Wednesday, October 14, 2026

டாஸ்மாக் கடை தனியாருக்கு? 56 கோரிக்கை ரகசிய அறிக்கை லீக்! - தங்க.காளிப்பாண்டி

  தனியாருக்கு டாஸ்மாக் கடையா? 56 கோரிக்கை ரகசிய அறிக்கை லீக்!

https://x.com/sureshkalipandi/status/2110288939731075311
டாஸ்மாக் ஊழியர்களின் 56 கோரிக்கைகள் மீது டாஸ்மாக் நிர்வாகம் தொழிலாளர் ஆணையருக்கு அனுப்பிய 20 பக்க ரகசிய அறிக்கை நமக்கு கிடைத்துள்ளது. அதில் உள்ள தகவல்கள் இதோ: 1. தனியார் மய திட்டம் உண்மையா? கோரிக்கை எண் 49, 50-ல் தொழிற்சங்கங்கள் கேட்டது - "சில்லறை மது விற்பனையை தனியார் மயமாக்கக் கூடாது, ஆன்லைன் மது விற்பனை திட்டத்தை கைவிட வேண்டும்" நிர்வாகம் பதில் சொன்னது: *"தனியார் மயமாக்குதல் தொடர்பாக முடிவு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை" முடிவு இல்லை என சொல்லியிருக்கிறதே தவிர, திட்டம் இல்லை என மறுக்கவில்லை. ஆன்லைன் விற்பனை திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது என்பது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது. 2. ஊழியர்களிடமே அபராத வசூல் வேட்டை! கோரிக்கை 51 & 52-ல் - "கடை ஆய்வு என்ற பெயரில் குற்றச்சாட்டு கூறி அபராதம், ஒரே தவறுக்கு பல தண்டனை, தற்காலிக பணி நீக்கம், கிடங்கு பணிக்கு மாற்றம்" என ஊழியர்கள் புகார். அந்த அறிக்கையில், *ஒரு கடைக்கு ரூ.917 வீதம் நஷ்ட ஈடு வசூல், காலி பாட்டில் வைக்கும் இடத்திற்கு வாடகையை ஊழியர்களிடமே வசூலிக்கும்* நடைமுறை இருப்பது தெரியவந்துள்ளது. 3. 54 கோரிக்கைகளுக்கு ஒரே பதில் - "பரிசீலனையில் உள்ளது" - 8 மணி நேர வேலை, வார விடுமுறை - 224-வது குழுமக் கூட்ட முடிவுப்படி பரிசீலனை. - சம்பள உயர்வு, பணிக்கொடை - அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. - பணியின் போது இறந்தவர்களுக்கு இழப்பீடு - ரூ.50,000 முதல் ரூ.30 லட்சம் வரை காப்பீடு குழுமக் கூட்டத்தில் ஒப்புதல். ஆனால் 2017 முதல் நிறுத்தப்பட்ட ஊக்கத்தொகை, காலி பணியிடம் நிரப்புதல், பணி நிரந்தரம் போன்ற கோரிக்கைகளுக்கு இதுவரை எந்த உத்தரவும் இல்லை. AITUC, TGTEU உள்ளிட்ட 11 சங்கங்கள் சார்பில் நடந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, இந்த அறிக்கையை வைத்து தொழிலாளர் ஆணையர் வழக்கை முடிக்க உள்ளார். ஊழியர்கள் தரப்பில், "அரசு பரிசீலனையில் என்ற பெயரில் எங்கள் வாழ்வாதார கோரிக்கைகளை கிடப்பில் போட்டுள்ளனர். அடுத்த கட்ட போராட்டம் தவிர்க்க முடியாதது" என கொந்தளிப்புடன் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

மக்கா மசூதியில் ஒழுக்கக்கேடான செயல்: பங்களாதேஷ் தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி அரேபியா!

மக்கா மசூதியில் ஒழுக்கக்கேடான செயல்: பங்களாதேஷ் தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றிய சவுதி அரேபியா! புனித நகரமான மக்காவில் உள்ள ஒரு மசூதியின் ப...