மொஹரம் தொழுகை நாகூர் தர்காவில் சர்ச்சை
ஆக 10, 2022 நாகப்பட்டினம்: நாகூர் தர்காவில் மொஹரம் பண்டிகை, தொழுகை நடத்துவதில், இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு நிலவுவதால், யாத்ரீகர்கள் குழப்பமடைந்தனர்.


நாகை அடுத்த நாகூர் தர்கா புதிய நிர்வாகத்தில் இரு தரப்பினருக்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடால், மொஹரம் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்துவதில் பிரச்னை எழுந்தது.பாரம்பரிய முறைப்படி ஆண்டுதோறும் தொழுகை நடத்துவது குறித்து, தர்கா நிர்வாகிகளில் ஒருவரான கலிபா மஸ்தான் சாஹிப், நாகை, ஆர்.டி.ஓ.,விடம் புகார் மனு அளித்தார்.இரு தரப்பினருக்கு இடையே, ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில், தர்காவின் பராம்பரியத்தை பாதுகாக்கவும், தர்காவின் உட்புறத்தில் வழிபாடு நடத்தவும் அறிவுறுத்தப்பட்டது.