Thursday, September 21, 2023

குர்சி நாஷின்.. கிறிஸ்துவ ஆங்கிலேயர்கள் முன் இந்தியர்கள் நாற்காலியில் அமர license உரிமம்

 "Kursi Nashin " குர்சி நாஷின்..


என்னாது இது..? இது ஓர் உரிமம். அதாவது license..
எதற்கான உரிமம் இது..?
கிறிஸ்துவ ஆங்கிலேயர்கள் முன் இந்தியர்கள் நாற்காலியில் அமர்வதற்கான உரிமம் இது.
இந்த உரிமம் பெற்றவர்கள் மட்டுமே கிறிஸ்துவ வெள்ளைக்காரர்கள் முன் அமரமுடியும்.
குர்சி நாஷின் என்னும் இந்தி வார்த்தைக்கு நாற்காலியில் அமர்தல் என்று பொருள்.
இந்தியர்கள் மீதான ஆங்கிலேய அடக்குமுறையின் உச்சமான நிகழ்வு இது.
நீயும் நானும் ஒன்றல்ல.
என் முன் அமர உனது தகுதியை நிருபித்து உரிமம் பெற்று பிறகுதான் அமரமுடியும் என்னும் ஓர் சட்டம் இது.
1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்றபிறகே இச்சட்டம் ஒழிக்கப்பட்டது.
ஷியோ பர்ஷத்தின் மகன் ராம் நரேன் என்பவருக்கு 1887 ஆம் ஆண்டு ஜூலை-1 ஆம் தேதி வழங்கப்பட்ட குர்சிநாஷின் உரிமம் இது.
எத்தனையோ அடக்குமுறைகள்.. அனைத்திற்கும் சிகரமாய் இது.

Saturday, September 16, 2023

A.R.ரகுமான் நிகழ்ச்சி அராஜகங்கள்


 


சங்கத் தமிழில் சனாதனம்

 


மதுரையில் C.N.அண்ணாதுரை உளறலை விரட்டிய தேவர்

1956 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பாண்டித்துரைத்தேவர் தொடங்கிய மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா ஆண்டு மதுரையில் ஒரு வாரம் விமரிசையாகக்கொண்டாடப்பட்டது.புலவர்கள், தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டனர்.
 
மதுரை தமிழ்ச் சங்கத்தின் பொன்விழா நிகழ்ச்சிகள் மதுரை மீனாட்சியம்மன் கோவில் வடக்கு வீதியில் நடைபெற்றது. திரு.பி.டி. ராஜன் தமிழ்ச்சங்க தலைவர் மற்றும் பொன்விழாக் குழு தலைவராக இருந்தார். 10 நாட்கள் நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப் பட்டது
பொன்விழாவைத் துவக்கிற வைத்து மூதறிஞர் ராஜாஜி பேசினார். அவர் போசும் போது. 5000 வருடங்களக்கு முன் கலப்பில்லாத ஆரியன் இருந்தான். கலப்பில்லாத திராவிடன் இருந்தான். இப்போதோ ஆரியன் யார்? திராவிடன் யார்? என்று பிரித்துச் சொல்ல முடியாதபடி கலந்துவிட்டது. இப்போது சிலர் ஆரியன், திராவிடன் என்று பிரிவினை பேசுகிறார்கள் என்று குறிப்பிட்டார்.

நான்காம் நாள் நிகழ்ச்சியில் பேச வேண்டிய திரு. பி் டி ராஜன் தமதுவாய்ப்பை நிகழ்ச்சியில் இடம்பெறாத திரு. சி.என்.அண்ணாதுரைக்கு தந்து பேச வைத்தார். அவருக்கு முன்பாக சேலத்தைச் சேர்ந்த தமிழாசிரியர் மகள் மணிமேகலை என்னும்  சிறுமி பேசினார். அண்ணாதுரை பேசும்போது ” இங்கே அருமையாகப் பேசிய மாணவிக்கு பரிசு என்ற பெயரில் ஒரு புத்தகத்தை கொடுத்து ஏமாற்றி அனுப்பிவிட்டார்கள். அந்தக் காலமாக இருந்திருந்தால். உமையம்மையின் ஞானப் பாலுண்டார் - ஞானம் வந்தது. பேசினார் என்று கதை கட்டியிருப்பார்கள்” என்றார். மேலும் அவர் பேசும்போது, ” இந்த விழாவை துவக்கி வைத்துப் பேசிய ஆச்சாரியார் (ராஜாஜி) கூற்றை அப்படியே ஏற்றுக் கொண்டால் ஆச்சாரியாரின் பிறப்பிலே ஐயப்பாடு தோன்றுகிறது” என்று ராஜாஜியின் பிறப்பை இழிவுபடுத்திக் குறிப்பிட்டார்.இதைக் கேள்விப்பட்டார் தேவர்.

ஆறாம் ஆம் நாள் சேதுபதிகளின் தமிழ்த்தொண்டு என்ற தலைப்பில் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் பேச வேண்டியிருந்தது. 5ஆம் நாளே பேச அனுமதி கேட்டார். அனுமதி மறுக்கபட்பட்டது, ஆனாலும் பேசினார்.“மேடை மரபுகளை மீறி மேடையை ஆக்கிரமிப்பதும். ஒரு மாது தலைமையேற்றுள்ள போது பேசுவதும் அடியேனுக்கு இது தான் முதலும் கடைசியுமாகும். ராஜாஜிக்கும் எனக்கும் ஆயிரம் கருத்த வேறுபாடுகள் இருக்கலாம். அவரது பிறப்பை, அவரது தாயை இழிவுபடுத்துகின்ற வகையில் பிறப்பிலே ஐயப்பாடு தோன்றுகிறது என்று பேசுவது பொறுத்தக் கொள்ள முடியாது.

இருக்கின்ற இடம் அங்கயற்கண்ணியின் ஆலயம் என்பதையும் மறந்து தான் பெற்ற பட்டத்தை, படிப்பை மறந்து, தான் கொண்ட நாத்திகக் கொள்கையை மட்டும் மறவாமல் பேச வந்தவரைப் பேச விட்டது யார்? ஞானசம்பந்தர் வரலாற்றைக் கதை கட்டியதால் வந்தது என்று பேசலாமா? ஆலயத்தில் இந்த விழா நடப்பதை அனுமதிக்க முடியாது. என்று பேசினார் தேவர்.

பசும்பொன்தேவர் அண்ணாவை சுடு சொல்லால் தாக்கினார் என்பது பலரும் சொல்லும் குற்றச்சாட்டு. தேவர் பயன்படுத்திய அதே சொல்லை அண்ணா , ராஜாஜியின் பிறப்பிலே ஐயப்பாடு தோன்றுகிறது என்று நளினமாகச் சொல்லிவிட்டார். பசும்பொன் தேவர் யதார்த்தவாதி. பட்டென்று வெளிப்படையாச் சொல்லிவிட்டார்.தமிழ்ச்சங்க நிர்வாகத்தில் இருந்தவர்கள் தன்னிச்சையாக கோவிலுக்குள் நடக்கும் விழா என்பதை மறந்து நிகழ்ச்சி நிரலில் இல்லாதவரை சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் மேடையேற்றியதுதான் முதல் தவறு.தேவரின் எச்சரிக்கையின்படி தமிழ்ச்சங்கம் பொன் விழாவின் மற்ற நிகழ்ச்சிகள் மீனாட்சியம்மன் கோவில் வடக்காடி வீதியில் இருந்து தமுக்கத்திற்கு மாற்றப்பட்டு விட்டது.


நன்றி :  பசும்பொன் களஞ்சியம் - தேவரின் சொற்பொழிவுகள். தொகுப்பாசிரியர்: காவ்யா சண்முகசுந்தரம். (பக்கங்கள் : 350-351)
 சேலத்தை சார்ந்த ஒரு சிறுமி சொற்பொழிவு ஆற்றினாள். அதன் பிறகு பசிய அண்ணாதுரை பழைய காலமாக இருந்தால் இந்த சிறுமியை ஞானப்பால் குடித்தவர் என்று பாராட்டி தூக்கி வைத்துக்கொண்டாடுவார்கள். மேலும் அவர் பேசிய கருத்துக்கள் திருஞான சம்பந்தரை சாடுவதாக இருந்தது.அதைக்கேட்ட தேவருக்கு கோபம் வந்தது.அங்கு கூடியிருந்த பலருக்கும் அதே கோபம் அண்ணாதுரை மீது.ஆனால் அடுத்து பேசிய பி டி ராஜன் "கருப்புச்சட்டைக்காரர்கள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு.கடவுள் நம்பிக்கை இல்லை என்பதற்காக அவர் யோக்யமானவர் இல்லை" எனக்கூறிவிட முடியாது என்றார்.அன்று தேவர் பேசாமல் ஏனோ விட்டு விட்டார்.அடுத்த நாள் தேவர் தமது சொற்பொழிவில் அண்ணாதுரையை கடுமையாக சாடினார்.பி டி ராஜனுக்கும் அறிவுரை வழங்குவது போல் அவர் பேச்சு அமைந்தது."தெய்வ வழிபாட்டை ஒழிக்க வேண்டும் என பேசுபவர்களை வெளியில் பேசச் சொல்லுங்கள்.இங்கு தெய்வ வீட்டில் அது பற்றி பேசக்கூடாது" என்றார் தேவர்..
1956 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த விழா ஒன்றில், பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அறிஞர் அண்ணாவை, அடுத்த நாள் அதே மேடையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மிகக் கடுமையான சொற்களால் சாடியதாகவும், மன்னிப்பு கேட்கவில்லை என்றால் மீனாட்சி அம்மனுக்குப் பால் அபிஷேகத்திற்குப் பதிலாக இரத்த அபிஷேகம் நடக்கும் என்று சொன்னதாகவும், அதற்குப் பயந்து அண்ணாவும், பி.டி.ராஜனும் ஓடிவந்து மன்னிப்பு கேட்டனர்


https://youtu.be/fJrCEgKNPV4?t=17 


 திராவிட தீ தலைவர் அண்ணாதுரை - இந்துமத எதிர்ப்பு பேச்சுகளை 1954 இல் மீனாக்ஷி அம்மன் கோவில் உள்ளே பேசிய பொது - அன்றைய மிக பிருமாண்ட சனாதன வாதி (இவர் போல ஒரு சிறப்பான - தெளிவான அரசியல் வாதி - பேச்சுக்கள் கொண்ட மனிதனை தமிழகம் கண்டதில்லை ) அண்ணாதுரை உடனடியா மதுரையை விட்டு ஓட வேண்டும் என அறிவித்து - அவர் பயந்து பலர் வீடுகளில் தலைமறைவு ஆகி தப்பிய கதையை அண்ணாமலை விளக்குகிறார் ..
https://www.facebook.com/vijayaraghavan.krishnan/posts/pfbid02v7voaFrcR4MfyXXTFbDUn8MPzgBKHE7ZhX2i8weEB3aVkdzJ2NC2rbbns9kQWehZl?__cft__[0]=AZXLYrOjh_TJEdxZlqEYOGLdhOuy1sVPJA8kemSzfH1RfACSZz39AL-pk-Hxn4vdSSYGQ-FrjQ_2uftJ98quhKktrUHn2s795BlmEAKooQ7qHflyDVDBVRvmyPuMqCH79fgEPsKaJQePbojaSxHOjgY9S-B8pYbGSNNJnbRU4BuGxg&__tn__=%2CO%2CP-R



"போலி ஆன்மீகவாதிகளும் நாத்திகவாதிகளும்" - தேவர்.

1949 ஜூன் 12 ம் நாள் காலை மதுரை வெள்ளியம்பல மண்டபத்தில் நடைபெற்ற "தமிழ்நாடு சன்மார்க்க தொண்டர்" மாநாட்டிற்கு தேவர் தலைமை தங்கினார். தேவர் ஆற்றிய பேருரையில் ஆன்மிகம் என்பதை கண்மூடித்தனமாக ஆதரிக்காமல் போலிகளை கடுமையாகச் சாடினார். "ஆன்மீகத்தின் பெயர் சொல்லி சுயநலமிகள் கோவில் கட்டுவதும், கும்பாபிஷேகங்கள் செய்வதும், ருத்ராட்சங்களை அணிவதும், விபூதி, காவியாடை தரிப்பதும், மொட்டையடித்து பண்டாரம் மடதிபதியாகி, சிஷ்ய பரிவாரங்களும் சூழ, நிறைவில் திரவிய ஆசை, பெண் ஆசை இவை போன்ற ஆசைகளால் பல தீய செயல்கள் செய்வதும் மலிந்து போய் நிற்கின்றன. ஆன்மிகத்தை வயிறு பிழைக்கும் ஒரு கருவியாக கொண்ட போலிகள் மலிந்த காலம் இது..." என போலி ஆன்மீகவாதிகளை அவர் கடுமையாக சாடினார்.மேலும் நாத்திகவாதிகளின் போலித்தனத்தையும் தேவர் விட்டுவைக்கவில்லை.

"இன்றைய நிலையில் மத நம்பிக்கையில் பல குறைகள் கூறப்படுகின்றன. குறைகளில்லாத மதமே கிடையாது. மார்க்கம் ஒன்று வந்தது. பின்னர் முறையே ஞானியும், யோகியும், கர்ம வீரனும், பக்தனும் தோன்றி தத்தம் வழியில் வழிபாடு செய்தனர். இந்நான்கு வகையான முடிவும் ஒன்றே தான். நதிகள் பல. ஆனால் சங்கமமாகும் கடல் ஒன்று. 

இன்றைய சீர்திருத்தவாதிகளை வரவேற்கிறோம். அவர்கள் சமமான நோக்குடன் எல்லா மதங்களிடத்திலுமுள்ள குறைகளையும் ஆராய்ந்து கூறுவதாக இல்லை. இஸ்லாம் மதத்தை குறை கூறினால் அம்மதத்தை சேர்ந்தவர்கள் கண்ட இடங்களில் கூட்டமாக கூடி இவர்களை தாக்க வருவார்கள். கிறிஸ்தவ அரசாங்கம் ஆட்சி பீடத்திலிருக்கும் போது அதைப் பற்றி குறை கூறினால் சிறைக்குள்ளே தள்ளி விடுவார்கள். இதனால் தான் அவைகளை விட்டுவிட்டு இந்து மதத்தை ஏகப் பொதுச் சொத்தாக எடுத்து கையாண்டு வருகின்றனர். சீர்திருத்தவாதிகள் இவ்வாரில்லாது சம நோக்கோடு தங்களுடைய காரியங்களை செய்ய வேண்டும்..." என வெறும் வாய் ஜாலதிற்காக பேசும் சீர்திருத்தவாதிகளை தேவர் கடுமையாக சாடினார். 

தேவர் இந்து சமயத்தில் மட்டுமல்லாது உலகிலுள்ள சமயங்களின் கொள்கைகளிலும் ஈடுபாடு கொண்டவராக திகழ்ந்துள்ளார். இந்த உரையில் மேலும் பேசிய அவர், பின்வருன்கின்ற அறிய விள்ளக்கதைய்க் கூறுகின்றார், அதாவது...

" இந்து கோவிலில் காட்டுகின்ற சூட தீப வெளிச்சத்தையும், கிருத்துவர் வணக்கத்தில் வைக்கிற மெழுகுவர்த்தியின் ஒளியும், முகமதியர் ஊதுபத்தியில் காண்கின்ற சுடரும், தன் உடலின் இருட்டைப் போக்கி எழுப்ப வேண்டிய ஞான விளக்கின் சொரூபம் என்பதை காண்கிறான் - காண்பான்" எனக் கூறுகிறார். மேலும் இது போன்ற ஆன்மீக உரைகளை முழுமையாக வாசித்த பொழுது அதன் பொருளை சாதாரண மக்கள் புரிந்து கொள்ள இயலாது என்பதையே உணர வேண்டியிருக்கிறது.உயர்ந்த ஆன்மீக தத்துவத்தை நடைமுறை வாழ்க்கையோடு இணைத்து மிக நேர்த்தியாக தேவர் விள்ளக்கியுள்ளார்.

தேவர் இந்து சமயத்தின் பால் உறுதியான பற்றுக் கொண்டவர். ஆனால் இந்து கோயில்கள் மனிதர்களை சாதியின் அடிப்படையில் கூறு போடும் மையங்களாக திகழ்வதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.அதனை தன பேச்சிலும், செயலிலும் தேவர் செயல்படுத்திக் கட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அறியாதார் யாருமிருக்க முடியாது. 50, 60 வயதைக் கடந்தவர்களுக்கு அவரது தேசீயமும் தெய்வீகமும் நன்றாகவே தெரிந்திருக்கும். இன்றைய இளைஞர்களுக்கு அவர் ஒரு ஜாதித் தலைவராகவே தெரியும் (உபயம் -- ஓட்டு வங்கியை மட்டுமே முதல் நோக்கமாகக் கொண்ட குறுகிய புத்தி அரசியல் கட்சிகள் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு திராவிடக் கட்சிகள்.) ஆனால் அவரது தேசீயத்தையும், தெய்வீகத்தையும் அறிந்தவர்களில்கூட எத்தனை பேருக்கு அவரது தமிழ்ப்புலமையும், தமிழாராய்ச்சித் திறமையும் தெரியுமோ தெரியாது. மதுரகவி நூல்களைப் படித்துக் கொண்டிருக்கையில், மதுரகவி வழிவந்தவரும், அனேகமாகத் தேவர் திருமகனாரால் பெரிதும் பண்படுத்தப் பட்டவருமான திரு கோவிந்தராஜன் எழுதிய குறிப்பு ஒன்றைப் படித்தேன். நம்மில் பெரும்பாலானோர் தெரிந்து கொள்ளாத தேவரின் அந்த முகத்தை அனைவரும் அறிய இங்கு பகிர்ந்து கொள்கிறேன். தொடர்வது திரு கோவிந்தராஜன் எழுதியது.

"ஒரு நாள் (மதுரை) அங்கயற்கண்ணி ஆலயத்திற்குச் செல்லும்போது ஆடி வீதியில் உள்ள திருக்குறள் மண்டபத்தில் திருக்குறள் பற்றி தேவர் பேசுவதைப் பார்த்து மாணவனாக இருந்த நான் ஆச்சர்யப்பட்டேன். அரசியலில் முடிசூடாமன்னனாகத் திகழ்ந்த முத்துராமலிங்கத்தேவருக்கு திருக்குறளைப் பற்றி என்ன தெரியும்? இந்தப் பாரத புண்ணிய பூமியில் முழு அரசியல் பற்றியும், ஓரளவு ஆன்மீகம் பற்றியும் சொற்பொழிவு ஆற்றியவர், குறளைப் பற்றி என்ன பேசிவிடப் போகிறார் என்று அமர்ந்த நான் மெய்மறந்தேன். அரசியல்வாதியான அவர் திருக்குறளின் மூலைமுடுக்கெல்லாம் சென்று திருக்குறளுக்குப் புத்தம் புதிய விளக்கத்தைத் தந்தது எனக்கு வியப்பு. அன்று அவர் பேசிய பேச்சுக்களை குறிப்பெடுக்கும் வசதியும், வழக்கமும் இல்லாமல் போய்விட்டன.ஆனால் எனது ஞாபகத்தில் இருந்து தேவர் பேசிய பேச்சின் கருத்தை ஓரளவு தருகிறேன். 

(தேவர் பேச்சு ஆரம்பம்)

''கற்றறிந்த பல அறிஞர் பெருமக்கள் இந்தச் சபையிலே வீற்றிருப்பதைப் பார்க்கிறேன். திருக்குறளில்

 'தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் 
மெய் வருத்தக் கூலிதரும்.'

என்பது ஒரு அரிய குறள். திருக்குறளுக்கு உரை சொல்லுகின்றவர்கள் முதலில் ஆன்மீகத்தை ஒத்துக் கொள்ளவேண்டும். ஆன்மீகத்தை ஒத்துக்கொள்ளாவிட்டால் பல குறள்களுக்குப் பொருள் தெரியாமல் அல்லது பொருந்தாமல் போய்விடும். அல்லது தவறான பொருளைக் கூற வேண்டி வரும். நான் மெத்தப் படித்தவன் அல்ல. தமிழ் மொழி ஒரு அளப்பரும் சலதியாகும். எவ்வளவுதான் கற்றாலும் அது கைம்மண்ணளவேதான் ஆகும். நான் சிறையில் இருந்த காலத்தில் எனக்குச் சிறிது ஓய்வு கிடைத்தது. அந்த ஓய்வு நேரத்தில் திருக்குறளைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அப்போது சில குறள்களுக்குத் தவறான உரைகள் சொல்லியிருப்பதைப் பார்க்க முடிந்தது.
நாம் இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் குறள் 'ஆள்வினை உடைமை' என்ற அதிகாரத்தில் உள்ளது.திருவள்ளுவர் ஒரு உலக மகா கவி. உலகில் உள்ள கவிஞர்களில் தலைசிறந்தவர்.

'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு'

என்று பாரதியார் வள்ளுவனை வானத்திற்கே கொண்டுபோனார். இது முற்றிலும் சரியே. வள்ளுவர் உள்ளத்தில் இருந்து தோன்றிய கருத்துக்கள் அருள் வாக்குகள் அமுத வாக்குகள் ஆகும். அவை மக்கள் எல்லாரையும் கவரும் தன்மை உடையவை. அந்தக் கருத்துக்களின் நுட்பத்தையும் திட்பத்தையும் மாண்பையும் எண்ணி எண்ணி வியக்காமல் எவரும் இருக்க முடியாது. அவர் கூறிய மொழிகள் அனைத்தும் பொய்யாமொழிகள் ஆகும். அவர் கூறியவை பொன்மொழிகளாகும். எந்த நாட்டிற்கும், எக்காலத்திற்கும், எந்த மக்களுக்கும் திருக்குறள் என்ற இந்த முழு நூல் முழுக்க முழுக்கப் பொருத்தமுடையது. இதனால் உலகில் உள்ள பல்வேறு மொழிகளில் இந்த அரிய திருக்குறள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. இரட்டை வரிப் பாக்களிலே, ஏழு சொல்லிலே இந்த உலகத்தையே வள்ளுவப் பெருந்தகை அடக்கி இருக்கிறார்.

' கடுகைத் துளைத்தேழ் கடலைப்புகட்டிக் குறுகத் தரித்த குறள். அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்.' -

 என்று திருக்குறள் பெருமையுடன் பேசப்படுகிறது. வேதப் பொருளை விரகால் விரித்து உலகோர் ஓதத் தமிழால் உரை செய்தார். இம்மை, மறுமை இரண்டிற்கும் எழுமைக்குச் செம்மை நெறியில் தெளிவு பெற எல்லாப் பொருளும் இதன்பால் உள. இதன்பால் இல்லாத பொருள் எதுவும் இல்லை. ஓதற்கு எளிதாய், உணர்தற்கு அரிதாய், வேதப்பொருளாய் மிக விளங்கிப் பொய்யாமொழிக்கும் பொருள் ஒன்றே. பரந்த பொருளெல்லாம் பார் அறிய வேறு தெரிந்து திறந்தோறும் சேரும் என்றெல்லாம் பல்வேறு புலவர்கள் பாராட்டிப் புகழப் பெருமை பெற்றவர் திருத்தகு தெய்வத் திருவள்ளுவர்.

'நற்பலகை யொக்க இருக்க உருத்திர சன்ம ரெனவுரைத்து வானில் ஒருக்க ஓ வென்றதோர் சொல்.' - 

என்ற இந்தத் திருவாக்கு விண்ணில் இருந்து வள்ளுவப் பெருந்தகையைப் பாராட்டி அசரீரியாக வந்தது. இங்கே இவைகளை எடுத்துக் காட்டுவது அடியேனுடைய புலமையை எடுத்துக் காட்ட அல்ல. வள்ளுவர் எத்தகைய அறிஞர், புலவர் சிந்தனையாளர் என்பதை எடுத்துக் காட்டவேயாகும். இங்கு வீற்றிருக்கிற அறிஞர்களும், சான்றோர்களும் இதை நன்கு அறிவர். இல்லாத ஒன்றைச் சொல்லிவிட வில்லை. இருப்பதையே திரும்பத் திரும்பச் சொல்லுகிறேன்.

இங்கு கூடியிருப்பவர்களே ! இத்தகைய வள்ளுவப் பெருந்தகை "தெய்வத்தால் ஆகாதெனினும்" என்று எழுதியிருப்பாரா என்பதை அறிஞர் பெருமக்களாகிய உங்களையெல்லாம் சிந்தித்துப் பார்க்கச் சொல்கிறேன். தெய்வத்தால் ஆகாதெனினும் என்று வள்ளுவர் பாடியிருப்பார் என்று அடியேன் ஒருபோதும் எண்ணவில்லை. நீங்களும் அப்படியே எண்ணமாட்டீர்கள் என்று நம்புகிறேன். தெய்வத்தால் ஆகாதது என்று ஒன்று உலகத்தில் இருக்குமா? உண்டா?

புலவர் பெருமக்களே! அறிஞர்களே, சான்றோர்களே! சற்றுச் சிந்தியுங்கள்.! சிந்தியுங்கள்! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த வள்ளுவப் பெருமான் காலத்தில் இன்று உள்ளது போல காகிதம், பேனா, பென்சில் இருக்கவில்லை. ஆயினும் நம் முன்னோர்கள் தங்களது சிந்தனைகளைக் கருத்துக்களை, ஓலைச்சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதியுள்ளார்கள். எழுத்தாணியைப் பாராத இளைஞர்கள் பலர் இங்கு இன்று இருக்கக் கூடும். எழுத்தாணி இருந்தாலும் எழுத்தாணி பிடித்து எல்லாரும் எழுதிவிட முடியாது. இதற்கு நல்ல பயிற்சி வேண்டும். ஒருவர் சொல்ல மற்றொருவர் எழுத்தாணி பிடித்து ஏட்டில் எழுதுவார். அவ்வாறு எழுதியவர் செய்த தவறுதான் என்று அடியேன் இதைக் கருதுகிறேன். 'படித்தவன் பாட்டைக் கெடுத்தான், எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான்' என்பது போல.

இந்தக் குறளை வள்ளுவர் பெருமான் இவ்வாறுதான் பாடியிருக்கக் கூடும் என்று அடியேன் மெத்தப் பணிவுடன் கூறுகிறேன். இதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. உலகில் சர்வ வல்லமை உள்ள தெய்வத்தால் ஆகாத செயல் ஒன்று இருக்க முடியுமா? இறைவன் மிகப் பெரியவன். அவன்முன் நாம் தூசி மாத்திரம். ஓரணுவும் அவனன்றி அசையாத காரணத்தால் அவனைச் சர்வேஸ்வரன் என்று அழைக்கிறோம். ஆகவே அந்தக் குறள் இப்படித்தான் இருக்க வேண்டும்.

'தெய்வத்தால் ஆகும் எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.' - 

"ஆகா" என்பதைப் புலவர்கள் ஆ + கா என்று பிரித்து நேர்,நேர் என்று சொல்லி தேமா என்று வாய்பாடு கூறுவர். ஆகும் என்ற சொல்லையும் ஆ+கும் என்று பிரித்தால் நேர், நேர் என்றும் கூறலாம். மா முன் நிரை அசை வரும் வாய்பாடு அகும். ஆகவே தளையும் தட்டவில்லை. தெய்வத்தால் ஆகும் என்ற முடிவிற்கு நீங்களும் வருவீர்கள் என்று நம்புகிறேன். தெய்வத்தால் ஆகுமென்பதே சரி. தெய்வத்தால் ஆகும் என்ற கருத்தே வள்ளுவப் பெருந்தகைக்கு ஏற்புடையதாகும் என நினைக்கிறேன். சான்றோர்களாகிய நீங்களும் இக்கருத்தை ஒத்துக் கொள்வீர்கள் என்ற நம்புகிறேன்."

'தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை'

என்ற குறளுக்கு தேவர் பெருமகனார் அளித்த இன்னொரு விளக்கத்தையும் திரு கோவிந்தராஜன் எழுதியுள்ளார். அதை வேறொரு நாள் இங்கு எழுதுகிறேன்.


நன்றி :  பசும்பொன் களஞ்சியம் - தேவரின் சொற்பொழிவுகள். தொகுப்பாசிரியர்: காவ்யா சண்முகசுந்தரம். (பக்கங்கள் : 350-351)




 

Friday, September 8, 2023

Sunday, September 3, 2023

மனஅமைதி தரும் சனாதன தர்மம்- இந்து மதம் :ஜூலியா ராபர்ட்ஸ்

ஹாலிவுட் திரை உலகின் சூப்பர் ஸ்டார் ஜூலியா ராபர்ட்ஸ்(42) ரோமன்  கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் நடிப்பில் தனி முத்திரை பதித்து வரும் இவருக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

https://www.youtube.com/watch?v=ryf4i7pCLeY

இவரது நடிப்பில் வெளியான பிரட்டி உமன் என்ற படம் வசூலில் சாதனை படைத்தது.
இப்படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் விருதையும் பென்று சாதனை படைத்தார்.



இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஈட்பிரே அண்ட் லவ் என்ற படத்தின்
படப்பிடிப்பில் கலந்து கொள்ள டெல்லி வந்திருந்தார் தொடர்ந்து 3 மாதங்கள்
வரை இந்தியாவில் தங்கி இருந்தார்.

“ஈட் பிரே அண்ட் லவ்” படத்தில் ஜூலியா ராபர்ட்ஸ் விதவைப் பெண் கேரக்டரில்
நடித்தார். கதைப்படி அவர் நிம்மதிக்காக இந்தியா வந்து கோவில்களில்
வழிபடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றன. இதனால் அவருக்கு பல்வேறு இந்து கோவில்கள் ஆசிரமங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

படத்தில் நடிப்பதற்காக இந்து கோவிலுக்கு சென்ற அவருக்கு உண்மையிலேயே மன
நிம்மதி, கடவுளின் அருள் ஆசி கிடைத்தது.

இதனால் அவருக்கு இந்து மதத்தில் தீவிர ஈடுபாடு ஏற்பட்டது. இந்தியாவில்
இருந்த காலகட்டத்தில் இந்து கோவில்களுக்கு சென்று பல்வேறு சிறப்பு பூஜைகள்,
ஆராதனைகள், அபிஷேகங்களில் கலந்து கொண்டார்.

டெல்லி அருகே உள்ள ஹரி மந்திர் ஆசிரமம் சென்று சாமியார் தரம் தேவிடம் ஆசி
பெற்றார்.தரம் தேவ் ஜூலியாவுக்கு இந்து மத தத்துவங்கள் ஆழகாக எடுத்துக் கூறினார். பூஜை,யாகம், அபிஷேகங்களின் மகத்துவம் பற்றி விளக்கினார்.இதனால் ஜூலியாவுக்கு இந்து மதத்தின் மீது தீவிர பற்று ஏற்பட்டது.

இந்து மத வழிபாடுகளில் தனக்கு பூரண மன அமைதி கிடைத்ததால் கிறிஸ்தவ
மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறினார்.

தனது வீட்டிலும் இந்து தெய்வங்களின் படத்தை வைத்து பூஜை செய்து வருகிறார்.  இது பற்றி ஜூலியா ராபர்ட்ஸ் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-எனது சொந்த நாடு ஜார் ஜியா.ரோமன் கத்தோலிக்க மதத்தில் பிறந்தவர்.

சிறுவயது முதலே வேதாகமத்தை படித்து வந்தேன். கிறிஸ்தவ கோவில்களுக்கு சென்று
அவ்வப்போது வழிபடுவேன்.

ஆனாலும் என் வாழ்வில் தொடர்ந்து பிரச்சினைகள், குழப்பங்கள் இருந்து
வந்தன. கடந்த ஆண்டு இந்தியா வந்த போது இந்து மத வழிபாடுகளால் ஈர்க்கப்பட்டேன்.
இந்த ழிப்பட்டால் என் வாழ்வை சீரழித்த பிரச்சினைகள் நொடிக்பொழுதில் மாய மானதை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். குழப்பமான நிலையில் இருந்த எனக்கு ஒரு தெளிவு டைத்தது.

இந்து கோவில்களில் அர்ச்சகர்கள் காட்டும் தீபத்தை கை வைத்து கும்பிடும்
போது எனக்கு புத்துணர்ச்சி கிடைத்ததை உணர முடிந்தது.

எனது பிரார்த்தனையை கடவுள் கேட்டு உடனடியாக தீர்த்து விடுவது போன்ற
பிரமிப்பு ஏற்பட்டது. நெற்றியில் இடும் திருநீறு தீயசக்திகளிடம் இருந்து என்னை
கடவுள் பாதுகாப்பது போல உணர்ந்தேன். தற்போது எனது 3 குழந்தைகளுக்கும் திருநீறு
பூசி வருகிறேன். கைகளில் புனிதமான சிவப்பு கயிரை கட்டிக் வருகிறேன். இந்து
மதம் என்வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தி உள்ளது. -வ்வாறு நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் கூறினார்.

ஜூலியா ராபர்ட்ஸ் இந்து மதத்திற்கு மாறியதற்கு கிறிஸ்தவர்கள் எதிரிப்பு
தெரிவித்துள்ளனர். பல்வேறு இணைய தளங்களில் ரசிகர்கள் அவருக்கு கண்டனம்
தெரிவித்துள்ளனர். ஆனால் சில ரசிகர்கள் அவரது முடிவை வரவேற்றுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள இந்து மத சர்வதேச அமைப்பின் தலைவர் ராஜன் செட்,
ஜூலியா ராபர்ட்ஸ் போன்ற பிரபலங்கள் இந்து மதத்தில் இணைவதை மனப்பூர்வமாக
வரவேற்றுள்ளார். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட ஜூலியா ராபர்ட்ஸ் இந்து
மதத்தில் இணைந்திருப்பதால் கிறிஸ்தவ மதத்திற்கு சற்று பின்னடைவு ஏற்படும்
என்று இங்கிலாந்தை சேர்ந்த மெத் தடிஸ்ட் பேராலய போதகர் கிங்ஸ்டன் கூறினார்.

http://www.maalaimalar.com/2010/08/07133837/Julia-Roberts.html

World celebrities who embraced Hinduism (Sanatan Dharma) !

https://www.thehinduportal.com/2019/03/world-celebrities-who-embraced-hinduism.html


மைனாரிட்டி கல்லூரிகளில் கிறிஸ்துவர்களுக்கு 50% ஒதுக்க மாட்டோம்- சர்ச் நிர்வாகம்

 சென்னை: சிறுபான்மைக் கல்லூரிகளில் 50 சதவீத மாணவர்கள் சிறுபான்மையினராக இருக்க வேண்டும் என்று வரையறை நிர்ணயம் செய்யும் மாநில சிறுபான்மை ஆணையத்தின் நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.  

 

சென்னை உயர் நீதிமன்றத்தில் லயோலா, ஸ்டெல்லா மேரிஸ், பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி ஆகிய கல்லூரிகளின் முதல்வர்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களில், “ சிறுபான்மையினர் கல்லூரிகளான எங்கள் கல்லூரிகளைப்போல் தமிழகம் முழுவதும் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 1998ல் டிஎம்ஏ பாஸ் பவுன்டேசன் வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் எந்த அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் சிறுபான்மை அந்தஸ்து வழங்க கடந்த 1998 ஜூன் 17ல் தமிழக அரசு சில வழிகாட்டுதல்களை உருவாக்கியது. அதில் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாணவர் சேர்க்கையில் 50%த்திற்கு மிகாமல் சிறுபான்மையினருக்கு இடம் தரவேண்டும். அதை நிரப்ப முடியவில்லை என்றால் பொதுவான மாணவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் சேர்க்கை தரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. எங்கள் கல்லூரிகள் சிறுபான்மையினருக்கு மட்டுமல்லாமல் தகுதியுள்ள அனைத்து பிரிவினருக்கும் சேர்க்கைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், எங்கள் கல்லூரிகளுக்குத் தரப்பட்ட சிறுபான்மை அந்தஸ்து 2007 முதல் 2012 வரை அதாவது 5 ஆண்டுகளுக்கு மட்டுமே என்று 2009 அக்டோபர் 8ம் தேதி தமிழக உயர் கல்வித்துறை ஒரு அரசாணையைப் பிறப்பித்தது.
 
இது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அரசாணைக்குத் தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீடும் தள்ளுபடியானது.  இந்நிலையில், கடந்த அக்டோபர் 16ம்தேதி தமிழ்நாடு சிறுபான்மை ஆணையம் எங்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில் 2017 முதல் 2019ம் கல்வி ஆண்டுகளின் மாணவர் சேர்க்கை விவரங்களைக் கேட்டுள்ளது. எங்களை நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், 50 சதவீத சேர்க்கை சிறுபான்மையின மாணவர்களுக்கு மட்டுமே தரவேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கட்டாயப் படுத்தப் பட்டுள்ளது.
 
இது விதிமுறைகளுக்கும், சிறுபான்மையினரின் நலனுக்கும் முரணானது. எனவே, சிறுபான்மை ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்குத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ஐசக் மோகன்லால் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழக சிறுபான்மை ஆணையத்தின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கில் அரசுத் தரப்பில் 2 வாரங்களில் பதில் தருமாறும் நீதிபதி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=449247

நக்கீரன் அலுவலகம் விதி மீறல்கள்- இடிக்கலாமா? - ஈஷா ஆதியோகி சிலையும்

நக்கீரன் அலுவலகம் -சென்னை ராயப்பேட்டை ஜானிஜான்கான் சாலையில், - 104ம் எண் கட்டிடம், இது உள்ளே அமைந்து உள்ளது - 4 அடி குறிகிய பாதை வழியாக 50அடி உள்ளே அமைந்து உள்ளது
Nakkheeran Publications (நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்)
105, Jani Jhan Khan Rd, Royapettah, Chennai, Tamil Nadu 600014

சென்னை ராயப்பேட்டை ஜானிஜான்கான் சாலையில், - 104ம் எண் கட்டிடம், இது உள்ளே அமைந்து உள்ளது - 4 அடி குறுகிய பாதை வழியாக 50அடி உள்ளே அமைந்து உள்ளது. இதில் 5 மாடி கட்டிடம் உள்ளது, 2005ல் கட்டப்பட்டது 

இந்த இடத்தில் 5 மாடி கட்டிடம் கட்டுவது திட்டமிட்ட விதிமீறல் ஆகும். அஸ்திவாரம் போடுவதில் கம்பிகள் தேர்வு முதல் அனைத்துமே திட்டமிட்டு சட்ட வீதிகளை உடைத்து கட்டியது ஆகும்







 

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா