Tuesday, December 16, 2025

திருத்தணி = கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி சுவர் இடிந்து 7ம் வகுப்பு மாணவர் மோகித் மரணம்

திருத்தணி அருகே கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி சுவர் இடிந்து 7ம் வகுப்பு மாணவர் மோகித் மரணம்

திருவள்ளூர் அருகே பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 7ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

https://tamil.timesnownews.com/news/tiruvallur-class-7-student-killed-after-govt-school-wall-collapse-bjp-annamalai-condemns-article-153301544



திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்து கொண்டாபுரம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மோகித் என்ற சிறுவன் 7ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த மாணவர் மதிய உணவு இடைவேளையில் பள்ளியில் உள்ள நடைமேடையில் அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளார். அப்போது பக்கவாட்டு சுவர் இடிந்து மாணவர் மோகித் மீது விழுந்துள்ளது. இந்த விபத்தில் மாணவர் மோகித் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து பள்ளிக்கு விரைந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர் உயிரிழந்த சிறுவனின் உடலை பார்த்து கதறி அழுதனர். அத்துடன் பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதம் செய்து உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களுடன் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அண்ணாமலை கண்டனம்:
இது சம்பவம் குறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள கண்டன பதிவில் கூறியதாவது, "திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி சுவர் இடிந்து விழுந்து, 7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தங்கள் குழந்தையை இழந்து தவிக்கும் சிறுவனது பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை.
கடந்த நான்கரை ஆண்டுகளில், தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில், அரசுப் பள்ளிக் கட்டிடங்கள், மேற்கூரைகள், சுற்றுச் சுவர்கள் இடிந்து விழுவது தொடர்கதை ஆகியிருக்கிறது. ஒவ்வொரு முறையும், அரசுப் பள்ளிக் கட்டிடங்களின் உறுதித் தன்மையைப் பரிசோதித்து, அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று, திமுக அரசை வலியுறுத்தி வந்திருக்கிறோம். பல பள்ளிகள், கட்டிடம் இல்லாமல் மரத்தடியில் இயங்கி வருவதையும் சுட்டிக் காட்டியுள்ளோம். ஆனால், முதலமைச்சரோ, பள்ளிக் கல்வித்துறை அமைச்சரோ, இதனைக் குறித்து எந்தக் அக்கறையும் காட்டவில்லை.
ஏழை, எளிய குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளை, திமுக அரசு ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்ததன் விளைவு, இன்று வாழ வேண்டிய ஒரு குழந்தையைப் பறிகொடுத்திருக்கிறோம். இதனை விபத்தாக எடுத்துக் கொள்ள முடியாது. திமுக அரசின் அலட்சியத்தால் ஏற்பட்ட கொலையாகவே கருத முடியும்.
வெறும் விளம்பர நாடகங்களை மட்டுமே, கடந்த நான்கரை ஆண்டுகளாக நடத்தி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகிய இருவருமே இதற்கு முழுப் பொறுப்பு. இனியும், அரசுப் பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்து மாணவ, மாணவியர் பாதுகாப்பை உறுதி செய்யாமலிருப்பது வெட்கக்கேடு." இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Monday, December 15, 2025

பாஜக புதிய தலைவர் நிதின் நபின் சின்கா - யார்?



 நிதின் நபின் சின்கா (Nitin Nabin 45
)- பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் நபின் கிசோர் சின்காவின் மகன் ஆவார். இவர் 4 முறை பாங்கிபூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பீகார் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 2020 பீகார் சட்டப்பேரவை தேர்தலில் சுமார் 84,000 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் சத்ருகன் சின்காவின் மகன் லவ் சின்காவை இவர் பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 

 In the past, Nabin has served as the BJP in-charge in Chhattisgarh and Sikkim.
சத்தீஸ்கர்க் மாநில பொறுப்பாளர் ஆக அம்மாநிலத்தின் காங்கிரஸ் ஆட்சியை நீக்கி மீண்டும் பாஜக கொண்டு வருவதில் முக்கிய பங்கு ஆற்றியவர்






ஹாங்காங் ஜனநாயக ஆதரவு பத்திரிக்கையாளர் - குற்றவாளி என அறிவிப்பு




சீனியர் ஐபிஎஸ்கள் வீட்டு வேலைக்கு போலீஸ் ஆர்டர்லி கூடாது- பொறுப்பு டிஜிபி; பல கார், அதற்கு டிரைவர் தடை வருமா

 





தமிழர் காஞ்சி காமகோடி மடம்- யானைகளை திருப்பித்தர வழக்கு


 

திருத்தணி = கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி சுவர் இடிந்து 7ம் வகுப்பு மாணவர் மோகித் மரணம்

திருத்தணி அருகே கொண்டாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி சுவர் இடிந்து 7ம் வகுப்பு மாணவர்  மோகித்   மரணம் திருவள்ளூர் அருகே பள்ளியில் சுவர் இடிந்து...