Wednesday, October 14, 2026

1000 ஏசி எலக்ட்ரிக் பஸ் டெண்டர் போட்டியாளர்கள் இல்லை 11முறை தள்ளிவைப்பு

 11 முறை தள்ளிவைப்பு! கடைசியில் 1000 ஏசி எலக்ட்ரிக் பஸ் டெண்டரை தூக்கியது MTC! சென்னை மக்களின் ஏசி பஸ் கனவில் மண்! காரணம் என்ன?

மாநகர போக்குவரத்து கழகம் (MTC) விட்டிருந்த 1000 ஏசி 12 மீட்டர் குறைதள மின்சார பேருந்துகளுக்கான மெகா டெண்டர் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆவணத்தில் "நிர்வாக காரணங்களால்" என்று ஒற்றை வரியில் முடித்துள்ளது MTC. உண்மையான காரணம் என்ன? இது திடீர் ரத்து இல்லை. இந்த டெண்டர் கடந்த மார்ச் 6-ம் தேதி விடப்பட்டது. முதலில் ஏப்ரல் 7 தேதி திறக்க வேண்டிய டெண்டர், *11 முறை தேதி நீட்டிக்கப்பட்டு 189 நாட்கள் தள்ளிப்போய் அக் 13 வரை வந்தது*. bc3808ca காரணம் - போட்டியாளர்கள் இல்லை. MTC தரப்பு தகவலின்படி, GCC மாடலில் இயக்க ஒரு கி.மீ-க்கு ரூ.77 முதல் 81 வரை கொடுக்கப்பட்ட நிலையிலும், பல நிறுவனங்கள் முன்வரவில்லை. ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே வந்ததால் பல முறை தள்ளிவைக்கப்பட்டது. கடைசியில் வேறு வழியின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. e479 மேலும், தொழிற்சங்கங்கள் இதை "மறைமுக தனியார்மயம்" என்று எதிர்ப்பதும், தனியார் ஓட்டுநர்களை வைத்து இயக்குவது என்ற GCC மாடல் மீதான சர்ச்சையும் காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் பாதிப்பு என்ன? மக்களுக்கு என்ன பிரச்சனை? 1. சென்னையில் பஸ் பஞ்சம் தொடரும்:* MTC-க்கு ஏற்கனவே 1000 பஸ்கள் கூடுதலாக தேவை. இப்போது 383 பழைய பஸ்கள் வெற்றிப் பயணம் திட்டத்திற்காக மாவட்டங்களுக்கு அனுப்பப்பட உள்ளதால், சென்னையில் கூட்ட நெரிசல் இன்னும் அதிகமாகும். 84a1 2. 9 வருஷ பழைய பஸ்ஸில் பயணம்:* சென்னையில் ஓட தகுதியில்லை என்று கழிக்கப்பட்ட 10 லட்சம் கி.மீ ஓடிய பழைய பஸ்கள் தான் இன்னும் சில வருடம் ஓடும் நிலை. பாதுகாப்பு கேள்விக்குறி. 3. மெட்ரோவுக்கு ஃபீடர் பஸ் இல்லை:* 12 மெட்ரோ ஸ்டேஷன்களுக்கு முதல்/கடைசி மைல் இணைப்பு தர வேண்டிய 220 மைக்ரோ பஸ் திட்டமும் இதே போல் தள்ளிப்போயுள்ளது. e479 4. கோடை வெயிலில் ஏசி பஸ் இல்லை: தற்போது 625 மின்சார பஸ்கள் மட்டுமே உள்ளன. 1000 புதிய ஏசி பஸ்கள் வந்தால் தான் சென்னையின் பல ரூட்டுகளில் ஏசி வசதி கிடைக்கும். அது இனி குறைந்தது 6 மாதம் முதல் 1 வருடம் தள்ளிப்போகும். சுருக்கமாக - டெண்டர் ரத்தால் அரசுக்கு நிர்வாக சிக்கல் மிச்சம், மக்களுக்கு கூட்ட நெரிசலும், பழைய பஸ்ஸும் தான் மிச்சம்.

No comments:

Post a Comment

Aphrodite’s Drape

We specialize in customizing wedding wardrobes, kids’ wear, maternity outfits, theme attire, and uniforms.Bringing designer elegance to ever...