அதற்கு உமா சங்கர் அவர்கள் இப்போது ஆலயம் கட்ட யேசு அனுமதிக்கவில்லை. ஆலயம் கட்டுவதை யேசு பிளாக் பண்ணிவிட்டடார். ஆலய கட்டிடத்தில் யேசு இருக்க மாட்டார். இப்போது யேசு ஏற்கெனவே கட்டப்பட்ட ஆலயகட்டடங்களை இடிக்க சொல்கிறார்.
ஆலயம் என்ற கட்டடத்தில் கூடுகின்றவர்கள் அடிமைகள் என்றும் பாஸ்டர்கள் அனைவரும் யேசுவுக்கு விரோதிகள் என்றும் அவர்கள் தங்கள் ராஜ்யத்தையே கட்டுகின்றனர் என்றும் யேசு சொல்லிவிட்டாராம்.
ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தில் ஆராதனை நடத்துவது யேசுவுக்கு விரோதம். அதனால் யேசு ஆலயத்துக்கு போகக்கூடாது என்று கண்டிப்பாக உமா சங்கரிடம் சொல்லிவிட்டாராம்.
ஆனால் பாஸ்டர் டேனியேலோ யேசு சொல்லிதான் ஆலயம் கட்ட வேலை ஆரம்பித்ததாக அடித்து சொல்கிறார்.
எனக்கு ஒரு சந்தேகம்:
அது எப்படி ஒரு யேசு உமா சங்கரிடம் வந்து கட்டடம் கட்டக்கூடாது என்று சொன்னார் ? இன்னொரு யேசு வந்து பாஸ்டர் டேனியேலிடம் கட்டடம் கட்ட சொன்னார்?? இதில் எந்த யேசு உண்மையான யேசு ??? அல்லது ஒரே யேசு வந்து இந்த இரண்டுபேரையும் குழப்பிவிட்டாரா ????
பிரியமானவர்களே இந்த மாதிரியான டுபாக்கூர் ஆசாமிகளின் போதனைகளை நம்பாமல் வேதவசனங்களை கருத்தோடு தியானித்து நித்திய ஜீவனை நமக்கு தருகின்ற இயேசுகிறிஸ்துவை பின்பற்றுவோம்.
வேதவசனம் தெளிவாக சொல்லுகின்றது இவர்கள் பிரசங்கிறது வேறொரு யேசு (2 கொரிந்தியர் 11:4) என்று. கிறிஸ்தவர்களே ஜாக்கிரதை !!!!
No comments:
Post a Comment