குன்றத்தூர் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்த கிறிஸ்தவ கல்லுாரிக்கு 5 லட்சம் அபராதம் – உயர் நீதிமன்றம் உத்தரவு!
சென்னை அடுத்த குன்றத்துாரில் உள்ள மாதா பல் மருத்துவ கிறிஸ்துவ கல்லுாரி குன்றத்துால் சேக்கிழார் கோயில் நிலம் ஒரு ஏக்கர் இடத்தை ஆக்கிரமித்து கல்லுாரி கட்டிடம் கட்டிவிட்டனர். 24 ஆண்டுகளாக கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி அனுபவித்துவந்தனர். இந்த நிலத்திற்கு கோயில் செயல் அதிகாரி ஆண்டு வாடகை ரூ.1 ஆயிரம் வீதம் ரூ.1 கோடியே 53 லட்சத்தை கட்ட வேண்டும் என்று கிறிஸ்துவ கல்லுாரிக்கு நோட்டீசு கொடுத்தார். இதை எதிர்த்து கோயில் உரிமையாளர் சூசையா பீட்டர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சுரேஸ்குமார், சவுந்தர் ஆகியோர் விசாரித்தனர். அப்போது டி.ஆர் . ரமேஸ் ஆஜராகி, கோயில் நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் வழக்கில் என் கருத்தை கேட்க வேண்டும் என்றார். இதை கேட்ட கிறிஸ்துவ கல்லாரி சார்பபாக ஆஜரானர்கள் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்கிறோம் என்று கூறி வாபஸ் பெற்றனர். இதை தொடர்ந்த கல்லுாரி ஆக்கிரமித்த கோயில் நிலத்திற்கு வாடகை பாக்கி ரு்.1 கோடியே 53 லட்சத்தை செலுத்த கோரி இந்து அறநிலையத்துறை நோட்டீசு அனுப்பியது. இதை எதிர்த்து மீண்டும் கோயில் ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கு மீண்டும் அதே நீதிபதிகள் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கல்லுாரி சார்பாக ஆஜரான வக்கீல் , நாங்கள் கோயிலுக்கு மாற்று நிலம் தருகிறோம். தற்போது கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து இந்து அறநிலையத்துறை கமிசனருக்கு சீராய்வு மனு தாக்கல் செய்து எங்கள் கோரிக்கையை வைக்க அனுமதிக்க வேண்டும் என்றார். அப்போது வழக்கில் தன்னை இணைத்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற டி.ஆர்.ரமேஸ், சேக்கிழார் கோயில் நிலத்திற்கு மாற்று இடம் தர கிறிஸ்துவ கல்லுாரிக்கு உரிமையில்லை. ஏனென்றால் கோயில் நிலத்தை மனுதாரர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். எனவே இதை ஏற்க கூடாது வழக்கை தள்ளுபடி செய்து நிலத்தை இந்து அறநிலையத்துறை எடுத்து கொள்ள உத்தரவிட வேண்டும் என்றார்.
இதை கேட்ட நீதிபதிகள், மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது. மனுவை ரூ.5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்கிறோம். மனுதாரர் ரூ. 5 லட்சத்தை கோயிலுக்கு 2 வாரத்தில் செலுத்த வேண்டும்.இந்த விவகாரம் குறித்து கல்லுாரி சீராய்வு மனுவை இந்து அறநிலையத்துறையில் தாக்கல் செய்ய அனுமதி வழங்குகிறோம். இந்து அறநிலையத்துறை இதை தீர விசாரித்து சட்டப்படி முடிவு எடுக்க வேண்டும். அப்போது டி.ஆர். ரமேஸ் தரப்பின் கருத்தை கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
சென்னை குன்றத்தூர் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்த கிறிஸ்தவ கல்லுாரிக்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை குன்றத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற சேக்கிழார் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து மாதா பல் மருத்துவக் கல்லூரி நிர்வாகம், கட்டடம் கட்டியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார், சவுந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கல்லூரி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கோயில் நிலத்தில் கல்லூரி செயல்படுவதால், மாற்று இடம் வழங்குவதாக கூறினார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை தொடர்ந்து நடத்தவிடாமல் இருந்த கல்லூரி நிர்வாகத்திற்கு 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பதாக ஆணையிட்டனர்.
மேலும் வாடகை பாக்கி தொடர்பான கல்லூரியின் சீராய்வு மனு மீது அறநிலைய துறை ஆணையர் சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.