் தமிழக அரசின் இலவச திட்டங்களை குறை கூறுவது போன்றும், மிக்சி, கிரைண்டர், மின் விசிறி உள்ளிட்ட இலவச பொருட்களை அள்ளிப் போட்டு தீ வைப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றதால் அ.தி.மு.க. அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். சர்ச்சைக்குரிய வசனங்கள், காட்சிகளை நீக்க வலியுறுத்தி, நேற்று மாலை தமிழகம் முழுவதும் சர்கார் படத்தை எதிர்த்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
https://www.maalaimalar.com/cinema/topnews/2018/11/09123546/1212040/Sarkar-controversial-scenes-Removal.vpf

No comments:

Post a Comment

நோபல் பரிசு பெற்ற தமிழர் விஞ்ஞானி சு.சந்திரசேகர் ஐயாவை போற்றும் அமெரிக்க அறிவும், மதிக்காத திராவிடம்

  சுப்பிரமணியன் சந்திரசேகர் — ஒரு தமிழரின் மறைக்கப்பட்ட பெருமை https://x.com/kevinpaulshow/status/1995862971164361161 சுப்பிரமணியன் சந்திரசே...