Saturday, June 29, 2013

இயேசு கிறிஸ்துவும்- கி.பி. - கி.மு. கட்டுக்கதைகளும்

பொ.கா.2013 ஜூன் மாதம் இப்பதிவிடுகிறோம்.
 
இங்கே பொ.கா. பொதுக் காலம் எனப்படும், Common Era CE. இதற்கு முந்தைய காலம் பொ.மு. எனப்படும். BCE -Before Common Era. இவை முன்பு உலகை கிறிஸ்துவ சூழ்ச்சி ஆட்சிகள் உலகின் பெரும் பகுதியை அடிமைப் படுத்தி சுரண்டியபோது கி.பி. & கி.மு. என தவறுதலாகப் பரப்பபட்டது.

தற்போதைய ஆண்டுமுறை- கிரிகோரியன் காலெண்டர் எனப்படும்.
http://en.wikipedia.org/wiki/Gregorian_calendar
பஸ்கா பண்டிகை நிலாக் கணக்கில் பொருந்தவில்லை என  1582 வருடம், அக்டோபர் மாதம் 4ம் தேதிக்கு அடுத்த நாள் அக்டோபர் 15 என மாற்றப்பட்டது. நூறில் முடியும் வருடங்கள் 400இல் வகுபட்டால் மட்டுமே லீப் என மாற்றினார்.

முன்பு பயனில் இருந்தது ஜூலியன் காலெண்டர் எனப்படும்.
http://en.wikipedia.org/wiki/Julian_calendar
 

 ஜூலியஸ் சீசரால் ரோமனியருக்காக உருவாக்கப்பட்டது ஜூலிஅன் காலெண்டர். இதில் ஜூலியஸ் சீசர்-மற்றும் ஆகஸ்டஸ் சீசர் பெயரில் அவர்கள் பிறந்த மாதம் ஜூலை, ஆகஸ்ட் என இடையில் நுழைக்கப்பட்டது.

பின்பு செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் வரும். இவை முறையே சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி என்னும் சமஸ்க்ருத எண்கள் 7வது, 8,9, &10 வது மாதம் எனும் பொருள் படும். ஆனால் உலகம் முழுதும் 9ம் மாதத்தை 7 என்றும் பின் 10ஐ 8, 11ஐ - 9, 12ஐ - 10 என்றும் தவறுதலாக  கூறி வருகிறது.

இந்த காலெண்டர் நடைமுறைக்கு வந்தது எப்போது?
http://en.wikipedia.org/wiki/Anno_Domini

நாம் வரலாற்று ரீதியில் ஏசு வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரமில்லை. சுவிசேஷங்களும் பைபிளும் புனையப்பட்ட கதை என்றால் பல தவறுதலாய் வழி தவறிய நண்பர்கள்- வரலாற்றை இரண்டாகப் பிரித்த ஏசு - என நம் பதிவில் வந்து ஏசுவார்கள்.
  
கி.பி. - கி.மு. கதையில் ஏசு எந்த வருடம் பிறந்தார் எனில்- மாறி மாறி பதில் வரும்.
மத்தேயு சுவிசேஷம்படியாக, பெரிய ஏரோதின் மரணத்திற்கு இரண்டு வருடம் முன்பு எனில், இயேசு பெத்லகேமில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப், ஆபிரகாமிலிருந்து 40ஆவது தலைமுறையினர் மகனாய் பொ.மு.4இல் பிறந்தார்.
  
லூக்காவின் சுவிசேஷம்படியாக, சிரியா கவர்னராய் கிரேனியு இருந்தபோது மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது எனில், இயேசு நசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப், ஆபிரகாமிலிருந்து 56ஆவது தலைமுறையினர் மகனாய் பொ.கா.8இல் பிறந்தார்.
  
பெரிய ஏரோதின் மரணம்.  - மக்கள் தொகை கணக்கெடுப்பு- 12 வருடம் இடைவெளி.
ஆபிரகாமிலிருந்து 40ஆவது தலைமுறை -ஆபிரகாமிலிருந்து 56ஆவது தலைமுறை - இடைவெளி  16 சந்ததிகள், அதாவது 400 வருடங்கள்.

ஏசு உண்மையில் வாழ்ந்தார் எனில் மரணம் எந்த வருடம்? எத்தனை நாட்கள் சீடருடன் வாழ்ந்தார்? எவற்றிற்கும் உண்மையான பதில் தெரியாது.


 ஏசுவின் மரணம் வெள்ளிகிழமை- பஸ்கா பண்டிகை அன்று என மாற்கு, மத்தேயு, லூக்கா சுவிசேஷங்கள் கதை சொல்கிறது. யோவான் சுவி கதையோ- வெள்ளி பஸ்கா பண்டிகைக்கு முந்தைய நாள் என்கிறது.
  
ஏசு 30 வயது வாக்கில் இயக்கம் தொடன்கியதாய் லுக்கா கதை. யோவான் ஞானஸ்நானனிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்று இயங்க நாரம்பித்த ஏசு, அடுத்து வந்த பஸ்காவிற்கு ஜெருசலேமில் கைது, மரண தண்டனையில் மரணம் என்பது மாற்கு சுவிசேஷக் கதை.
  
அதாவது ஏசு சீடர்களோடு இயங்கிய காலம் ஒரு வருடத்திற்கும் குறைவுஇயக்க காலம் முழுதும் கலிலேயாவில், கடைசி வாரம் செவ்வாய் இரவு தான் ஜெருசலேம் வந்தார்.

யோவான் சுவி- 3 பஸ்கா பண்டிகைகளுக்கு ஏசு ஜெருசலேம் செல்வதாகக் கதை. அதாவது ஏசு சீடரோடு இயங்கிய காலம் 2 வருடம் + ஒரு சில நாட்கள், இதில் கடைசி 7 மாதங்கள் ஜெருசலேம்- யூதேயாவில் என்பதாய் கதை.
 
இயேசு பிறந்த வருடம்- இயக்கம் தொடங்கிய வருடம், மரணமடைந்த வருடம் எதுவுமே தெரியாது

5 comments:

  1. சுவிசேஷங்களில் மத்தேயுவும் யோவானும் இயேசுவின் சீடர்கள். மாற்கு பேதுருவின் சீடர். லூக்கா பவுஇலின் நண்பர். சுவிகள் ஆண்டவராகிய ஏசுவின் வரலாறு.

    ReplyDelete
  2. அபய் சரண் தாஸ்July 2, 2013 at 7:08 AM

    மத்தேயு மற்றும் யோவான் சுவிகளில் எங்குமே இவர்கள் சீடர்கள் என்று கூறிக்கொண்ட குறிப்புகள் இல்லை. மாற்கு ஒரு இடத்தில் கூட பேதுருவின் சீடர் என்று சொல்லவில்லை. லூக்கா பவுலின் நண்பராகவே இருந்துவிட்டு போகட்டும். நான்கு விதங்களில் கூறப்பட்ட பொய்களுக்கு வரலாறு என்று பெயரா?
    வரலாறு என்றால் பிறப்பு முதல் இறப்பு வரை விடுபடாமல் இருக்கவேண்டும். பிறந்த பின் 30 ஆண்டுகள் ஏசு எங்கே போனார்? மத்தேயு ஒரு விதமாகவும், லூக்கா வேறு விதமாகவும் புனைய, மாற்கு மற்றும் யோவான் வேறாக உள்ளது.
    உண்மை ஒன்றாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டும். அதுவும் இறைவன் சம்பந்தம் என்றால் அங்கு குழப்பம் ஏது? தெளிவாக தன் மகனின் வரலாற்றை இறைவன் எழுதச் செய்திருக்க மாட்டானா?

    ReplyDelete
  3. இதில் வேடிக்கை என்னவென்றால் ஈசா நபியை உண்மைப் படுத்துவதாக குரான் கூறுவதுதான்.....எல்லாம் பழைய ஏற்பாட்டை காப்பியடித்ததால் வந்த விளைவு....

    ReplyDelete
  4. http://ivaryaar.blogspot.in/2013/06/blog-post.html

    ReplyDelete
  5. jesus is a good .........don't say anything,jesus is watching you , carefull!!!!!!!!!!!!!

    ReplyDelete