Sunday, May 11, 2014

ஆபிரகாம் - இயேசு கிறித்து - திருவள்ளுவர் வரலாற்று மனிதர்களா?

முகநூலில் ஒரு முகம்மதியர் ஆபிரகாம் பற்றிய நம் முன்னர் கட்டுரையை இட்டு கேள்விகள் எழுப்ப, கிறிஸ்துவர் ஒருவர் திருவள்ளுவர் வாழ்ந்த காலம் தெரியுமா, அப்படி வாழ்ந்தார் என ஏற்பதில்லையா என்றனர். நாம் மேலும் விரிவாகக் காண்போம். 

 ஆதியாகமம் 11:28 ஆரான் தான் பிறந்த நாட்டில் ஊர் என்ற கல்தேயர் நகரில் தன் தந்தை தெராகிற்கு முன்பே இறந்தான். 29 ஆபிராமும், நாகோரும் பெண் கொண்டனர். ஆபிராமின் மனைவி பெயர் சாராய். நாகோரின் மனைவி பெயர் மில்கா. மில்கா ஆரானின் மகள். மில்கா, இசுக்கா ஆகியோரின் தந்தை ஆரான். 

http://en.wikipedia.org/wiki/Chaldea    Chaldeans -கல்தேயர் -இப்பெயர்களே  பொ.மு. 1000- 600 இடையிலே தான். இன்னுமொரு கதை ஆபிரகாம் கதையில் - 
   இயேசு ஒரே நேரத்தில்                                                                                             தாய் குதிரை மற்றும் குட்டி மீது அமர்ந்து                                                                        ஜெருசலேம் வந்தார். 

ஆதியாகமம்24: 29-30 அவளுக்கு ஒரு சகோதரன் இருந்தான். அவன் பெயர் லாபான். அவள் சொன்னதையெல்லாம் அவன் கேட்டான். அவன் அவளது காதணிகளையும் கடகங்களையும் பார்த்துவிட்டு கிணற்றருகே ஓடினான். அங்கு கிணற்றருகில் ஒட்டகங்களையும், வேலையாளையும் கண்டான்.   31 அவனிடம், “ஐயா, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே உங்களை எங்கள் வீட்டிற்கு வரவேற்கிறோம். இங்கே வெளியே நீங்கள் நின்றுகொண்டிருக்க வேண்டாம். நீங்கள் இளைப்பாற ஒரு அறையை ஏற்பாடு செய்துள்ளேன். உங்கள் ஒட்டகங்கள் தங்கவும் ஏற்பாடு செய்துள்ளேன்” என்றான்.  32 ஆபிரகாமின் வேலைக்காரன் அந்த வீட்டிற்குப் போனான். லாபான் அவனுக்கு உதவினான். ஒட்டகங்களுக்கு உணவு கொடுத்தான்.

ஒட்டகங்களை மனிதன் பழக்கப்படுத்தி பயன்படுத்தியதே பொ.மு. 9ம் நூற்றாண்டில் தான். ஆபிரகாம், மோசே தாவீது காலத்திற்கு எல்லாம் பின்னே தான்.

வேதாகமத்தில் வரலாற்று

 முரண்பாடுகள் | (இங்கே)

அகழ்வாய்வு நிபுணர்கள்!



Camels appear in stories of early Jewish patriarchs in the Bible, even though it...See More

ஆதியாகமம்: 12:10 – 20 கர்ட்தர் தேர்ந்தெடுத்த கானான் தேசத்தில் பஞ்சம் வர எகிப்து செல்ல எகிப்து மன்னன் ஆபிரகாம் மனைவி சாராளை காதலோடு நோக்குவதைத் தடுக்க சாராளைத் ஆபிரகாம் தங்கை என்றாராம்.  ஆதியாகமம்20:1-11பிறகு மீண்டும் இதே கதை கேரார் நாட்டில். கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்குவிடமும் சாராள் தங்கை என்றதாக கதை  

                                                               
75 வயதில் சாராள் அழகில்                        90 வயதில் சாராள் அழகில்
 எகிப்து மன்னர் மயங்கியபோது            பிலிஸ்திய  மன்னர் மயங்கியபோது  இந்த இரண்டு கதையில் ஆபிரகாமின் மனைவி கிழவி, இரண்டாவது கதையின் போது மாதவிடாய் நின்றுபோனவள். ஆனால் ஒரு நாட்டு ராஜா கிழவியை காதலுடன் பார்த்ததாக் கேவலமான கதை.  

ஆபிரகாம் மகன் ஈசாக்கும் இதே கதை அதுவும் இதே  கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்குவிடமும் எனக் கதை ஆதியாகமம்26:1-6

ராஜா அபிமெலேக்கு என்பது பிலிஸ்தியப் பெயர். பொ.மு.12- 8 ஆம் நூற்றாண்டிற்குப் பின் வந்தவர்கள். ( ஆனால் ஆபிரகாம் பொ.மு.20ம் நூற்றாண்டுகாரர்)
ஆபிரகாம் – இசாக் கதை பற்றி யூதக் கலைகளஞ்சியம் சொல்வது -இந்தக் கதைகள் பிதாக்கள் கர்த்தரிடம் செல்வாக்குடையவர்கள்-பாதுகாப்பு பெற்றவர்கள்,  மனைவிகள் அழகானவர்கள் எனக்காட்ட புனையப்பட்ட கதைகள்
Jewish Encyclopedia,
“From the point of view of the history of culture these episodes are very instructive. But it is not very probable that Abraham would have run the risk twice. Moreover, a similar incident is reported in regard to Isaac and Rebecca (Genesis 34:6-11). This recurrence indicates that none of the accounts is to be accepted as historical; all three are variations of a theme common to the popular oral histories of the Patriarchs. That women were married in the way here supposed is not to be doubted. The purpose of the story is to extol the heroines as most beautiful and show that the Patriarchs were under the special protection of the Deity.”
இயேசு கிறித்து -  
சுவிசேஷக்கதைகளுக்கு வெளியே ஏசு என்பவர் பற்றி ஏதும் ஆதாரங்கள் கிடையாது. சுவிசேஷக் கதைகள் புனையப்பட்டது எப்போது.

பொ.கா. 30 அல்லது 33, சுவிசேஷக் கதைகளின் நாயகர் மரணம் அடைந்தார்.  இவர் சீடர்களுடன் ஒரு வருடத்திற்குக் குறைவாகவோ அல்லது இரண்டு வருடங்களோ 
இயங்கினார்.    ஏசு  கதை சொல்லும் முதல் புனையல் 65- 75,  அதாவது ஏசு மரணத்திற்கு  40 -45வருடம் பின்பு,  அன்றைய சராசரி ஆயுள் 42. முதல் சுவிசேஷக் கதைகள் புனைந்த போது கண்ட சாட்சிகள்மிகவும் குறைவு
கிறிஸ்துவப் புராணக் கதை நாயகன் இயேசு எந்த வருடம் பிறந்தார், பெற்றோர் யார் எனப் பார்ப்போம்.
இறந்த ஏசுவை, தாவீது ராஜாவின் பரம்பரையினர் என்று நம்பி, நிருபிக்க சுவி கதாசிரியர்கள், பழைய ஏற்பாடு துணை கொண்டு, அதையும் திரித்து, தன்னிச்சையாய்-தனித்தனியாக புனைய வந்ததே இப்பட்டியல்கள்.  யோசேப்பினால் கர்ப்பம்  இல்லை எனில் அவர் தாவீது பரம்பரையே இல்லை. 
மத்தேயு சுவிசேஷம் கதைப்படி பெத்லஹேமில் வாழ்ந்த யாக்கோபு மகன் ஜோசப் வீட்டில்பொ.மு.6ல் பிறப்பு.ஏரோது 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொல்வதாகக் கதை, தப்ப எகிப்து ஓடுவார் யாக்கோபு மகன் ஜோசப், பின்னர் திரும்பி வரும்போது யூதேயாவை ஏரோது மகனே ஆழ்வதால் நாசரேத் வந்ததாகக் கதை.  கலிலேயாவை ஆண்டதும் ஏரோது மகனே.
லுக்கா சுவிசேஷம் கதைப்படி   நாசரேத்தில் வாழ்ந்தஏலி மகன் ஜோசப் நாசரேத் வாழ்பவர்,பொ.கா.8ல் நடந்த சென்செஸ் போது பெத்லஹேம் வர, தங்க விடுதி கிடைக்காது, மாட்டுத்தொழுவத்தில் குழந்தை பிறந்ததாம். பின் ஜெருசலேம் சென்று சொந்த ஊர் திரும்பியதாகக் கதை. 
வாட்டிகன் போப்பரசரும் 2007ன் கிறிஸ்துமஸில் மத்தேயூ கதையை ஏற்று லூக்கா கதை மாட்டுத் தொழுவத்தை நீக்கினார்.
http://www.telegraph.co.uk/news/1572569/Vatican-nativity-does-away-with-the-manger.html 
இரண்டு சுவிகதைகளும் வெவ்வேறு கதாசிரியர்களால் வெவ்வேறு ஊர்களில் புனையப்பட்டன, இதில் ஒன்று, அதில் ஒன்று என இணைத்தால் சொல்பவர் மேலும் பல புது சுவிகதை உருவாக்கும் பைத்தியக்காரத்தனம் செய்வார்.
 இயேசு சீடர்கள் ஏசு கைதான போது என்ன செய்தார்கள்? 

மாற்கு 14: 45 யூதாஸ் இயேசுவிடம் வந்து அவரை முத்தமிட்டு “போதகரே” என்றான். 46 உடனே அவர்கள் இயேசுவின் மேல் கை போட்டுக் கைது செய்தனர்.47 இயேசுவின் அருகில் நின்ற ஒரு சீஷன் தன் வாளை உருவி இயேசுவைப் பிடித்தவனின் காதினை அறுத்தான். காது அறுபட்டவன் தலைமை ஆசாரியனின் வேலைக்காரன்.48 இயேசுவோ, “ஒரு குற்றவாளியைப் பிடிக்க வருவதுபோல நீங்கள் வாளோடும் தடிகளோடும் வந்துள்ளீர்கள். 49 நான் எப்போதும் உங்கள் மத்தியில் ஆலயத்தில்தானே உபதேசம் செய்து கொண்டிருந்தேன். அங்கே நீங்கள் என்னைக் கைது செய்யவில்லையே. எல்லாம் எழுதப்பட்டிருக்கிறபடி நடைபெற்றது” என்றார். 50 அவரது சீஷர்கள் அவரைவிட்டு விலகி ஓடிச் சென்றார்கள்.

51 ஓர் வாலிபன் இயேசுவைப் பின் தொடர்ந்து வந்தான். அவன் ஒரு மேலாடை மட்டும் அணிந்திருந்தான். அவர்கள் அவனையும் பிடித்து இழுத்தார்கள். 52 ஆனால் அவனோ மேலாடையைப் போட்டுவிட்டு நிர்வாணமாக ஓடினான். 

கதைப்படி இறந்தபின் மீண்டும் பழைய உடம்பில் உயிர் பெற்று எழுந்து வந்ததான ஏசு காட்சி கலிலேயவில் தான்.

மாற்கு 16: இப்போது சென்று அவரது சீஷர்களிடம் கூறுங்கள். பேதுருவிடம் கட்டாயம் கூறுங்கள். இயேசு கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார். உங்களுக்கு முன்னால் அவர் அங்கிருப்பார். உங்களுக்கு ஏற்கெனவே சொன்னபடி நீங்கள் அவரைப் பார்ப்பீர்கள்” என்றான்.

மத்தேயு 28:7உடனே அவரது சீஷர்களிடம் விரைந்து சென்று சொல்லுங்கள். ‘இயேசு மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து விட்டார். அவர் கலிலேயாவிற்குச் சென்றுகொண்டிருக்கிறார். அவர் உங்களுக்கு முன்னரே அங்கிருப்பார்.’ அங்கே நீங்கள் இயேசுவைக் காணலாம். இதோ நான் உங்களுக்குச் சொல்லி விட்டேன்” என்று கூறினான். 16 பதினொரு   சீஷர்களும் கலிலேயாவில் இயேசு கூறிய மலைக்குச் சென்றார்கள்.   17 மலை மீது இயேசுவை சீஷர்கள் கண்டு, வணங்கினார்கள். ஆனால் சில சீஷர்கள் அவர் உண்மையாகவே இயேசு என்று நம்பவில்லை.

சீடர்களுக்கு ஏசு முன்பே தான் கைதாவேன், தூக்குமரத்தில் தொங்க விடப் படுவேன் என்று சொல்லி இருந்தாராம் கதைப்படி. அத்தோடு இறந்தபின் மீண்டும் பழைய உடம்பில் உயிர் பெற்று எழுந்து காட்சி கலிலேயா மலையில் என்றும் தீர்க்கம் சொல்லி இருந்தாராம்.

மாற்கு 14: 28ஆனால் நான் இறந்த பிறகு மரணத்திலிருந்து எழுவேன். பிறகு நான் கலிலேயாவுக்குப் போவேன். நீங்கள் போவதற்கு முன் நான் அங்கிருப்பேன்” என்றார். 

மத்தேயு 26:32 ஆனால் நான் இறந்தபின், மீண்டும் மரணத்திலிருந்து உயிர்த்தெழுவேன். பிறகு கலிலேயாவிற்கு செல்வேன். நான் உங்களுக்கு முன்னே அங்கிருப்பேன்” என்றார்.

 இந்த தீர்க்கம் லூக்காவின் ஏசு சொல்லவே இல்லை, ஏன் எனில் லூக்காவின் ஏசு, ஈஸ்டர் ஞாயிறு அன்று ஜெருசலேமில் காட்சி பின் மேலுலம் அன்றே தூக்கி செல்ல்ப்படுகிறார். 

சீடர்கள் ஏசுவைப் புரிந்து கொள்ளவே இல்லை. ஆனால் மதம் பரப்புவோரின்படி ஏசு பழைய உடம்பில் மீண்டும் உயிரோடு வந்து காட்சி தந்தபின் சீடர்கள் தெளிவாகி, மதம் பரப்ப, சுவிசேஷங்கள் சீடர்கள் சொன்ன கதைகளின் அடிப்படையில் செவிவழிப் பாரம்பரியமாக வரையப்பட்டன. இயேசு சொன்னதையே புரிந்து கொள்ளாத சீடர்கள், அவர் சொன்னதை அப்படியே நினைவில் வைத்து இருந்தனராம். தெளிவான சிந்தையுள்ளோர் யாரும் இவ்வாறு சொல்வது உளறல் என ஏற்பர்.

மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில் விவிலிய விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்தகாலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ் அவர்கள்  "The Real Jesus" என்ற தன் நூலில் பின் வருமாறு சொல்லுகிறார்-The Conclusion usually (and I think rightly) drawn from their comparitive study, is that Gospel of Mark (or something very like it) served as a source for Gospel of Matthew 7 Luke, andthat two also had access to a collections of saying of Jesus (Conveniently labelled "Q"}  .....   Page -25. 
"Whereas Synoptic record most of Jesus ministry is located in Galilee,  John place most of it in Jerusalem and its neighbourhood." - Page-27 - THE REAL JESUS.
Bible Scholar  A.M.Hunter- ஸ்காட்லாந்தின் அபேர்தின் பல்கலைக் கழக புதிய ஏற்பாடு பேராசிரியர்ஹன்டர் பின்வருமாறுசொல்லுகிறார்- “If we had only Mark’ gospel we should infer that Jesus ministry was located in Galilee with one first and final visit to Jerusalem, and that the Galileen ministry began after Baptist John was imprisoned. 4th gospel takes a different view. Here the scene shifts backwards and forwards between Galilee and Judea during the first six chapters , from chapter 7 onwards the scene is totally laid in Judea and Jerusalem,(See Jn3:24 for Baptist John and Jesus).” –P 45, Works and Words of Jesus.  நம்மிடம் மாற்கு சுவிமட்டுமிருந்தால் நாம் இயேசு முழுமையாக சீடரோடு 
இயங்கியதுகலிலேயாவில் என்றும், -ஞானஸ்நானம் பெறவும் கடைசியாக   மரணத்தின் போது  மட்டுமே ஜெருசலேம் வந்தார்மேலும் -ஞானஸ்நானர்   யோவான் கைதிற்குப்பிறகு கலிலேயா இயக்கம் துவக்கினார் என்பதாகும்
நான்காவது சுவியோவேறுவிதமாகமுதல் ஆறு அத்தியாயங்களில் 
யுதேயாவிலும்  கலிலேயாவிலும் முன்னும்-பின்னும் இயங்கியதாகவும்;  ழாம்   அத்தியாயத்திற்குப் பின் முழுமையாக ஜெருசலேமிலும்   யூதேயாவிலும்   எனச்சொல்கிறார்யோவன்3:24- ஞானஸ்நானர்   யோவான் கைதிற்குப் முன்பே ஏசு இயக்கம் எனவும் காட்டும்.//

மாற்கு சுவிசேஷக் கதைகலிலேயாவைச் சேர்ந்த ஏசுயூதேயாவின் வனாந்திரத்தில்
வாழ்ந்த யோவானிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கும்ஏசு பிறப்புக்
கதைகள் கிடையாதுமேலே பார்த்தபடி ஏசுவிற்கு உடன்பிறந்த சகோதர சகோதரிகள்   உண்டு.  இவை மத்தேயு லுக்காசுவிசேஷங்களில்  முதல் ஓரிரு   அத்தியாங்களாக  உள்ளனஇவற்றை பைபிளியலில் குழந்தைப் புனையல்கள் எனப்படும்.இவை பற்றி  அமெரிக்காவின் கத்தோலிக்க பல்கலைக் கழகத்தின் புதிய கத்தோலிக்கக்  கலைக் களஞ்சியம்   கூறுவது  -  குழந்தைப் புனையல்கள்   என்பவை  பிற்காலத்தில் மிகைப் படுத்தப் பட்டவை என்பதில் எந்த   சந்தேகமும்   இல்லை, சர்ச்சின் அப்போஸ்தலர் கதைகள்-  யோவானிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கி ஈஸ்டர்  அன்று சொர்கம் சென்றார் என்பதோடு மட்டுமே ருந்தது.." 
//There seems to be no doubt that Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body of the Apostolic Catechesis, the content of which began with John the Baptist and end with Ascension.// Vol-14 Page- 695-New Catholic Encyclopedia.
இது பற்றிய கத்தோலிக்க பைபிள் விளக்க நூல்- இரு ஆர்ச் பிஷப் அங்கீகாரத்தோடு எழுதப்பட்ட நூலில் உள்ளதைப் பார்ப்போம் .  //The tradition of the existence of an Aramaic or Hebrew version of Matthew also generates more problem than it solves. .. Why does Papias say Hebrew, when Jesus spoke Aramaic? Did Papias have any special reasons for placing Matthew's Gospel before Marks? All these questions indicate that the ascription to Matthew the apostle and the tradition of an Aramaic or Hebrew version of Matthew involve too many problems for us place much reliance on them in interpreting the Gospel. // Page-863. Daniel J.Harrington. S.J. in "The Collegeville Bible Commentary"

வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II
ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் பு¨னெயப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.
திருவள்ளுவர்:

2ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர், அந்த நூலிற்கு அப்பெயர்  எல்லாம் நமக்கு சொல்வது திருவள்ளுவமாலை, அதில் ஒரு பாடல் தந்துள்ளோம்.  திருவள்ளுவமாலை:   உக்கிரப் பெருவழுதியார்
நான் மறையின் மெய்ப்பொருளை முப்பொருளா நான்முகத்தோன்
தான் மறைந்து வள்ளுவனாய்த் தந்துரைத்த - நூல்முறையை
வந்திக்க சென்னி வாய் வாழ்த்துக நல் நெஞ்சம்
சிந்திக்க கேட்க செவி  
இங்கு வள்ளுவப்பெருமானைப் படைப்புக்கடவுளான பிரம்மனாகக் கூறுகின்றார் உக்கிரப் பெருவழுதியார். நான்முகத்தோனாகிய பிரம்மதேவனே தன்னை மறைத்துக்கொண்டு இவ்வுலகில் வள்ளுவனாய்த்தோன்றி நான்கு வேதங்களின்  (ரிக், எசுா், சாமம், அதா்வணம் ) பொரு்ள்களை அறம், பொருள் இன்பம் எனும் மூன்றுபொருள்களாக இவ்வுலகுக்குத் தந்தான். இந்த நூலாகிய திருமுறையை என் தலைவணங்கட்டும்; என் வாய் வாழ்த்தட்டும்; என் நெஞ்சம் சிந்திக்க அதாவது, தியானிக்கடடும்; என் செவியானது கேட்டுக்கொண்டே இருக்கட்டும். 

இன்று யாருமே திருவள்ளுவரை தெய்வீகர் என்று சொல்வது கூடக் கிடையாது.
ஆபிரகாம் கதையின் அடிப்படை

ஆதியாகமம்15:18 அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, “எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள 19கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20 இத்தியர், பெரிசியர், இரபாவியர் 21 எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்” என்றார்.
உபாகமம்20:16 “உங்கள் தேவனாகிய கர்த்தர், உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளப் போகிற நகரங்களில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் கொன்றுவிட வேண்டும். 17 அங்குள்ள ஜனங்கள் இனங்களான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியவற்றை முழுமையாக அழித்துவிட வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் இதைச் செய்யக் கட்டளையிட்டுள்ளார்.  

  ஒரு நாட்டில் வாழ்ந்து வரும் மண்ணின் மைந்தரைக் கொன்று அன்னியரை குடிவைத்தர் என்னும் கொள்கையே கடவுள் விரோத அருவருப்பனாதாக உள்ளது.
இஸ்ரேல் சுற்றி எழுந்த அகழ்வாய்வுகள் பைபிள் புராணக்கதைகளை முழுமையாக தவறு என்று நிருபிக்கிறது. அரசியல் ஒற்றுமை ஏற்படுத்த பொ.ச.300-200 இடையே எழுந்தது தான் பழைய ஏற்பாடு என்னும் யூதர்களின் பைபிள். ஆபிரகாம் கதை வெற்று புனையல், அவ்வாறு ஒரு மனிதன் வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரமில்லை, அதிலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதெல்லம் தெளிவான சிந்தையுள்ளோர் யாரும் இவ்வாறு  யாரும் ஏற்க இயலாத வெற்று கற்பனை.

ஏசு யார்?  பெற்றோர் யார்? ங்கே இயங்கினார்? எத்தனை நாட்கள் சீடரோடு இயங்கினார்? எதிலுமே தெளிவு கிடையாது. ஆனால் தெய்வீகர் என ஏற்க வேண்டுமாம்.
ரோம் ஆட்சிக்கு எதிராக யூதர்களை ஒன்றிணைத்து உலகம் தன் வாழ்நாளில் முடியும் என எதிர்பார்த்து இறந்த மனிதர் ஏசு எனலாம்.

(திருவள்ளுவ்ர் எழுதிய திருக்குறளை கிறிஸ்துவர்கள் எவ்வளவு தூரம்
 அவமானப் படுத்த இயலுமோ அவ்வளவு செய்துள்ளனர், திருக்குறளிற்கு 20ம் நூற்றாண்டில் பொருந்தாத பல உரைகளை எழுதியதை வைத்து - திருவள்ளுவர் திருக்குறள் -தமிழர் பண்பாட்டு  நூல் இல்லை - கிறிஸ்துவ பைபிள் கதை நூலின் தழுவல் என புனைந்தனர். சர்ச் 100% காசில் தமிழ் கிறிஸ்துவத் துறை என ஆரம்பித்து பைபிள் போதனையால் தான் திருக்குறள் வந்தது, அதன் எழுச்சியே சைவம், வைணவம் என பல பிதற்றல் முனைவர் பட்டக் குப்பைகள் வழங்கப் பட்டுள்ளன.)


திருக்குறள் கடவுள் வாழ்த்து – இயேசு கிறிஸ்து




(திருக்குறள் ஈடு இணையற்ற தமிழ் நூல் உலகே போற்றுகிறது. கிறிஸ்துவர்கள் எப்போழுதும் போலே அருவருப்பாய் - திருக்குறளிற்கு உரிய உரைகளை மறுத்து, தன்னிச்சையாஅய் ஏனோ தானோ எனப் பொருள் தந்து- அதுவும் கத்தோலிக சாந்தோம் சர்ச்சும், ப்ரோட்டஸ்டன்ட்  கல்லூரியும் இணைந்து பல நூல்கள் வெளியிட்டு, பின் தானே சர்ச் காசில் கிறிஸ்துவத் தமிழ் துறை என ஒன்று நிறுவி அதில் பைத்தியக்காரத்தனமாய் குறளிற்கு பொருள் தந்து PHD முனைவர் பட்டம் தந்துள்ளன. 


தாமஸ் வந்து கிறிஸ்துவம் சொல்லி தந்தார் அதில் குறள் வந்தது என்பதற்கு எவ்விதமான ஆதரமும் தரவில்லை. எனவே குறளை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.)

15 comments:

  1. சகோதரி தேவப்பிரியாவுக்கு,

    கீழுள்ள முகவ‌ரியில் ஒரு மறுப்பு எழுதியுள்ளேன்... உங்கள் விளக்கம் தேவை...

    http://rakthasaatchi.blogspot.in/2014/05/camel-in-bible-tamil.html

    ReplyDelete
  2. இதற்காவது பதில் கொடுங்கள், இன்னொரு மறுப்பு,

    http://rakthasaatchi.blogspot.in/2014/05/thiruvalluvar-jesus-historicity.html

    ReplyDelete
  3. ரத்தசாட்சியின் கட்டுரையைப் படித்தேன், நீங்கள் இணைப்பு தந்துள்ளீரே, உங்களையும், இஸ்ரேல் ப்ராங்கிஸ்டன் இருவரையும் திட்டுவதையே கட்டுரையாகக் கொண்டுள்ளார். ஆனால் பேராசிரியர் ப்ராங்கிஸ்டன் பரவலாக ஏற்று ஆய்வுகள் முன் நோக்கி செல்வது அவருக்குத் தெரிவதில்லை. தெளிவாக கிடைத்த பொருட்களின் கார்பன் - 14 ஆய்வு முடிவிகளே முக்கியம், படங்கள், ஓரிறு பொம்மைகள் காலத்தை நிர்நணியிக்காது என்பதை உணரவில்லை. இவர் போலே பல கட்டுரைகள் பைபிளைக் காப்பாற்ற மழுப்பலாளர் புனைந்து வருவதை தமிழ்படுத்தி சப்பைக் கட்டி உள்ளார். சில இணைப்புகள் இருந்தாலும் எல்லாமே மழுப்பல் வகை நேர்மை ஆய்வு வகை அல்ல. பாவம் பைபிளையும் கர்த்தரையும் காக்கும் வேலை அவருக்கு

    ReplyDelete
    Replies
    1. மழுப்பாளர் நானா இல்லை சுலைமானா (தேவப்பிரியா) என்பது அக்கட்டுரை வாசித்தால் தெரியும்...

      தேவப்பிரியா அந்த பக்கம் வரவே இல்லையே.. ஏன்?

      இரண்டாம் இணைப்பான திருவள்ளுவர் கட்டுரைக்கு உங்களிடம் ஒரு பதிலையும் காணோமே! ஏன்?

      சுலைமான் அவர்களே, கார்பன் டேடிங், பொம்மைகள் அது இதுனு சொல்லி குழப்பாதீர்கள்....

      நீங்கள் சொன்னதை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் தான் ஒட்டகங்கள் பழக்கப்படுத்தப்பட்டது கி.மு 2500 ஆண்டுகளுக்கு முன்பு என ஆய்வாளார்கள் சொன்னார்களா?

      கார்பன் டேடிங் முறையிலேயே ஒட்டகங்களுக்கு கி.மு 27ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஆதாரம் கிடைத்துள்ளது, ஒட்டக பாலையும், மயிரையும் மெசப்பொத்தோமியர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது. எனவே "கார்பன் டேடிங்" என கதைகளை விடாதீர்கள்...

      அதோடு தேவப்பிரியாவை அந்த கட்டுரையில் நான் எதுவும் திட்டவில்லை, இது தேவப்பிரியாவின் மேல் சிம்பத்தி உண்டாக்க நீங்கள் (சுலைமான் அல்லது தேவப்பிரியா) செய்த வேலை. நீங்கள் சரித்திரத்தை ஆராயவில்லை என்று தான் சொல்லியுள்ளேன், ஏன் நீங்கள் என்னை "மழுப்பாளர்" என சொல்லவில்லையா...?

      என் தளத்தில் வெளியிட்டுள்ள ஒட்டகம் குறித்த கட்டுரையையும், திருவள்ளுவர் குறித்த கட்டுரையையும் வாசித்தால் "மழுப்பாளர்" நானா நீங்களா என்பது தெரியும்....

      இதுவரை அங்கு வெளியிட்ட எந்த கட்டுரைக்கு நீங்கள் பதில் சொன்னீர்கள்....? என்னை மழுப்பாளர் என்று சொல்வதைத் தவிர வேறென்ன செய்தீர்கள்...? அதற்கெல்லாம் நான் வருந்தபோவதில்லை, என்னை எவ்வளவு வேண்டுமானாலும் கேவலப்படுத்திக் கொள்ளுங்கள்...

      என் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரைகளைப் படிப்பவருக்கு உண்மை தெரியும்...

      http://rakthasaatchi.blogspot.in/2014/05/camel-in-bible-tamil.html

      http://rakthasaatchi.blogspot.in/2014/05/thiruvalluvar-jesus-historicity.html

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  4. சுலைமான் சரியே. அப்பாலஜி எழுதுவோர் என்ற சொல்லிற்கு தமிழ் சொல் தான் மழுப்பலாளர்.

    ReplyDelete
    Replies
    1. அப்படி என்றால் அந்த பெயர் உங்களுக்கு தான் நன்றாக பொருந்தும்... எப்பொழுது ஒட்டகங்கள் காலம் என்ன என்பது தெளிவாக அம்பலமான பிறகும் சமாளிக்க ஆரம்பித்துவிட்டீர்களோ அதிலிருந்தே இது தெளிவாகிறது... ஒட்டகங்களுக்கு என்ன பதில்?

      சகோதரி தேவப்பிரியா அவர்களே, அபாலஜி எழுதுவது என்றால் கேவலமான செயல் அல்ல, பல நன்மைகளுக்கும் அது காரணமாக இருந்திருக்கிறது.

      டென் டால் ஸ்டீல் கிடைப்பதற்கு முன்பு வரை, தாவீது என்ற ஒரு நபரே இல்லை என சொல்லி வந்தார்கள். அப்பொழுது பாவப்பட்ட நாங்கள் தான் அபாலஜி எழுதி வந்தோம்.

      இப்பொழுது தாவீது வாழ்ந்தார் என்பதை ஒப்புக் கொண்டு, சிறு கிராமத் தலைவர் என்ற அளவிற்கு சரித்திரம் தெளிவாகியுள்ளது. இன்றும் அபாலஜி எழுதப்பட்டு வருகிறது... இப்பொழுது மீண்டும் ஜெருசலேமிலும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்த அகழ்வாராய்ச்சி தடயங்கள் லேசாக கிடைக்க ஆரம்பித்துள்ளன. சாலமோன் சுவர்களை எழுப்பி இருக்கலாம் என பல அகழ்வராய்ச்சி ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்ள ஆரம்பித்துவிட்டனர், பின்கஸ்டீனையும் சேர்த்து... எனவே, அப்பாலஜிகளைக் கேவலமாக கருதாதீர்கள்... ஆய்வாளர்கள் சொல்லிவிட்டார்கள் அதுவே போதும் என அன்றைய அபாலஜியாளர்கள் சும்மா உட்கார்ந்து கொண்டிருந்தால் இன்றுவரை தாவீது என்ற நபரே இல்லாமல் போயிருப்பார்.

      எனவே, அடுத்தவர்களை கேலவடுத்துவதை நிறுத்திவிட்டு, கண்ணியமாக வரலாற்றை ஆராயும் நோக்கில் எங்கள் தரப்பில் நாங்கள் வைக்கின்ற வாதங்களுக்கு பதிலளிக்க முயலுங்கள்... இனியாவது அப்படி நடந்து கொள்வீர்கள் என கருதுகிறேன்.

      Delete
    2. நண்பரே மழுப்பலாளர் எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் நேர்மையான முறையில் ஆராய்ச்சி மறுப்புகளும். தெளிவாக வீட்டு கொட்டிலில் ஒட்டகம் வைத்தல் எனில் இஸ்ரேலில் ஒட்டகம் எலும்புகள் பரவலாக கிடைக்க வேண்டும், ஆனால் பொ.மு. 930க்கு பிறகு தான் எனத் தெளிவாக இஸ்ரேல் டெல்-அவிவ் பல்கலைக் கழக ஆய்வு சொல்வதன் தமிழ் இணைப்பு தரப்பட்டது, பின்பு ஆங்கிலமும் இணைக்கப்பட்டது. நீங்கள் தான் படம் போட்டு சமாளிக்கீறிர்கள்.

      பாரசீக ஆட்சி முடிந்து திரும்பி வந்தபின் தான் பழைய ஏற்பாடு கதைகள், அரசியல் ஒற்றுமைக்காக எழும்பியது என்பது நடுநிலையாளர் அனைவரும் ஏற்கும் கருத்து, அது பைபிளே ஏற்கிறது என்பது அடுத்த கட்டுரையில் வர, அதன் முன் எல்லையில் பொ.மு.600 என சமாளிப்பு உங்களிடம் தான்.

      அவ்வப்போது கிடைக்கும் புதைபொருள் ஆய்வுகளை, பன்னாட்டு பல்கலைக் கழகம் ஏற்பதை நாமும் ஏற்கிறோம்.

      Delete
  5. நன்றி சுலைமான் மற்றும் ரக்த சாட்சி. உங்கள் கேள்விகளுக்கு பதிலாகத்தான் மற்ற கட்டுரைகள் எழுதப்படுகின்றன.

    பழைய ஏற்பாடு - நியாயப் பிரமாணங்கள் உருவான கதை
    2 இராஜாக்கள்22:8, நெகேமியா 8: 3 இவற்றிற்கு அர்த்தம் கொடுங்கள்.

    மேலும் உங்கள் பதில் மட்டும் அல்ல பல்வேறு மழுப்பலகள் இணையத்தில் உள்ளவை, - http://www.biblequery.com/
    மற்ற புத்தகங்களில்- அந்த மழுப்பல்கள் எவ்வளவு பொய் என்பதை உணர்ந்து தான் நான் கட்டுரைகள் தருகிறேன். மத்தேயுவில் ஒரு அத்தியாயம், பிறச்கு லூக்காவை ஒரு அத்தியாயம் என இணத்து நீங்கள் எழுதுவது நீங்கள் உருவாக்கும் புது சுவி ஆகும். இவை ஒவ்வொன்றும் வேறு ஊர்களில் எழுதப்பட்டவை. எனவே ஏதோ ஒரு வசனத்தைக் கொண்டு ஒரு பதில் கொடுத்தால் போதும் எனப் பார்க்கின்றீர்கள். அதே வகை சமாதானம் வேறு இடத்தில் முடிய்மா எனவும் பார்க்க வேண்டும். பிறகு மொத்த பைபிளும் அர்த்தமற்றதாகிவிடும். அதுமட்டுமல்ல எந்த பைபிள் எந்த சுவடியினை பிரதானமாக கொண்டு மொழிபெயர்த்தல் என்பது வரைப் பார்க்கிறேன்..

    எனக்கு மத நம்பிக்கைகள் கிடையாது, வரலாற்று உண்மையை மட்டுமே தேடுகிறேன்.

    உங்கள் கட்டுரைகள், நான் இன்னும் தெளிவாக எழுத வேண்டும் எனக் காட்டுகிறது. திருவள்ளுவர்- ஏசு ஒரு நீண்ட கட்ட்ரை வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. அட கடவுளே,
      போதும் அம்மா, நீங்கள் எத்தனைக் காலத்திற்கு இதே வேலையை செய்வீர்கள்...?

      முதலில் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்...

      இயேசு சரித்திர நபரா என்று நான் வெளியிட்ட கட்டுரையில் 12 கேள்விகளைக் கேட்டேன், பதில் சொல்கிறேன் என சொல்லிவிட்டு புது கேள்விகளைக் கேட்டு போனீர்கள்... அதற்கும் நான் அங்கு பதில் பதித்து வருகிறேன்...ஆனால் நீங்கள் சொன்ன வார்த்தையை காப்பாற்றவில்லை.

      என்னிடம் கேள்விக் கேட்க உங்களுக்கு முழு உரிமை உள்ளது, ஆனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் எங்களுக்கு கேள்விக்கு பதில் சொல்லாமல் புது கேள்விகளை மட்டும் தருவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறீர்கள். விளையாடியது போதும்... நான் பதில் சொல்வேன், ஆனால் நீங்கள் முதலில் என் பக்கம் வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும்... நீங்கள் எங்களது எந்த‌ கேள்விக்கும் பதில் அளிக்காத பட்சத்தில் எங்களிடம் புதுக் கேள்விகளைக் கேட்கும் உரிமை இல்லை.

      // எனக்கு மத நம்பிக்கைகள் கிடையாது, வரலாற்று உண்மையை மட்டுமே தேடுகிறேன்.//

      அதை எல்லா மதத்திலும் தேட வேண்டுமம்மா... கிறித்தவம் இன்றுள்ள நம்பிக்கைகள் பலவற்றை விட வரலாற்றுச் செரிவில் உயர்ந்தது.... நாத்திகன் என்பவன் எல்லா மதங்களையும் தான் இழிவாகக் கருதுவான், குறிப்பிட்டு கிறித்தவம், இஸ்லாம் என்ற சில மார்க்கங்களை மட்டும‌ல்ல... சரி, என்னமோ இருந்துட்டு போவுது...

      //உங்கள் கட்டுரைகள், நான் இன்னும் தெளிவாக எழுத வேண்டும் எனக் காட்டுகிறது. திருவள்ளுவர்- ஏசு ஒரு நீண்ட கட்ட்ரை வருகிறது//

      இங்க பாருங்க, திருவள்ளுவர் பற்றி கேட்டுள்ள கேள்விகளுக்கு முதலில் தெளிவாக பதில் அளியுங்கள்... அந்த கட்டுரைக்கு சம்பந்தமில்லாத எஸ்றா கதை, ஏசாயா கதை என கண்டதையும் எடுத்துவிட்டு குழப்பி வைக்க வேண்டாம்,

      முதலில் கீழுள்ள தொடுப்பில் உள்ள சந்தேகங்களுக்கு மட்டும் தனியாக ஒரு மறுப்பு எழுதுங்கள்.... (அதன் பின்பு நீங்கள் ஏளனம் பேச விரும்பும் அத்தனை கதைகளையும் தனிக் கட்டுரைகளாக எழுதிக் கொள்ளவும்)

      http://rakthasaatchi.blogspot.in/2014/05/thiruvalluvar-jesus-historicity.html

      Delete
  6. இந்த ஆள் என்னமோ ஏசுவைப் பற்றி நம்பிக்கையான தகவலகள் உள்ளது மாதிரியும் ஆபிரகாம காலம் என ஒன்று உள்ளது என நம்பி பல உளறல்களை வைத்து விட்டு, நாலு படம் போட்டு, அர்த்தமில்லா அப்பலொஜி இணைப்புகளைக் கொடுத்து தன் மூட நம்பிக்கைகளை வாந்தி எடுத்தால் அதற்கு பதில் தாருங்கள் என ஏன் புலம்புகிறார்.

    யோவான்6: 35 இயேசு அவர்களிடம், ' வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது.
    6:48 வாழ்வுதரும் உணவு நானே.49 உங்கள் முன்னோர் பாலைநிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர்.50 உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கிவந்த இந்த உணவே.

    ஏசு தான் தெய்வீகர் எனில் ஒரு கிறிஸ்துவர் கூட மரணம் அடைந்திருக்க முடியாது.
    இது நடந்தால் மட்டுமே புதிய ஏற்பாடு பழைய ஏற்பாடு இவைகளின் வரலாற்று தன்மைபற்றி பேச முடியும்.
    நீங்கள் செய்யும் பணி மகத்தானது. அன்னியர் கட்டுக்கதைகளை இங்கே பரப்பும் சர்ச்களின் கதைகளின் தன்மையை தெளிவாக பொய் என நிருபிக்கும் பணி தொடரட்டும்.
    சுரேஷ்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  7. இது வரலாற்று உண்மைகளை பைபிள் கதைகளொடு பொருத்தி எழுதும் தளம், யாரும் பதில் கொடுக்கலாம் எனவே இங்கு அனானிகளும் அனுமதிக்கப்பட்டது, அனானியாக சுரேஷ் பதிவிற்கு மேலும் சில அனானி பதிவு தகுதி இல்லாத சொற்களை பயன்படுத்தி வர, அனானி வழி நீக்கப்பட்டது, இங்கே தகுதி இல்லாத சொற்களை பயன்படுத்தும் பதிலுரைகள் நீக்கப்படும். வரலாறு, பைபிளியல் பற்றி பன்னாட்டு பல்கலைக் கழகங்கள் ஏற்கும் ஆதாரத்தோடு பதில் தாருங்கள், இத்தளம் ஆய்வு தவறு எனில் மாற்றிக் கொள்ளும். ஆனால் தனி மனித தாக்குதலோ, பிற மதங்களை இழுத்தோ பதில் வந்தால் நீக்கப்படும். நீங்கள் உங்கள் பதிவில் திட்டுவது, சாபம் தருவதை எல்லாம் போட்டு எழுதி இணைப்பை மட்டும் கொடுங்கள். அனைத்து விஷயங்களுக்கும் அடுத்த கட்டுரைகளில் பதில் தரப்படும். ஆனால் வெற்று மழுப்பலாளர்கள் கூறி அவை எல்லாம் அர்த்தமற்ற சமாளிப்பு என பல்கலைக் கழகங்கள் தெளிவாக நிராகரித்ததை எல்லாம் சுட்டி, ஷூவிற்கு காலை வெட்டும் பதில்களுக்கு நேரடி பதிலைவிட அடுத்த கட்டுரைகளே தெளிவாக்கும்.

    ReplyDelete
  8. மிக அருமை, பழைய ஏற்பாடு கதைகள் புனையப் பட்டது கி.மு.300 - 200 வாக்கில்.

    ஆனால் ஆபிரகாம் - மோசே கதைகள் 2000- 1200 வாக்கிலானது.

    வெற்று புனையல்கள்

    ReplyDelete

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா