மனைவி தற்கொலை முயற்சி பாதிரியார் மீது வழக்கு
Thanks-Vedam Vedaprakash
செம்பனார்கோவில், : செம்பனார்கோவில் அடுத்த பரசலூர் மகாராஜபுரத்தை சேர்ந்த பீட்டர் மகன் ஜான்ஞானபிரகாஷ் (31). பாதிரியார். இவரது மனைவி இளவரசி(22). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். கடந்த ஒரு வருடமாக கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் இளவரசிக்கு ஜான்ஞானபிரகாஷ் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். இதுபற்றி கணவரிடம் இளவரசி கேட்டபோது, உன்னை பிடிக்கவில்லை என்று கூறியதாக தெரிகிறது.





இதனால் அதிர்ச்சியடைந்த இளரவசி, தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றினர். பின்னர் இதுபற்றி போலீசில் இளவரசி புகார் செய்தார். அதில் தனது கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறியுள்ளார். இதையடுத்து ஜான்ஞானபிரகாஷ், அவரது தாய் திலகவதி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment