http://tamizhthoothu.com/karuththukalam/
(பேராசிரியர் எஸ்றா சற்குணம்) கேள்வி: முதலில் தோமா தமிழ் நாட்டிற்கு வந்தாரா என்பதற்கு நேரடியாகப் பதில் கூறுங்கள்!
முனைவர் மு.தெய்வநாயகம் . பதில்: தமிழகத்திற்குத் தோமா வந்தாரா என்ற கேள்வியிலேயே தமிழகத்திற்கு தோமா வரவில்லையா என்ற கேள்வியும் தொக்கி இருக்கிரது அல்லவா?
[மு.பெ.சத்தியவேல் முருகனார் கருத்து: கேட்ட கேள்விக்கு இது எப்படி பதிலாகும் என்று தெரியவில்லை]
கேள்வி: இதற்கு ஆதாரம் என்ன?
மு.தெ. பதில்: போர்த்துக்கீசியர் இந்தியாவிற்கு வந்தபின் தான் தோமாவைப் பற்றி இன்று நாம் கேட்கும் வரலற்றினை அறிய வருகிறோம். அது வரலாறில்லை; போர்த்துகீசியர் கட்டிவிட்ட கட்டுக் கதை. அவர்கள் இதனால் பெற்ற லாபம் என்ன என்பதற்கு சரியான பதில் கிடைக்கவில்லை. தோமா வந்தார்; மயிலையில் சமாதி ஆனார் என்ற கதை போர்த்துகீசியர் தமிழகத்திற்கு வந்த போது அதாவது ஏறத்தாழ கி.பி. 12ஆம் நூற்றாண்டு தான் வெளிவருகிரது. எனவே இது உண்மையா அல்லது பொய்யா என்பதை நிரூபிப்பது போர்த்துகீசியர்கள் தொடர்புடைய கத்தோலிக்கத் திருச்சபை அடியார்கள் திருச்சபையிடம் தான் கேட்டுத் தெளிய வேண்டுமே அல்லாது எனக்கு இதில் பதிலளிக்கும் பொறுப்பு இல்லை.
மு.பெ.சத்தியவேல் முருகனார் கருத்து: தோமா தமிழகத்திற்கு வந்தார் என்பதை கி.பி.12-ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் கதை கட்டி விட்டார்கள் என்கிறார். ஆனால் இவரோ பல்லாண்டுகளாக, அவரே கூட்டத்தில் ஒரு சமயத்தில்சொன்னபடி 45 ஆண்டுகளாக, தோமா தமிழ்நாட்டிற்கு கி.பி. 52ல் வந்து 20 ஆண்டுகளாக சமயக் கொள்கைகளைப் பரப்பினார் என்று போர்த்துகீசியர்கள் 12 ஆம் நூறாண்டில் கட்டிய கதையை நம்பியும் அதைப் பரப்பியும் அதையொட்டி ஒரு நூல் எழுதி முனைவர் பட்டமும் பெற்றவர். ஆனால் இப்போது அது கட்டுக்கதை என்கிறார்; அதற்குத் தான் பதிலளிக்க வேண்டியதில்லை என்று அடாவடியாகத் தன் பொறுப்பைத் தட்டிக் கழிப்பது எந்த வகை நியாயம் என்று நடுநிலையாளர்களைத் திகைக்கச் செய்கிறார்.]
மு.தெ. பதில்:இன்னும் சொல்லப் போனால், கத்தொலிக்கத் திருச்சபையில் யாரும் எவரும் எவரையும் கேள்வி கேட்க முடியாது. கேள்வி கேட்டால் தண்டனை தான். அதனால் தான் மக்கள் இன்று உலகெங்கணும் திருச்சபைகளில் இருந்து விலகிச் செல்கிறார்கள். அதனால் சர்ச்சுகள் எல்லாம் தியேட்டர்களாக்கிக் கொண்டிருக்கின்றன. காரணம், இந்த ஐரொப்பியர்களுக்கு கிறித்துவிடம் இயல்பாகவே எப்போதும் விசுவாசமில்லை.
மு.பெ.ச கருத்து: தோமா கிறித்து காலத்தவர்; அவர் பெயர் எப்படி பழைய ஏற்பட்டில் வரும்? இப்படியே அவரது உரை கத்தோலிக்கத் திருச்சபைகளைச் சாடுவதாகவே தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேல் சென்றது. அதற்குள் அவையிலிருந்து கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லை என்றும் பதிலைச் சொல்லச் சொல்லுங்கள் என்று நீதிபதிகளாகிய எங்களுக்கு சீட்டு வந்தது. இங்கே ஒன்றைக் குறிப்பிட வேண்டும். அவையில் இருந்த அனைவரும் கிறித்துவர்கள்; அவர்களில்70 விழுக்காடு கத்தோலிக்கத் திருச்சபையைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் தெய்வநாயகத்தின் கருத்துக்களுக்கு எதிரானவர்கள்; மீதி 30 விழுக்காட்டினர் தெய்வநாயகத்தின் ஆதரவாளர்கள்.]
கேள்வி: தாங்கள் தோமா தமிழகத்திற்கு வந்தார என்பதற்கு ஆதாரங்களுடன் நேரடியாக பதிலளியுங்கள்! இது அவையினர் அனுப்பியுள்ள சீட்டில் வந்துள்ள வேண்டுகோள் அல்லது முணுமுணுப்பு.
முனைவர் தெய்வநாயகம் இதற்கு கோபப்பட்டுப் பேசினார். மேலும் சுமார் 20 நிமிடங்கள் அவரது பேச்சு அதே பாணியில் மற்றொன்று விரித்தலாய்ச் சென்று கொண்டிருந்தது. அப்போது ககல் 1.00 மணி ஆனதால் உணவு இடைவேளி அறிவிக்கப்பட்டு மேடை கலைந்தது.
இடைவேளையில் அவையிலிருந்த பலரும் வந்து தெய்வநாயகம் அவர்கள் செய்வது கொஞ்சமும் சரியல்ல என்ரும் இது முறையாக நடைபெறுகிற ஆய்வரங்கமாகத் தெரியவில்லை என்றும், கேள்விகளுக்கு விடை அளிக்கப்படும் என்று அறிக்கையில் சொல்கிறார்; இன்னும் பேச்சிடையேயும் கூறுகிறார்; ஆனால்எந்த கேள்விக்கும் அவரிடமிருந்து சரியான பதில் வரவில்லை என்றனர்.
கேள்வி: கிறித்துவத்தில் மூவொருமைக் கோட்பாடு உள்ளதாகக் கூறுகிறீர்கள். இந்த Trinity என்ற கோட்பாடு கான்ஸ்டள்ளடன் மன்னன் (கி.மு. 4 ஆம் நூற்றாண்டு) காலத்திலேயே கிறித்துவத்தை உலக மதங்களில் காணப்படும் மூன்று கடவுள் கோட்பாட்டைப் போலப் புகுத்திப் போதிக்கப்பட்டது என்பது வரலாற்றுச் செய்தி. இதனை மறுக்கமுடியுமா?
மு.தெ. பதில்: (இதற்கும் அவர் நேரிடையான பதில் கூறாமல் சுற்றி வளைத்துப் பேசினார்.) அவர் பேசியதின் சாரம் இது: அதாவது Trinity என்பது இறைவன், பரிசுத்த ஆவி, குமாரன் என்பதாம்.
மு.பெ.ச இடைமறிப்பு: ஐயா! இந்த Trinity பற்றி கிறித்துவச் சபைகளிலேயே வேறு ஒரு கருத்து நிலவுகிறது. அதைப் பற்றிக் கேட்கலாமா?
[மீண்டும் அவையோர் தோமா தமிழகத்திற்கு வந்தாரா என்பதை பற்றி ஆதாரத்துடன் கூறுங்கள் என்று கூச்சலிடுகிறார்கள்.]
இதன் பிறகு உப்புக் சப்பில்லாமல் சில கேள்விகளும் அதற்கு தெய்வநாயகத்தின் பதிலும் நடந்தேறின. இறுதியில் தெய்வ நாயகம் நீதிபதிகள் தீர்ப்பு எழுதுவதற்கு முன் தான் பேச வேண்டும் என்று ஏற்பாட்டாளர்களிடம் அனுமதி கேட்டு பேசத் தொடங்கினார்.
மு.தெ: இன்னும் சிறிது நேரத்தில் நீதிபதிகள் தீர்ப்பு எழுதப் போகிறார்கள். முதல் நாள் வந்த ஷம்சுதீன் என்ற இஸ்லாம் பெரியார் வயிற்று வலி காரணமாக இன்று இரண்டாம் நாள் வரவில்லை. [இவர் இப்படி பேசிக் கொண்டிருக்கும் போது இவரது வழக்கறிக்கை நீதிபதிகள் மேசைமீது வழங்கப்பட்டது.] இப்போது எனது வழக்கறிக்கையை அளித்துள்ளேன். நீதிபதிகளுக்கு வழக்கின் சாராம்சங்களை அறிய எனது 5 நூல்களை அளித்துள்ளேன். அவற்றை முழுவதுமாகப் படித்தால் தான் நீதிபதிகள் தீர்ப்பளிக்க முடியும். ஏறத்தாழ ஒன்றரை நாட்களில் இந்த ஐந்து நூல்களையும் நீதிபதிகளால் படித்து முடிக்க முடியாது. இருந்தாலும் அவற்றைப் படிக்காமல் தீர்ப்பளித்தால் அது ஒரு தீர்ப்பாகவே இருக்க முடியாது. எனவே வேறு ஒரு சமயத்தில் சுமார் 15 நாட்கள் விவாதிக்கலாம். நீதிபதிகளும் அவற்றைப் படித்து விட்டு விவாதத்தில் கலந்து கொள்ளலாம். இந்தச் சூழ்நிலையில் தீர்ப்பு இன்றே வழங்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்பதை அவையே சொல்லட்டும்!
[அவையில் சிலர் தீர்ப்பு பின்னர் வைத்துக் கொள்ளலாம் என்றும், இரு நாட்கள் பணம் கொடுத்துக் கலந்து கொண்ட காரணத்தால் இன்றேதீர்ப்பு வழங்க வேண்டும் என்றும் பலரும் கூறினர்.]
தீர்ப்பு வழங்குவதற்கு முன் அரைமணி நேரம் நீதிபதிகள் நால்வருக்குள்ளே விவாதித்து முடிவுக்கு வரலாம் என்று அனுமதிக்கப்பட்டோம். நாங்கள் எங்களுக்குள் விவாதித்தோம். நீதிபதிகளை அழைத்து வந்து திரு.தெய்வநாயகம் அவமதித்ததை மிகவும் வருத்தத்தோடு ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டோம். படித்து விட்டு வா என்பதும், மேலும் 15 நாட்கள் விவாதிக்க வேண்டும் என்பதும், இரு நாட்களாக தமிழகத்திற்கு தோமாவின் வருகை பற்றியே எவ்வித ஆதாரமும் காட்டாததையும், ‘இந்தியா புனித தோமா வழிக் கிறித்துவ நாடே’ என்று இவரே தேற்றேகாரம் கொடுத்து தமக்குத் தாமே தீர்ப்பு செய்து கொண்டு போலியாக ஆய்வரங்கத்தைக் கூட்டியதும் ஆகிய இவற்றை மிகுந்த கவலையோடும் வேதனையோடும் பேசி, இது முறையற்ற ஓர் ஆய்வரங்கம் என்று முடிவு செய்தோம்.
Icon of the Martyrdom of St. Thomas (taken from the Metropolis of Artis website: http://www.imartis.gr/imartis/texni.php)
The martyrdom of St. Thomas the Apostle(http://pravicon.com/images/sv/s2173/s2173006.jpg)