Wednesday, May 17, 2017

கர்த்தரான இயேசு கிறுஸ்து கொலை செய்தார்-நான் இல்லை- ஜோசப் ஆரோக்கியசாமி

அதிகாரி கொலை: வாலிபர் கைது
.
Thursday, 09 February, 2012   02:50 PM
.
சென்னை,  பிப்.9:நுங்கம்பாக்கம் பெண் அதிகாரி கொலையில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் இன்று கைது செய்தனர். அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.நுங்கம்பாக்கம் திட்ட சாலையில் பிரபாவதி (வயது 54), சீதாலட்சுமி (வயது 52) ஆகியோர் தனிமையில் வசித்து வந்தனர்.
.

இவர்கள் இருவரும் வங்கியில் பணிபுரிகின்றனர். பிரபாவதி பாண்டிச்சேரியில் வேலை பார்த்து வருகிறார். நுங்கம்பாக்கத்தில் சீதாலட்சுமி மட்டும் தனியாக இருந்துள்ளார்.கடந்த ஜனவரி மாதம் 1ந் தேதி அன்று பிரபாவதி மற்றும் சீதாலட்சுமி ஆகியோர் தனித்தனி அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.சீதாலட்சுமி அறையில் இருந்த ஏ.சி. ஓட்டை வழியாக கொள்ளையன் உள்ளே புகுந்து சீதாலட்சுமியை கொலை செய்து விட்டு 26 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்து விட்டு சென்று விட்டான். அதே போல் கடந்த ஜனவரி மாதம் 25ந் தேதி ஸ்கூல் வியூ ரோடு முதல் லேன் ராமகிருஷ்ணா நகர், சென்னை என்ற முகவரியில் உள்ள வீட்டில் இரவில் புகுந்த கொள்ளையன் அங்கிருந்த ஆனந்தி ராஜகோபால் என்ற மூதாட்டியை கத்தியை காட்டி மிரட்டி சுமார் 16 சவரன் தங்க நகை மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளான்.
பரபரப்பை ஏற்படுத்திய இந்த பெண் கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை உடனடியாக கைது செய்ய சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் திரிபாதி உத்தரவிட்டிருந்தார்.இதனையடுத்து கூடுதல் கமிஷனர் தாமரைக்கண்ணன் அறிவுரையின் பேரில் கிழக்கு சரக இணை கமிஷனர் சேஷசாயி மேற்பார்வையில் மயிலாப்பூர் மண்டல துணை கமிஷனர் டி.கே.புகழேந்தி மற்றும் கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சிவசங்கரன் ஆகியோர் கண்காணிப்பில் ஆய்வாளர்கள் கோவிந்தராஜன், ராமலிங்கம், அன்பரசு, ரமேஷ், சிறப்பு உதவி ஆய்வாளர் ரங்கநாதன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தனிப்படையினரின் தீவிர விசாரணையில் சிவகங்கை மாவட்டம், திருவேகம்பத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தியாகு என்பவரின் மகன் ஆரோக்கியசாமி என்கிற மணி என்கிற ஜோசப் என்கிற சாலமன் என்கிறவன் மேற்படி இரண்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டது

தனிப்படை போலீசாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மற்றும் பணம் ஆகியவை மீட்கப்பட்டது. மேலும் தி.நகர், அடையார் பகுதிகளில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களிலும் இவனுக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆரோக்கியசாமி வயதானவர்கள் வீட்டில் தனியாக இருப்பதை நோக்கம் விட்டு முன்னிரவு நேரத்தில் வீட்டினுள் புகுந்து பின்னிரவு நேரத்தில் வீட்டில் தனியாக உள்ள வயதானவரை மிரட்டி கொள்ளையடித்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது.


No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா