Friday, October 24, 2025

உப்பிலியப்பன் கோவில் நகை மோசடியில் சர்வதேச 'மாபியா'

 உப்பிலியப்பன் கோவில்  திமுக 2006 = 11 கருணாநிதி ஆட்சியின் போது (இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் , உதவி ஆணையர் விஜயகுமார்) கும்பாபிஷேகம் நடந்தது.

https://www.dinamalar.com/news/tamil-nadu-news/news/1497274

மூலவர் வெங்கடாசலபதிக்கு பக்தர்கள் காணிக்கையில் 49 கிலோ  தங்க கவசம்  பூமா தேவிக்கு 12 கிலோவில் தங்க கவசம்

https://tamil.oneindia.com/news/2008/05/27/tn-12-kg-gold-kavacham-offered-at-oppili-goddess.html

உப்பிலியப்பன் கோவில் நகை மோசடியில் சர்வதேச 'மாபியா'க்கள்?: அறநிலையத்துறை மீது பக்தர்கள் கடும் அதிருப்தி


UPDATED : ஏப் 09, 2016 02:22 AM

ADDED : ஏப் 08, 2016 10:04 PMதஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகில் உள்ள உப்பிலியப்பன் கோவிலில், தங்க, வைர நகைகள் மாயமான விவகாரத்தில், அறநிலையத்துறை துணை ஆணையர் இளம்வழுதி கைது செய்யப்பட்ட நிலையில், இதன் பின்னணியில் சர்வதேச, 'மாபியா'க்கள் கைவரிசை இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

@Image@தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள உப்பிலியப்பன் என்ற வெங்கடாசலபதி கோவில், வைணவர்களின், 108 திவ்யதேசங்களில் ஒன்று. இக்கோவிலுக்கு பெரிய அளவில் சொத்துக்களும், விலை உயர்ந்த பாரம்பரிய நகைகளும் நுாற்றாண்டுக்கும் மேலாக பராமரிக்கப் பட்டு வருகின்றன.இந்த கோவிலை நிர்வகிக்க வந்த அறநிலையத்துறை அதிகாரிகள் சிலர், மோசடி கணக்கு காட்டி, விலை உயர்ந்த தங்க, வைர நகைகளை திருடியதாக, 2010ல் புகார் எழுந்தது.

சமயபுரம் கோவில் நகைகள் மாயமான புகார் அடிப்படையில் துவங்கிய விசாரணையின் போது, உப்பிலியப்பன் கோவில் புகார் எழுந்ததால், அப்பகுதியில் உள்ள பல கோவில்களின் நகைகள் நிலவரம் குறித்த விசாரணையை அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் மேற்கொண்டனர்.

அப்போது, உப்பிலியப்பன் கோவிலில், அதிகாரிகளே நகைகளை மோசடி செய்தது தெரியவந்தது.இது குறித்து அறநிலையத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

உப்பிலியப்பன் கோவிலில், பல கோடி ரூபாய் நகைகள் மாயமானது குறித்து பக்தர்கள் தரப்பில் புகார் கூறப்பட்ட நிலையில், அங்கு செயல் அலுவலராக இருந்த விஜயகுமார் மாற்றப்பட்டு செந்தில்குமார் நியமிக்கப்பட்டார்.

அவர் நகைகள் மாயமானது குறித்த, துறை ரீதியான விசாரணைக்கு தேவையான ஆதாரங்களை திரட்டினார். செயல் அலுவலர் விஜயகுமார், நகைகள் சரிபார்ப்பு பிரிவுக்கான மயிலாடுதுறை உதவி கமிஷனர் இளம்பரிதி, திருப்பணிகளுக்கான அறநிலையத்துறை இணை கமிஷனர் ஹரிபிரியா ஆகியோர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக நடந்த துறை ரீதியான விசாரணையில் தெரிய வந்த தகவல்கள் அடிப்படையில், இந்த மூன்று பேர் மீதும் குற்றச் சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. இதன்பின்

@nextcolumn@ இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. 2008ல் நடந்த இந்த மோசடிகள் குறித்து, 2010ல் தான் விசாரணையே துவக்கப்பட்டது. இதில், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்தாலும், சில நிர்வாக தடைகள் காரணமாக, கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.




40 ஆண்டுகளாக செயல் அலுவலரை நியமிக்கவில்லை: இது குறித்து தமிழக ஆலய வழிபடுவோர் சங்கத்தின் தலைவர், டி.ஆர்.ரமேஷ் கூறியதாவது:உப்பிலியப்பன் கோவில் நகைகள் மாயமான விவகாரத்தில், அறநிலையத்துறையின் நிர்வாக குளறுபடியே, முக்கிய காரணமாக அமைந்து உள்ளது.

தமிழகத்தில், மாதம் ஐந்து லட்சம் ரூபாய் வருவாய் உள்ள கோவில்களில் உப்பிலியப்பன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு, 40 ஆண்டுகளாக அதிகாரப்பூர்வ செயல் அலுவலரே நியமிக்கப்படாமல், வேறு கோவிலின் செயல் அலுவலரின் கூடுதல் பொறுப்பிலேயே வைக்கப்பட்டு உள்ளது.

இதுவே, அறநிலையத்துறையின் மிக பெரிய நிர்வாக மோசடி. இதுபோன்ற கோவில்களில் ஆண்டு தணிக்கையுடன் நகைகள் சரிபார்ப்பு, ஆறு மாதத்துக்கு ஒரு முறை நடக்க வேண்டும், அந்த அறிக்கை ஆணையருக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த நடைமுறைகள் அனைத்தும் அப்பட்டமாக மீறப்பட்டதே மோசடிக்கு காரணம்.

கைதான நபர்களுடன் நின்று விடாமல், கோவில் நகைகள், அதில் இருந்த கற்கள் எங்கு சென்றது என்பது குறித்த கோணத்தில் விசாரணை செல்ல வேண்டும். அப்போது தான் இதன் பின்னணியில் உள்ள மோசடி, 'மாபியா'க்களை கண்டுபிடிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

'மாபியா'க்கள் தொடர்பு: கோவில்களில் உள்ள பாரம்பரிய நகைகள் சர்வதேச சந்தையில், மிக அதிக மதிப்பு கொண்டவை. உருக்குவது, புதிய நகைகள் செய்வது போன்ற நடவடிக்கைகளின் போது, இது போன்ற நகைகளை மோசடியாக வாங்குவதற்காகவே சில சர்வதேச, 'மாபியா'க்கள் உள்ளனர்.

இந்த, 'மாபியா'க்கள் உப்பிலியப்பன் கோவில் நகைகளை வாங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்து உள்ளது.

தகவல்கள் மறைப்பு: இந்த மோசடி குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு நபர்கள் விவரங்கள் பெற முயன்றனர்.'நகைகள் குறித்த விவரங்கள், தணிக்கையில் இருக்கின்றன; ஆணையர் அனுமதி கோரப்பட்டு உள்ளது;

ரகசிய தன்மை கொண்டவை என்பதால் தர முடியாது' என, தொடர்ந்து மழுப்பலான பதிலே அறநிலையத்துறை யில் இருந்து வந்தது.தற்போதும், இது, சில அதிகாரிகளின் தவறான செயலாக மட்டுமே பார்க்கப்படுகிறது. இது போன்ற தவறுகளுக்கு காரணமான அறநிலையத்துறை நிர்வாக குளறுபடிகள் கண்டு கொள்ளப்படாமல் உள்ளன.

நடந்தது எப்படி?: நகை மோசடி குறித்து சி.பி.சி.ஐ.டி., விசாரணையில் தெரிய வந்த தகவல்கள்:

* உப்பிலியப்பன் கோவிலில், பெருமாள் மற்றும் தாயாருக்கு இருப்பது போன்று மார்க்கண்டே யருக்கு தங்க கவசம் செய்ய, 2008ல், அறங்காவலர் குழுவில் முடிவு எடுக்கப்பட்டது

* இதற்காக, கோவிலில் இருப்பு வைக்கப்பட்ட தேவை இல்லாத நகைகளுடன், பாரம்பரிய சிறப்பு மிக்க பழைய நகைகளையும் அதிகாரிகள் சேர்த்தனர்

* மொத்தம், 7,191 கிராம் பழைய நகைகளை அழுக்கு நீக்கியதில், ஒரு கிலோ தங்கம் குறைந்ததாக கணக்கு காட்டப்பட்டு உள்ளது

* மொத்தம், 1,895 கற்கள் இருப்பதாக கணக்கு காட்டிய அதிகாரிகள், எத்தனை வைர கற்கள் இருந்தன; எத்தனை முத்துக்கள் இருந்தன என்பது போன்ற வகைபாட்டை வசதியாக மறைத்து விட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது

* கற்கள் கணக்கில் வகைபாட்டை மறைத்த அதிகாரிகள், விலை உயர்ந்த வைரம், முத்துக்களை எடுத்து விட்டு, போலி கற்களை வைத்து கணக்கு காட்டி விட்டதாக புகார் கூறப்பட்டது

* உருக்குவதற்காக மும்பைக்கு எடுத்து செல்லப்பட்ட நகைகளின் எடை குறித்த விவரத்தில், 44 கிராம் தங்கம் என்ன ஆனது என்பது புதிராக உள்ளது
* கோவில் நகைகளை மும்பைக்கு கொண்டு சென்று உருக்க திட்டமிட்ட அதிகாரிகள், அருகில் உள்ள திருச்சிக்கு செல்லாமல், சென்னைக்கு வந்து சென்றதன் பின்னணியில், பல சந்தேகங்கள் எழுந்து உள்ளன
* பொதுவாக, இதுபோன்ற மோசடிகளில், பழமையான நகைகளை அப்படியே உருக்கா மல், அதை கூடுதல் விலைக்கு விற்றுவிட்டு, அதே மாதிரியில் குறைந்த எடை நகைகளை உருக்குவதற்கு கொண்டு செல்வதும் உண்டு. இத்தகைய மோசடி இதில் நடந்ததா என்ற சந்தேகமே இளம்பரிதியின் கைதுக்கு அடிப்படை காரணமாக அமைந்து உள்ளதாக கூறப்படுகிறது.அவரை காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே, கூடுதல் விவரங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்க ப்படுகிறது.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

பள்ளிக்கரணை சதுப்பு -பெரும்பாக்கத்தில் ராம்சார் வனப் பகுதியில் ரூ 2000 கோடி -1250 வீடுகள் கட்ட பிரிகேட் மார்கன் நிறுவனத்திற்கு சிஎம்டிஏசட்டவிரோத அனுமதி

சதுப்பு நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு: ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் - குற்றச்சாட்டை அடுக்கிய அறப்போர் இயக்கம்! ராம்சார் நிலத்தில் அடுக்க...