ஒவ்வொரு தேர்தலிலும் VVPAT வாக்குச்சீட்டுகள் என்னப்படுகிறது ஆனால் எப்போது என்னப்படுகிறது, யார் கேட்கும் போது என்னப்படுகிறது என்பதற்கு தெளிவான விதிமுறைகள் இருக்கின்றன. வாக்கு எண்ணிக்கை முடிந்த 45 நாட்களுக்குள், “எனக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சந்தேகம் உள்ளது” என்று தோல்வியடைந்த வேட்பாளர் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்தால், அந்த வேட்பாளர் தேர்வு செய்யும் சுமார் 40 முதல் 50 வாக்குச்சாவடிகளில் உள்ள VVPAT சீட்டுகளையும், அந்தச் சாவடிகளில் பதிவான EVM வாக்குகளையும் ஒப்பிட்டு சரி பார்க்கும் நடைமுறை ஏற்கனவே உள்ளது.
இதுவரை நடந்த எந்த ஒரு தேர்தலிலும், EVM வாக்குகளுக்கும் VVPAT சீட்டுகளுக்கும் இடையில் எந்த வித்தியாசமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே உண்மை. கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலின்போது, சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 104 வேட்பாளர்கள் சுமார் 95 சட்டமன்ற தொகுதிகளில் இந்தக் கிராஸ் செக்கிங்கை கேட்டார்கள். ஆனால் அங்கேயும் EVM – VVPAT இரண்டிலும் ஒரே முடிவுதான் வந்தது. அதனால் அவர்கள் வாயை மூடி அமைதியாகிவிட்டார்கள். (அந்தப் பட்டியல் வேண்டுமானால் கமெண்டில் இணைத்து வைக்கிறேன்).
கடந்த மாதம் நடந்த பீகார் தேர்தலில் கூட தேர்தல் ஆணையம் வாலண்டீராக ரேண்டாமாக சுமார் 1215 பூத்துகளில் உள்ள VVPAT மற்றும் EVM ஓட்டுக்களை கிராஸ் செக் செய்தார்கள் அதில் ஒரு ஓட்டு கூட வித்தியாசம் வரவில்லை. இதைப் பார்த்த வேட்பாளர்கள் இன்றுவரை ஒருவர் கூட தங்கள் தொகுதிகளில் உள்ள ஐந்து சதவீத VVPAT கிராஸ் செக் கொள்ளும் வசதியை கேட்டு அப்ளை செய்யவில்லை காரணம் அவர்களுக்கு தெரியும்..
உண்மையிலேயே இவர்கள் எல்லாம் இவ்வளவு அறியாமையாலா பேசுகிறார்கள், இல்லையா மக்களை முட்டாள்களாக்க வேண்டும் என்பதற்காகவே இப்படிப் பச்சையாக பொய் பரப்புகிறார்களா என்று தெரியவில்லை. மேலும், “VVPAT-ஐ என்ன செய்ய வேண்டும்” என்று அமித் ஷா எப்படி முடிவு செய்ய முடியும்? அது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் வரும் விஷயம். மண்டையில் மசாலா இருக்கிறதா, இல்லையா என்ற சந்தேகம் இங்கே தான் எழுகிறது.
100% VVPAT வாக்குகளை எண்ண வேண்டும் என்று வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றபோது, நீதிமன்றம் மிகத் தெளிவாக ஒரு விஷயத்தைச் சொன்னது. எல்லா VVPAT சீட்டுகளையும் முழுமையாக எண்ணினால், வாக்கு எண்ணிக்கை நேரத்தில் தேவையற்ற குழப்பங்கள், தாமதங்கள், மனிதத் தலையீடு போன்ற பழைய பிரச்சினைகள் மீண்டும் வரும் அபாயம் உள்ளது. அதனால் தோல்வியடைந்த வேட்பாளர்கள் சந்தேகம் தெரிவித்தால், அவர்கள் தேர்வு செய்யும் 40 முதல் 50 வாக்குச்சாவடிகளில் மட்டுமே VVPAT சீட்டுகளை மறுஎண்ணிக்கை செய்து EVM வாக்குகளுடன் ஒப்பிட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த 40–50 வாக்குச்சாவடிகளைத் தேர்வு செய்வதற்கான உரிமையும் தோல்வியடைந்த வேட்பாளருக்கே கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இதைவிட வெளிப்படைத்தன்மை வேறென்ன வேண்டும்? இதன் அடிப்படையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுவிட்டது என்று கூறி, உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை முடித்து வைத்தது.
அதனால் EVM மீது சந்தேகம் கிளப்புவது அரசியல் தோல்வியை மறைக்கப் போடும் மலிவான நாடகமே தவிர, உண்மையல்ல. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், அதனுடன் இணைந்த VVPAT முறையும், இன்று உலகமே பாராட்டும் அளவுக்கு பாதுகாப்பானதும், நம்பகமானதும், வெளிப்படையானதும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது.
No comments:
Post a Comment