Sunday, October 26, 2025

பல்லவர்கள் யார்


பல்லவர்கள் என்றால் 6ம் நூற்றாண்டு பிற்பகுதியில் இருந்து ஆண்ட மன்னர்களே நம் பாடப் புத்தகங்களில் வருகிறது. இந்தப் பல்லவர்கள் தான் தமிழகத்தில் முதலில் கற்கோவில்கள் எழுப்பியவர்கள்.
முற்கால பல்லவர்கள் எழுதிய மூன்று பிராகிருத மொழி செப்பேடுகள் கிடைத்து உள்ளன
1. மயிதவோலு செப்பேடு பொஆ 305
2. ஹீரஹூடபள்ளி செப்பேடு பொஆ 338
3.அரசி சாருதேவி குணபாண்டியம் செப்பேடு பொஆ- 350
இவை எல்லாம் ஆந்திராவில் கிடைத்ததால் அங்கே ஆண்ட மன்னர்களே எனப் பார்த்தால் திருக்கழுக்குன்றம் கோவிலில் 4ம் நூற்றாண்டில் ஸ்கந்த சிஷ்ய பல்லவ அரசன் தந்த இறையிலி நிலத்தை மீண்டும் உறுதி செய்வதான ஆதித்த சோழர் கல்வெட்டு கூறுகிறது.
காஞ்சிபுரத்தில் பல்கலைக் கழகம்(கடிகை) நடத்திய பல்லவர் பற்றி நமக்கு உள்ள ஆதாரம். - கர்நாடகாவின் ஷிமோகா அருகே தாளகுண்டா பிரணவேஸ்வரர் கோவில் தூண் பொஆ458ம் கல்வெட்டு- பழைய கன்னட மொழ்யியில் தெளிவான பிழை இல்லாத செய்யுள் சம்ஸ்கிருதத்தில் 27 வரியில் கூறப்பட்டுள்ளது
பல்லவர் சம்ஸ்கிருத கல்வெட்டு 4ம் நூற்றாண்டு முதல் வெளிநாட்டில் ஜாவா, சுமத்ரா, பாலி, தாய்லாந்து, மியான்மர்(பர்மா), லாவோஸ் அன்ட் கம்போடியா கிடைத்துள்ளது
கர்நாடகத்தின் தாளகுண்டா கோவில் தூண் கல்வெட்டு பொஆ.458 பழைய கன்னட எழுத்து சம்ஸ்கிருத கல்வெட்டு காஞ்சி கடிகை பற்றி கூறுகிறது.
சங்க இலக்கியங்கள் என்பது ஏழாம் நூற்றாண்டு இறுதிவரை பாடப்பட்ட பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளது ஆனால் இதில் நாம் மூன்றாம் நூற்றாண்டு இறுதியில் இருந்து ஆட்சி செய்த பல்லவர்களை பற்றி ஒரு வரி கூட இல்லை எனும் பொழுது சங்க இலக்கியம் என்பது தமிழகத்தைப் பற்றிய முழுமையான வரலாற்று இலக்கியம் என்று கூற இயலாது

No comments:

Post a Comment

திருக்கழுக்குன்றம் சிவன் கோவிலிற்கு வரியிலி நிலம் தந்த முற்கால் ஸ்கந்த சிஷ்ய பல்லவர்(பொஆ320 C) கூறும் சோழக் கல்வெட்டு.

திருக்கழுக்குன்றம் சிவன் கோவிலிற்கு வரியிலி நிலம் தந்த முற்கால் ஸ்கந்த சிஷ்ய பல்லவர்(பொஆ320 C) கூறும் சோழக் கல்வெட்டு. திருக்கழுக்குன்றத்துச...