கிறிஸ்துவப் புராண புத்தகக் கட்டான புதிய ஏற்பாடு கதைகளின் நாயகர் சீடர்களில் ஒருவர் எனப்படும் தோமா (புனித தோமையர்) எனும் செயின்ட் தாமஸ்.(புனித தோமையர்). இவர் பெயரை திதுமு என நான்காவது சுவி சொல்கிறது. இவர் பற்றிய சில செய்திகளை நான்காவது சுவியில் மட்டுமே உள்ளது.
தோமா என்றால் அரெமிய மொழியிலும், திதிமு என்றால் கிரேக்க மொழியிலும் இரட்டையர் எனப் பொருள்.
இதை பைபிளியல் அறிஞர் கூறுவது //”The Very name of the Apostle who is known as Thomas remains obscure. Thomas is the Greek form of Aramaci Theoma whose Greek translation is Didymus, meaning “Twin”, Most probably his original name was Judas, and the Parenthesis and the versional variants could ave scribal classification. How could an Apostle be known by an epithet or adjective such as “Twin” // -Person and Faith of Apostle Thomas in the Gospels- George Kaniarakath.
தோமா நடபடிகள் நூலின்படி தோமா மேரியின் வயிற்றில் ஏசுவோடு ஒட்டிப்பிறந்த இரட்டையர்.ஏசுவுடைய சகோதர சகோதரிகள் என சுவிசேஷங்களில் உள்ளது கீழே
மாற்கு6:3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா,சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ‘ என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
சீடர்களில் தோமா தவிர, ததேயு என ஒரு சுவிசேஷத்தில் உள்ளதை மற்றவர் யூதா என்பார், மேலும் யூதாஸ் ஸ்காரியோத்து என்று ஒரு நபர். சர்ச் பாரம்பரியப்படி இவர்கள் ஏசுவைப் போலவே பார்க்க இருப்பர் எனில் இரட்டையர் என ஆகும், தோமா -யூதா-யூதாஸ் ஸ்காரியோத்து மூவரும் ஒருவராகவே இருக்கலாம் எனவும் சில பைபிளியலாளர் கருதுவர்.
ஏசுவின் சீடர்கள் 12 பேர் பற்றியோ, பவுல் இவர்களின் வாழ்வைப் பற்றியோ நம்பிக்கைக்குறிய வரலாற்றுக் குறிப்புகள் இல்லைவெறும் செவிவழிக் கதைகள் என ரோமன் போப்பரசரின் பதிப்பாளர் பர்ன் ஓட்ச் பர்பொர்னெ (London: Burns Oates & Washbourne Ltd. Publishers to the Holy See.) புனிதர்களின் பற்றிய கலைக்களஞ்சியம் சொல்கிறது.
//As with other Apostle, there are tradition of great unreliability after the descent of the Holy Ghost at Pentecost.// Page-213, Butler’s Lives of Saints; Vol-December.
கேரளா சர்ச் வெளியீடு- புனித தோமா கிறிச்ஸ்துவர் கலக்களஞ்சியம் கூறுவது-//” 2ம் நுற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த ஹிராக்ளியன் என்ற சர்ச் பிதா, தோமாவினை இவர் தாத்தா நேரடியாக அறிந்தும் இருக்கலாம், ஏசு சீடர்களுள் மத்தேயு, பிலிப்பு, தோமா, மற்றும் லேவி எனும் ததேயு நால்வரும் ஜெருசலேமில் இயற்கையான மரணத்தில் இறந்தார் என்கிறது. இதை சர்ச் பிதா அலெக்சாண்டிர்யாவின் க்ளெமெண்ட்டும் மறுக்கவில்லை//
Heracleon- (II Century) is the earliest author to throw a light on St.Thomas’s carrier; his grandparents might have known the Apostle. Now, discussing the problem of witness and blood martyrdom, he states in a casual way, as something well known, that Matthew, Philip, Thomas, and Levi(Thaddaues) had not met violent deaths. And Clement of Alexandria (150-211/16 A.D.) who quotes this Passage of Heracleon and corrects some of his ideas, does not challenge this facts.
St. Thomas Christians Encyclopedia,Vol-2, Editor- Rev.George Menachery; Article DID St.Thomas Really Come to INDIA- From a Doubter’s point of View by Rev H.COMES.
தோமா பற்றிய இந்தக் கட்டுரையில் தோமாவிற்கு பிரேசில், ஜெர்மனி, ஜப்பான், மலாக்க, திபேத் மற்றும் சீனாவில் இவருக்கு கல்லறைகள் உள்ளது.
There are six tombs for St. Thomas worldwide: one in Brazil, a second in Germany, a third in Japan, a fourth in Malacca, a fifth in Tibet, and a sixth in China. These were created as part of converting the natives to Christian fold based on the principles of incultration. In all these places myths of St. Thomas’s arrival is prevalant.
இவற்றையெல்லம் தாண்டி, தோமா இந்தியா வந்ததாகக் கதையை கிறிஸ்துவ சர்ச் பரப்பி வருகிறது. இவற்றிற்கு முதல் நிலை ஆதாரம் எனப்படும் நூல் ‘தோமையரின் செயல்பாடுகள்’ [Acta Thomae]. ஆனால் இது 3ம் நூற்றாண்டின் முற்பகுதியுடையது எனப்படும், இதன் பிற்கால கிரேக்க, சிரிய மொழியின் ஏடுகள் உள்ளது.
தோமோ நடபடிகள் என்னும் 3ம் நூற்றாண்டு நூல் தோமோ கொண்டோபரஸ் என்னும் மன்னன் நாட்டுக்கும் பின் மச்டய் என்னும் மன்னன் நாட்டில் ராணியையும் இளவரசனையும் சூன்யம் செய்து மதமாற்றம் செய்ததால் மரணதண்டனையில் கொன்றான் என வருகிறது.
இப்புத்தகம் தரும் கதைப்படி, தோமா, ஏசுவுடன் ஒட்டிப்பிறந்த இரட்டையர். ஏசு மறைவிற்குப்பின் சீடர்கள் சீட்டு குலுக்கிட, தோமாவிற்கு இந்தியா வர, எனக்கு மொழி தெரியாது என மறுக்க, ஏசு காட்சி தந்தும் மறுக்க, பின்னர் ஏசு தோமாவை ஒரு அடிமையாக கோந்தபோரஸ் மன்னனின் தூதர் ஹப்பனிடம் 30 வெள்ளிக்கு விற்றார். அவர் தன்னை ஒரு ஆசாரி எனச் சொல்ல, மன்னன் அரண்மனை தந்த பணத்தினை மக்களுக்கு வினியோகம் செய்திட, சிறையில் அடைக்கப்பட, பின் மன்னரின் அண்ணன் க்கெட் மரணமடைய, சொர்கத்தில் மன்னருக்கு அரண்மனை தயாரை இருப்பதை கண்டு, அதை வாங்க வர, மன்னன் கோந்தபோரஸ் கிறிஸ்துவராகத் தானும் தன் மக்கள் பலரையும் கிறிஸ்துவராகிட, அங்கே தோமா இயங்கி வந்தார். பக்கத்து நாடான மாஜ்தாய் மன்னன் ஆளும் நாட்டிற்கு சென்றார். மன்னன் இல்லதபோது அவரது மனைவி சரிஷியாவையும் மகன் வாஸனையும் அவர் மதம் மாற்றினார். சூனியம் செய்கிறார் எனப் பார்த்து மன்னர் மரண தண்டனை தர, மலை மேல் அழைத்து வீரர்கள்சென்று அடிக்க மலையிலிருந்து விழுந்து இறந்தார்.
மன்னர் மகன் நோய் வந்திட, மன்னர் தோமா கல்லறை சென்று எலும்பைத் தேட, கல்லறைக் காலி, தோமா சீடர்கள், அடக்கம் செய்த உடனே உடலை எடிச்சவிற்கும் பின் மேற்கத்திய நாட்டிற்கும் எடுத்துச் செல்லப்பட்டது என்றனர்.
மாஜ்தாய் நாடு பற்றி தோமோ நடபடிகள் கூறுவது: மாஜ்தாய் நாடு ஒரு பாலைவன நாடு, பாலைவனப் பகுதி.
The Ninth Act: of the Wife of Charisius.
87 And when the apostle had said these things in the hearing of all the multitude, they trode and pressed upon one another: and the wife of Charisius the king’s kinsman leapt out of her chair and cast herself on the earth before the apostle, and caught his feet and besought and said: O disciple of the living God, thou art come into a desert country, for we live in the desert; being like to brute beasts in our conversation, but now shall we be saved by thy hands; I beseech thee, therefore, take thought of me, and pray for me, that the compassion of the God whom thou preachest may come upon me, and I may become his dwelling place and be joined in prayer and hope and faith in him, and I also may receive the seal and become an holy temple and he may dwell in me.
The Ninth Act: of the Wife of Charisius.
87 And when the apostle had said these things in the hearing of all the multitude, they trode and pressed upon one another: and the wife of Charisius the king’s kinsman leapt out of her chair and cast herself on the earth before the apostle, and caught his feet and besought and said: O disciple of the living God, thou art come into a desert country, for we live in the desert; being like to brute beasts in our conversation, but now shall we be saved by thy hands; I beseech thee, therefore, take thought of me, and pray for me, that the compassion of the God whom thou preachest may come upon me, and I may become his dwelling place and be joined in prayer and hope and faith in him, and I also may receive the seal and become an holy temple and he may dwell in me.
மேலுள்ள கதையில் உள்ள கொண்டோபரஸ் என்றபடி ஒரு மன்னன், இமைய மலைக்கு தெற்கே ஆ·ப்கானிஸ்தான், பலுசிஸ்தான், பஞ்சாப் மற்றும் சிந்த் பகுதியை பொ.மு. முதல் அல்லது பொ.கா. முதல் நுற்றாண்டில் ஆண்டார் என ஏற்க சில ஆதரங்கள் கிடைத்துள்ளன. ஆனால் இதைத் தாண்டி இந்தியா வந்ததாக தோமா நடபடிகளில் இல்லை.
ஆவணங்கள் இப்படி இருக்க இந்திய சர்ச்சுகள் தொடர்ந்து தோமா வந்தார் எனக் கதை செய்கிறது. இது பற்றி பல்வேறு புத்தகங்கள் புனையப்பட்டுள்ளன.
இதையெல்லம் மீறி சென்னை சாந்தோம் சர்ச், மிகப் பெரும் பொருள் செலவில் தோமா வந்தார், முதல் நுற்றண்டில் வாழ்ந்த திருவள்ளுவர் தோமா தொடர்பால் எழுதியதே திருக்குறள் எனப் பரப்ப, பல ஆவணங்களை தயார் செய்து வருகிறது.ஆசாரிய பால் கணேஷ், என்பவரை வைத்து பேராயர் ஆர்ச்பிஷப் அருளப்பா,பலவேறு போலி ஓலைசுவடி தயாரிக்கப் பணம் தந்தார். தன் கார் தந்தார். தன் வீட்டு முகவரியில் இவருக்கு பாஸ்போர்ட் பெற்று அன்றைய போப்பரசரிடம் அழைத்துச் சென்றார். ஆர்ச்பிஷப் ஐரோப்பாவில் இருந்தபோது ஆசார்ய பால் கணெஷ் மீது சர்ச்சினர் புகார் தந்திட, கைதானவரோடு, சர்ச் பணத்தில் வாங்கிய வீடு மற்றும் சிலவற்றை வைத்துக் கொண்டு வேறேதும் சொல்ல்க்கூடாது என்னும் கோர்ட்டிற்கு வெளியேயான உடன்படிக்கை செய்து சிறையிலிருந்து வரவிட்டது.. மேலும் தெய்வநாயகம் என்ற மெட்ராஸ் கிறிஸ்டிஅன் கல்லூரி பேரச்சிரய்ருக்கு மிகுந்த பணம் தந்து 10க்கும் மேற்பட்ட புத்தகம் வெளியிட உதவியது. தெய்வநாயகத்தின் ஆய்வினை ஒரு மதிப்பு வரவேண்டும் என சென்னை பல்கலைக்கழகத்தில்தமிழ்கிறிஸ்துவத் துறை என்ற அமைப்பை சர்ச்சின் 100% பணத்தில் இன்றுவரை சர்ச் நடத்திவருகிறது. தோமா திருவள்ளுவர் தொடர்பைப் பற்றி 100 கோடி செலவில் சினிமாப்படம் தயாரிப்பதாகச் சொன்ன சாந்தோம் சர்ச் தமிழ் மக்கள் எதிர்ப்பால் அதை நிறுத்தியது.
தோமா இந்தியா வந்ததாகக் கதை கட்டும் பலவற்றையும் நாம் தொடர்ந்து ஆராய்வோம்.