பராசக்தி 1952
அன்று கதை எழுதியவர் கருணாநிதி. நடித்தவர்கள், கணேசன், ஸ்ரீரஞ்சனி, சகஸ்ரநாமம், பண்டரிபாய், ராஜேந்திரன்.
பராசக்தி 2026
இன்று படம் எடுத்தவர் ஆகாஷ் பாஸ்கரன். வாங்கியவர் ரெட் ஜெயண்ட்ஸின் சொந்தக்காரரான உதயநிதி. இயக்குனர் சுதா கொங்கரா, நடித்தவர்கள் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா.
இன்றையப் படம் இந்தி வேண்டாம், ஆங்கிலம் வேண்டும் என்ற போராட்டத்தைக் குறிப்பது.
இவை அனைத்திற்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. இவற்றில் எந்தப் பெயரும் தமிழ் கிடையாது.
1965 போராட்டமும் தமிழைக் குறித்தல்ல.
இதை விட இந்தி வெறுப்பின் தமிழ் வெறியின் போலித்தன்மையை சிறப்பாக விளக்க முடியாது.
வெறி அற்ற கோணத்தில் பார்த்தால், இவை அனைத்தும் தமிழ்ப் பெயர்கள்தாம். தமிழ் பெற்றும் வளர்ந்திருக்கிறது. கொடுத்தும் வளர்ந்திருக்கிறது. அரைகுறைகளும் அரையணாக்களும், அடிப்படையில் வெறியர்களும் மட்டுமே வெற்றுக் கூச்சல் போடுவார்கள். தமிழின் பெயரில் கல்லாக் கட்டுவார்கள்.
மீண்டும் சொல்கிறேன். வடமொழி, இந்தி வெறுப்பு என்பது அயோக்கியத்தனம். தமிழைப் போலவே இவை இரண்டும் மொழிகள். எல்லா மொழிகளுக்கும் கொடுக்க வேண்டிய மதிப்பை இம்மொழிகளுக்கும் கொடுக்க வேண்டும்.
இந்தித் திணிப்பை நேற்று எதிர்த்தோம். இன்று எதிர்க்கிறோம். நாளையும் எதிர்ப்போம்.

No comments:
Post a Comment