Monday, July 9, 2012

ஈஸா குர்ஆன் உமருக்கு பதில்-கர்த்தரின் ஆபிரஹாம் அல்லது ஈசாக்கு குழப்பம்.


கட்டுரை- 1 எதிர்ப்பு பதில்  எதிர்ப்பு - 2  மாற்று 2

//"சிலர் இந்த நிகழ்ச்சிகள் பற்றி கூறும்போது, ஒரே கதை மூன்று வித்தியாசமான பெயர்களில் கூறப்பட்டுள்ளது என்பார்கள் அல்லது இந்த மூன்று நிகழ்ச்சிகள் நமக்கு ஆதியாகமத்திற்கு மூன்று ஆசிரியர்கள் இருந்தார்கள் என்று காட்டுகிறது என்றும் கூறுவார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சிகளை நாம் கூர்ந்து கவனித்து ஆய்வு செய்தால், இவைகள் மூன்று தனித்தனியான நிகழ்ச்சிகள் என்று தெரியவரும். இவைகள் பற்றிய வசனங்கள்: ஆதியாகமம் 12:12-20, 20:1-8, மற்றும் 26:1-11 ஆகும்.//

விளக்கம் தருகிறேன் - பதில் தருகிறேன் என்பவர்கள்  என்று சொல்லிக் கொண்டு, இதற்குமுன் பைபிளியல் அறிஞர்கள் நியாய்ப் பிரமாணங்கள் புனையப்பட்டவிதம் என ஆராய்ச்சிகளின் பெரும்பான்மையோர் தீர்மானம், 4 வெவ்வேறு குழுக்கள், ய,எ,உ,பா முறையே "யவ" , "எல்ல்லொஹிம்" "உபாகம" மற்றும் யூதப் பாதிரிமார் (லேவியர் ஜாதி). ஒரே சம்பவத்தை 3 ஆசிரியர்கள் சற்று மாற்றி எழுதியதில் வந்த சிறு குழப்பம் என மற்ற பைப்ளியல் அறிஞர்கள் சொன்னனராம்.
   

இக்கட்டுரையின் மூல ஆங்கில அறிஞர்- இல்லை இது மூன்று முறை நடந்த வெவ்வேறு சம்பவம் என்றும்; தாத்தா-மகன் - பேரன் என அனைவருக்கும் ஒரே பெயர் இருக்க முடியாதா என ஒரு மழுப்பல் (Apology) வைக்கிறார், அதற்கு இங்கிலாந்து அரசர்களின் பட்டியலும் தருகிறார்.


பெரும்பாலான பைபிளியல் அறிஞர்கள் நம்பியதற்கு காரணம் என்ன? - இவ்வாசிரியர் கூறும் புது விளக்கம் ஏன்? - பைபிளியல் அறிஞர்கள் இச்சம்பவம் மட்டும் பார்க்கவில்லை, முழுமையாக பைபிள் அமைப்பு புனையப்பட்டது எப்படு என பார்த்தனர்.


சிறு உதாரணம்- மோசே சட்டங்கள் என்னும் "முதலைந்து புத்தகங்கள் Pentateuch இவை வரலாற்று குறிப்பு அல்ல. அதிலும் மோசேக்கு முந்தையதான தலைமுறை பகுதி அனைத்தும் கதைப்படி- பயணத்தின் போது கர்த்தர் மோசேக்கு சொன்னதாகக் கதை. இஸ்ரேல் நாடு என்பது முரட்டு அராபியக் கூட்டம், இவர்கள் நாகரிகத்தில் மிகவும் பின் தங்கியிருந்தனர். பாபிலோனிய- கிரேக்கப் படையெடுப்புகளுக்குப் பின்பு தான் அவர்கள் நகரம்- கட்டுமானம்- தத்துவம் என அறிவு பெற்றனர். பொ..மு.300-200 இடையே பெரும்பாலான பழைய ஏற்பாடு புனையப் பட்டது, இதற்கு எஸ்ரா-நெகமியா போன்ற புத்தகங்களிலும் மிகத்தெளிவான ஆதாரங்கள்- அதை எவைக் குறிக்கின்றன என்பதில் பெரும் கருத்தொற்றுமை நடுநிலை பைபிளியல் அறிஞர்கள் ஏற்கின்றனர்.

 நான் தெளிவாக பைபிளியல் நூல்களிலிருந்தே ஆதாரங்களை தருகிறேன்.

 “இஸ்ரயேலரின் வரலாறு- – ஆர்,எட்வர்ட் சாம், தமிழ் தியொலொஜிகல் புக் க்லப், மதுரை 1996.( (First Edition in 1966; this is 3rd edition)
ஒருவேளை, இஸ்ரயேலர் எந்தக் காலத்தில் எகிப்துக்குள் சென்றனர் என்ற கேள்வியே தவறாயிருக்கலாம், ஏனெனில் இஸ்ரயேலர் என்ற சிறப்புப் பெயரோடு தனித்தியங்கிய மக்கட் கூட்டம் ஒன்று அக்காலத்தில் இருந்ததில்லை.- பக்- 60

இப்பயண வரலாற்றில் காணப்படும் பல இடங்கள் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. எனவே, பயணப் பாதை, எதுவெனத் திட்டமாய்க் கூறுவதற்கில்லை. செங்கடலைக் கடந்திருந்தாலும் எகிப்தியக் குதிரை படைகளால் பிடிபட்டிருப்பர். என்வே, இது சாத்தியமென்று கூறப்படும் அளவு அன்று செங்கடல் நீளமுள்ளதாயிருக்கவில்லை எனக் கருத இன்று சான்றுகளுண்டு. – பக்  90- 91

ஆதியாகமம் பெயர்தரும் ஒரு வரலாற்று மனிதர் பெயரைக்கூட புறச்சான்றுகளால் உறுதிப்படுத்த இயலவில்லை. முக்கியமாக, அவர்களின் பெயர்களில் ஒன்றாயினும் கல்வெட்டுக்களில் கிடைக்கவில்லை. எனவே, பொதுவான பொருளில் வரலாறு எழுதுவது இயலாத செயலே. பக் 49

 நூல்- : “நிஜங்கள்-விவிலியம் பற்றிய கேள்வி –பதில் ; – கத்தோலிக்க பைபிளியல் பேராசிரியரும் திருச்சி சலேசிய மாநிலத் தலைவர் ஸ்.ஸ்.தெயோபிலஸ்

இப்புத்தகத்திற்கு இரண்டு ஆர்ச் பிஷப்கள் என நிகில் ஒப்ஸ்டட் என்னும் முத்திரை அங்கிகாரம் கொடுத்துமுள்ளனர்

தொடக்கத்தில் உள்ள முதல் 11 அதிகாரங்கள் சரித்திரத்தில் நிகழ்ந்தவை அல்ல என வல்லுனர்கள் கூறுகிறார்கள். மனிதன் தந்து சமுதாயத்தில் நிலவிய புதிர்களுக்க்ப் பதிலைத் தேடினர்(உ-ம் படைப்பு, பாவம், சாவு, துன்பம்…)இதற்குரிய பதிலகளைப் “படைப்பு போன்ற புராண (mythological) கதைகள் வழியாகக் கூறுகிறான், படைப்பை எவரும் பார்த்தது கிடையாது, பார்க்கவும் முடியாது. மனிதனே இந்தப் படைப்பை இப்படிப் பற்றி புரிந்து கொண்டுள்ளதன் விளக்கமே, இந்தக் கதைகளில் கூறப்பட்டுள்ளது போலத்தான் நடந்தன என்று சொல்ல முடியாது. -- பக்கம் 15

அதே சமயத்தில், ஆபிரகாமைப் பற்றி விவிலியத்தில் காணப்படுகின்ற அத்தனை சம்பவங்களையும் உண்மை வரலாற்று நிகழ்வுகளென யாரும் கருத முடியாது. ஏனெனில் விவிலியம் ஒரு இறையியல் வரலாறு. பக்௧17


 இதைவிடவும் நியாயப் பிரமாணங்கள் உள்ளே பல கிரேக்க பாபிலோனிய அம்சங்கள் காணப்பட்டது. இவை நியாயப் பிரமாணங்கள் எப்ரிரேய- கிரேக்க மொழிகளில் ஒரே காலத்தில் - அதாவது பொ.மு 3ம் நூற்றாண்டில் தான் என நடுநிலை பைபிளியல் அறிஞர்கள் ஏற்கின்றனர். 

சிறு உதாரணம்.New Catholic Encyclopedia Vol-5 page-745 “Mention of the Red Sea in the Exodus context is a misnomer to be attributed to early Septuaginal editor. One has to glance at any map to see the complete lack of relevance the Red sea has to the entire narrative of Exodus. The Hebrew term Yamsup signifies Reed sea. ” New Catholic Encyclopedia Vol-5 page-745

மோசஸ் எழுதியதான நியாயப் பிரமாணத்தில் செங்கடல் என வந்ததற்கு கிரேக்கர்கள் தவறான மொழி பெயர்ப்பு காரணமாம்-அமெரிக்க கத்தோலிக்க பல்கலைக் கழகத்தின் கத்தோலிக்க கலைக்களஞ்சியம் சொல்கின்றது. இது நியாயப்பிராமாணங்கள் அல்லது புனையப் பட்டதே பொ.மு. 300-200 வாக்கில் என்பதை நிருபிக்கும்.


ஒட்டகங்கள் முதலில் மனிதர்களால் பழக்கப்பட்டு பயன் படுத்தப் பட்டது BCE-1000 வாக்கிலே; ஆனால் ஆபிரஹாம் வீட்டில் ஒட்டகங்கள் இருந்ததாகக் கதை கட்டுகிறது. பரம்பரைப் பட்டியல்களில் பாபிலோனிய/கிரேக்க பின்பற்றுதல்கள் பைபிள் அறிஞர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.


Sharjah’s 3,000-year-old clue to the first domesticated camels
http://newindian.activeboard.com/t36782212/semmozhi-tamil-ancient-archaeology-findings/?page=5
 கதைப்படியே எகிப்தில் வாழ்ந்த மோசேவிற்கு 400 அல்லது 430 ஆண்டுகள் முன் நடந்தவை தெரிய வாய்ப்பில்லை.


இதைப் படிக்கவும்-
யாத்திராகமம்- விடுதலைப் பயணம் கட்டுக்கதையே http://pagadhu.blogspot.in/2012/06/blog-post.html

பைபிள் கதையின் சாரம்.
ஆபிரகாம்- மனைவி சாராள், இவர்கள் நாட்டில் பஞ்சம் வர பக்கத்து நாடு சென்று வாழ்ந்தனர். தன் அழகான மனைவியைக் காப்பாற்ற மனைவியைத் தங்கை எனச் சொல்லிக் கொண்டர். ஆனல் விஷயம் அறிந்த பக்கத்து நாட்டு மன்னர் - ஏன் மனைவியை தங்கை என பொய் சொன்னாய், நாங்கள் அடுத்தவர் மனைவியை தீண்டும் தப்பு செய்திருப்போமே என வருந்தினர். 
இது போலே ஒரு சம்பவம் ஆபிரகாமின் வாழ்க்கையில் இரண்டு முறை, அதுவும் இரண்டாவது நிகழ்ச்சியில் அவர் எந்த நாடு, மன்னன் பெயர் சொன்னதோ, அதே நாடு மன்னரிடம் பைபிள் கதைப்படி ஆபிரகாம் மகன் ஈசாக்கும் மனைவியைத் தங்கை எனச் சொல்வதாகக் கதை.

எனவே தான் ஒரே சம்பவத்தை 3 கதைக் குழு ஆசிரியர்கள் வித்தியாசமாக எழுதியதில் வந்தது என்றனர். ஆனால் அரசகுலத்தில் ஒரே பெயர் வைப்பதுண்டு என்பதால் இது மூன்றுமுறை நடந்திருக்கலாம் என புது சப்பைக்கட்டு. ஆனால் நடுநிலையாக வரலாற்று கண்கொண்டு உண்மையை தேடுபவர்கள் நேர்மையாக ஆராய்ந்தால் வரும் முடிவை யூதக் கலைக்களஞ்சியம் தெளிவாக்குகிறது.

 ஆபிரகாம் - இசாக் கதை பற்றி யூதக் கலைகளஞ்சியம் சொல்வது

ஆபிரகாம் - இசாக் கதை பற்றி  யூதக் கலைகளஞ்சியம் சொல்வது 

//ஆபிரகாம் வாழ்வில்இரண்டுமுறை- மனைவியை தங்கை என்பது வாய்ப்பில்லை. அதைவிட இதே சம்பவம் மகன் இசாக்-ரெபெக்கா காலத்திலும் என்பது இவை நம்புதலுக்கு உள்ளவை அல்ல என்பது தெளிவாக்கும். இக்கதைகள் பிதாக்கள் மனைவிகள் அழ்கானவர்கள்- இஸ்ரேலின் யாவே- சிறு தெய்வம் பாதுகாப்பு பெற்று இருந்தனர் எனக் காட்ட எழுந்த கதையே.//
Jewish Encyclopedia,
"From the point of view of the history of culture these episodes are very instructive. But it is not very probable that Abraham would have run the risk twice. Moreover, a similar incident is reported in regard to Isaac and Rebecca (Genesis 34:6-11). This recurrence indicates that none of the accounts is to be accepted as historical; all three are variations of a theme common to the popular oral histories of the Patriarchs. That women were married in the way here supposed is not to be doubted. The purpose of the story is to extol the heroines as most beautiful and show that the Patriarchs were under the special protection of the Deity."

9 comments:

  1. மிக அழகாக, தெளிவாக விளக்கினீர்.

    புத்தகங்கள் புனையப் பட்டது பொ.மு.300 ௨00 வாகில், கதை புனையும் சம்பவக் கதைகள் பொ,மு. 2000 வாக்கிலானது.

    நீங்கள் பழைய ஏற்பாடு நியாயப் பிரமாணங்கள் பொ.மு.300 என சொல்வதை தமிழ் விக்கி 450 என்கிறது, அதாவது கதை நடந்து 1500 ஆண்டுகள் பின்னர்.
    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)
    மோசே இசுரயேல் மக்களை எகிப்திலிருந்து பாலைநிலம் வழியாக வழிநடத்தி வந்த காலம் கி.மு. சுமார் 1250. அப்போது அம்மக்கள் நாடோடிகளாக இருந்தார்கள். அவர்களுக்கென்று அமைப்புப்பெற்ற ஒரு வழிபாட்டிடம் இருக்கவில்லை. ஆனால், தோராவில் அத்தகைய கோவில் வழிபாட்டு முறைகள் மிக விரிவாகவும் நுணுக்கமாகவும் தரப்படுகின்றன. இத்தகைய வழிபாட்டு முறை கி.மு. 5ஆம் நூற்றாண்டில்தான் தொடங்கியது. இதன் அடிப்படையிலும், பிற வரலாற்றுச் சான்றுகளின் துணையோடும் தோரா (தொடக்க நூல், விடுதலைப் பயணம், லேவியர், எண்ணிக்கை, இணைச் சட்டம்) என்னும் நூல் தொகுதி கி.மு. ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்ததே என்பது அறிஞர் முடிபு.
    பழைய ஏற்பாடு புனையப் பட்ட விதம் - இதை தெளிவாக விளக்கவும்.

    பொய்யான 50 ஆண்டுக்கும் முன்பான தவறான மேம்போக்கு கருத்துக்களைக் கொண்டு வெற்று சமாதானங்களை சொல்லி செல்லலாம். ஆனால் முழுமையாக தெளிவாக நோக்கினால் என்ன் ஆகும். ஒரு சம்பவத்திற்கு ஏதோ ஒரு விளக்க்கம் தந்தால் ஆகுமா?

    பிறகு வம்பு, உங்கள் கட்டுரைக்கு பதிலோ விளக்கமோ இருந்தால் அவர் தளத்தில் தொடர்ந்து பதிக்கட்டுமே? எது உண்மையோ அது மக்களுக்குத் தெளிவாகும்

    ReplyDelete
  2. கிறிஸ்துவர்கள் பதில் என மழுப்பல்கள் சொல்லும்போது பல உண்மைகளை நீங்கள் விவரமாக எழுத என் போல பலருக்கும் உண்மைத் தெளிவு கிடைக்கிறது.

    நீங்கள் வலையில் வரும் கட்டுரைகளை விமர்சிக்கலாம், பதில் அவர்களும் தரலாம். அதை விமர்சிக்கலாம்.

    எது உண்மை என அனவரும் புரிந்து கொள்ளலாம்.

    விவாதம் என பீ.ஜே - ஜெர்ரி தாமஸ் விவாதத்தில் கிறிஸ்துவர்கள் ஒத்துக்கொண்டவை

    பைபிளில் ஆபாசம் உண்டு, அருவருப்பு உண்டு- முரண்பாடுகள் உண்டு-
    வரலாற்று பிழைகள் உண்டு-
    பைத்தியக்கார சட்டங்கள் உண்டு-
    அறிவியலுக்கு ஒவ்வாத காட்டுமிராண்டித்தனமான செய்திகள் கட்டளைகள்-
    ஆனால் என்ன குரானிலும் இவை உண்டு.

    இம்மாதிரி விவாதம் அவசியமில்லை. உங்கள் கட்டுரை தவறெனில் பதில் தரட்டும். நீங்கள் தேவை எனில் பதில் தாருங்கள். ஆனால் இவற்றின் விளைவு உங்கள் உண்மைத் தெளிவு கட்டுரை.

    முதல் 5 புத்தகங்கள் முழுமையும் பார்த்து சொல்ல வேண்டும், அதை விட்டு ஒரு சிறு சம்பவத்தை மட்டும் ஏன் இப்படி இருந்திருக்கலாமே என விளக்குவதானது என்பது அர்த்தமற்ற உளறல்.

    ReplyDelete
  3. உங்கள் பதிலைவிட - கருப்பையா விக்கி இணைத்தது மேலும் நன்றாகப் புரிய வைத்தது.

    மோசே எழுதியவை என சர்ச் சொன்னதை ஏற்றவன் நான். ஏன் உங்களை சாடி ஒரு பதிவு முன்பு போட்டேன். சாரி

    பைபிளை வரலாறா என்று பார்த்தல் நன்மையே

    ReplyDelete
  4. கருப்பையா அவர்களெ,
    வருகைக்கும் - விபரமான் பதில்களுக்கு நன்றி.
    மாயாண்டி, ஜார்ஜ் வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. //யூதக் கலைக்களஞ்சியம் தெளிவாக்குகிறது.
    ஆபிரகாம் - இசாக் கதை பற்றி யூதக் கலைகளஞ்சியம் சொல்வது
    ஆபிரகாம் - இசாக் கதை பற்றி யூதக் கலைகளஞ்சியம் சொல்வது
    //ஆபிரகாம் வாழ்வில்இரண்டுமுறை- மனைவியை தங்கை என்பது வாய்ப்பில்லை. அதைவிட இதே சம்பவம் மகன் இசாக்-ரெபெக்கா காலத்திலும் என்பது இவை நம்புதலுக்கு உள்ளவை அல்ல என்பது தெளிவாக்கும். இக்கதைகள் பிதாக்கள் மனைவிகள் அழ்கானவர்கள்- இஸ்ரேலின் யாவே- சிறு தெய்வம் பாதுகாப்பு பெற்று இருந்தனர் எனக் காட்ட எழுந்த கதையே.//
    Jewish Encyclopedia,
    "From the point of view of the history of culture these episodes are very instructive. But it is not very probable that Abraham would have run the risk twice. Moreover, a similar incident is reported in regard to Isaac and Rebecca (Genesis 34:6-11). This recurrence indicates that none of the accounts is to be accepted as historical; all three are variations of a theme common to the popular oral histories of the Patriarchs. That women were married in the way here supposed is not to be doubted. The purpose of the story is to extol the heroines as most beautiful and show that the Patriarchs were under the special protection of the Deity."//
    Dcoumentoary Hypothesis

    Many Bible stories like creation are repeated by various sources with in first five books and so same incident-story is repeated 3 times by various authors- but they turn conflicting.
    http://en.wikipedia.org/wiki/Documentary_hypothesis
    http://en.wikipedia.org/wiki/Biblical_Minimalism
    Jewish Encyclopedia must be more correct than to make your own assumption that 3 different events and all 3 times Patriarchs say wife as Sister.

    ReplyDelete
  7. நேர்மையாய் புதைபொருள் அகழ்வாய்வு உண்மைகளைவிட அரசியல் சதிகள் செய்ய் எழுந்த புத்தகத்தை நம்புவோர் அஸ்திவாரம் இல்லா கட்டடம் கட்டுவோர்.

    ReplyDelete
  8. நேற்று உங்கள் இமெயில் படித்தேன்; ஆதியாகமம் கதைப்படி ஆபிரகாம் - சாராள் வயதின் அடிப்படையில் முழு கதையின் அபத்தம் பற்றி படித்தேன்.

    அடுத்த கட்டுரையைப் பதிக்கவும்.

    ReplyDelete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete

'சிங்கம்' போன்ற படங்கள் ஆபத்தான செய்தியை அனுப்புகின்றன: பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி

   Films Like 'Singham' Send Dangerous Message: Bombay High Court Judge https://www.newspointapp.com/news/india/films-like-singham-s...