Monday, December 1, 2025

சென்னையில் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி 5.78 ஏக்கர் இடத்தை ரூ.1,212 கோடிக்கு வாங்கிய பாஷ்யம் குழுமம்

சென்னையில் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கி 5.8 ஏக்கர் (ரூ. 48,100/Sft; கிரவுண்ட்- ரூ.11.5 கோடி) இடத்தை ரூ.1,212 கோடிக்கு வாங்கிய பாஷ்யம் குழுமம்

செய்திப்பிரிவுUpdated on:  02 Dec 2025 https://www.hindutamil.in/news/business/bhashyam-group-buys-58-acres-of-land-from-standard-chartered-bank-in-chennai-for-rs-1212-crore 

Devapriya view -இந்த இடம் உள்ள பகுதி ரோடு அகலம் அதீத FSIக்கு போதாது எனும் நிலையில் இது மிக அதைகமான விலை

சென்னை: சென்னை நுங்​கம்​பாக்​கத்​தில் ஸ்டாண்​டர்டு சார்ட்​டர்டு வங்​கி​யிட​மிருந்து 5.8 ஏக்​கர் இடத்தை ரூ.1,212 கோடிக்கு பாஷ்யம் குழு​மம் வாங்​கி​யுள்​ளது. 

சென்னை ரியல் எஸ்​டேட் நிறு​வனங்​களில் பிரபல​மான பாஷ்யம் குழு​மம், ரியல் எஸ்​டேட் வரலாற்​றில் மிகப்​பெரிய சாதனை படைக்​கும் வகை​யில் நுங்​கம்​பாக்​கம், ஹாடோஸ் சாலை​யில் உள்ள 5.8 ஏக்​கர் இடத்தை ஸ்டாண்​டர்டு சார்ட்​டர்டு வங்​கி​யிட​மிருந்து வாங்​கி​யுள்​ளது.

இந்த நிலத்​தின் மொத்த மதிப்பு பதிவுக் கட்​ட​ணங்​கள் உட்பட சுமார் ரூ.1,212 கோடி என மதிப்​பிடப்​பட்​டுள்​ளது. சென்னை ரியல் எஸ்​டேட் சந்​தை​யில் இது​வரை நடந்​த​திலேயே மிகப்​பெரிய பணப் பரிவர்த்​தனை இது​வாகும்.

ஏற்​கெனவே பாஷ்யம் குழு​மம், கிழக்கு கடற்​கரை சாலை​யில் (இசிஆர்) வரவிருக்​கும் ‘பி​ரார்த்​தனா பை பாஷ்யம்’, ஆழ்​வார்​பேட்​டை​யில் உள்ள கிர​வுன் பிளாசா தளத்​தில் ஆடம்பர அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள், அசோக் நகரில் ‘தி பீக்’, போட் கிளப்​பில் ‘தி பைனாக்​கிள்’, கோபாலபுரத்​தில் ‘தி எபிக்’, போயஸ் கார்​டனின் ‘ராயல் தமேரா கார்​டன்​ஸ்’, ஓஎம்​ஆர் துரைப்​பாக்​கத்​தில் ‘ப்​ரொமநேடு, என்​சாண்​டட்’ போன்ற பல்​வேறு ஆடம்பர குடி​யிருப்பு மற்​றும் வணி​கத் திட்​டங்​களை வெற்​றிகர​மாகச் செயல்​படுத்தி வரு​வது குறிப்​பிடத்​தக்​கது.

இந்​நிலை​யில் மத்​திய சென்​னை​யில் ஆடம்பர குடி​யிருப்​புத் திட்​டங்​களுக்​கான நிலத்​தின் தேவை அரி​தாகி வரும் சூழலில், பாஷ்யம் குழு​மத்​தின் இந்த கையகப்​படுத்​தல், முக்​கி​யத்​து​வம் வாய்ந்​த​தாகப் பார்க்​கப்​படு​கிறது.

இந்த ஒப்​பந்​தத்​துக்​கான பரிவர்த்​தனை ஆலோ​சக​ராக சிபிஆர்இ நிறு​வனம் செயல்​பட்​டது. இந்த கையகப்​படுத்​தல் மூலம், நகரின் ஆடம்பர ரியல் எஸ்​டேட் பிரி​வில் பாஷ்யம் குழு​மம் தனது ஆதிக்​கத்தை மீண்​டும்​ ஒரு​முறை நிலைநிறுத்​தியுள்​ளது.

No comments:

Post a Comment

நோபல் பரிசு பெற்ற தமிழர் விஞ்ஞானி சு.சந்திரசேகர் ஐயாவை போற்றும் அமெரிக்க அறிவும், மதிக்காத திராவிடம்

  சுப்பிரமணியன் சந்திரசேகர் — ஒரு தமிழரின் மறைக்கப்பட்ட பெருமை https://x.com/kevinpaulshow/status/1995862971164361161 சுப்பிரமணியன் சந்திரசே...