Sunday, March 9, 2014

இயேசு மரியாதைக்கு தகுதியான ஒரு மனிதராகவே இல்லையே

 இயேசுவின் கதைகளை சுவிசேஷக் கதைகளில் காண்கிறோம். பைபிளிற்கு வெளியே உண்மையில் வாழ்ந்தார் என்பதற்கு நடுநிலையாளர் ஏற்கும் வரலாற்று ஆதாரம் ஏது கிடையாது.

send
இயேசு சொல்லியதானதாக மத்தேயு சுவியிலுள்ள மலைப் பிரசங்கம், முதலில் வரையப்பட்ட மாற்கு சுவிசேஷத்தில் இது கிடையாது. லுக்கா சுவிக் கதாசிரியர் இதையே இரண்டு மூன்றாகப் பிரித்து தரையில் (மலையில் இல்லை) செய்ததாக புனைந்துள்ளார்.இந்த மலைப் பிரசஙத்தில் ஏசு நிறைய ந்ல்ல போதனைகள் கூறுவதாக அமைந்துள்ளது. அவற்றில் சில நாம் காண்போம். ஏசு தன் சீடர்களொடு இயங்கியபோது நடந்து கொண்டதையும் ஒன்றிணைத்துப்  பார்ப்போம்.முடிவு.
சொல்லுதல் யார்க்கும் எளிதம் அரியவாம்                                                                                                                       சொல்லிய வண்ணம் செயல் – என்பார் தெய்வப்புலவர்.

பகைவரிடம் அன்பாயிருத்தல் (லூக் 6:27 - 28, 32 - 36)

மத்தேயு5: 43 ' ″ உனக்கு அடுத்திருப்பவரிடம் அன்பு கூர்வாயாக ″ , ″ பகைவரிடம் வெறுப்புக் கொள்வாயாக ″ எனக் கூறியிருப்பதைக் கேட்டிருக்கிறீர்கள்.44 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். 45 ' இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின்  சூரியனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கிறார்.  46 உங்களிடத்தில் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்துவீர்களானால் உங்களுக்கு என்ன கைம்மாறு கிடைக்கும்? வரி வசூலிப்போரும்  இவ்வாறு செய்வதில்லையா?

அனைவரையும் சமமாக மதித்து சூரியன் ஒளியையும் மழையையும் கூறிவிட்டு சீடர் அனுப்பும்போது ஏசு சொன்னது என்ன பாருங்களேன்.
பகைவருக்காக ஜெபம் செய்ய வேண்டுமாம்!
திருத்தூதர்கள் அனுப்பப்படுதல்(மாற் 6:7 - 13; லூக் 9:1 - 6)  
மத்தேயு10: 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ' ' யூதரல்லாத பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடம் மட்டுமே செல்லுங்கள்..
11 நீங்கள் எந்த நகருக்கோ ஊருக்கோ சென்றாலும் அங்கே உங்களை ஏற்கத் தகுதியுடையவர் யாரெனக் கேட்டறியுங்கள். அங்கிருந்து புறப்படும்வரை அவரோடு தங்கியிருங்கள்.12 அந்த வீட்டுக்குள் செல்லும்பொழுதே, வீட்டாருக்கு வாழ்த்துக் கூறுங்கள்.13 வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.14 உங்களை எவராவது ஏற்றுக் கொள்ளாமலோ, நீங்கள் அறிவித்தவற்றுக்குச் செவிசாய்க்காமலோ இருந்தால் அவரது வீட்டை, அல்லது நகரைவிட்டு வெளியேறும்பொழுது உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள்.15 தீர்ப்பு நாளில் சோதோம் கொமோராப்பகுதிகளுக்குக் கிடைக்கும் தண்டனையை விட அந்நகருக்குக் கிடைக்கும் தண்டனை கடினமாகவே இருக்கும் என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
யோவான் 4:22 (சமாரிய பெண்ணிடம்) யாரை வழிபடுகிறீர்கள் எனத் தெரியாமல் நீங்கள் வழிபடுகிறீர்கள். ஆனால் நாங்கள் தெரிந்து வழிபடுகிறோம். யூதரிடமிருந்தே மீட்பு வருகிறது. . 
யூதர்களில் பிரிவான சமாரியரிடம் செல்லாதே, யூதரல்லாதவர்களிடம் செல்லாதே. 
ஏசு வாழ்வில் நட்ந்தது சமாரியர்கள் என்பவர்களும் யூதர்களே, BCE 200 வாக்கில் பிரிந்தவர்கள், அப்போது பழைய ஏற்பாடு- முதல் ஐந்து புத்தகங்கள் மட்டுமே  புனையபட்டு உள்ள நிலையில் சமாரிய பைபிள் நியாயப் பிரமாணங்கள் 5 புத்தகம் மட்டுமே. இவர்கள் அரசியல் ரீதியில் எதிரிக்கு உத்வி செய்ததால் பிரிந்தவர்கள், ஜெருசலேம் கர்த்தர் ஆலயத்தினுள் அனுமதி கிடையாது. யூதர்களே ஆயினும் கீழாகப் பார்க்கப்பட்டவர்களிடம் போக வேண்டம் என்கிறார் ஏசு. யூத்ப் பிரிவினர்தான் அவர்களும், ஆனால் அவர்கள் கடவுளை அறியாதவர்கள் என்கின்றார் இயேசு. இவர் போற்றும்படி நடக்கவில்லை.
ஏசு சீடர்களை ஏற்காவிட்டால் தண்டனை எனச் சாபம் வேறாம். ஆனால் ஏசுவின் பொன்மொழியை பாருங்கள்.
மத்தேயு5: 39 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; தீமை செய்பவரை எதிர்க்க வேண்டாம். மாறாக, உங்களை வலக் கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். 
யோவான்18:22 அவர் இப்படிச் சொன்னதால் அங்கு நின்று கொண்டிருந்த காவலருள் ஒருவர், ' தலைமைக் குருவுக்கு இப்படியா பதில் கூறுகிறாய்? ' என்று சொல்லி இயேசுவின் கன்னத்தில் அறைந்தார்.23 இயேசு அவரிடம், ' நான் தவறாகப் பேசியிருந்தால் தவறு என்னவெனக் காட்டும். சரியாகப் பேசியிருந்தால் ஏன் என்னை அடிக்கிறீர்? ' என்று கேட்டார்.24 அதன்பின் அன்னா அவரைக் கட்டப்பட்ட நிலையில் தலைமைக் குரு கயபாவிடம் அனுப்பினார்.
அனைவரையும் சமமாக மதித்து சூரியன் ஒளியையும் மழையையும் கூறிவிட்டு மீண்டும் சொல்வது என்ன பாருங்களேன். 

யோவான்17:17 உண்மையினால் அவர்களை உமக்கு அர்ப்பணமாக்கியருளும். உமது வார்த்தையே உண்மை.18 நீர் என்னை உலகிற்கு அனுப்பியது போல, நானும் அவர்களை உலகிற்கு அனுப்புகிறேன்.19 அவர்கள் உண்மையினால் உமக்கு உரியவர் ஆகும்படி அவர்களுக்காக என்னையே உமக்கு அர்ப்பணமாக்குகிறேன். ' 

20 ' அவர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன்.

ஏற்காதவர்களுக்கு அருள் கிடையாது. சூரியனும் மழையும் அப்படியா உள்ளது? இயேசு சீடர்களைத் தானே தேர்ந்தெடுத்தார் எதற்கு

மத்தேயு19:28 அதற்கு இயேசு, ' புதுப்படைப்பின் நாளில் மானிட மகன் தமது மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். அப்போது என்னைப் பின்பற்றிய நீங்களும் இஸ்ரயேல் மக்களின் பன்னிரு குலத்தவர்க்கும் நடுவர்களாய்ப் பன்னிரு அரியணைகளில் வீற்றிருப்பீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்.

ஒரு இயக்கத் தலைவன் தன் தொண்டர்களை சரியாக மதிப்பிட்டு பணிகளைப் பிரித்துத் தர வேண்டும். யூதாஸ் ஸ்காரியோத்துவைத் பணப்பை வைத்துக் கோள்ள ஏசு பணித்தாராம். இவர் தலைமை பண்பு இங்கு குறைபாடுள்ளது என்பது தெரியும்.                                                                                                                             

யோவான்13:29 பணப்பை யூதாசிடம் இருந்ததால், திருவிழாவுக்குத் தேவையானதை வாங்கவோ ஏழைகளுக்கு ஏதாவது கொடுக்கவோ இயேசு அவனிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைத்துக் கொண்டனர்.

யோவான்12: 4 இயேசுவின் சீடருள் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவனுமான யூதாசு இஸ்காரியோத்து,5 ' இந்தத் தைலத்தை முந்நூறு தெனாரியத்துக்கு விற்று, அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கக் கூடாதா? ' என்று கேட்டான்.6ஏழைகள்பால் கொண்டிருந்த அக்கறையினால் அல்ல மாறாக அவன் ஒரு திருடனாய் இருந்ததால்தான் இப்படிக் கேட்டான். பணப்பை அவனிடம் இருந்தது. அதில் போடப்பட்ட பணத்திலிருந்து அவன் எடுத்துக் கொள்வதுண்டு.

இயேசு தன்னை கடவுள் என்றும் தன்னிடமிருந்து உணவு பெற்றால், வானிலிருந்து வந்த மன்னாவை உண்டவர்கள் பூமியில் இறந்தது போல அல்லாமல், ஏசுவை ஏற்றவர்கள் பூமியில் மரணமடையமாட்டார்கள் என்றார்.

யோவான்6:31 எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ' அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் ' என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா! ' என்றனர்.32 இயேசு அவர்களிடம், ' உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ' என்றார்.

35 இயேசு அவர்களிடம், ' வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.

9 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.

ஏசு வாழ்வில் நடந்தது

யோவான்13:26 இயேசு மறுமொழியாக, ' நான் யாருக்கு அப்பத் துண்டைத் தோய்த்துக் கொடுக்கிறேனோ அவன்தான் ' எனச் சொல்லி, அப்பத் துண்டைத் தோய்த்துச் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாசுக்குக் கொடுத்தார்.27 யூதாசு இயேசு  கையிலிருந்து  அப்பத் துண்டைப் பெற்றதும் சாத்தான் அவனுக்குள் நுழைந்தான். 



ஏசு வாழ்வில் நட்ந்தது ஏசு தன் வாழ்நாளில் உலக முடிவை எதிர்பார்த்தார்

மத்தேயு:10: 23. ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேல் பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.                                                                      மாற்கு1314 'நடுங்க வைக்கும் தீட்டு' நிற்கக்கூடாத இடத்தில் நிற்பதை நீங்கள் காண்பீர்கள். படிப்பவர் இதைப் புரிந்து கொள்ளட்டும். அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும்.15 வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் கீழே இறங்க வேண்டாம்; தம் வீட்டினின்று எதையும் எடுக்க அதில் நுழையவும் வேண்டாம்.16 வயலில் இருப்பவர் தம் மேலுடையை எடுக்கத் திரும்பி வர வேண்டாம்.17 அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோர் நிலைமை அந்தோ பரிதாபம்!18 இவை குளிர்காலத்தில் நிகழாதபடி இறைவனிடம் வேண்டுங்கள்.19 ஏனெனில் இவை துன்பம்தரும் நாள்களாய் இருக்கும். கடவுள் படைக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இந்நாள்வரை இத்தகைய வேதனை உண்டானதில்லை; இனிமேலும் உண்டாகப் போவதில்லை. 

4 ' அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது.25 விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.26 அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.27 பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.

30இவையனைத்தும் நிகழும்வரை இப்பொழுது வாழும் மக்கள் இறக்க மாட்டார்கள்   என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.31 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.
மத்தேயு:27:27. மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும்.  28.பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும். 29.அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். 30.அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். 31.வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.
  ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பது நியதி. ஆனால் பைபிள் கோட்பாடு
மத்தேயு 26:  29 ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர்.  இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப் படும்.30 பயனற்ற இந்தப் பணியாளைப் புறம்பேயுள்ள இருளில் தள்ளுங்கள். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும் ' என்று அவர் கூறினார்.  


அனைவரையும் சமமாக மதித்து சூரியன் ஒளியையும் மழையையும் கூறிவிட்டு மீண்டும் சொல்வது என்ன பாருங்களேன். 
Jesus&women  
மாற்கு 7: 24 இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை.25 உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது.26 அவர் ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.27 இயேசு அவரைப் பார்த்து, ‘ முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.28 அதற்கு அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே ‘ என்று பதிலளித்தார்.29 அப்பொழுது இயேசு அவரிடம், ‘ நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று ‘ என்றார்.30அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார். 
 ஏசு தன் சீடர்களொடு இயங்கியபோது நடந்து கொண்டதையும் ஒன்றிணைத்துப் பார்ப்போம்.முடிவு.
மத்தேயு: 5:44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
 மத்தேயு-1521 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார்.  22அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, ‘ ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள் ‘ எனக் கதறினார்.23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, ‘ நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும் ‘ என வேண்டினர்.24 அவரோ மறுமொழியாக, ‘ இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடடம் மட்டுமே  நான் அனுப்பப்பட்டேன் ‘ என்றார்.25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ‘ ஐயா, எனக்கு உதவியருளும் ‘ என்றார்.26 அவர் மறுமொழியாக, ‘ பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல என்றார்.27 உடனே அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ‘ என்றார்.28 இயேசு மறுமொழியாக, ‘ அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ‘ என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

லுக்கா சுவி எனப்படும் புனையலை எழுதியவர் இந்த சம்பவத்தை முழுமையாக விட்டு விட்டார்-ஏன்? ஒரு கத்தோலிக்க பேராசிரியரே சரியான காரணம் தந்துள்ளார்.

As a Gentile, Luke found the Story of Syro Phonician Women (and especially the remarks about Dogs) offensive in Mark7:-30 and therefore left it out.
Companion to Bible, Vol-2 NewTestament P-30, Author K.Luke, Theological Publication of India, Bangalore. 

(இந்த நூல் இரண்டு கத்தோலிக ஆர்ச்பிஷப்பிடம் ரோமன் கத்தோலிகக் கோட்பாடுகளுக்கு ஒத்துள்ளது- அச்சிடலாம், தடையில்லை என முத்திரை பெற்ற நூல்.Nihil obstate and Imprimatur)

லுக்கா கதாசிரியர் ஒரு யூதரல்லாதவர், கிரேக்கப் சிரிய பெனிசிய பெண்ணிடமன சம்பவத்தில் ஏசு யூதரல்லாதவர்களை நாய் என்பதையும் வீட்டினர் சிந்தும் எச்சிலை உண்பதும் என்பவைமிகுந்த வேதனை தருபவை -அருவருப்பானவை என்பது உணர்ந்து நீக்கி விட்டார்.

  தன்னை சாலமனைவிட மோசேயைவிடவும் பெரியவர் என பழைய ஏற்பாட்டு வார்த்தைகட்கு மீறி தற்பெருமையோடு பேசுவார்/

மத்தேயு12:41 தீர்ப்பு நாளில் நினிவே மக்கள் இத்தலைமுறையினரோடு எழுந்து, இவர்களைக் கண்டனம் செய்வார்கள். ஏனெனில் யோனா அறிவித்த செய்தியைக் கேட்டு அவர்கள் மனம் மாறியவர்கள். ஆனால், இங்கிருப்பவர் யோனாவைவிடப் பெரியவர் அல்லவா!42 தீர்ப்பு நாளில் தென்னாட்டு அரசி இத்தலைமுறையினரோடு எழுந்து இவர்களைக் கண்டனம் செய்வார். ஏனெனில் அவர் சாலமோனின் ஞானத்தைக் கேட்க உலகின் கடைக் கோடியிலிருந்து வந்தவர். ஆனால் இங்கிருப்பவர் சாலமோனிலும் பெரியவர் அல்லவா!

நல்ல் போதனைகள் யாரும் சொல்லமுடியும், ஆனால் தன் வாழ்வே ஒரு அடையாளம் என நடத்தல் வேண்டும். இயேசு அதிகம் உண்பவராயும், மது சாராயம் குடிப்பவராகவும் இருந்தார். 
மத்தேயு 11:18 எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ ' அவன் பேய்பிடித்தவன் ' என்கிறார்கள்.19மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, ' இம் மனிதன் (இயேசு) பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன் ' என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று. '


 பெற்றோரை மதிக்க வேண்டும் - ஆனால் சீடர் கடமை செய்ய விடவில்லை
மத்தேயு 15:4 கடவுள், ' உன் தந்தையையும் தாயையும் மதித்து நட ' என்றும், ' தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும் ' என்றும் உரைத்திருக்கிறார்.
மத்தேயு 8:21 இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி, ' ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்து விட்டு வர அனுமதியும் ' என்றார்.22 இயேசு அவரைப் பார்த்து, ' நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப்பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள் 'என்றார்.
மாற்கு3:20 அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை.21 அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.
31 அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.32 அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. ' அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள் ' என்று அவரிடம் சொன்னார்கள்.33 அவர் அவர்களைப் பார்த்து, ' என்தாயும் என் சகோதரர்களும் யார்? என்று கேட்டு,34 தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, ' இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே.35 கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் ' என்றார்.
மாற்கு3:20 அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை.21 அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.
31 அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.32 அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. ' அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள் ' என்று அவரிடம் சொன்னார்கள்.33 அவர் அவர்களைப் பார்த்து, ' என்தாயும் என் சகோதரர்களும் யார்? என்று கேட்டு,34 தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, ' இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே.35 கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் ' என்றார்.
இயேசுவின் உண்மையான உறவினர்
(மாற் 3:31 - 35; லூக் 8:19 - 21)
46 இவ்வாறு மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக் கொண்டிருந்த போது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து அவருடன் பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருந்தார்கள்.47 ஒருவர் இயேசுவை நோக்கி, 'அதோ, உம்தாயும் சகோதரர்களும் உம்மோடு பேச வேண்டும் என்று வெளியே நின்று கொண்டிருக்கின்றார்கள்' என்றார்.48அவர், இதைத் தம்மிடம் கூறியவரைப் பார்த்து, ' என் தாய் யார்? என் சகோதரர்கள் யார்? 'என்று கேட்டார்.49 பின் தம் சீடர் பக்கம் கையை நீட்டி, ' என் தாயும் சகோதரர்களும் இவர்களே.50 விண்ணகத்திலுள்ள என் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் ' என்றார்.


 பெற்ற தாய் மேரியை யாரோ புகழ,  அதையும் மறுக்கிறார் இயேசு 

லூக்கா 11: 27 அவர் இவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், ' உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர் ' என்று குரலெழுப்பிக் கூறினார்.28 அவரோ, ' இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்என்றார்.



பல பரிசேயர்கள் அவரை விருந்துக்கு அழைக்க அங்கே மிகவும் கீழ்த்தரமாக எதிர்த்து கேவலப்பட்டனர். - லுக்கா 11:38, 14:1, 7:36 

இயேசு படித்தவர்களை சீடராக சேர்க்கவில்லை 
மத்தேயு 8: 18 இயேசு திரளான மக்கள் தம்மைச் சூழ்ந்திருப்பதைக் கண்டு, மறு கரைக்குச் செல்ல சீடர்களுக்குக் கட்டளையிட்டார்.19 அப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து, ' போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன் ' என்றார்.20 இயேசு அவரிடம், ' நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை ' என்றார்.

முதன்மையான கட்டளை
(மத் 22:34 - 40; லூக் 10:25 - 28)

28 அவர்கள் வாதாடிக்கொண்டிருப்பதைக் கேட்டுக்கொண்டிருந்த மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு அவர்களுக்கு நன்கு பதில் கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து, ' அனைத்திலும் முதன்மையான கட்டளை எது? ' என்று கேட்டார்.29 அதற்கு இயேசு, ' இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்.30 உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழுமனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்பு கூர்வாயாக ' என்பது முதன்மையான கட்டளை.31 ' உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக ' என்பது இரண்டாவது கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை 'என்றார்.32 அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், ' நன்று போதகரே, ' கடவுள் ஒருவரே; அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை ' என்று நீர் கூறியது உண்மையே.33 அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும் அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்புகொள்வது போல் அடுத்திருப்பவரிடம் அன்பு செலுத்தவதும் எரிபலிகளையும் வேறுபலிகளையும்விட மேலானது ' என்று கூறினார்.34 அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக் கண்ட இயேசு அவரிடம், ' நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை, நெருங்கி விட்டாய் 'என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

 மேலுள்ள கதையில் பரலோகம் நெருங்க இயேசுவே தேவையில்லை

சுவி கதைப்படி ஏசுவின் செயல்பாடு அவரைப் போற்றதக்கவராக ஆக்கவில்லை.

20 comments:

  1. இயேசு நமது பாவங்களுக்காக மரித்தார்.

    நீ தான் வர வேண்டிய அந்திக் கிறித்து.

    உலகம் அழிஅய்ப்போகிறது

    ReplyDelete
  2. I யோவான் 2:18 பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.

    ReplyDelete
  3. யோபு 25:4
    4 அப்படியெனில், எப்படி மனிதர் கடவுள்முன் நேரியவராய் இருக்க முடியும்? அல்லது பெண்ணிடம் பிறந்தவர் எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்?5 இதோ! வெண்ணிலவும் ஒளி குன்றியதே! விண்மீனும் அவர்தம் பார்வையில் தூய்மையற்றதே!6 அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர் எத்துணைத் தாழ்ந்தவர்! பூச்சி போன்ற மானிடர் எவ்வளவு குறைந்தவர்!

    ReplyDelete
  4. 20ம் நூற்றாண்டின் வழியில் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த மனிதரை எடை போடக் கூடாது.

    ReplyDelete
  5. 16ம் நூற்றாண்டு வாரை கத்தோலிக்கம் பைபிளை மக்களிடம் கொடுக்காமல் வைத்தது ஏன் என்று புரிகிறது.

    ஈசாகுரான் உமர், மைகோயம்புத்தூர் பாத்ரி வென்கட் இவர்கள் பதில் தருவார்களா16ம் நூற்றாண்டு வாரை கத்தோலிக்கம் பைபிளை மக்களிடம் கொடுக்காமல் வைத்தது ஏன் என்று புரிகிறது.

    ஈசாகுரான் உமர், மைகோயம்புத்தூர் பாத்ரி வென்கட் இவர்கள் பதில் தருவார்களா
    http://isakoran.blogspot.in/2012/07/blog-post_09.html

    ReplyDelete
  6. இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.

    super

    ReplyDelete
  7. //நீ தான் வர வேண்டிய அந்திக் கிறித்து.

    உலகம் அழிஅய்ப்போகிறது//
    இன்னும் கிருத்துவே வரவில்லை, அப்புறம் தானே அந்திக் கிருத்து.

    http://pagadhu.blogspot.in/2012/06/blog-post_24.html
    எல்லாமே கட்டுக் கதை.

    ReplyDelete
  8. உங்கள் கட்டுரைகள் சிலவற்றைப் படித்தேன்... என் ஐயங்களைத் தீர்த்து எனக்கு இன்னும் தெளிவு உண்டாக்கியதற்கு நன்றி....!

    இயேசு கிறிஸ்துவின் மேலும் கிறிஸ்துவ போதனைகள் மீதும் உங்களுக்குள்ள கசப்பு விளங்கியது. அந்த கசப்பை இங்கு கொட்டித் தீர்ப்பதும் புரிந்தது. இதை மறுத்து நீங்கள் வெளியிடும் கம்மண்டுகளுக்கும் ஏச்சுப் பேச்சுகளுக்கும் கிண்டல்களுக்கும் வாதாடி கொண்டிருக்க எனக்கு நேரமில்லை, இருந்தாலும் முயற்சிக்கிறேன், நீங்கள் பதில் வெளியிடாவிட்டாலும் அல்லது என் கம்மண்டையே வெளியிடாவிட்டாலும் பரவாயில்லை. அதோடு, "உங்களுக்காக நான் ஜெபம் செய்து கொள்கிறேன், கர்த்தர் உங்களுக்கு நல்ல புத்தி தரட்டும்" என்றெல்லாம் நான் இப்போது சொல்ல போவதில்லை, தயவு செய்து நீங்கள் செய்வதை தொடர்ந்து செய்யுங்கள்... எப்படியெல்லாம் ஒரு நபர் வேத வாக்கியங்களை தவறாக புரிந்துள்ளார், சரித்திரத்தை தவறாக புரிந்துள்ளார் என்பதை அறிய இந்த பிலாக் எனக்கு ரொம்ப உதவியாக உள்ளது, எல்லா பைபிள் வசனங்களையும் எடுத்துப் போட்டு "ஆதாரம் இருக்கா", "ஆதாரம் இருக்கா" என நீங்கள் கேட்கும் போது எனக்கு சர்வெக்சல் விளம்பரம் தான் நினைவிற்கு வருகிறது....!

    அன்பு சகோதரியே, நீங்கள் மறைமுகமாக பறைசாற்றி வரும் நம்பிக்கைகளுக்கு நான் ஆதாரம் கேட்கலாமா? உங்கள் அனுமதி வேண்டும்.... (அது என்ன நம்பிக்கை, எதனை காக்க இவ்வாறு அவதூறு வெளியிடுகிறீர்கள் என்பது உங்களுக்கே தெரியும், ஆனால் நீங்கள் ஒரு நாத்திகவாதி என்பீர்கள்! என்ன செய்ய? போகட்டும்...)

    எங்களுக்கு ஆதாரம் தேவையில்லை, விசுவாசம் ஒன்றே போதும், எங்கள் வாழ்க்கைக்கு தேவையான மன நிறைவும், நிம்மதியும், சந்தோசமும், பரலோக வாழ்வின் நிச்சயமும் இயேசுவால் அவரது வேத வசனங்களால் கிடைத்துள்ளன. அவைகளே எங்களுக்கு போதுமானதாக உள்ளது... இதெல்லாம் ஆதாரம் வைத்து தான் எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை... நீங்கள் நம்பினால் நம்புங்கள், இல்லாவிட்டால் தூக்கி எறிந்து விட்டு போங்கள்... இருந்தாலும் எதோ பைபிளில் உள்ள செய்திகள் எல்லாமே புனைவுக் கதைகள் என்பது போல நீங்கள் எழுதி வரும் கட்டுரைகளை கொஞ்சம் பார்ப்போமே... ஏதோ பிற வேதங்களில் உள்ள கதைகள் எல்லாம் 100 சதவீதம் அப்படியே நிருபனம் ஆகி உள்ளது போல ஒரு புனைவு உங்களுடையது... சகோதரி, நீங்கள் திருக்குறள் பற்றி ஒரு பதிவு போட்டுரிக்கிங்கலே அத எழுதினவர் பேரு திருவள்ளுவர் தானா, அவர் உண்மை வரலாறு என்றே இன்று வரை தெரியவில்லை... இத என்ன சொல்ல? திருக்குறளையும் தமிழையும் நான் மிகவும் நேசிப்பதால் உங்களுக்காக அவைகளை விமர்சிப்பதை நிறுத்துகிறேன், விமர்சித்தமைக்காக வருந்துகிறேன்... பைபிளில் உள்ள பல நபர்கள், ஊர்கள், சம்பவங்கள் சரித்திர பூர்வமாக நிருபனம் ஆகி உள்ளது...(நீங்கள் விரும்பினால் பிற புராணங்களோடு ஒப்பிட்டு பார்க்கலாமே? ஆனா என்ன செய்ய? நீங்கள் ஒரு நாத்திகர் என்பீர்கள்...! போகட்டும்...) நிருபனம் ஆகாத செய்திகளையும் நாங்கள் மனப்பூர்வமாக நம்புகிறோம், சில செய்திக்கு ஆதாரம் இல்லாட்டி அது உடனே பொய் ஆகிவிடாது, நூறு தலைமுறைக்கு முன்பு உங்கள் வம்சத்தில் இருந்த தாத்தா பாட்டிமார் பெயர்களையும் அவர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களையும் உங்களால் கொண்டு வர முடியுமா? ஆதாரம் கொண்டு வரலேனா அப்படி ஒருத்துவங்கலே கிடையாதுனு சொல்லிரலாமா? என்ன சொல்றீங்க?

    அதோடு நீங்கள் செய்து வரும் வேத வியாக்கானங்கள் பல தவறு... "இஸ்ரேல் மக்களிடத்திற்கு மட்டும் போங்கள்" என இயேசு சொன்னார், அதனால் அவர் ஒரு யூத இனவெறி பிடித்தவர் என சொல்லி இருக்கிறீர்கள், அதற்கு நான் விளக்கம் தரலாமா? அவர் பிறமக்களிடம் செல்லச் சொல்லி சொன்ன வசனத்தை நான் எடுத்துக் காட்டினால் மதவெறி பிடித்தவர் இயேசல்ல நீங்கள் தான் என ஒத்துக் கொள்கிறீர்களா? இது போல பல வேத வசனங்களுக்கு தவறான விளக்கங்கள் கொடுத்துள்ளீர்கள்...

    வெளியிடுவீர்களா?

    ReplyDelete
  9. அந்த நாட்டில் பாதிரியார் பாலியல் சர்ச்சை, இந்த நாட்டில் கிறிஸ்தவர் செய்த போர்கள், வன்முறைகள் என நீங்கள் பரிந்துரைக்கும் பல வலைதளங்களில் செய்திகளை படித்து வருகிறேன், கிறிஸ்தவன் என பெயரை வைத்துக் கொண்டு அவர் கூறிய போதனைகள் படி நடவாத பாவிகளைக் கண்டு நாங்கள் ஏன் இயேசுவை மறுதலிக்க வேண்டும்? அவன் அப்படி நடந்துக் கொண்டால் அதற்கென நாங்கள் இயேசுவை விட வேண்டுமா? வேண்டுமானால் அவனை கிறிஸ்துவத்தை விட்டு போகச் சொல்லுங்கள்.... இவ்வாறு அந்த கிறிஸ்தவன் அப்படி செய்தான், இந்த கிறிஸ்தவன் இப்படி செய்தான் என பதிவு செய்வது வேஸ்ட்.

    சில வலைதளங்களில் கிறிஸ்தவ மக்களை கேவலமான சொற்களால் ஏசி, பணத்துக்கு மதம் மாறினவர்கள், பணத்தால் மதம் மாற்றுகிறார்கள், தாய் மதத்திற்கு துரோகம் செய்தவர்கள், மேற்கத்திய நாகரீகத்தை ஏற்றுக் கொண்டவர்கள், பொய் சொல்லி இனிய வார்த்தைப் பேசி மதம் மாற்றுகிறார்கள் என என்னென்னமோ எழுதி வைத்திருக்கிறார்கள்... ஏதோ பணமும் மேற்கத்திய நாகரீகமும் தான் கிறிஸ்துவர்களுக்கு இரு கண்கள் என்பது போல ஒரு போலி உருவகம் செய்கிறீர்கள்! பணமும் மேற்கத்திய நாகரீகமும் தான் உலகில் உள்ள எல்லா கிறிஸ்துவர்களுக்கும் முக்கியமா? ஏன் எங்களில் எவருக்கும் எங்கள் கடவுள் மீது உண்மையான அன்பே இல்லையா? அவருக்காக வாழ வேண்டும், அவரை முழு மனதோடு வணங்க வேண்டும், தொண்டு செய்ய வேண்டும் என்ற எண்ணங்களே எங்களில் ஒருவருக்கும் இல்லையா? உண்மையான மனதோடு கடவுளை நேசித்து துதித்து அவருக்காக தொண்டு செய்யும் கிறிஸ்தவர்கள் இல்லாமல் இல்லை. அது உங்களுக்கு புரியவில்லை என்றால் ஒன்றும் செய்ய முடியாது... உங்கள் பிலாக் பணியைத் தொடர வாழ்த்து வேண்டுமானால் கூறலாம்...

    மூன்றாவது இப்படித்தான் ஆடை அணிய வேண்டும், ஜீன்ஸ் பேன்ட்டும் டீசர்ட்டும் தான் அணிய வேண்டும், ஆங்கிலம் தான் பேச வேண்டும் என்ற சட்டம் ஒன்றும் இல்லை. கண்ணியமாக சீலை உடுத்தி, முக்காடிட்டு, நல்ல தமிழ் பேசும் கிறிஸ்தவ பெண்கள் இங்கு ஏராளம் உள்ளனர். இந்திய பண்பாட்டோடு இயேசுவின் போதனைகளையும் காத்து நடக்கும் போது அதில் கிடைக்கின்ற மரியாதை அப்பெண்களை பார்த்தால் தான் உங்களுக்கு புரியும். உடனே அத்தகைய பெண்களே இல்லாதது போல அவர்களை காட்டுங்கள் என சொல்வீர்கள். அத்தகையோர் பலர் உள்ளனர் என்பது உங்களுக்கே தெரியும்... அதைவிட்டு விட்டு, இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லி அவதூறு பரப்பி வருகிறீர்கள்...

    இந்திய பண்பாட்டைக் காத்து, இயேசுவின் தூய போதனைகளில் நடந்து மன நிறைவோடு, அமைதியாக, நிம்மதியாக, பரலோக வாழ்வின் நிச்சயத்தோடு பல கிறிஸ்தவ குடும்பங்கள் இங்கு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறோம். இது போன்ற ஒரு குடும்பத்தில் வாழும் எவரும் அர்த்தமற்ற உங்கள் கட்டுரைகளுக்கு ஏமாற மாட்டார்கள்... அதை மறவாதீர்கள்...

    ReplyDelete
  10. திரு பிரவின் அவர்களே அடிப்படையில் ஒரு கருத்தை தாங்கள் மறந்து விட்டீர்கள்.
    இன்றைய பையின் ஒரு கட்டுக்கதை. யுதர்களை தங்களை ரட்சிக்க கிறிஸ்து என்ற இறைவனின் தூதர் வருவார்எ ன்றும் சுழற்காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீர்க்க தரிசி மிண்டும் வருவார் என்றும் எலியாவிற்குப் பின் கிறிஸ்து வருவார் என்றுவிசுவாத்தனர். இயேசு தண்ணீர் தந்த சமாரியா பெண்ணிடம் நான்தான் கிறிஸ்து என்றார். எலியா யார் என்ற கேள்விக்கு ”யோவான்” என்பவனை -காட்டு வெட்டுக்கிளியையும் தேனையும் உண்டு வாழ்பவன் - காட்டினார். எலியா பரலோகம் சென்ற போது எந்த உடலில் இருந்தானோ அந்த உடலின்தான்வர வேண்டும் -அதே மாமிசத்தில் - எனவே எலியா யோவான் அல்ல என்று யுதகுருக்கள் தீர்ப்பளித்து கிறிஸ்து, இயேசு அல்ல! எனவே வேதப்புரட்டன் என்று தீர்ப்பளித்து சிலுவையில் அறைந்து கொல்ல ஆணையிட்டனர். சிலுவையில் இயேசு அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. பண்டிகை சந்திரோதயதில் துவங்கிவிடும்.சப்பாத் பண்டிகை துவங்கி விட்டால் சிலுவையில் ஏதும் தொங்கக் கூடாது. எனவேதான் இயேசுபோடு சிலுவையில் அறையப்பட்ட இரு திருடர்களை கொன்று வழக்கப்படி மண்ணில் குழி தோண்டி புதைத்த அரசு காவல்கள் இயேசுவை மட்டும் கொல்லாது காலை முறிக்காது இறக்கி வெள்ளை குந்திரிகம் உள்ள ஒரு துணியில்சுற்றி ஒரு குகையில் வைத்து சென்றது ஏன் ! எலியா ஆவியிலும் தத்துவத்திலும் யோவான் என்று தற்சமயம் கிறிஸ்தவ சபை புலம்பிக் கொண்டிருக்கின்றது.
    கதை இப்படி யிருக்க இயேசு தனது சீடர்களை புறசாதி மக்களின் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ போகக் கூடாது என்கிறார். இந்நிலையில்
    01.இயேசு உலக மக்களின் பாவத்திற்கு சிலுவையில் பலியானாா்
    02. இயேசு வின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கும்
    03. இரட்சிப்பு இயேசுவின் மூலம் மட்டும்தான்
    04.இயேசு மரித்து 3 நாட்கள் கழித்து உயிர்த்தெழுந்தார்

    என்கிற கருத்துக்கள் எவ்வளவு அபத்தமானவைகள்.இயேசுவின் வரலாற்றுக்கு புறம்பான கட்டுக்கதைகள் என்பது தெளிவாக அனைவருக்கும் புரியும். எனவே பைபிள் ஒரு கட்டுக்கதை. உணர்ச்சிகைளை முன்னிருத்தி மனதில் மயக்கத்தை ஏற்படுத்தி பரிதாப உணர்ச்சியை ஏற்படுத்தி கஇயேசு குறித்த மேற்படி கேள்விகளை யாரும் கேட்காமல் பார்த்துக் கொள்கின்றனர்.

    சமூகம் சதா பரிணமித்துக் கொண்டிருக்கின்றது. யுத சமூகத்தில் இயேசு சில மறுமலர்ச்சியை ஏற்படுத்த விரும்பி உழைத்தார் அவர் விரும்பிய மாற்றம்

    ReplyDelete
  11. இன்றளவும் உலகில் சுமார் 1.5கோடி அளவில் யுதர்கள் வசிக்கின்றனர். அவர்கள் கிறிஸ்து இன்னும் பிறக்கவில்லை. இனிமேல்தான் வருவார் என்று விசுவாசித்து வாழ்ந்து வருகின்றனர் திரு பிரவின் அவர்களே.தங்களால் மறுக்க முடியுமா ?
    சவால்

    ReplyDelete
  12. ஐயா பிரவின் அவர்களே ! பிதிலளிக்க தைரியம் உள்ளதா ?
    இயேசுவின் யுதசாதி வெறி.பிற சாதி மக்களை நாய்கள் என்றும் பன்றிகள் என்றம் திட்டும் சாதித்திமிருக்கு ஆதாரம்.

    மத்தேயு-15: 21 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். 22அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, ‘ ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள் ‘ எனக் கதறினார்.23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, ‘ நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும் ‘ என வேண்டினர்.24 அவரோ மறுமொழியாக, ‘ இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடடம் மட்டுமே நான் அனுப்பப்பட்டேன் ‘ என்றார்.25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ‘ ஐயா, எனக்கு உதவியருளும் ‘ என்றார்.26 அவர் மறுமொழியாக, ‘ பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.27 உடனே அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ‘ என்றார்.28 இயேசு மறுமொழியாக, ‘ அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ‘ என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.

    ReplyDelete
  13. அய்யா Dr அன்புராஜ்,

    இஸ்ரவேல் ஜனம் ஆண்டவர் தனக்கு சொந்தமாக தெரிந்து கொண்ட ஜனம் . அவர்கள் மேல் அதிக அன்பு வைத்திருந்தார். அவர்களுக்காக செங்கடலை இரண்டாக பிரித்தார். எல்லாவற்றையும் அவர்களுக்காக செய்தார். அனால் இஸ்ரவேல் ஜனங்கள் ஆண்டவரை மறந்த போதோ தன்னுடைய குமரனை அனுப்பி இஸ்ரவேலை தன பக்கமாய் இழுத்து கொள்ள விரும்பினார். அப்படியும் இஸ்ரவேல் ஜனகள் அவரை ஏற்று கொள்ளாமல் அவரை சிலுவையில் அறைந்து கொன்றார்கள். அந்த சிலுவை மரணத்தை ஆண்டவர் ஜெயமாக மாற்றி இயேசு கிறிஸ்துவை முன்றாம் நாள் உயிர் பெற செய்தார். தன் சொந்த ஜனங்கள் இந்த ரட்சகரை ஏற்று கொள்ளாததல் புற இனத்தவராய் இருந்த உங்களுக்கும் எனக்கும் இந்த நன்மை கிடைத்தது.

    எப்படி என்று கேட்பீர்கள் : லுக்கா 13:34 இல் இயேசு தன் ஜனத்தை பார்த்து கண்ணீர் விடவராய்...
    " எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன்சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று" என்று கூறினார்.

    அதற்கு பிற்பாடு ஒரு உவமையை கூறினார் லுக்கா 14:16 -24 படித்தால் உங்களுக்கு புரியும் என்று நினைகிறேன்.


    நீங்கள் மேற்கோள் காட்டியுள்ள அந்த பெண் அன்று இயேசுவிடம் அப்படி கெஞ்சாமல் இருந்திருந்தால் ஒருவேளை இந்த நல்ல செய்தி எனக்கும் உங்களுக்கும் தெரியாமல் போய் இருக்கும். கிருஸ்தவ மிஷனரிகள் ஒருவேளை நம்மி தேடி வராமலிருந்திருந்தால் இந்த நாகரீகம் நமக்கு தெரிந்து இருக்காது. நீங்கள் இநேரம் உங்கள் ஊரில் பச்சை இலை வைத்தியர் அன்பரசன் ஆக இருந்திருக்க கூடும். நான் மாட்டு வண்டி ஒட்டிகொண்டிருக்க கூடும்.

    எனவே எல்லாவற்றையும் ஆராய்ந்து அறிந்து பேசுங்கள் என்று தயவாய் கேட்டு கொள்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. யூதர்கள் எனும் ஒரு இனம் இருந்ததா என்பதே சந்தேகம்.

      பழைய ஏற்பாடு, பொ.மு 100 -300 இடையீ இஸ்ரவேல் ஆட்சி அரசியல் உரிமை பற்றிய கட்டுக் கதை புனையல்கள். சவக் கடல் பழைய ஏற்பாடு சுருள்கள் கர்த்தர் கேர்சிம் மலையில் வழிபட சொன்னதாகக் கதை. தாவீது - சாலமன் காலத்தில் ஜெருசலீம் சிறு கிராமம்.
      பழைய ஏற்பாட்டை நம்பி ஏன் வீ ணாக கதைக்கீறீர்கள். அவை வெற்று அரசியல் சூழ்ச்சிகள்.
      பழைய ஏற்பாடு- மோசேயின் நியாய பிரமாணம்- மோசடிகள்.
      http://pagadhu.blogspot.in/2014/07/blog-post.html

      Delete
    2. நண்பர்களே வருகைக்கு நன்றி,
      தினேஷ் பவுல் - நீங்கள் இயேசு இனவெறியோடு நடந்தார் என்பதை ஏன் சப்பைகட்டி மழுப்ப வேண்டும்?

      ஏசுவை கடவுள் மகன் எனில், அவர் மரணம் மூலம் மனிதன் மரணத்திற்கு காரணமான ஆதாமின் பாவம் போய் விட்டது எனில், மனிதன் மரணம் அடையக் கூடாதே?

      பைபிள்படி மனிதன் மிருகம் போலே அறிவற்று நிர்வாணமாக இருந்திருக்க வேண்டும். சாத்தான் புண்ணியத்தால் பெற்ற அறிவை பயன்படுத்துங்க்ள்.

      பைபிள் முழுமையும் படியுங்கள்.

      Delete
  14. If you are looking for the life of Christ witnessed by non Christians , then please read the below...

    The first-century Roman Tacitus, who is considered one of the more accurate historians of the ancient world, mentioned superstitious “Christians” (from Christus, which is Latin for Christ), who suffered under Pontius Pilate during the reign of Tiberius. Suetonius, chief secretary to Emperor Hadrian, wrote that there was a man named Chrestus (or Christ) who lived during the first century (Annals 15.44).

    Flavius Josephus is the most famous Jewish historian. In his Antiquities he refers to James, “the brother of Jesus, who was called Christ.” There is a controversial verse (18:3) that says, “Now there was about this time Jesus, a wise man, if it be lawful to call him a man. For he was one who wrought surprising feats....He was [the] Christ...he appeared to them alive again the third day, as the divine prophets had foretold these and ten thousand other wonderful things concerning him.” One version reads, “At this time there was a wise man named Jesus. His conduct was good and [he] was known to be virtuous. And many people from among the Jews and the other nations became his disciples. Pilate condemned him to be crucified and to die. But those who became his disciples did not abandon his discipleship. They reported that he had appeared to them three days after his crucifixion, and that he was alive; accordingly he was perhaps the Messiah, concerning whom the prophets have recounted wonders.”

    Julius Africanus quotes the historian Thallus in a discussion of the darkness which followed the crucifixion of Christ (Extant Writings, 18).

    Pliny the Younger, in Letters 10:96, recorded early Christian worship practices including the fact that Christians worshiped Jesus as God and were very ethical, and he includes a reference to the love feast and Lord’s Supper.

    The Babylonian Talmud (Sanhedrin 43a) confirms Jesus' crucifixion on the eve of Passover and the accusations against Christ of practicing sorcery and encouraging Jewish apostasy.

    Lucian of Samosata was a second-century Greek writer who admits that Jesus was worshiped by Christians, introduced new teachings, and was crucified for them. He said that Jesus' teachings included the brotherhood of believers, the importance of conversion, and the importance of denying other gods. Christians lived according to Jesus’ laws, believed themselves to be immortal, and were characterized by contempt for death, voluntary self-devotion, and renunciation of material goods.

    Mara Bar-Serapion confirms that Jesus was thought to be a wise and virtuous man, was considered by many to be the king of Israel, was put to death by the Jews, and lived on in the teachings of His followers.

    Then we have all the Gnostic writings (The Gospel of Truth, The Apocryphon of John, The Gospel of Thomas, The Treatise on Resurrection, etc.) that all mention Jesus.

    ReplyDelete
  15. இயேசு வரலாறு குறிப்பு எல்லாம் போர்சரி- விக்கி
    இயேசு பற்றி வரலாற்று குறிப்புகள் எல்லாம் போர்சரி- பகுத்தறிவு விக்கி கூறும் உண்மைகள்
    http://rationalwiki.org/wiki/Evidence_for_the_historical_existence_of_Jesus_Christ

    http://pagadhu.blogspot.in/2014/05/blog-post_2846.html

    All the material you quoted are christian interpolations and forgeries

    ReplyDelete
    Replies
    1. to hide your intension why use a pseudonym ..a Christian name, you want to sound authentic?

      Delete
    2. I used to discuss with a Retired Theology Professor and ex-Pastor on my doubts and when he refers another verses or context -I use to recall the verse number and verbatim the verse, that friend said you are wiser than Biblical Solomon, I took this name.

      Delete
  16. I want you to comment whether my reading of Bible is wrong, but not based on blind super stion of bible tales. I want you to go to the Orginal verse in Hebrew/ Greek and confirm with latest theological position of Western Universities

    ReplyDelete

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா