Wednesday, May 18, 2022

கோவில் தேர் ஊர்வலம் நிறுத்த அரசு அதிகாரிகளுக்கு உரிமை இல்லை

 பாப்­பா­ரப்­பட்­டி­ வர­த­ராஜ சுவாமி கோவில் தேர்த்திரு­வி­ழா தடை செல்லாது

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அபிஷ்ட வரதராஜ சுவாமி கோவில் தேர் திருவிழாவை நிறுத்தும்படி இம்மாதம், 13ம் தேதி ஹிந்து சமய அறநிலைய துறை ஆய்வாளர் உத்தரவிட்டார். அதில், தேர் செல்லும் பாதை இரு இடங்களில் குறுகலாக இருப்பதாகவும், மின் கம்பங்கள் சாலையின் உள்பக்கம் அமைந்துள்ளதாகவும், தேர் உயரத்தை விட மின் கம்பிகள் தாழ்வாக உள்ளதாகவும் கூறியிருந்தார்.

ஹிந்து சமய அறநிலைய துறை ஆய்வாளரின் உத்தரவை ரத்து செய்ய கோரி, கோவிலின் பரம்பரை அறங்காவலர் சீனிவாசன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இம்மனுவை அவசர வழக்காக, நாகர்கோவிலில் இருந்து நீதிபதி சுவாமிநாதன் நேற்று 'வாட்ஸ் ஆப்' மூலம் விசாரித்தார்.

மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ராகவாச்சாரி, அறநிலையத் துறை சார்பில் அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரம் வாதாடினர். இருதரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: தேர் திருவிழாவை நிறுத்தும்படி உத்தரவிட அறநிலைய துறை ஆய்வாளருக்கு அதிகாரம் இல்லை. அவரது உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.

தேர் திருவிழா சுமுகமாக நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டியது அரசு மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கடமை. தேர் திருவிழா பாதுகாப்புடன் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். சாலைகளை உள்ளாட்சி அமைப்பு சீர் செய்ய வேண்டும். தேரோட்டத்தின்போது மின் இணைப்பை மின் வாரியம் துண்டிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தேரோட்டத்திற்கு அனுமதி கோரி மனு; வாட்ஸ்அப் மூலம் விசாரித்து  நீதிபதி தீர்ப்பு  

17 May 2022 தர்மபுரி: தேரோட்டத்துக்கு அனு­மதி அளிக்­கக்கோரி தாக்­கல் செய்­யப்­பட்ட மனுவை வாட்ஸ்அப் மூலம் விசா­ரித்து தீர்ப்­ப­ளித்­துள்­ளது சென்னை உயர் நீதி­மன்­றம். தேர்த் திரு­வி­ழாவை நடத்த வேண்­டி­யது அரசின் கடமை என்று நீதி­பதி கூறினார்.


தர்­ம­புரி மாவட்­டம், பாப்­பா­ரப்­பட்­டி­யில் உள்ள வர­த­ராஜ சுவாமி கோவில் தேர்த் திரு­வி­ழாவை நடத்த அண்­மை­யில் தடை ­வி­திக்­கப்­பட்­டது. அங்கு தேர் வலம் வரும் சாலை­களை தமி­ழக அற­நிலைய­த்­துறை ஆய்­வா­ளர் நேரில் பார்­வை­யிட்­டார். அப்­போது தேரோ­டும் பாதை குறு­க­லாக இருப்­பதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார். மேலும், அங்­குள்ள மின் கம்­பங்­கள் சாலை­யின் உள்­பக்­க­மாக அமைந்­துள்­ளது ஆபத்­தா­னது என்­றும் அவர் கூறி­னார். தவிர, மின்­கம்­பி­கள் தேரின் உய­ரத்­தை­விட தாழ்­வாக உள்­ள­தை­யும் கவ­னித்த ஆய்­வா­ளர், தேர்த் திரு­வி­ழாவை நடத்த அனு­ம­திக்க இய­லாது என்று திட்­ட­வட்­ட­மா­கத் தெரி­வித்­தார்.

தேர்த் திரு­வி­ழாவை நிறுத்­து­வதற்­கான உத்­த­ரவு கடந்த 13ஆம் தேதி வெளி­யி­டப்­பட்­டது. இதை ஏற்க மறுத்த கோவி­லின் பரம்­பரை அறங்­கா­வ­லர் சீனி­வா­சன் என்­பவர் உயர் நீதி­மன்­றத்தை அணுகி­னார். அவர் தாக்­கல் செய்த அவ­சர மனு­வில், கடந்த 80 ஆண்­டு­களாக தேர்த் திரு­விழா நடை­பெற்று வரு­கிறது என்­றும் தேர் வலம் பாதை­யில் எந்­த­வித பாது­காப்பு குறை­பா­டு­களும் இல்லை என்­றும் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அர­சுத் தரப்­பில் பல்­வேறு துறை­க­ளி­டம் இருந்து தேரோட்­டத்­துக்­கான உரிய அனு­ம­தி­கள் பெறப்­பட்­டுள்­ள­தா­க­வும் சீனி­வா­சன் தமது மனு­வில் தெரி­வித்து இருந்­தார். அண்­மை­யில் தஞ்­சை­யில் தேரோட்­டத்­தின்­போது நிகழ்ந்த விபத்தை அடுத்து வர­த­ராஜ சுவாமி கோவில் தேரோட்­டத்­துக்குத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் வாதிடப்பட்டது. அசம்பா விதங்­க­ளைத் தவிர்க்­கவே திரு­விழாவை நிறுத்­தும்­படி உத்­த­ர­விட்டுள்­ள­தாக அர­சுத் தரப்பு வாதிட்­டது.

வாட்ஸ்அப் மூலம் இரு தரப்பு வாதங்­க­ளை­யும் செவி­ம­டுத்த நீதி­பதி, தேரோட்டத்தை நிறுத்­தும்­படி உத்­த­ர­விட அற­நி­லையத் துறை ஆய்­வா­ள­ருக்கு அதி­கா­ரம் இல்லை என்­றார்.

மேலும், தேர்த் திரு­வி­ழாவை சுமு­க­மா­க­வும் பாது­காப்­பு­ட­னும் நடத்த வேண்­டும் என்று தமது உத்­த­ர­வில் குறிப்­பிட்ட நீதி­பதி, தேரோட்­டத்தை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொள்ள வேண்­டி­யது அறநிலையத்துறை யின் கடமை என்றார்.

In a first, High Court hears case through Whatsapp

Chennai, May 16 (PTI) For the first time in the annals of the Madras High Court, a judge has conducted a case through ‘WhatsApp’, and on a Sunday.

Justice G R Swaminathan took up the case while being stationed in Nagercoil, where he had gone to attend a marriage function on Sunday, following a submission of P R Srinivasan, the hereditary trustee of Shri Abheeshta Varadaraja Swamy temple, that his village will face the ‘divine wrath’ if the proposed ‘Rath’ (Car) festival was not held on Monday.

“This fervent prayer of the writ petitioner made me hold an emergency sitting from Nagercoil and conduct the case through Whatsapp,” the judge said in the opening sentence of his order.

It was a triangular session, with the judge hearing the case from Nagercoil, petitioner’s counsel V Raghavachari at one place and Advocate-General R Shanmugasundaram, at another place, in the city. The issue pertained to a temple in Dharmapuri district.

Holding that the Inspector attached to the Hindu Religious and Charitable Ddepartment does not have the jurisdiction to issue an order directing the temple Thakkar (Fit person) and the hereditary trustee to stop the car festival, the judge quashed the same.

Earlier, the AG told the judge that the government does not oppose the holding of the event. Their sole concern is the safety of the members of the general public. On account of failure to adhere to safety standards, a tragedy struck in a similar procession in Thanjavur district recently, he pointed out and emphasised that such accidents should not recur.

After the defects pointed out in the impugned communication are rectified, the procession can very well be conducted and the State may not have any objection, he added.

After quashing the impugned order, the judge directed the temple authorities to strictly follow the rules and regulations stipulated by the government while holding temple festivals and the state-run discom TANGEDCO to cut power supply in the area for a few hours, from the beginning of the processions till it reaches back to its stand (Nilai).

Eleven persons were killed on the spot and 17 others injured last month near Thanjavur due to electrocution when a temple chariot came in contact with a High Tension electricity line during a procession.

https://theprint.in/india/in-a-first-high-court-hears-case-through-whatsapp/958304/


https://www.tamilmurasu.com.sg/tamilnadu/story20220517-88937.html#:~:text=தேரோட்டத்திற்கு%20அனுமதி%20கோரி%20மனு%3B%20வாட்ஸ்அப்%20மூலம்%20விசாரித்து%20நீதிபதி%20தீர்ப்பு,-17%20May%202022&text=தர்மபுரி%3A%20தேரோட்டத்துக்கு%20அனுமதி%20அளிக்கக்கோரி%20தாக்கல்,அரசின்%20கடமை%20என்று%20நீதிபதி%20கூறினார்.

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா