விபூதி பூசிய மாணவர்கள் 'சஸ்பெண்ட்' : அரசு உதவி பெறும் பள்ளியில் அடாவடி
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரத்தில், அரசு உதவிபெறும், புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில், விபூதி பூசி சென்ற இரு மாணவர்களை, பள்ளி நிர்வாகம், 'சஸ்பெண்ட்' செய்தது.
ராமேஸ்வரம் அருகே, வேர்க்கோட்டில் உள்ள, புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இங்கு, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் இருவர், சபரிமலை செல்வதற்காக மாலை அணிந்துள்ளனர். இதனால், தினமும், விபூதி பூசி பள்ளிக்கு சென்றனர். அவர்களை கண்டித்த பள்ளி நிர்வாகிகள், 'இனி, விபூதி பூசி பள்ளிக்கு வரக் கூடாது' என, எச்சரித்தனர். அதன்பின்னும், மாணவர்கள் இருவரும் விபூதி பூசி பள்ளிக்கு சென்றனர்.
இருவரையும் நேற்று, பள்ளி நிர்வாகம், 'சஸ்பெண்ட்' செய்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள், பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கோரினர்.அதற்கு, மாணவர்கள் இருவரும் ஒழுங்கீனமாகவும், விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. தொடர்ந்து நடந்த பேச்சில், இன்று பள்ளிக்கு வர மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
NO PRINCIPAL CORRESPONDENT MUST BE ALLOWED TO ENTER WITH Pastor o Nun dresses and wearing Cross
No comments:
Post a Comment