Tuesday, May 31, 2022

ஏஆர் ரஹ்மான் ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன் ஹிந்தி பாடல் பாடி இணைப்பு மொழியை உறுதி செய்தார்

 ஏஆர் ரஹ்மான் குஜராத் அகமதபாத் ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன் ஹிந்தி பாடல் பாடி இணைப்பு மொழியை உறுதி செய்தார்

ஆணவத்தில் இப்படி நடந்துகொண்ட ஏ.ஆர்.ரஹ்மான்..!!    பேருக்குதான் தமிழ்ன்னு சொல்லிட்டு இருப்பாரு..!!  கடுமையாக விமர்சித்து வரும் ரசிகர்கள்..!! அப்படி என்னதான் நடந்தது.?

https://vivasaayathaikappom.com/cinema/61271/
சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வருடம் வருடம் ஐபிஎல் போட்டியின் இறுதிப்   போட்டியில்  பங்கேற்ற பாடுவது வழக்கம். அப்படி ஒரு நிலையை ராஜஸ்தான்-குஜராத் அணியின் இறுதி போட்டி ஆரம்பிக்கும் முன் கோலாகலமாக நிகழ்ச்சி  நடைபெற்றது.

அந்த நிகழ்ச்சியில்  ரன்பீர் சிங்கிங் நடனமும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் நடைபெற்றது. அப்பொழுது அனைத்து மொழி  சார்ந்த பாடலை இவர்   பாடியுள்ளார். ஆனால்,  தமிழில் வெளியான பாடல்களை கூட அவர் ஹந்தியில் தான் பாடியுள்ளார். மேலும், ரன்வீர் சிங் கூட தமிழ், தெலுங்கு, கன்னட மொழி  படங்களின் பாடல்களுக்கு நடனமாடி இருக்கிறார். ஆனால், இவர் தமிழ் தமிழ் என்று கூறிவிட்டு  ஐபிஎல் மேடையில் இப்படி செய்தது   ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள்.









































 

Vishvaksenan https://www.facebook.com/permalink.php?story_fbid=3318589075131808&id=100009422441998&__cft__[0]=AZVrwLffWhkSrtU5-eLHOH8F6oa_KSBlcEAaQ0dwbf1VOlJJRcRREp7GIKnEZkJNeC_ikam579sJfms4s-YWvYXk-GcCHqqcFKlmtfg_1cUzf4lag8WfWtX9XKoYi-csf0S_-zhUU-PU9t_j4TK_aUcV4B3_HpdwTmfbRIP5XEBSs66ES2Yfo_mwddACBso1RU4upSoOjHapVWxAxjmm5OVw&__tn__=%2CO%2CP-R

ரஹ்மான் 92ல் ரோஜாவில் அறிமுகமான போது ராஜாவை வீழ்த்திவிட்டார் என்றே பலரும் நினைத்தனர், ராஜாவின் மேல் அதிருப்தியானோர் எல்லாம் ரஹ்மான் நோக்கி படையெடுத்தனர், ஆனால் ரஹ்மான் கொஞ்ச காலமே எல்லோருக்கும் இசையமைத்தார், வெகுசில படங்களே, பின் சிறிய, நடுத்தர தயாரிப்பாளர்களை தன் பக்கம் அண்டாதவாறு துரத்திவிட்டார், அதற்காக தன் படக்கூலியையும் அவர்கள் கொடுக்க முடியாத அளவு வெகு அதிகமாக்கிக் கொண்டார், அதன் பிறகு மணிரத்னம், ஷங்கர், பாரதிராஜா, பாலசந்தர் போன்ற பெரிய ஆட்களுக்கு மட்டுமே இசையமைத்தார். அப்படியே இசையமைத்தாலும் அவர்கள் இராப்பகலாக, மாதக்கணக்கில் அவரது ஸ்டூடியோவில் காத்து கிடக்கவேண்டும், அப்போதுதான் பாடல் கிடைக்கும். ராஜாவிடம் தீபாவளிக்கு மூன்று நாட்கள் முன் வந்து படத்தை கொடுத்துவிட்டு ரீரிக்கார்டிங்கை குறுகிய காலத்தில் செய்ய சொல்லி வற்புறுத்தி இசையை வாங்கி செல்வர் தயாரிப்பாளர்கள், அதில் எல்லாருக்கும் கடினமாக உழைத்து இசையமைத்து படத்தை ஹிட் ஆக்கினாலும் அந்த சூட்டில் ராஜா சொன்ன எதோ ஒன்றை மனதில் வைத்துக்கொண்டு அவர் மேல் கோபமாக இருந்த பெரிய ஆட்ககள் எல்லாம் ரஹ்மானிடம் பொறுமையாக மாதக்கணக்கில் காத்திருந்த கதையெல்லாம் உண்டு.
1995ல் அதாவது மூன்றாவது வருடத்தில் இந்தியில் வாய்ப்பு கிடைக்கிறது ரங்கீலா மூலம், பின் கொஞ்சம் கொஞ்சமாக இந்தியில் அதிகம் இசையமைக்க ஆரம்பித்து 2000ங்களுக்கு பிறகு இந்தியில் அதிகம் படங்கள் செய்ய ஆரம்பித்தார், பின் தமிழில் ஒரு சில பெரிய ஆட்கள் படங்கள் மட்டுமே செய்தார். ஹிந்தியில் பெரிய பேரும் புகழும் சம்பாத்தியமுமாக இருந்ததால் தமிழை ஒதுக்கியதை புரிந்துகொள்ள முடிகிறது, அதோடு 2000ங்களின் பிற்பாதியில் ஆங்கில படங்களுக்கும் ப்ராட்வே நாடகங்களுக்கும் இசையமைத்து கொண்டிருந்தார், அப்போதுதான் ஆஸ்கார் அவார்ட் வாங்கியது எல்லாம், அந்த காலகட்டத்திலேயே அவர் தமிழை விட்டு வெகுதூரம் போய் விட்டார், பின் அதற்கு அடுத்த காலங்களிலும் இந்தி சினிமாவிற்கே முதலிடம் தந்து இன்று வரை அதிகம் இந்தியிலே இசையமைத்து கொண்டு இருக்கிறார், மேலே சொன்னபடி பெரிய ஆட்களுக்கு மட்டும் அவ்வப்போது ஒரு தமிழ்படம், மற்றபடி அவர் முழுமைக்கும் ஒரு பாலிவுட் இசையமைப்பாளர்தான். 2000ங்களில் தவிர்க்க முடியாமல் சில படங்கள் தமிழில் செய்ய நேரும் போது இந்தி படங்களில் செய்த பாடல்களை தமிழில் மொழிமாற்றி பாடி உபயோகப்படுத்தி கொள்வர், சபேஷ் - முரளி, ப்ரவீன் மணி போன்றோர் இதில் ரஹ்மானுக்கு உதவுவர், பின்னணி இசையும் இவர்கள்தான் செய்வார்கள், ஆனால் ரஹ்மான் பேரில் படம் வெளிவந்து வியாபாரமாகும், அந்த அளவுக்குதான் தமிழ் சினிமாவை அவர் மதித்தது. இந்த காலகட்ட மணிரத்னம், ஷங்கர், ரஜினி தவிர்த்த பல தமிழ் படங்களில் கொஞ்சம் தேடி பார்த்தால் இது புலப்படும், சபேஷ் முரளி பேட்டிகளிலும் பதிவு செய்ததுதான்.
90களில் ரஹ்மான் தொடர்ந்து ஹிட் கொடுக்க ஆரம்பித்த நேரத்தில் அவரால் கிராமிய படங்களில் இசையமைக்க முடியுமா என்பது ஒரு கேள்வியாக இருந்தது. அப்போதுதான் பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே செய்தார், அதில் மானூத்து மந்தையிலே, எதுக்கு பொண்டாட்டி போன்ற பாடல்கள் மூலம் கொஞ்சமாக கிராமியத்தை தொட முயன்றார், அதிலுமே தென்கிழக்கு சீமையிலே, ஆத்தங்கரை மரமே பாடல் எல்லாம் அவரது வழக்கமான பாணி இசை, வார்த்தைகளை மட்டும் கிராமியபாணியில் எழுதி இது கிராமிய பாடல் என ஊரை ஏமாற்றிய கதைதான். இதான் உங்கள் தமிழ் கிராமிய இசையா என நக்கலும், நமுட்டு சிரிப்புமாக நகர்ந்தது தமிழகம். ராஜா முதல் படத்தில் இருந்து கோலோச்சியது தமிழகத்தின் ஆன்மாவான இந்த கிராமிய நாட்டுப்புற இசையில்தான், ரஹ்மானின் சமகால போட்டியாளரான தேவாவும் எட்டுபட்டி ராசா போன்ற பல படங்களில்
அருமையான
கிராமிய இசையை தந்துள்ளார், ரஹ்மானுக்கு பின் வந்த அடுத்த தலைமுறை இசையமைப்பாளரான யுவன்கூட பருத்திவீரனில் அசல் கிராமிய இசையை
அருமையாக
தந்திருப்பார், ஆனால் ரஹ்மானால் இது கடைசிவரை முடியவில்லை. நாட்டுப்புற இசையை ஒப்புநோக்க தமிழ் சாஸ்திரிய சங்கீதத்தில் ஓரளவு சிறப்பாக சில பாடல்கள் தந்திருந்தாலும், ரஹ்மான் அதிகமும் வடக்கத்திய ஹிந்துஸ்தானி, சூஃபி இசையை சார்ந்து நிறைய நல்ல பாடல்களை கடந்த 20 ஆண்டுகளில் தந்துள்ளார், ராஜஸ்தானி போன்ற வடக்கத்திய நாட்டுப்புற பாணி இசைகளையும் உள்வாங்கி தனது பாடல்களை தந்துள்ளார். ரஹ்மானின் இசை தமிழை விட அதிகமும் வட இந்தியபாணிக்கே நெருக்கமாக இருக்கிறது, அதை நாம் ரசித்தாலும் அதன் ஆன்மா என்னவோ தமிழல்லதான். அதனால்தான் ரஹ்மானை ராஜா, ஹார்ரிஸ், யுவன் போல இந்திக்கு வந்த தமிழ் இசையமைப்பாளராய் பார்க்காமல் தங்களில் ஒருவராய், இயல்பான இந்தி இசையமைப்பாளராய் பார்த்தது பாலிவுட். ராஜா, யுவன், ஹார்ரிஸ், அனிருத் போன்றவர்களை தமிழ் மியூஸிசியன் என சொல்லும் வட இந்திய ஊடகங்கள், ரஹ்மானை பாலிவுட் மியூசிசியன் என்றே அழைப்பார்கள். கடந்த பலவருடங்கள் போல இந்த வருடமும் ஹிந்தியில்தான் அவர் அதிக படங்கள் செய்திருக்கிறார், தவிர அவர் தயாரித்த 3 படங்களில் 2 இந்தி, 1 ஆங்கிலம், ஒரே ஒரு தமிழ்படம்கூட கிடையாது. இப்படி முழுக்கவே வட இந்தியராய் மாறிப்போன ஒருவர் திடீரென தமிழ் கோஷம் போடுவது உண்மையில் ஆச்சர்யம் ஏற்படுத்தியது. அவர் இந்தியிலும் ஹாலிவுட்டிலும் வெற்றி பெற்று பரிசு மேல் பரிசு பெற்ற போது நமது தமிழகத்தை சேர்ந்த ஒருவர் இப்படி நம்மைவிட்டு வெகுதூரம் விலகி சென்றாலும் சாதிக்கிறாரே என்று மகிழ்ந்தோம், ஆனால் 20 ஆண்டுகளாக எல்லாவற்றையும் அங்கு ஆண்டு அனுபவித்துவிட்டு இன்று இந்திக்கு எதிராக கோஷம் போடும்போது அவர் அடையாள குழப்பத்தில் இருக்கிறாரோ என்று நினைக்க தோன்றுகிறது, இன்னொரு பக்கம் அவர் தொடர்ந்து நிறைய இந்தி படமும் செய்கிறார், சொல்லுக்கும் செயலுக்குமான இந்த வித்யாசம் தமிழக மக்களை முட்டாளாக்குவதாய் உள்ளது.


தமிழக முதல்வர் வாய்க்கால், விவசாயம் மேற்பார்வை





 

திருவள்ளுர் ஸ்ரீ வைத்திய வீரராகவர் ஆலய மண்டபத்தில் கிருத்துவ மத பேனர் கூச்சல் ஜெப அராஜகம்

 ஹிந்து மதத்தினரை புண்படுத்தும் வகையில் ஸ்ரீ வைத்திய வீரராகவர் ஆலய மண்டபத்தில் கிருத்துவ மதத்தினரால் வைக்கபட்ட பேனர் 

திருவள்ளுர் நகர காவல்துறைக்கு மனு : திருவள்ளுர் ஸ்ரீ வைதிய வீரராகவர் ஆலயத்திற்கு முன்பாக 29/05/2022 பிற்பகல் 2.00 மணியளவில் கிருஸ்த்துவ கைகூலிகள் சுமார் ஒரு மணிநேரமாக ஆலயத்தின் முன் பட்டாசுகளை வெடிப்பதும் ஆலயத்திற்கு வரும் பக்தர்களூக்கு வழி விடாமல் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையுறாக வழிமறைத்து ஜெபங்களை செய்து கொண்டிருந்தனர்.

 தகவல் அறிந்த ஹிந்து அமைப்பினர் விரைந்து சென்று அவர்ளிடம் வாக்குவாதத்திற்கு பிறகு விரட்டி அனுப்பினார்கள்.இது     தொடர்பாக ஆஹோபிலாமட ஆலய நிர்வாகி சம்பத் அவர்களிடம் மனு கொடுத்து காவல் துறைனரிடம் ஆலய நிர்வாகம் சார்பாக புகார் கொடுக்க சொன்னால்  சம்பத் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை ..அதுமட்டுமின்றி ஆலய மண்டபத்தில் கிருஸ்த்து பேனரையும் வைத்துள்ளார்கள். விடியல் ஆட்சிக்கு துனை போகும் ஆலய நிர்வாக சம்பத்தையும் கண்டித்து விட்டு ஹிந்து அமைப்பினர் புறபட்டனர்.

சாந்தோம் கத்தோலிக்க சர்ச் ரூ.5,000 கோடி அரசு நிலம் விற்பனை?: டயோசிஸ் நிர்வாகிகள் மீது வழக்கு

 கத்தோலிக்க சர்ச் ரூ.5,000 கோடி அரசு நிலம் விற்பனை?  சாந்தோம்  டயோசிஸ் நிர்வாகிகள் மீது வழக்கு https://www.dinamalar.com/news/tamil-nadu-new...