Monday, March 31, 2014

மாற்கு சுவிசேஷமும் வரலாற்று(?) இயேசு கிறித்துவும்

கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகன் இயேசு என்பவர் வாழ்ந்தார்  என்பதற்கு ஒரு வரலாற்றுச் சான்று ஏதும்  கிடையாது.  30 வாக்கில் மரணமடைந்த   இயேசு பற்றி முதலில் புனையப்பட்டது மாற்கு சுவிசேஷம். 70-75 வாக்கில். ஏசு இறந்து 40 வருடம் பின்பு தான் முதல் சுவிசேஷத்தின் பழைய வடிவம் புனையல் ஆரம்பித்தது.
மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் வேதாகமவிமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ்அவர்கள் தன்நூல் “The Real Jesus” பின்வருமாறு சொல்லுகிறார்-“ The Conclusion usually(and I think rightly) drawn from their comparative study is that the Gospel of Mark (or something like it) served as a source for the Gospels of Matthew and Luke, and that these two also had access to a collection of sayings of Jesus(conveninently called ‘Q’), which may have been complied as a handbook  for the Gentile mission around AD50.- P-25.

பெரும்பாலன ஆராய்ச்சியாளர்கள் கூறுவது, (என் கருத்தும்-அது சரி) மாற்கு சுவி(அல்லது அது போன்றது) கதையைக் கொண்டு, இத்தோடு இயேசு சொன்னவை எனப்படும் (Q) ஒரு 50 வாக்கில் எழுந்த குறிப்புகளும் கொண்டே மத்தேயு லூக்கா சுவி கதைகள் வளர்ந்தன.

நற்செய்தி நூல்களுள் மாற்கு நற்செய்தி நூல்தான் முதலாவதாக எழுதப்பட்டது என்பது பெரும்பாலான அறிஞர்களின் கருத்து. கி.பி.64- ஆம் ஆண்டில் இருந்து 70-ஆம் ஆண்டுக்குள் இந்நூல் எழுதப்பட்டிருக்க வேணடும். எருசலேம் அழிக்கப்படவிருந்த சூழலில், உரோமையரால் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டக் காலத்தில், உரோமை நகரிலிருந்த மாற்கு இதனை எழுதியிருக்க வேண்டும். பேதுரு,பவுல் போனற பெருந்தலைவர்கள் கொல்லப்பட்டுவிட்ட காலக் கட்டத்தில், இயேசுவின் நற்செய்தியைத் தொகுத்து அதற்கு எழுத்து வடிவம் கொடுக்க வேண்டியது இன்றியமையாத தேவையாகத் தெரிந்திருக்க வேண்டும்.

மாற்கு சுவியில் ஏசு பிறப்பில் அதிசயம் பற்றி ஏதும் கிடையாது. ஏசுவின் மலைப் பிரசங்கம் கிடையாது.

கலிலேயாவில் வாழ்ந்த ஏசு, 100 மைல்கள் நடந்து யோவான் ஸ்நானகனைத் தேடி சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்குகிறது.

(மத் 3:13 - 17; லூக் 3:21 - 22)

மாற்கு1:.4 இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.5யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.6யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.7 அவர் தொடர்ந்து, ' என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.8 நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ' எனப் பறைசாற்றினார். 9 அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.

பிறகு ஏசு 40 நாள் உபவாசமிருந்து வர சாத்தான் வந்து சோதிக்க யோவான் கைதாகிட கலிலேயா வந்து சீடர் சேர்க்கிறார்.

இயேசு கலிலேயாவில் பணி தொடங்குதல்
(மத் 4:12 - 17; லூக் 4:14 - 15) முதல் சீடர்களை அழைத்தல் (மத் 4:18 - 22; லூக் 5:1 - 11)

மாற்கு1:14 யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார்.15 ' காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் ' என்று அவர் கூறினார். 16 அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக் கொண்டிருந்தார்கள்.17 இயேசு அவர்களைப் பார்த்து, ' என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ' என்றார்.18 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

பிறகு ஏசு 40 நாள் உபவாசமிருந்து வர சாத்தான் வந்து சோதிக்க யோவான் கைதாகிட கலிலேயா வந்து சீடர் சேர்க்கிறார். பின்னர் மேலுமாக 12 சீடர் சேர்த்து முழுமையாக கலிலேயாவில் இயக்கம் நடத்தினார்.
ஒவ்வொரு ஆண்டும் பஸ்கா பண்டிகைக்கு கர்த்தர் என்னும் சிறு எல்லை தெய்வம் இருக்கும் ஒரே ஒரு இடமான ஜெருசலேம் யூதாலயத்தில், எகிப்தின் சிறு குழந்தைகளை கொலை செய்தார் என்பதற்கு நன்றியாக வருடாவருடம் ஒவ்வொரு யூதரும் ஆடு கொலை செய்து பலி தர ஜெருசலேம் செல்ல வேண்டும். மாற்கு சுவியில் ஏசு யோவானிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றபின் வந்த முதல் பஸ்கா ஆடு கொலை செய்து பலி தர செல்கையில் போது கைதாகி மரணம், அதாவது ஏசு சிடரிடம் இருந்து இயங்கிய காலம் ஒரு வருடத்திற்கும் குறைவு.
The Real Jesus நூலில் பேராசிரியர் F F புரூஸ்
Whereas in the synoptic record most of Jesus’ ministry is located in Galilee, John places most of it in Jerusalem and its neighbourhood. –P.27 ஒத்த கதை சுவிகள் இயேசு பெரும்பாலும் கலிலேயாவில் சீடரோடு இயங்கியதாகச் சொல்ல, நான்காவது சுவி ஜானிலோ பெருமளவில் ஜெருசலேமிலும் யூதேயாவிலும் இயங்கியதாக என்கிறது.
பைபிள்-(விவிலியம்) இவை முழுவதுமாக ஆன்மிகக் கருத்துக்களோ இறையியற் நோக்கு கொண்டது அல்ல, பெரும்பாலும், அரசியல் -ஆக்கிரமிப்பு போன்றவற்றை இறைவன் பெயரில் மிகப்பிற்காலத்தில் அரசியல் நோக்கில் புனையப் பட்டவையே ஆகும்.

மாற்கு15: 16 சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

43 இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனான யூதாசு வந்தான். அவனோடு தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியோர் அனுப்பிய மக்கள் கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தது.44 அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தவன், ' நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு, அவரைப் பிடித்துக் காவலோடு கொண்டு போங்கள் ' என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான்.45 அவன் வந்ததும் உடனடியாக அவரை அணுகி, ' ரபி ' எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான்.46 அவர்களும் அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர்.47 அருகில் நின்று கொண்டிருந்தவர்களுள் ஒருவர் தம் வாளை உருவி, தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார்.
ஆனால் நான்காவது சுவியான யோவான் சுவியின்படி, ஏசு கைதான மறுநாள் தான் பஸ்கா பண்டிகை. கைது செய்தது ரோமன் படைவீரர்கள், ஆயிரம் வீரர் தலைவர்.

யோவான்18:  3 படைப் பிரிவினரையும் தலைமைக் குருக்களும் பரிசேயரும் அனுப்பிய காவலர்களையும் கூட்டிக் கொண்டு யூதாசு விளக்குகளோடும் பந்தங்களோடும் படைக்கலங்களோடும் அங்கே வந்தான்.   
12 படைப்பிரிவினரும் ஆயிரத்தவர் தலைவரும் யூதர்களின் காவலர்களும் இயேசுவைப் பிடித்துக் கட்டி,13 முதலில் அவரை அன்னாவிடம் கொண்டுசென்றார்கள். ஏனெனில் அந்த ஆண்டில் தலைமைக் குருவாய் இருந்த கயபாவுக்கு அவர் மாமனார்.
28 அதன்பின் அவர்கள் கயபாவிடமிருந்து ஆளுநர் மாளிகைக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள். அப்போது விடியற்காலம். பாஸ்கா உணவை உண்ணுமுன் தீட்டுப் படாமலிருக்க ஆளுநர் மாளிகையில் அவர்கள் நுழையவில்லை.

ஆயிரம் படைவீரர் தலைவர் ஏசுவை கைது செய்யவந்தார் எனில் முழுமையாக ரோமன் கவர்னர் ஆணையில் தான்.
 
 யூதேயா ரோமன் கவர்னர் கீழ் நேர் ஆட்சியின் கீழ் இருந்தது, இங்கே ஏசு இல்லை, கைது செய்தது யூதர் என மாற்கு ஏன் பொய்யாய் மோசடியாய் புனைந்தார்.
ஏசு யோவான் ஸ்நானகன் கைதிற்குபின் தான் இயக்கம் தொடங்குவதாகவும், அடுத்து வந்த பஸ்காவில் மரணம் எனவும் மாற்கு சொல்ல, ஏசு இயக்கம் தொடங்கியபின் ஸ்நானகன் வருவதாகவும் 4ம் சுவியில் உள்ளது. ஏசு 3 பஸ்கா பண்டிகைகளுக்கு யூதேயா வருவதாகவும் கதை தருகிறார்.
Bible Scholar A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதிய ஏற்பாடு பேராசிரியர்- ஹன்டர் பின்வருமாறுசொல்லுகிறார்-
“If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned.
4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.
நம்மிடம் மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடு இயங்கிய துகலிலேயாவி ல்என்றும், -ஞானஸ்நானம் பெறவும் கடைசியாக மரணத்தின் போதுமட்டுமே ஜெருசலேம் வந்தார்; மேலும் -ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் பிறகு கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும். நான்காவது சுவி யோவேறுவிதமாக, முதல் ஆறு அத்தியாயங்களில் யுதேயாவிலும் கலிலேயாவிலும் முன்னும்-பின்னும் இயங்கியதாகவும்; எழாம் அத்தியாயத்திற்குப் பின்முழுமையாக ஜெருசலேமிலும் யூதேயாவிலும் எனச்சொல்கிறார், யோவன் 3:24- ஞானஸ்நானர் யோவான் கைதிற்குப் முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும்.//

நாம் புரிந்து கொள்வது – மாற்கு சுவிசேஷக் கதாசிரியர் இயேசு சீடர்களோடு இயங்கிய விவரங்களைக் கூட சரியாகத் தரவில்லை. 

இது வேண்டுமென்ற மோசடியா, மாற்கு கதாசிரியருக்கு உண்மை தெரியவில்லையா?


Tuesday, March 25, 2014

இயேசு உண்மையில் வாழ்ந்தவர் -ஆதாரமே இல்லையே! விக்கிப்பீடியா பொய்யே!

பைபிளிற்கு வெளியே ரோமன் அரச குறிப்பு ஏசு பற்றி உண்டா இல்லை. முதல் நூற்றாண்டின் பிரபலமானவர் அலெக்சாந்திர்யாவின் பிலோ. இவர் யூத கிரேக்க தொடர்பை இணைத்து 20 - 50 களில் எழுதியது நிறைய உள்ளது. ஏசு, கிறிஸ்துவம் பற்றி ஒரு வார்த்தை கூடக் கிடையாது.


தமிழ் விக்கிப்பீடியா கிறிஸ்தவர்களால்  புனையப்படுவதையே சொல்கிறது. 

  
1.)  இளைய பிளினி (Pliny the Younger 61-112.)
2.) தாசித்துசு (Tacitus) (கி.பி. 56-117) 
3.) ஃப்ளாவியுசு யோசேஃபசு (Flavius Josephus):
4. லூசியன் (Lucian) 

 நம்மிடம் மேலுள்ள நால்வர் எழுதிய மூல ஏடுகள் ஏதும் கிடையாது.
2ம் நூற்றாண்டின் ரோமன் ஆசிரியர் செல்சஸ்  எழுதிய "உண்மை வார்த்தை" என்னும் நூல் கிறிஸ்துவம் பொய் என்ற பெரும் புத்தகம், இது போல எழுதப்பட்ட ஆய்வு நூல்களும், ஏன் புதிய ஏற்பாடில் சேர்க்கப்படாத பல கிறிஸ்துவ நூல்கள் அனைத்தும் சர்ச்சினால் அழிக்க்ப்பட்டன.


செல்சஸ் எழுத்திற்கு மறுப்பு என சர்ச்சின் ஓரிகன் "கான்ட்ரா செல்சஸ்" எனும் நூலில் பதில் தர ஓரிகன் மேலுள்ள ஒரு நூலின் ஒரு வசனம் கூடப் பயன்படுத்தவில்லை. தரும்போது முலத்தை பல இடங்களில் மூலத்தை சொல்லி பதில தந்ததில் நமக்கு செல்சஸ் புத்தகம் ஓரளவு கிடைகிறது.

 ஜோசபஸ் பிறந்ததே 37ல்.  நூல்கள் எழுதியதானது 95 வாக்கில்.ஜோசபஸ் ஏடுகள் அனைத்தும் பல முறை கிறித்துவக் கைகளால் மாற்றி திருத்தப்பட்ட போர்ஜரிகள்.

ஜோசபஸ் ஏடுகள் சொல்வது யோவான் மரணம் பொ.கா.36ல், ஏசு மரணத்திற்கு 6 வருடம் பின்பு. இது பரவாயில்லையா
In the Antiquities of the Jews (Book 18, Chapter 5, 2) Josephus refers to the imprisonment and death of John the Baptist by order of Herod Antipas, the ruler ofGalilee and Perea.[20][21] The context of this reference is the 36 AD defeat of Herod Antipas in his conflict with Aretas IV of Nabatea, which the Jews of the time attributed to misfortune brought about by Herod's unjust execution of John.

ஜோசபஸ் ஏடுகள் சொல்வது யோவான் மரணம் பொ.கா.36ல், ஏசு மரணத்திற்கு 6 வருடம் பின்பு. இது பரவாயில்லையா.

இளைய பிளினி(112)எழுத்தில் ஏசு பெயர்கூடக் கிடையாது.

 116- 117 எழுதப்பட்டதாசித்துசு  65- 70 போரின்போது ரோம் தீப்பற்றி எறிய கிரேஸ்துவர்கள் காரணம் என்பதாக உள்ளது. இது யூதரிக் குறிக்கும். ரோமில் கிறிஸ்துவம் நுழைந்தது பின்னாளில் தான்.

லூசியன் காலம் இன்னும் பிற்காலம்.
 இவை எதுவுமே ஏசுவிற்கு ஆதாரம் இல்லை.

http://www.truthbeknown.com/josephus.htm
http://www.truthbeknown.com/suetoniuschresto.html

இயேசு  கிறிஸ்து எனும் கிறிஸ்துவ புராணக் கதை நாயகர் உண்மையில் வாழ்ந்தவர் எனில் ஏசு யார் எனத் தேடினால்
 

மத்தேயு சுவியின்படி பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப்- மேரியின் மகன், ஆப்ரிரகாமிலிருந்து 41வது தலைமுறையினர். பொ.மு.6 பெரிய ஏரோது மரணத்திற்குமுன் பிறந்தவர்.
லுக்காவின் சுவியின்படி நாசரேத்தில் வாழ்ந்த ஏலி மகன் ஜோசப்- மேரியின் மகன், ஆப்ரிரகாமிலிருந்து 57வது தலைமுறையினர். பொ.கா.8 சிரியா கவர்னர் கிரேனியு காலத்தின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது பிறந்தவர்.

சரி போகட்டும் - ஏசு சீடரோடு வாழ்ந்த காலம் தான் கதாசிரியர்களுக்குத் தெரியும்- அதை சரி பார்க்கலாம் எனில்

மாற்கு மற்றும் அதைப் பின்பற்றி புனையப்பட்ட மத்தேயு, லூக்கா சுவிசேஷக்க் கதைகளின்படி, ஏசு யோவானிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றபின் கலிலேயா வந்து சீடர் சேர்த்து கலிலேயாவிலேயே இயங்கிட பஸ்கா பண்டிகைக்காக ரோம் ஆட்சி கீழான யூதேயா ஜெருசலேம் வர கஈதாகி மரண தண்டனையில் இறந்தார். கடைசி இரவு விருந்து முடிய வெள்ளி அன்று பஸ்கா பண்டிகை அன்று கைதாகி கொல்லப்பட்டார். கடைசி சில நாட்கள் மட்டுமே யுதேயாவில்.

நான்காவது சுவி யோவான் சுவிசேஷக் கதைப்படி, யூதேயாவிலேயே சீடர் பிடிப்பார், யூதேயா- கலிலேயா என இங்கும் அங்கும் பயணித்தார். 3 பஸ்கா பண்டிகை ஜெருசலேம் வருகை உள்ளது. கடைசி 8 மாதங்கள் ஜெருசலேமிலே தான், கூடாரப் பண்டிகை, மறு அர்ப்பணிப்பு, பஸ்கா என் செப்டம்பரிலிருந்து ஏப்ரல் வரை ஜெருசலேமில் தான், வெள்ளி அன்று பஸ்கா பண்டிகைக்கு முந்தைய நாள் கைதாகி கொல்லப்பட்டார்.

மேலுள்ள பஸ்கா வெள்ளியா- சனியா குழப்பம் ஏசு இறந்த வருடம் எது என்பதைக் கூட நிர்நணயம் செய்யமுடியாமல் தடுக்கிறது. பெரும்பாலான பைபிளியல் பாதிரி பேராசிரியர்கள் 28ம் ஆண்டு பஸ்கா வருகைக்குபின் யோவானிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றவர், 30 பஸ்கா வருகை போது கொல்லப்பட்டார் என்கின்றனர். சிலர் 31- 33 என்கின்றனர். எது சரியோ, எது தவறோ, இரண்டுமே தவறோ - சரி பார்க்க வழியே இல்லை.

நம்மிடம் சுவிசேஷங்களின் தகுதியான முழு ஏடுகள் 300 வாக்கை சேர்ந்தது தான்.  30 களில் இறந்தவர் பற்றி முதலில் புனையப் பட்டது மாற்கு சுவிசேஷம் 65-75களில், ஏசு இறந்து 35- 45 வருடம் பின்பு. அப்போதே எத்தனை பேர் ஏசுவோடு வாழ்ந்தவர் இருந்திருப்பர் என்பது சந்தேகம் தான்.
Pakistan Parliament discussions