Friday, January 16, 2026

வேலூர் சி.எம்.சி மருத்துமனை டாக்டர் பீஜியன் ED ரெய்டு - சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் தொடர்பா?

 வேலூர் CMC மருத்துவர் வீட்டில் ED ரெய்டு - சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் தொடர்பா?லோகேஸ்வரன்.கோ




வேலூர் சி.எம்.சி மருத்துவர் வீட்டில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.
வேலூரில் உள்ள பிரபல சி.எம்.சி தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களுக்காக தோட்டப்பாளையம் பகுதியில் தனி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் கேரளாவை சேர்ந்த டாக்டர் பீஜியன் என்பவர் தங்கி இருந்த வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினருடன் திடீரென இன்று காலை முதலே இந்த சோதனை நடைபெறுகிறது. டாக்டர் பீஜியனுக்கு சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதால் அவர் தங்கியிருந்த வீடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல்கள் வருகின்றன.

No comments:

Post a Comment