Sunday, January 11, 2026

பராசக்தி நாடகம் - கதை வசனம் எழுதிய பாவலர் பாலசுந்தரம் .

பராசக்தி நாடகம் - கதை வசனம் எழுதிய பாவலர் பாலசுந்தரம் 

பாவலர் பாலசுந்தரம் திராவிட இயக்க எழுத்தாளரும் பேச்சாளரும் ஆன இவர், என் .ரத்தினம் அவர்களின் தேவி நாடக சபாவில் பல நாடகங்களை எழுதி, உருவாக்கி நடித்தும் வந்தார். 

பாவலர் பாலசுந்தரம் முக்கியமான நாடகம் தான் பராசக்தி. திராவிட இயக்க மேடைகளில் திரைப்படம் ஆவதற்கு முன்பே இந்த நாடகம் சக்கை போடு போட்டிருக்கிறது. 

அதனால்தான் இந்த நாடகத்தை நேஷனல் பிக்சர்ஸ்சும் ஏவிஎம் படமாக தயாரித்து  ருக்கிறார்கள். 

ஆனால் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் மு.கருணாநிதி அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால், அவரின் சிபாரிசின் பெயரில் படத்திற்கான திரைக்கதை வசனம் எழுதும் பணி கருணாநிதிக்கு ஒப்படைக்கப்பட்டது. 

திராவிட இயக்கத்துக்கு பற்றோடு உழைத்த அவருக்கு பெரிதாக பணம் இல்லாத காரணத்தால் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த அவர் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாளுக்கு பராசக்தி கதையின் எல்லா உரிமையையும் வெறும் 3000 ரூபாய்க்கு எழுதிக் கொடுத்து விட்டார். 

அது மட்டுமல்ல இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், களத்தில் போராடிய இவர், இவர் ,இவர் மனைவி பட்டு மற்றும் இவர்களது கைக்குழந்தையுடன் ஜெயிலுக்கு சென்றது பல புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆனால் நெஞ்சுக்கு நீதி புத்தகத்தில் பராசக்தி பற்றி குறிப்பிடும் கருணாநிதி "நான் எழுதிய பராசக்தி" என்றுதான் பல இடங்களில் குறிப்பிடுகிறார் . பாவலர் பாலசுந்தரம் குறித்து அவர் எங்கும் நன்றி தெரிவித்தோ, பேசியோ பார்த்ததில்லை. 

இன்னும் சொல்லப்போனால் மூச்சுக்கு 300 முறை பராசக்தி, படம் பராசக்தி படம் ,என்று பேசிக் கொண்டிருக்கும் திமுகவினரே பாவலர் பாலசுந்தரம் குறித்து இதுவரை எங்கேயும் பேசியதில்லை. 

No comments:

Post a Comment

பிரிட்டன், அயர்லாந்தில் உள்ள முஸ்லிம் பயங்கரவாதம் பரப்பி ஆள் பிடிக்கும் பல்கலைக் கழகத்தில் சேரும் மாணவர்களுக்கு துபாய் விசா - ஸ்காலர்ஷிப் நிறுத்தியது

Muslim Brotherhood - முஸ்லிம் சகோதரத்துவத்துடன் தொடர்புடைய தீவிரவாத வலையமைப்புகள் ஆள்சேர்ப்பு மற்றும் தீவிரவாதச் செயல்பாடுகளை மேற்கொள்வதாகக்...