Wednesday, July 25, 2012

ஆதாமின் பாவமும் கிறிஸ்துவின் மரணமும்

    
ஆதியாகமம் 2: 7 அப்பொழுது ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான். 8 ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார். 9 ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும்,தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார்.15. ஏதேன்தோட்டத்தைப் பண்படுத்தவும் பாதுகாக்கவும் ஆண்டவராகிய கடவுள் மனிதனை அங்கு கொண்டுவந்து குடியிருக்கச் செய்தார்.16 ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம்.17 ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டுச் சொன்னார்.
21 ஆகவே ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கு ஆழ்ந்த உறக்கம் வரச்செய்து, அவன் உறங்கும் பொழுது அவன் விலா எலும்பு ஒன்றை எடுத்துக்கொண்டு, எடுத்த இடத்தைச் சதையால் அடைத்தார். 22 ஆண்டவராகிய கடவுள் தாம் மனிதனிடமிருந்து எடுத்த விலா எலும்பை ஒரு பெண்ணாக உருவாக்கி மனிதனிடம் அழைத்துவந்தார். 23 அப்பொழுது மனிதன், "இதோ! இவளே என் எலும்பின் எலும்பும் சதையின் சதையும் ஆனவள்; ஆணிடமிருந்து எடுக்கப்பட்டதால், இவள் பெண் என்று அழைக்கப்படுவாள்" என்றான்.

25 மனிதன், அவன் மனைவி ஆகிய இருவரும் ஆடையின்றி இருந்தனர். ஆனால் அவர்கள் வெட்கப்படவில்லை.
ஆதியாகமம் 3:1 ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், "கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?" என்று கேட்டது. 2 பெண் பாம்பிடம், ″தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம். 3 ஆனால் 'தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள்' என்று கடவுள் சொன்னார்,″ என்றாள். 4 பாம்பு பெண்ணிடம், ″நீங்கள் சாகவே மாட்டீர்கள்; 5 ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்″ என்றது. 6 அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான். அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன; அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர்.
8 மென்காற்று வீசிய பொழுதினிலே, தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் உலவிக்கொண்டிருந்த ஓசை கேட்டு, மனிதனும் அவன் மனைவியும்ஆண்டவராகிய கடவுளின் திருமுன்னிருந்து விலகி, தோட்டத்தின் மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டனர். 
9 ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, ″நீ எங்கே இருக்கின்றாய்?″ என்று கேட்டார். 10 ″உம் குரல் ஒலியை நான் தோட்டத்தில் கேட்டேன். ஆனால், எனக்கு அச்சமாக இருந்தது. ஏனெனில், நான் ஆடையின்றி இருந்தேன். எனவே, நான் ஒளிந்து கொண்டேன்″ என்றான் மனிதன்.
11 ″நீ ஆடையின்றி இருக்கின்றாய் என்று உனக்குச் சொன்னது யார்? நீ உண்ணக்கூடாது என்று நான் விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டாயோ?″என்று கேட்டார். 12 அப்பொழுது அவன், ″என்னுடன் இருக்கும்படி நீர் தந்த அந்தப் பெண், மரத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள்; நானும் உண்டேன்″ என்றான். 13 ஆண்டவராகிய கடவுள், ″நீ ஏன் இவ்வாறு செய்தாய்?″ என்று பெண்ணைக் கேட்க, அதற்குப் பெண், ″பாம்பு என்னை ஏமாற்றியது, நானும் உண்டேன்″ என்றாள்.
கடவுளின் தீர்ப்பும் வாக்குறுதியும்
14 ஆண்டவராகிய கடவுள் பாம்பிடம், ″நீ இவ்வாறு செய்ததால், கால்நடைகள், காட்டுவிலங்குகள் அனைத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய். உன் வயிற்றினால் ஊர்ந்து உன் வாழ்நாள் எல்லாம் புழுதியைத் தின்பாய். 15 உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்″ என்றார். 16 அவர் பெண்ணிடம் ″உன் மகப்போற்றின் வேதனையை மிகுதியாக்குவேன்; வேதனையில் நீ குழந்தைகள் பெறுவாய். ஆயினும் உன் கணவன் மேல் நீ வேட்கை கொள்வாய்; அவனோ உன்னை ஆள்வான்″ என்றார். 17 அவர் மனிதனிடம், ″உன் மனைவியின் சொல்லைக் கேட்டு, உண்ணக்கூடாது என்று நான் கட்டளையிட்டு விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டதால் உன் பொருட்டு நிலம் சபிக்கப்பட்டுள்ளது; உன் வாழ்நாளெல்லாம் வருந்தி அதன் பயனை உழைத்து நீ உண்பாய். 18 முட்செடியையும் முட்புதரையும் உனக்கு அது முளைப்பிக்கும். வயல் வெளிப் பயிர்களை நீ உண்பாய். 19 நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும் வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய். நீ மண்ணாய் இருக்கிறாய்; மண்ணுக்கே திரும்புவாய்″ என்றார்.

21 ஆண்டவராகிய கடவுள் மனிதனுக்கும் அவன் மனைவிக்கும் தோல் ஆடைகள் செய்து அவர்கள் அணியச் செய்தார். 22 பின்பு ஆண்டவராகிய கடவுள், ″மனிதன் இப்பொழுது நம்முள் ஒருவர் போல் நன்மை தீமை அறிந்தவன் ஆகிவிட்டான். இனி அவன் என்றென்றும் வாழ்வதற்காக, வாழ்வின் மரத்திலிருந்தும் பறித்து உண்ணக் கையை நீட்டிவிடக் கூடாது″ என்றார். 23 எனவே ஆண்டவராகிய கடவுள் அவன் உருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பண்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டார்.//

கிறிஸ்துவும் கணக்கெடுப்பு நாளும்.                                   பவுலைத் தவிர வேறு யாரும் சுவிசேஷங்களின் ஏசு உட்பட யாரும் ஆதாமின் கதையை நோக்கவில்லை. கிறிஸ்துவின் மரணம் மூலம் மனித குலம் மரணம் அடையக் காரணமான பாவம் போகும் என்பதே கிடையாது. . ஆனால் பவுல் ஏசு இருவரும் உலகம் தன் வாழ்நாளில் அழியும் எனத் தெளிவாக நம்பினர்.

பவுலின் கடிதங்களில் 6 மட்டுமே அவர் வரைந்தது -அதில்
1தெசலோனிக்கர் 1:10- நீங்கள் வானினின்று வரும் அவருடைய மகன் இயேசுவுக்காகக் காத்திருக்கிறீர்கள். அவரே வரப் போகும் சினத்திலிருந்து நம்மை மீட்பவர். இறந்த அவரையே தந்தை உயிர்த்தெழச் செய்தார்.
1தெசலோனிக்கர் 4: 13 சகோதர சகோதரிகளே! இறந்தோரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்: எதிர்நோக்கு இல்லாத மற்றவர்களைப் போல் நீங்களும் துயருறக் கூடாது.14 இயேசு இறந்து உயிர்த்தெழுந்தார் என நாம் நம்புகிறோம். அப்படியானால், இயேசுவோடு இணைந்த நிலையில் இறந்தோரைக் கடவுள் அவருடன் அழைத்து வருவார்.15 ஆண்டவருடைய வார்த்தையின் அடிப்படையில் நாங்கள் உங்களுக்குக் கூறுவது இதுவே:ஆண்டவர் வரும்வரை உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், இறந்தோரை முந்திவிட மாட்டோம்.
7 பின்னர் உயிரோடு எஞ்சியிருக்கும் நாம், அவர்களோடு மேகங்களில் எடுத்துக் கொண்டுபோகப்பட்டு, வான்வெளியில் ஆண்டவரை எதிர்கொள்ளச் செல்வோம். இவ்வாறு எப்போதும் நாம் ஆண்டவரோடு இருப்போம்.
1கொரிந்தியர்15:51 இதோ, ஒரு மறை பொருளை உங்களுக்குச் சொல்கிறேன்: நாம் யாவரும் சாகமாட்டோம்: ஆனால் அனைவரும் மாற்றுரு பெறுவோம்.52 ஒரு நொடிப்பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும்போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்: நாமும் மாற்றுரு பெறுவோம்.53 ஏனெனில், அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாக வேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும்.
2 கொரிந்தியர் 1: 14 ஆனால் நம் ஆண்டவர் இயேசு வரும் நாளில் நீங்கள் எங்களை முழுமையாகப் புரிந்துகொள்வீர்கள் என்னும் எதிர்நோக்குடன் இருக்கிறேன். அப்போது நாங்கள் உங்களைக் குறித்துப் பெருமைகொள்வது போன்று, நீங்களும் எங்களைக் குறித்துப் பெருமை கொள்வீர்கள்.
கலாத்தியர் 1: 4 இவரே நம் தந்தையாம் கடவுளின் திருவுளத்திற்கேற்ப இன்றைய பொல்லாத காலத்தினின்று நம்மை விடுவிக்குமாறு நம்முடைய பாவங்களின் பொருட்டுத் தம்மையே ஒப்புவித்தார்.

பிலிப்பியர் 1: .5 ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள்.6 உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்தார் என உறுதியாய் நம்புகிறேன்
ரோமன் 8”:1 கிறிஸ்து இயேசுவோடு இணைந்திருப்போருக்கு இனித் தண்டனைத் தீர்ப்பே கிடையாது.
18 இக்காலத்தில் நாம் படும் துன்பங்கள் எதிர்காலத்தில் நமக்காக வெளிப்படப் போகிற மாட்சியோடு ஒப்பிடத் தகுதியற்றவை என நான் எண்ணுகிறேன். 19 இம்மாட்சியுடன் கடவுளின் மக்கள்வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது.
கலாத்தியர்4: 4 ஆனால் காலம் நிறைவேறியபோது திருச்சட்டத்திற்கு உட்பட்டிருந்த நம்மை மீட்டுத் தம் பிள்ளைகள் ஆக்குமாறு5 கடவுள் தம் மகனைப் பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் அனுப்பினார்.

ஏசு உலகம் தன் வாழ்நாளில் அழியும்  

மாற்கு 9:1 1 மேலும் அவர் அவர்களிடம், ’ இங்கே நின்று கொண்டு இருப்ப்பவர்களுள் சிலர் இறையாட்சி வல்லமையோடு வந்துள்ளதைக் காண்பதற்குமுன் சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன் ‘ என்றார்.
மாற்கு 13: 29 அவ்வாறே இவை நிகழ்வதைக் காணும்போது மானிடமகன் கதவை நெருங்கி வந்துவிட்டார் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.30இவையனைத்தும் நிகழும்வரை இப்பொழுது வாழும் மக்கள் ஒழிந்து போகாது என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.31 விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும்; ஆனால் என் வார்த்தைகள் ஒழியவேமாட்டா.௨4 ’ அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது.25 விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும்.26 அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள்.27 பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.
மாற்கு 14: 62 அதற்கு இயேசு,  நானே அவர்; மேலும் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள் சூழ வருவதையும் காண்பீர்கள் ‘என்றார்
மத்தேயு 10: 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ’ ‘ பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.7 அப்படிச் செல்லும்போது ‘ விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது ‘ எனப் பறைசாற்றுங்கள்.
.23 அவர்கள் உங்களை ஒரு நகரில் துன்புறுத்தினால் வேறொரு நகருக்கு ஓடிப்போங்கள். மானிட மகனின் வருகைக்குமுன் நீங்கள் இஸ்ரயேலின் எல்லா நகர்களையும் சுற்றி முடித்திருக்க மாட்டீர்கள் என உறுதியாகவே உங்களுக்குச் சொல்கிறேன்.
மத்தேயு 26: 27 பின்பு கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்து, ’ இதில் உள்ளதை அனைவரும் பருகுங்கள்;28 ஏனெனில் இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருடைய பாவ மன்னிப்புக்காகச் சிந்தப்படும் இரத்தம்.29 இனிமேல் என் தந்தையின் ஆட்சி வரும் அந்நாளில்தான் நான் உங்களோடு திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை குடிக்கமாட்டேன் என நான் உங்களுக்குச் சொல்கிறேன் ‘என்றார்.

பிறப்புநிலைப் பாவம் -
முதல் பெற்றோர் கடவுளின் கட்டளையை மீறி செய்த முதல் பாவம், மனிதரின் அருள் நிலையை நீக்கி, மனித குலத்திற்கு சாவையும், துன்பத்தையும் கொண்டு வந்ததாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். இந்த பாவத்தின் பாதிப்பு, உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையோடும் இணைந்து பிறப்பதாக நம்பப்படுகிறது. இதுவேபிறப்புநிலைப் பாவம் என்று அழைக்கப்படுகிறது.
மனித குலத்திற்கு சாவைக் கொண்டு வந்த ஆதாமின் பாவத்தை அழிக்கவே கிறிஸ்து உலகிற்கு வந்தார் என்பதே கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கை. எனவே கிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தத்தின் பேறுபலன்களினால், திருமுழுக்கின் வழியாக பிறப்புநிலைப் பாவம் போக்கப்பட்டு இழக்கப்பட்ட அருள்நிலை மீண்டும் பெறப்படுகிறது.
  
ரோமர் 5:ஆதாமும் கிறிஸ்துவும்
12 ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது: அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது.13 திருச்சட்டம் தரப்படுமுன்பும் உலகில் பாவம் இருந்தது: ஆனால், சட்டம் இல்லாதபோது அது பாவமாகக் கருதப்படவில்லை.14 ஆயினும் ஆதாம் முதல் மோசே வரையில் இருந்தவர்கள் ஆதாமைப்போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை எனினும் சாவு அவர்கள்மீதும் ஆட்சி செலுத்திற்று: இந்த ஆதாம் வரவிருந்தவருக்கு முன்னடையாளமாய் இருக்கிறார்.15 ஆனால், குற்றத்தின் தன்மை வேறு, அருள்கொடையின் தன்மை வேறு. எவ்வாறெனில், ஒருவர் செய்த குற்றத்தால் பலரும் இறந்தனர். ஆனால் கடவுளின் அருளும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது.18 ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது.19 ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள். 
ரோமர் 6:.7 ஏனெனில் இறந்தோர் பாவத்தினின்று விடுதலை பெற்றுவிட்டனர் அன்றோ?8 கிறிஸ்துவோடு நாம் இறந்தோமாயின், அவரோடு வாழ்வோம் என்பதே நாம் கொண்டுள்ள நம்பிக்கை.9 இறந்து உயிருடன் எழுப்பபட்ட கிறிஸ்து இனிமேல் இறக்கமாட்டார்: இனி அவர் சாவின் ஆட்சிக்கு உட்பட்டவர் அல்ல என நாம் அறிந்திருக்கிறோம்.10  கிறிஸ்து இயேசு இறந்தார்: பாவத்தை ஒழிக்க ஒரே ஒருமுறை இறந்தார். இப்போது அவர் வாழ்கிறார்: அவர் கடவுளுக்காகவே வாழ்கிறார்.

யோவான் -அதிகாரம் 6

31 எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ‘ அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார் ‘ என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா! ‘ என்றனர்.32 இயேசு அவர்களிடம், ‘ உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே.33 கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது ‘ என்றார்
49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.51 ‘ விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.

இயேசு கதைப்படி உயிர்த்தெழுந்த பின்பு பற்றி கூறி உள்ளதாக  இரண்டாம் நுற்றாண்டில் புனையப்பட்டதான யோவன் சுவியின் கடைசி வாசகங்கள். அதாவது அப்பொழுதும் உலகம் அழியும் என்னும் நம்பிக்கை தொடர்ந்தது.

யோவான்21:20பேதுரு திரும்பிப் பார்த்தபோது இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். இவரே இரவு உணவின்போது இயேசுவின் அருகில் அவர் மார்புப் பக்கமாய்ச் சாய்ந்து கொண்டு, ‘ ஆண்டவரே உம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன்? ‘ என்று கேட்டவர்.21 அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், ‘ ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்? ‘ என்ற கேட்டார்.22 இயேசு அவரிடம், ’நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா ‘ என்றார்.23 ஆகையால் அந்தச் சீடர் இறக்க மாட்டார் என்னும் பேச்சு சகோதரர் சகோதரிகளிடையே பரவியது. ஆனால் இவர் இறக்க மாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, ‘ நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன? ‘ என்றுதான் கூறினார்.24 இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி. இவரே இவற்றை எழுதி வைத்தவர். இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும்.
யோபு 25:4 அப்படியெனில், எப்படி மனிதர் கடவுள்முன் நேரியவராய் இருக்க முடியும்? அல்லது பெண்ணிடம் பிறந்தவர் எப்படித் தூயவராய் இருக்கக் கூடும்?5 இதோ! வெண்ணிலவும் ஒளி குன்றியதே! விண்மீனும் அவர்தம் பார்வையில் தூய்மையற்றதே!6 அப்படியிருக்க, புழுவைப்போன்ற மனிதர் எத்துணைத் தாழ்ந்தவர்! பூச்சி போன்ற மானிடர் எவ்வளவு குறைந்தவர்! 
ஆதாமின் பாவம் காரணமாக மரணமாம். பூமியில் மரணத்திற்கு காரணமான ஆதி பாவம் நீங்கியது என்றால் யாரும் மரணம் அடையக் கூடாது. தண்டனைக்கு உரிய அபராதம் கட்டிவிட்டால் விடுதலை தானே?
உபாகமம்24:16 பிள்ளைகளுக்காகத் தந்தையரும், தந்தையருக்காகப் பிள்ளைகளும் கொல்லப்பட வேண்டாம். அவரவர் தம் பாவத்திற்காகக் கொல்லப்படட்டும்.
இயேசு- தெய்வீகரோ- கடவுள் மகனோ இல்லை. அவர் சொன்னபடி உலகம் அழியவில்லை. மரணம் ஒழியவில்லை. அத்தனையும் கட்டுக்கதை.


16 comments:

  1. வணக்கம் சகோ,
    நல்ல பதிவு,இந்த ஆதம் ஏவாள் கதை அறிவியல்ரீதியாக்வோ,வரலாற்றுரீதியாகவோ உண்மையில்லை என எவ்வளவு கூறினாலும் இந்த ஆபிரஹாமிய மதத்தவர்கள் ஒத்துக் கொள்வது இல்லை.

    ஆதமின் பாவத்தை இயேசுவை பலி கொடுத்து கடவுள் சரிசெய்தார் என்பது விதண்டாவாதமே!

    இக்கதை தத்துவார்த்த ரீதியாகவும் தவறானது என்ற உங்களின் விளக்கத்திற்கு நன்றி
    தொடரட்டும் பணி!!!!!!

    ReplyDelete
  2. சகோ உங்களிடம் ஒரு கேள்வி.
    இயேசு என்பவர் வரலாற்றில் வாழ்ந்தவர் அல்ல.கற்பனைக் கதை எனப்தே நம் தேடல்களின் முடிவு.எனினும் ரோம வரலாற்று ஆசிரியர் டாசிட்டஸ் இயேசு சிலுவையில் அறையப் பட்டதாக் குறிப்பிடிவதை தருமி அய்யா பதிவில் படித்தேன்.டாசிட்டசின் விக்கிபிடியாவும் அப்படியே கூறுகிறது.

    http://en.wikipedia.org/wiki/Tacitus

    http://en.wikipedia.org/wiki/Tacitus_on_Christ

    இது பற்றி உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.
    நன்றி

    ReplyDelete
  3. நண்பரே,

    இயேசு என ஒருவர் வாழ்ந்திருக்க வேண்டும். அவர் யூதரல்லாதவரை நாய், பன்றி என்பது சுவி கதைகளில் உள்ளது. சீசருக்கு வரி கட்டலாமா என்னும் சோதனைக் கேள்விக்கு அவர் தந்த பதில்- சீசருக்கு உரியதை சீசருக்குத் தாருங்கள்; தேவனுக்குரியதை தேவனுக்குத் தாருங்கள்.

    இந்த பதிலின் பொருள்- ஐரோப்பிய நாய்கள்- ரோமன் ஆட்சியாளரை - அவர்கள் காசோடு தூக்கி எறியுங்கள், தேவனுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களிடம் தரப்படவேண்டும்.

    கிறிஸ்து என்பது பழைய ஏற்பாட்டில் கிடையாது. ஆனால் ஆட்சி தாவீது பரம்பரை- அன்னியரை விரட்ட வருவார் அப்பரம்பரை மகன் என்னும் ஒரு நம்பிக்கை- உலகம் அழியும் எனும் மூட நம்பிக்கையோடு சேர்ந்திட்டது.

    ரோமன் ஆட்சியை விரட்ட இயக்கம் நடத்தியவரே ஏசு. இதை மறைக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் தாந் மாற்கு ஏசுவின் கடைசி ஒரு வாரம் தவிர மீதி முழுதும் கலிலேயாவில் எனப் புனைந்தார்.

    டாசிட்டஸ் குறிப்பு எந்த விதத்திலும் தெய்வீகர் ஏசுவை சொல்லவில்லை. சில நடுநிலையாளர் கருத்து.
    http://www.jesusneverexisted.com/josephus-etal.html
    http://www.fromchristtojesus.org/English/DrillDown/Tacitus.htm
    இந்தக் குறிப்பு எந்த விதத்திலும் தெய்வீகர் ஏசுவை சொல்லவில்லை.

    ஈ.வெ.ரா. என்னும் நபர் ஆங்கிலேயரோடு துணை நின்று சுதந்திரத்திற்கு எதிராக இயக்கம் நடத்தியவர், ஆனால் அவரோடு வாழ்ந்த தலைமுறை இருக்கும்போதே அவரை சுதந்திரப் போராட்டக்காரர் எனச் சித்தரிக்கப் படுகின்றது.
    உண்மைகள் நிச்சயம் வேறு எனப்து நடுநிலையாளர் அறிவர்.

    ReplyDelete
  4. நல்லா தெளிவாகவே விளக்கியுள்ளீர்கள் நன்றி,இருப்பினும் ஆதாம் ஏவாள் கட்டுக் கதைகளை இன்னும் படித்து பட்டம் வாங்கிய மேதாவிகள் நம்பிக்கை வைத்திருப்பது முற்றுப் பெறவில்லை தொடர்கிறதே!!!! மேலும் தங்களின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    இனியவன்...

    ReplyDelete
  5. //உபாகமம்24:16 பிள்ளைகளுக்காகத் தந்தையரும், தந்தையருக்காகப் பிள்ளைகளும் கொல்லப்பட வேண்டாம். அவரவர் தம் பாவத்திற்காகக் கொல்லப்படட்டும்.//
    சார்வாகன் சொன்னது போலே பைபிளைக் கொண்டே கிறிஸ்து பொய் என ஆக்கி உள்ளீர்.

    ReplyDelete
  6. ஐயா,

    நீங்கள் பைபிளை படித்து அறிந்து வைத்துள்ளீர்கள்.

    அது ஒரு தீர்க்க தரிசனம் கூறி நிரைவேறிய உண்மை வரலாறு முழுவதுமாய் கொண்டது, அதை விட்டு வெறுமனே பார்ப்பதே உங்கள் கிறிஸ்துவ எதிர்ப்பு வெறியைக் காட்டுகிறது.

    உதாரணமாக கிறிஸ்து பிறப்பிற்கு முன் எலியா பிறக்கவேண்டும். ஞானஸ்நானி யோவான் பிறந்தார். யூதாஸ் காட்டிக் கொடுத்தலும் முன்பே திர்க்கரால் உரைக்க்ப்பட்டதே!

    தீர்க்கர்ம் நிறைவேறலும், கர்த்தரான இயேசு கிறிஸ்து அவர்கள் செய்த அற்புதங்களும் மெய்யான சத்தியங்கள்.

    இங்கே சென்றால் உங்கள் பல சந்தேகங்களுக்கு தெளிவான பதில் உண்டு.
    http://www.biblequery.com/

    ReplyDelete
  7. இனியவரே வருக ஊக்கத்திற்கு நன்றி.

    சுலைமான் தொடர்ந்து வாருங்கள். உங்கள் கருத்தைச் சொல்லவும்.

    ReplyDelete
  8. ஜான்சன் வருக

    தொடர்ந்து வாருங்கள். உங்கள் கருத்தைச் சொல்லவும்.

    முதலில் பைபிள் எழுதப் பட்ட காலம் உணர்ந்தால் தான் இது தீர்க்கம் நிரைவேறியதா- சம்பவம் நடந்தபின் முன்பே சொல்லப்பட்டது என இறந்தவர் பெயரில் சொல்லப்பட்டதா?

    எலியா வரவேண்டும் என்னும் பழைய ஏற்பாட்டு வசனத்தைத் தர இயலுமா? யோவான் எலியா தானா? எனப் பார்க்கலாம்.

    நீங்கள் என் மத நம்பிக்கை நான் அதைப் பின்பற்றுவேன் என்றால் அதில் எனக்கு எவ்விதமான ஆட்சேபம் இல்லை. ஆனால் கிறிஸ்தவர் அல்லதவர் வீடுகளுக்கு சென்று உங்களது புராணம் பைபிள் வரலாறு என்னும் உளறல் நிற்கும்வரை நம் செயல் தொடரும்.

    நீங்கள் வசனம் தந்தபின் விளக்குவோம்.
    நீங்கள் தந்த பைபிள் மழுப்பலாளர்கள்- கூறுவதில் ஒரு சிறு உதாரணம்.

    மத்தேயு சுவியில் ஏசு- பெத்லெஹெம் வாழ் யாக்கோபு மகன் ஜொசப் பரம்பரை- ஆப்ரிஅஹாமிலிருந்து 41வது சந்ததி.
    லூக்கா சுவியில் ஏசு- நாசரேத் வாழ் ஏலி மகன் ஜொசப் பரம்பரை- ஆப்ரிஅஹாமிலிருந்து 57வது சந்ததி.
    //In Lk 3:23, who is the son of Heli?
    A: The words "son of" are not present in the Greek, it only says "of Heli". It was Mary who was the daughter of Heli, and Heli was Jesus’ biological grandfather.


    Q: In Lk 3:23 why do many translations say Jesus was "as was supposed" the son of Joseph, when "as was supposed was not in the Greek? (The Muslim Ahmad Deedat brought this up.)
    A: Deedat is not correct here. This is in the Greek. You can see it in The Greek New Testament by Aland et al. 3rd edition), also in the 4th edition, Green’s Literal Translation, and the Nestle-Aland Novum Testamentum Graece.
    Actually, though, while Joseph was not the biological father of Jesus, Joseph was the legal father. //http://www.biblequery.com/

    http://arulvakku.com/biblecontent.php

    இயேசுவின் மூதாதையர் பட்டியல்
    (மத் 1:1 - 17)
    23 இயேசு தம் பணியைத் தொடங்கியபோது, அவருக்கு வயது ஏறக்குறைய முப்பது; அவர் யோசேப்பின் மகன் என்று கருதப்பட்டார். யோசேப்பு ஏலியின் மகன்;24 ஏலி மாத்தாத்தின் மகன்; மாத்தாத்து லேவியின் மகன்; லேவி மெல்கியின் மகன்; மெல்கி யன்னாயின் மகன்; யன்னாய் யோசேப்பின் மகன்;25 யோசேப்பு மத்தத்தியாவின் மகன்; மத்தத்தியா ஆமோசின் மகன்; ஆமோசு நாகூமின் மகன்; நாகூம் எஸ்லியின் மகன்; எஸ்லி நாகாயின் மகன்;...

    ReplyDelete
  9. ஆதாம் பாவம் தான் பெண்கள் கர்ப்பவேதனைக்குக் காரணம் எனில் ஏன் அனைத்து பாலூட்டிகளும் இவ்வேதனைப் படுகின்றனர்.

    மனுசன் பூமியில் இறக்கக் காரணம் ஆதாம்- ஏவாள் பாவம். மிருகங்களையும் ஏன் கொலை ஸாவடிக்கிறார்?

    கிறிஸ்துவின் மரணம் ஆதி பாவம் நீக்க எனில் ஏன் பவுல் பேதுரு முதல் அனைவரும் மரணமடைந்தனர்.

    ReplyDelete
    Replies
    1. நீர் கேட்ட கேள்வி :

      கிறிஸ்துவின் மரணம் ஆதி பாவம் நீக்க எனில் ஏன் பவுல் பேதுரு முதல் அனைவரும் மரணமடைந்தனர்.

      கிறிஸ்தவத்தை பற்றி எதுவும் அறியாமல், நீங்கள் கிறிஸ்துவின் பரிகார பலியை பற்றி பேசுவது மிகவும் தவறானது.

      மனிதன் என்பவன் சரீரம் + ஆத்துமாவினால் ஆனவன்.
      ஆதுமாவையே உயிர் என்று சொல்கிறோம்.

      ஆதாம், ஈவாளின் பாவத்தினால், பாவம் மனிதனை (ஆத்துமாவில்) ஆண்டு கொண்டது. அதனால் மனிதன் தேவனின் உறவிலிருந்து பிரிக்கபட்டான்.இடையே ஆத்துமா மரணம் என்று அழைப்பர். மனித பாவத்தை நீக்க பழைய ஏற்பாட்டு பலிகளினால் கூடாமல் போயிட்ட்ரு.

      மனிதனை அவனுடைய ஆத்துமா பாவத்தினின்று மீட்டு, மீண்டும் அவனை பழைய படி மாட்ட்ரவே கிறிஸ்து உலகில் வந்தார்.
      அவர் சிலுவையில் மரித்து, அவரை விசுவாசிகிரவர்களை மரத்தினின்று (ஆத்தும மரணம்) விடுவித்தார்.

      அவர்களை என்றும் சாகாமல் இருக்க செய்ய கிறிஸ்து உலகில் வரவில்லை.

      Delete
    2. இது நீங்களாக கொடுக்கும் விளக்கம். தயவு செய்து பைபிளை- கிறிஸ்தவ அடிபடையை நன்றாகப் படித்து புரிந்து கொள்ளுங்கள்.
      ஆதி2:7 ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டுச் சொன்னார். 1

      ஆதாம் தின்றார்- கர்த்தர் கட்டளை பலிக்கவில்லை- அவர் யார்?

      ஆதி3:22 பின்பு ஆண்டவராகிய கடவுள், "மனிதன் இப்பொழுது நம்முள் ஒருவர் போல் நன்மை தீமை அறிந்தவன் ஆகிவிட்டான். இனி அவன் என்றென்றும் வாழ்வதற்காக, வாழ்வின் மரத்திலிருந்தும் பறித்து உண்ணக் கையை நீட்டிவிடக் கூடாது" என்றார். 23 எனவே ஆண்டவராகிய கடவுள் அவன் உருவாக்கப்பட்ட அதே மண்ணைப் பண்படுத்த அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே அனுப்பி விட்டார். 24 இவ்வாறாக, அவர் மனிதனை வெளியே துரத்திவிட்டார்.
      ஆதாம் நிலைத்து வாழவில்லை. பூமியில் உடல் மரணத்திற்குக் காரணம் ஆதாம் பாவம் கதைப்படி.
      பைபிள் கதைப்படி கதை நாயகர் ஏசு சொல்வது
      யோவான்6:41 ' விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே ' என்று இயேசு கூறியதால்.... 49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.

      - மன்னாவை சாப்பிட்டவர்கள்- செத்துப் போனார்கள். ஏசுவை சாப்பிட்டால் சாவு கிடையாது. மன்னாவை சாப்ப்ட்டவர் பூமியில் செத்தனர். ஏசுவை சாப்பிட்டவரும் செத்தனர்.
      ஆத்துமா மரணம் - என்பதெல்லாம் பைபிளில் இல்லததது நீங்களாக விடும் கதைகள்.

      மேலும் பவுல், ஏசு மற்றும் கடிதங்கள் அனைத்திலும் உலகம் அவர்கள் வாழ்நாளில் தான். எனவே அவர்கள் மனிதனின் மரணம் முடிந்தது என நம்பினர்.
      http://pagadhu.blogspot.in/2012/06/blog-post_24.html
      இரண்டிற்கும் பதில் தாருங்கள். பைபிள் வைத்து விளக்குங்கள்.

      Delete
  10. Rook_Hawkins
    Tacitus (A.D. c.55-A.D. c.117, Roman historian) mentions "christus" who is Jesus

    Tacitus: "But neither the aid of man, nor the liberality of the prince, nor the propitiations of the gods succeeded in destroying the belief that the fire had been purposely lit. In order to put an end to this rumor, therefore, Nero laid the blame on and visited with severe punishment those men, hateful for their crimes, whom the people called Christians. He from whom the name was derived, Christus, was put to death by the procurator Pontius Pilate in the reign of Tiberius. But the pernicious superstition, checked for a moment, broke out again, not only in Judea, the native land of the monstrosity, but also in Rome, to which all conceivable horrors and abominations flow from every side, and find supporters. First, therefore, those were arrested who openly confessed; then, on their information, a great number, who were not so much convicted of the fire as of hatred of the human race. Ridicule was passed on them as they died; so that, clothed in skins of beasts, they were torn to pieces by dogs, or crucified, or committed to the flames, and when the sun had gone down they were burned to light up the night. Nero had lent his garden for this spectacle, and gave games in the Circus, mixing with the people in the dress of a charioteer or standing in the chariot. Hence there was a strong sympathy for them, though they might have been guilty enough to deserve the severest punishment, on the ground that they were sacrificed, not to the general good, but to the cruelty of one man." (Annals XV, 44)

    It would be utterly ridiculous to use this, but still, some do.

    (1) It is extremely improbable that a special report found by Tacitus had been sent earlier to Rome and incorporated into the records of the Senate, in regard to the death of a Jewish provincial, Jesus. The execution of a Nazareth carpenter would have been one of the most insignificant events conceivable among the movements of Roman history in those decades; it would have completely disappeared beneath the innumerable executions inflicted by Roman provincial authorities. For it to have been kept in any report would have been a most remarkable instance of chance.
    (2) The phrase "multitudo ingens" which means "a great number" is opposed to all that we know of the spread of the new faith in Rome at the time. A vast multitude in 64 A.D.? There were not more than a few thousand Christians 200 years later. The idea of so many just 30 years after his supposed death is just a falsehood.
    (3) The use of the Christians as "living torches," as Tacitus describes, and all the other atrocities that were committed against them, have little title to credence, and suggest an imagination exalted by reading stories of the later Christian martyrs. Death by fire was not a punishment inflicted at Rome in the time of Nero. It is opposed to the moderate principles on which the accused were then dealt with by the State.

    ReplyDelete
  11. (4) The Roman authorities can have had no reason to inflict special punishment on the new faith. How could the non-initiated Romans know what were the concerns of a comparatively small religious sect, which was connected with Judaism and must have seemed to the impartial observer wholly identical with it.
    (5) Suetonius says that Nero showed the utmost indifference, even contempt in regard to religious sects. Even afterwards the Christians were not persecuted for their faith, but for political reasons, for their contempt of the Roman state and emperor, and as disturbers of the unity and peace of the empire. What reason can Nero have had to proceed against the Christians, hardly distinguishable from the Jews, as a new and criminal sect?
    (6) It is inconceivable that the followers of Jesus formed a community in the city at that time of sufficient importance to attract public attention and the ill-feeling of the people. It isn't the most popular way to convert and bring people into their religion.
    (7) The victims could not have been given to the flames in the gardens of Nero, as Tacitus allegedly said. According to another account by Tacitus these gardens were the refuge of those whose homes had been burned and were full of tents and wooden sheds. Why would he risk burning these by lighting human fires amidst all these shelters?
    ( According to Tacitus, Nero was in Antium, not Rome, when the fire occurred.
    (9) The blood-curdling story about the frightful orgies of Nero reads like some Christian romance of the Dark Ages and not like Tacitus. Suetonius, while mercilessly condemning the reign of Nero, says that in his public entertainments Nero took particular care that no lives should be sacrificed, "not even those of condemned criminals."
    (10) It is highly unlikely that he mingled with the crowd and feasted his eyes on the ghastly spectacle. Tacitus tells us in his life of Agricola that Nero had crimes committed, but kept his own eyes off them.

    ReplyDelete
  12. (11) Some authorities allege that the passage in Tacitus could not have been interpolated because his style of writing could not have been copied. But this argument is without merit since there is no "inimitable" style for the clever forger, and the more unususal, distinctive, and peculiar a style is, like that of Tacitus, the easier it is to imitate. Moreover, as far as the historicity of Jesus is concerned we are, perhaps, interested only in one sentence of the passage and that has nothing distinctively Tacitan about it.
    (12) Tacitus is assumed to have written this about 117 A.D., about 80 years after the death of Jesus, when Christianity was already an organized religion with a settled tradition. The gospels, or at least 3 of them, are supposed to have been in existence. Hence Tacitus might have derived his information about Jesus, if not directly from the gospels, indirectly from them by means of oral tradition. This is the view of Dupuis, who wrote: "Tacitus says what the legend said." In 117 A.D. Tacitus could only know about Christ by what reached him from Christian or intermediate circles. He merely reproduced rumors.
    (13) In no other part of his writings did Tacitus make the least allusion to "Christ" or "Christians." Christus was a very common name, as was Jesus, in fact Jospehus lists about 20 in the time Jesus was supposedly said to have existed.
    (14) Tacitus is also made to say that the Christians took their denomination from Christ which could apply to any of the so-called Christs who were put to death in Judea, including Christ Jesus.
    (15) The worshippers of the Sun-god Serapis were also called "Christians." Serapis or Osiris had a large following at Rome especially among the common people.
    (18) The expression "Christians" which Tacitus applies to the followers of Jesus, was by no means common in the time of Nero. Not a single Greek or Roman writer of the first century mentions the name. The Christians who called themselves Jessaeans, Nazoraeans, the Elect, the Saints, the Faithful, etc. were universally regarded as Jews. They observed the Mosaic law and the people could not distinguish them from the other Jews. The Greek word Christus (the anointed) for Messiah, and the derivative word, Christian, first came into use under Trajan in the time of Tacitus. Even then, however, the word Christus could not mean Jesus of Nazareth. All the Jews without exception looked forward to a Christus or Messiah. It is, therefore, not clear how the fact of being a "Christian" could, in the time of Nero or of Tacitus, distinguish the followers of Jesus from other believers in a Christus or Messiah. Not one of the gospels applies the name Christians to the followers of Jesus. It is never used in the New Testament as a description of themselves by the believers in Jesus.
    (19) Most scholars admit that the works of Tacitus have not been preserved with any degree of fidelity.
    (20) This passage which could have served Christian writers better than any other writing of Tacitus, is not quoted by any of the Christian Fathers. It is not quoted by Tertullian, though he often quoted the works of Tacitus. Tertullian's arguments called for the use of this passage with so loud a voice that his omission of it, if it had really existed, amounted to a violent improbability.

    ReplyDelete
  13. (21) Eusebius in the 4th century cited all the evidence of Christianity obtained from Jewish and pagan sources but makes no mention of Tacitus.
    (22) This passage is not quoted by Clement of Alexandria who at the beginning of the 3rd century set himself entirely to the work of adducing and bringing together all the admissions and recognitions which pagan authors had made of the existence of Christ Jesus or Christians before his time.
    (23) Origen in his controversy with Celsus would undoubtedly have used it had it existed.
    (24) There is no vestige or trace of this passage anywhere in the world before the 15th century. Its use as part of the evidences of the Christian religion is absolutely modern. Although no reference whatever is made to it by any writer or historian, monkish or otherwise, before the 15th century (1468 A.D.), after that time it is quoted or referred to in an endless list of works including by your supposed historian.
    (25) The fidelity of the passage rests entirely upon the fidelity of one individual (first published in a copy of the annals of Tacitus in the year 1468 by Johannes de Spire of Venice who took his imprint of it from a single manuscript) who would have every opportunity and inducement to insert such an interpolation.
    (26) In all the Roman records there was to be found no evidence that Christ was put to death by Pontius Pilate. If genuine, such a sentence would be the most important evidence in pagan literature. How could it have been overlooked for 1360 years?
    (27) Richard Carrier explains that we are actually missing three years in Tacitus, "We are enormously lucky to have Tacitus--only two unrelated Christian monasteries had any interest in preserving his Annals, for example, and neither of them preserved the whole thing, but each less than half of it, nd by shear luck alone, they each preserved a different half. And yet we still have large gaps in it. One of those gaps is the removal of the years 29, 30, and 31 (precisely, the latter part of 29, all of 30, and the earlier part of 31), which is probably the deliberate excision of Christian scribes who were embarrassed by the lack of any mention of Jesus or Gospel events in those years (the years Jesus' ministry, death, and resurrection were widely believed at the time to have occurred). There is otherwise no known explanation for why those three years were removed. The other large gap is the material between the two halves that neither institution preserved. And yet another is the end of the second half, which scribes also chose not to preserve (or lost through negligent care of the manuscript, etc.)."
    (28) Suetonius doesn't mention this event in his histories.
    (29) And lastly, the style of the passage is not consistent with the usually mild and classic language of Tacitus
    http://www.rationalresponders.com/forum/2889

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா