பலதார திருமண தடை மசோதா- கணவன்களுக்கு 7 ஆண்டுகள் சிறை... வருகிறது புதிய மசோதா
Assam Anti-Polygamy Bill: 7 ஆண்டுகள் சிறை
அசாம் கிளர்ச்சியில் உயிர்நீத்த தியாகிகளின் நினைவிடமான ஸ்வாஹித் ஸ்மாரக் ஷேத்ராவுக்கு வருகை தந்து உரையாற்றிய முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, இரண்டாவது அல்லது அதற்கு மேல் திருமணம் செய்பவர்களுக்கு சுமார் 7 ஆண்டுகள் சிறை வழங்கப்படும் என தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நவம்பர் 25 ஆம் தேதி, பலதார மண எதிர்ப்பு மசோதாவை அஸ்ஸாம் சட்டமன்றத்தில் கொண்டு வர இருக்கிறோம். ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களைச் செய்தால், அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்" என்றார். இந்த மசோதா அம்மாநிலத்தில் பெரும் விவாதத்தை எழுப்பியிருக்கிறது. இந்த மசோதாவின் மீது பலருக்கும் கேள்வியும் இருக்கிறது.
Assam Anti-Polygamy Bill: இந்த பகுதிகளுக்கு மட்டும் கிடையாது
இந்த மாத தொடக்கத்தில் அசாம் பலதார திருமண தடை மசோதாவுக்கு அமைச்சரவை அங்கீகரித்தபோது இந்த விவகாரம் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்தன. இந்த மசோதா அசாமில் பலதார திருமண நடைமுறைகளை கட்டுப்படுத்தவும், அவற்றை முற்றிலும் ஒழிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மசோதா அத்தகைய திருமணங்களுக்கு தடை விதிக்க முன்மொழிகிறது. அதேநேரத்தில், அரசியலமைப்பின் 6வது அட்டவணையின்கீழ் வரும் அசாமின் சில பகுதிகளுக்கு இந்த சட்டம் பொருந்தாது.
Assam Anti-Polygamy Bill: பெண்களுக்கு பாதுகாப்பளிக்கும் மசோதா
பலதார திருமண ஏற்பாடுகளால் உணர்வு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படும் பெண்களுக்கு பாதுகாப்புகளை வழங்க இந்த மசோதா நோக்கம் கொண்டுள்ளதாக அசாம் முதல்வர் கூறினார். ஒரு ஆண் தனது தற்போதைய மனைவியிடம் இருந்து சட்டப்பூர்வமாகப் பிரியாமல், இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள். இதுபோன்ற நடைமுறைகளால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முறையான, பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குவதற்கான ஒரு படியாக இந்த மசோதா இருக்கும் என்றார்.
பலதார திருமணத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் மிகுந்த வேதனையையும் கஷ்டத்தையும் அனுபவிக்க வேண்டியிருப்பதால், அவர்களுக்கு இழப்பீடு வழங்கவும் அஸ்ஸாம் பலதார மண தடை மசோதாவை கொண்டுவர முயல்கிறது என்று அவர் கூறினார். "பலதார திருமண நடைமுறைகளின் கொடுமையில் இருந்து சமூகத்தைக் காப்பாற்ற, சமூகத்தை நெறிப்படுத்துவதே இந்த மசோதாவின் நோக்கமாகும்," என்று முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்தார். இந்த விதியை மீறும் எவருக்கும் சட்டம் கடுமையான விதிகளைக் கொண்டுள்ளது என்று முதல்வர் வலியுறுத்தினார்.
லவ் ஜிஹாத் தொடர்பான வழக்குகளை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட தனி மசோதா குறித்து அவரிடம் கேட்டபோது, "அதற்கான மசோதாவைக் கொண்டுவருவதற்கான செயல்முறையும் நடந்து வருகிறது" என்று அவர் பதிலளித்தார். https://zeenews.india.com/tamil/india/anti-polygamy-bill-2025-will-be-introduce-in-assam-assembly-on-november-25-latest-news-updates-7-years-jail-for-criminals-623219

No comments:
Post a Comment