சவார்க்கர் குறித்த உண்மை தெரியாம தவறாக சித்தரித்து வருகிறார்கள் ,தனிமை சிறையில் அடைத்து கொடுமை செய்தார்கள் .
நேரு காந்தி -மற்றவர்கள் சிறையில் சுகம் அனுபவித்தார்கள். சுய சரிதைகள் எழுதும் அளவுக்கு சுதந்திரம் இருந்தது .
(Historical & Theological view based on International University researches)
சவார்க்கர் குறித்த உண்மை தெரியாம தவறாக சித்தரித்து வருகிறார்கள் ,தனிமை சிறையில் அடைத்து கொடுமை செய்தார்கள் .
நேரு காந்தி -மற்றவர்கள் சிறையில் சுகம் அனுபவித்தார்கள். சுய சரிதைகள் எழுதும் அளவுக்கு சுதந்திரம் இருந்தது .
17க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள்.. யார் இந்த நதியா? பாலியல் தொழிலின் நெட்வொர்க் பிடிபட்டது எப்படி? - Sexual Work In Chennai
Published : May 23, 2024, 6:34 PM IST
சென்னை: சென்னையில் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலுக்குட்படுத்திய வழக்கில் கைதாகியுள்ள நதியா தான், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் வெடிகுண்டு வீசி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தவர் என்பது அம்பலமாகியுள்ளது.
சென்னையை உலுக்கிய சம்பவம்: சில நாட்களுக்கு முன்பு சென்னை வளசரவாக்கம் ஜெய்நகர் 2வது தெருவிலிருக்கும் ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, விபச்சார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார், அந்த வீட்டுக்குச் சென்று சோதனையிட்டனர். அப்போது நதியா என்ற பெண் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளை வைத்து பாலியல் தொழில் செய்து வருவது தெரிந்தது. தொடர்ந்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின.
நதியா 12ஆம் வகுப்பு படிக்கும் தனது மகளை வைத்து சக பள்ளி தோழிகளிடம் ஆசைவார்த்தை கூறி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். மேலும், இதற்காக 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை பணம் வசூலித்து, 17 வயதேயான மாணவிகளை வயதானவர்கள் பலருடன் பாலியல் உறவுக்கு உட்படுத்தியது அம்பலமானது. இந்த பாலியல் தொழில் விவகாரம் குறித்து வேறொரு வழக்கு விசாரணைக்கு சென்றபோதுதான் அதிகாரிகளுக்கே தெரிய வந்துள்ளது.
கருக்கா வினோத்: சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க அலுவலகத்தை தாக்கிய வழக்கில் கருக்கா வினோத் என்கிற ரவுடி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது, தனது பாலியல் தொழிலுக்கு ரவுடியின் துணை வேண்டும் என கருக்கா வினோத்தை தற்போது விபச்சார வழக்கில் சிக்கிய நதியாதான் ஜாமீனில் எடுத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இந்த கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
சமீபத்தில் NIA அதிகாரிகள் கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தது யார் என விசாரணை செய்தபோது, தேனாம்பேட்டையைச் சேர்ந்த நதியா என்பது தெரிய வந்தது. இதையடுத்து, சமீபத்தில் NIA அதிகாரிகள் நதியாவின் வீட்டை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். சோதனையில் ஐந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சிறுமிகளுக்கு பணத்தாசை: செல்போனை சோதனை செய்து பார்த்த போது, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிர்ந்து போயினர். நதியாவின் செல்போன்களில் 17 சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள் இருப்பது தெரியவந்தது. சிறுமிகளை பணத்தாசை காட்டி நதியா, நதியாவின் சகோதரி சுமதி, சுமதி கணவர் ராமச்சந்திரன் ஆகியோர் பாலியல் தொழிலில் தள்ளியுள்ளனர். கடந்த ஓராண்டாக நதியா தனது மகள் மூலமாக ஏராளமான மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார். மேலும், பஞ்சாபைச் சேர்ந்த ஒருவர் மாணவிகளை விமானத்தில் ஹைதராபாத்திற்கும், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளுக்கும் பாலியல் தொழிலுக்காக அனுப்பி வைக்கப்பட்டதும் தெரிய வந்தது.
இதனையடுத்து, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக விபச்சார தடுப்புப்பிரிவு போலீசார் நதியா, நதியாவின் சகோதரி சுமதி, சுமதி கணவர் ராமச்சந்திரன் உள்ளிட்ட ஏழு நபர்களை உடனடியாக கைது செய்தனர். கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்த நபரை விசாரிக்க சென்ற இடத்தில் பள்ளி மாணவிகளை வைத்து பாலியல் தொழில் நடந்து வருவது அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில், கருக்கா வினோத்திற்கும், நதியாவுக்கும் என்ன தொடர்பு என்று என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில் நதியா நடத்தி வந்த பாலியல் தொழிலில் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பதை விபச்சர தடுப்பு பிரிவு விசாரித்து வருகிறது.