Friday, August 17, 2012

சுவிசேஷங்கள் வெற்று பொய்களே?

யோவான் ஞானஸ்நானனும் இயேசுவும்

சுவிசேஷக் கதைகளிலேயே நாம் பார்க்கும் ஒரு சம்பவம்.
   
ஏசு தன்னுடைய இயக்கத்தை தான் தாவீது மகன் என்றோ தீர்க்கதர்சிகள் முன்னறிவித்ததான கிறித்து என்றெல்லம் சொல்லவில்லை.ஏசு சொன்னது

 மத்தேயு 21:23 இயேசு யூதக்கோவிலுக்குள் சென்று கற்பித்துக் கொண்டிருக்கும்போது தலைமைக் குருக்களும் மக்களின் மூப்பர்களும் அவரை அணுகி, ' எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? ' என்று கேட்டார்கள்.24 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, ' நானும் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன். நீங்கள் அதற்கு மறுமொழி கூறினால், எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்பதை நானும் உங்களுக்குச் சொல்வேன்.25 யோவானுக்கு, திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் எங்கிருந்து வந்தது? விண்ணகத்திலிருந்தா? மனிதரிடமிருந்தா? ' என்று அவர் கேட்டார். அவர்கள், ″ ' விண்ணகத்திலிருந்து வந்தது ' என்போமானால், ' பின் ஏன் நீங்கள் அவரை நம்பவில்லை ' எனக் கேட்பார்.26 ' மனிதரிடமிருந்து ' என்போமானால், மக்கள் கூட்டத்தினருக்கு அஞ்ச வேண்டியிருக்கிறது. ஏனெனில் அனைவரும் யோவானை இறைவாக்கினராகக் கருதுகின்றனர் ″ என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.27 எனவே அவர்கள் இயேசுவிடம், ' எங்களுக்குத் தெரியாது ' என்று பதிலுரைத்தார்கள். அவரும் அவர்களிடம், ' எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குக் கூறமாட்டேன் 'என்றார்.
யோவான் ஞானஸ்நானன் இயேசுவைவிடவும் மிகவும் பிரபலமானவராய் இருந்தவர். இயேசுவின் ஆரம்பம் என முதலில் புனையப்பட்ட சுவியான மாற்கில்

 மாற்கு1:4 இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.5யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.6யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.7 அவர் தொடர்ந்து, ' என்னைவிட வலிமை மிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை.8 நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார் ' எனப் பறைசாற்றினார்.
9 அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.10 அவர் ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்.11அப்பொழுது, ' என் அன்பார்ந்த மகன் நீயே, உன்பொருட்டு நான் பூரிப்படைகின்றேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.


யோவான் ஞானஸ்நானன் பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்கு  பெற்ற பிறகு தான் ஏசுவிடம் பரிசுத்த ஆவி(?) வந்ததாகிறது. 
அடுத்து புனையப்பட்ட மத்தேயு சுவி இதை மாற்றி ஏசுவைப் பார்த்தவுடனேயே யோவான் சொன்னதாக மாற்றும் கதை பார்க்கலாம் 

     

மத்தேயு3:13 அதன்பின் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார்.14 யோவான், ' நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்? ' என்று கூறித் தடுத்தார்.15 இயேசு, ' இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை ' எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார்.16 இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவது போலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார்.17 அப்பொழுது, ' என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன் ' என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. 



 மாற்கு 1:12 உடனே தூய ஆவியால் அவர் பாலைநிலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.13 பாலை நிலத்தில் அவர் நாற்பது நாள் இருந்தார்;
14 யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார்.15 ' காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்து விட்டது; மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள் ' என்று அவர் கூறினார்.


ஆனால் யூதேயாவிலேயாவிலேயே யோவான் சொல்வது கேட்டு சீடர்கள் ஏசுவிடம் சேர்ந்ததாக நானகாவது சுவி கதை.

  
யோவான்1:26 யோவான் அவர்களிடம், ' நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன். நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார்;27 அவர் எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை ' என்றார்.28 இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.29 மறுநாள் இயேசு தம்மிடம் வருவதைக் கண்ட யோவான், ' இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்.30எனக்குப்பின் வரும் இவர் என்னைவிட முன்னிடம் பெற்றவர்; ஏனெனில் எனக்கு முன்பே இருந்தார் என்று நான் இவரைப்பற்றியே சொன்னேன்.31 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் இஸ்ரயேல் மக்களுக்கு இவரை வெளிப்படுத்தும் பொருட்டே நான் வந்துள்ளேன்; தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தும் வருகிறேன் ' என்றார்.32 தொடர்ந்து யோவான் சான்றாகக் கூறியது: ' தூய ஆவி புறாவைப்போல வானிலிருந்து இறங்கி இவர் மீது இருந்ததைக் கண்டேன்.33 இவர் யாரென்று எனக்கும் தெரியாதிருந்தது. ஆனால் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கும்படி என்னை அனுப்பியவர் ' தூய ஆவி இறங்கி யார்மீது இருப்பதைக் காண்பீரோ அவரே தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பவர் ' என்று என்னிடம் சொல்லியிருந்தார்.34 நானும் கண்டேன்; இவரே இறைமகன் எனச் சான்றும் கூறிவருகிறேன். ' 




அதிசயம் கதைகளுக்கு சீடர்கள் சாட்சி கிடையாது,இவை சுவி பொய்யாய் விட்ட புனையல்கள் கதைகளே என்பதை இங்கே பார்க்கலாம்.
 மத்தேயு 11:2 திருமுழுக்கு யோவான் சிறையிலிருந்தபோது மெசியாவின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார்.3 அவர்கள் மூலமாக, ' வரவிருப்பவர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா? ' என்று கேட்டார்.

 லூக்கா 7:18 யோவானுடைய சீடர் இவற்றையெல்லாம் அவருக்கு அறிவித்தனர். யோவான் தம் சீடருள் இருவரை வரவழைத்து,19 ' வரவிருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர் பார்க்க வேண்டுமா? ' எனக் கேட்க ஆண்டவரிடம் அனுப்பினார்.20 அவர்கள் அவரிடம் வந்து, ' ″ வர இருப்பவர் நீர்தாமா? அல்லது வேறொருவரை எதிர்பார்க்க வேண்டுமா? ″ எனக் கேட்கத் திருமுழுக்கு யோவான் எங்களை உம்மிடம் அனுப்பினார் ' என்று சொன்னார்கள்.
நாம் மாற்கு-மத்தேயூ- லூக்கா மூன்று சுவிசேஷக் கதைகளிலும் யோவான் கைதிற்குப்பின் யூதேயாவில் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்ற ஏசு கலிலேயா வந்து சீடர்கள் சேர்க்கிறார். யோவான் சிறையில் இருந்த போதே ஏரோதால் கொல்லப்படுகிறார் எனக் காண்கிறோம்.

யோவான்  4: 22 இவற்றுக்குப் பின்பு இயேசுவும் அவர்தம் சீடரும் யூதேயப் பகுதிக்குச் சென்றனர். அங்கே அவர் அவர்களோடு தங்கித் திருமுழுக்குக் கொடுத்து வந்தார்.23 யோவானும் சலீம் என்னும் இடத்துக்கு அருகில் உள்ள அயினோனில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏனெனில் அங்குத் தண்ணீர் நிறைய இருந்தது. மக்கள் அங்கு சென்று திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள்.24 யோவான் சிறையில் அடைக்கப்படுமுன் இவ்வாறு நிகழ்ந்தது.25 ஒரு நாள் யோவானின் சீடர் சிலருக்கும் யூதர் ஒருவருக்கும் இடையே தூய்மைச் சடங்குபற்றி விவாதம் எழுந்தது.26 அவர்கள் யோவானிடம் போய், ' ரபி, யோர்தான் ஆற்றின் அக்கரைப் பகுதியில் உம்மோடு ஒருவர் இருந்தாரே! நீரும் அவரைக் குறித்துச் சான்று பகர்ந்தீரே! இப்போது அவரும் திருமுழுக்குக் கொடுக்கிறார். எல்லாரும் அவரிடம் செல்கின்றனர் ' என்றார்கள்.27 யோவான் அவர்களைப் பார்த்து, ' விண்ணிலிருந்து அருளப்படாவிட்டால் எவரும் எதையும் பெற்றுக் கொள்ள முடியாது.28 ' நான் மெசியா அல்ல; மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பபப்பட்டவன் ' என்று நான் கூறியதற்கு நீங்களே சாட்சிகள்.

மாற்கு-மத்தேயூ- லூக்கா மூன்று சுவிசேஷக் கதைகளிலும்   யோவான் கைதிற்குப்பின் சு, கடைசி வாரம் தான் யூதேயா வருகிறார்.ரோமன் ஆட்சியினரால் கைதாகி தூக்கு மரத்தில் தொங்கும்படி மரண தண்டனையால் இறந்தார்.


 மேலே யோவான் கைதிற்கு முன்பே சீடர் சேர்த்து யூதேயாவில் ஏசு இயங்கியதாகக் கதை. எது சரி? இரண்டுமே பொய்யா?

இத்தோடு முடித்தால் சுவிசேஷக் கதாசிரியர்கள் இறந்த மனிதன் ஏசுவைப் புனிதராக்க புனைந்தனர் பொய்யாய் என்பதாக மட்டும் தெரியும்.
 According to the Jewish historian, Josephus (Antiquities of the Jews), John was executed because he had criticised the marriage of Herod Antipas to his own brother's wife, who divorced her husband in order to marry him. Since the marriage took place in 34 CE, it appears that Josephus is giving John's death as occurring no earlier than approximately 36 CE, which was later than the crucifixion of Jesus.

Josephus places the marriage of Antipas to his brother's former wife, Herodias, at the same time as, or shortly after, the death of Philip II, who he says died in the twentieth year of the reign of Tiberius (34 CE). John was highly critical of this marriage, causing Antipas to fear that he would cause an insurrection:
Herod, who feared lest the great influence John had over the people might put it into his power and inclination to raise a rebellion, (for they seemed ready to do any thing he should advise) thought it best, by putting him to death, to prevent any mischief he might cause, and not bring himself into difficulties, by sparing a man who might make him repent of it when it would be too late. Accordingly he was sent a prisoner, out of Herod's suspicious temper, to Macherus, the castle I before mentioned, and was there put to death.

Josephus makes it clear that Antipas intended to execute John, and it seems most improbable that he would long delay the execution if he feared an insurrection by John's supporters. The execution would have quickly followed the imprisonment.

Additionally, King Aretas attacked and defeated Antipas in 36 CE in revenge for the slight to his daughter, whom Antipas divorced in order to marry Herodias. We can expect a one or two year delay during which the news reached Aretas and he considered a diplomatic solution or demanded compensation, then raised an army, but an angry father is not likely to have waited ten years to take action.

Some of the Jews believed that Antipas' defeat was divine retribution for his execution of John:
Now the Jews had an opinion that the destruction of this army was sent as a punishment upon Herod, and a mark of God's displeasure to him.

This association makes it most likely that John's death was a quite recent event at the time of the defeat - closer in time to the battle than to the wedding, and certainly not something that occurred 8 or 10 years earlier.  
http://wiki.answers.com/Q/Did_John_The_Baptist_die_before_Jesus_died


ஆனால் ஏசு என ஒருவர் வாழ்ந்தார் எனக் காட்ட உதவும் யூத வரலாற்றாசிரியர் யோசிபஸ்படி யோவான் ஞானஸ்நானன் இறந்தது பொ.கா. 36 வாக்கில், ஏசு 30ல் இறந்தார் என்பது கிறிஸ்துவ சர்ச் சொல்வதுயோவான் ஞானஸ்நானன் பெயரை தவறாக நுழைத்தனரா? ஏன் இந்தப் பொய் கதைகள்

8 comments:

  1. இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து யோவான் ஞானஸ்நானனைத் தேடிச் சென்று பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்கு பெற்றார். ஆனால் அப்போது அதிசயம் நடந்திருந்தால்-யோவான் ஞானஸ்நானன் சிறையிலிருந்து சீடர் அனுப்பத் தேவையில்லைதான்.

    அப்போஸ்தலர் நடபடிகள் 18:24 அலக்சாந்திரியாவில் பிறந்த அப்பொல்லோ எனும் பெயருடைய யூதர் -என்னும் யோவான் சீடர் இயேசுவை ஏற்று சர்ச்சில் இருந்தாரே? அது எப்படி?

    ReplyDelete
  2. யோவான் ஞானஸ்நானன் கி.பி.36ல் மரணம், ஏசு மரணம் கி.பி.30ல்.

    என்னய்யா கதை இது

    ReplyDelete
  3. இயேசு உண்மையில் வாழ்ந்தாரா? இல்லையா?

    ReplyDelete
  4. கிறிஸ்து என்ற சொல் பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ளதா?
    பெத்லஹேம் 20 மைல் தொலைவிலிருக்க ஏரோது மன்னன்
    ஏன் இரண்டு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்?
    பல்வேறு அற்புதங்கள் செய்த ஏசு சாவிற்கு ஏன் பயந்தார்?
    அப்போது தேவன் என்ன செய்தார்?

    ReplyDelete
  5. ஏரோது குழந்தைகொலை கதை உண்மை இல்லை, என்பது பைபிளியல் அறிஞர் கூற்று.

    கிறிஸ்து என்றால் மேலே எண்ணெய் பூசப்பட்டவர். பாரசீக மன்னன் கோரேசுவை ஏசையாவில் கிறிஸ்து எனப்படுவார். தாவீது மகன் என்கையில் வெறும் யூத அரசன் என்று மட்டுமே பொருள். பழைய ஏற்பாட்டில் தெய்வீகர் கிறிஸ்து கிடையவே கிடையாது.

    பவுல் கிறிஸ்து இயேசு என்னும் தலைப்போடு தான் கூறுகிறார். மாற்கில் கிடையாது.

    கிறிஸ்து தெய்வீகர் என்பது ஆரியக் கோட்பாடு.

    ReplyDelete
  6. கிறிஸ்து பழைய ஏற்பாட்டில் இல்லை- கிறிஸ்துவை பற்றி மேலும் விளக்குங்கள்.

    ReplyDelete
  7. அபய்சரண் வாருங்கள்.
    பைபிளியல் அறிஞர்கள் கூற்று.
    “Jesus was the first-born son of a Jewish girl named Mary and her husband Joseph, a deasendant of King David, who worked as Carpenter, at small town of Nazareth in the region of Palestine known as Galilee. The date of birth was about -5 B.C., and the place of birth in all probability Nazareth itself. Towards the end of first century A.D. it came to be widely believed by Christians that at the time of his birth his mother was still a virgin, who bore him by the miraculous intervention of God. This view, however though dear to many modern Christians for its doctrinal value, is unlikely to be true in point of fact.” Life of Jesus; J.C.Cadoux, Page -27.

    Now Please see what is the position Historically of the First -2-3 Chapters of Matthew and Luke which are called Infancy Narratives.

    As per New Catholic Encyclopedia-by Washington’ Catholic University-

    “There seems to be no doubt that the Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body pf the Apostolic Catechesis, the content of which began with John the Baptist and ends with Ascension.
    Page- 695’ Vol-14 ; New Catholic Encyclopedia.

    மத்தேயு மற்றும் லுக்கா சுவிக் கதைகளில் குழந்தைப் புனையல்கள் என உள்ள பகுதிகளில் நிச்சயமாய் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது; அப்போஸ்தலர்கள் மூலம் செவிவழிப் பாரம்பரியம் என் இருந்த கதை- ஏசு ஞானஸ்நானி யோவானைத் தேடிச் சென்று பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கி மேலே எடுத்து செல்ல்ப் பட்டார் என்பது தான் என கத்தோலிக்க பல்கலைகழகத்தின் கலைகளஞ்சியம் கூறுகிறது.

    ReplyDelete
  8. தேவப்ரியா சாலமன்,
    தாங்கள் மிகப்பெரிய சேவை செய்துவருகிறீர்கள். புனை கதைகளின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு மதத்தினைப் பற்றிய விஞ்ஞான பூர்வமான ஆய்வினை மிகச் சிறப்பாகச் செய்து வருகிறீர்கள்.
    தங்களுடைய ப்ளாகைச் சமீபத்தில்தான் படிக்க ஆரம்பித்தேன். நடுநிலையுடன் திறம்பட தங்கள் வாதம் அமைந்துள்ளது. என்னுடைய கேள்விக்கும் தாங்கள் பதிலளித்தது குறித்து மிக்க நன்றி. தங்கள் ஆய்வு மேலும் தொடர ஆதரவும், நல்வாழ்த்துக்களும்!

    ஏசு பிறந்த பெத்லஹேம் , ஜெருசலம் அருகிலேயே இருக்க ஏரோது ஏன் காத்திருக்க வேண்டும்.
    கிழக்கில் ஒரு நட்சத்திரம் தோன்றும் என சாஸ்திரிகளுக்கு(?) எவ்வாறு தெரியும் போன்ற கேள்விகள் எழுகின்றன. ஏரோதுவிடமே சென்று யூத அரசன் எங்கு பிறந்தான் எனக் கேட்பார்களா? நட்சத்திரம் வழிகாட்டிச் சென்றது என்பது அபத்தத்தின் உச்சம்.

    The tomb of the jesus - பற்றியும் தாங்கள் எழுதுங்கள். ஜேம்ஸ் காமரூன் இதற்காக மிகவும் மெனக்கெட்டுள்ளார். - தொலைக்காட்சியில் பல்வேறு ஆய்வுகள் உள்ளன.

    பாரத தேசத்தின் வைதீக மதம் குறித்த உங்கள் கருத்து என்ன?

    ReplyDelete

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...