Sunday, February 16, 2025

ஈஷா மையம் விதிமீறல் இருப்பது இப்போது தான் தெரிய வந்ததா?' -உச்ச நீதிமன்றம்

 'உங்கள் கண்முன் தானே ஈஷா மையம் கட்டப்பட்டது :விதிமீறல் இருப்பது இப்போது தான் தெரிய வந்ததா?'

நமது சிறப்பு நிருபர்: பிப் 15, 2025

The judge also questioned the basis of the original show cause notice, which addressed construction from 2006 to 2014. "How do you say a yoga centre is not an educational institution? Your only legitimate cause can be if an institute is not complying with the parameters of maintaining a sewage plant … you have a right to take action,” the bench said, adding that there was only one line in the High Court order that quoted the TNPCB as saying that the sewage plant is not properly functioning. “Your show cause notice is completely misconceived. Go issue a show cause notice, make sure that the sewage plant or environmental issues are complied with … but you can't be allowed to demolish construction, which with your open eyes was raised [between 2006 and 2014]. It is a construction running into lakhs of square yards,” the bench said.

 உங்கள் கண்முன் தான் ஈஷா யோக மையம் கட்டப்பட்டது. இத்தனை ஆண்டுகள் கழித்து, இப்போது வந்து விதிமீறல் இருப்பதாக ஏன் கூறுகிறீர்கள்' என, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்விகளை எழுப்பி உள்ளது.

கோவை மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி கட்டப்பட்டுள்ள ஈஷா யோகா மையத்தில், கட்டுமானங்களை மேற்கொண்டதில் விதிமீறல்கள் இருப்பதாகக் கூறி, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இந்த நோட்டீசுக்கு எதிராக ஈஷா யோக மையம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இரண்டு ஆண்டுகளுக்கு முன், நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது.

இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், '637 நாட்களுக்குப் பின் இந்த விவகாரத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது ஏன்? உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு அதிகாரிகளை யார் தடுத்தது; எதற்காக இவ்வளவு தாமதம். இந்த தாமதமே பல சந்தேகங்களை எழுப்புகிறது' என, கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், 1.25 லட்சம் சதுர மீட்டர் அளவுள்ள நிலத்தில் ஈஷா மையம் அனுமதி இன்றி கட்டடங்களை கட்டி இருப்பதாக வாதங்களை முன் வைத்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் கூறியதாவது: உங்கள் மனுவில், ஈஷா யோகா மையம் கல்வி நிலையம் இல்லை என்று குறிப்பிடுகிறீர்கள். எந்த அடிப்படையில் இதைக் கூறுகிறீர்கள்.

கல்வி நிறுவனங்களுக்கான வரைமுறைகளுக்கு உட்பட்டு அவர்கள் செயல்படவில்லை என்றால், நீங்கள் தாராளமாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்; ஆனால் அதை விடுத்து, கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பை ஒழுங்காக அமைக்கவில்லை என்பது போன்ற காரணங்களை எல்லாம் தெரிவிப்பதை ஏற்க முடியாது.

உங்கள் கண்முன் தானே ஈஷா யோக மையம் கட்டப்பட்டது. அந்த கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிந்து விட்டன.

இப்போது, அது ஆபத்து விளைவிக்கக் கூடியது என சொல்கிறீர்கள். அதை நாங்கள் எப்படி ஏற்பது? பசுமைப் பகுதி குறைவாக இருக்கிறது அல்லது வேறு ஏதேனும் பிரச்னை என்றால், அதை சரி செய்ய பாருங்கள்.

உங்கள் கண் முன்பாகவே கட்டி எழுப்பப்பட்ட கட்டடத்தை திடீரென நீங்கள் இடிக்கக் கேட்பதால், அதை அனுமதிக்க முடியாது. ஆரம்பத்திலேயே விதிமுறைகள் மீறி இருக்கிறது எனக் கூறாமல், இப்போது வந்து இந்த காரணங்களை நீங்கள் கூறுவது ஏன்?இவ்வாறு நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்

தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இது தொடர்பாக கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கேட்டார்.

இதன்பின், ஈஷா யோகா மையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 'நாட்டிலேயே மிகவும் சிறப்பான யோகா பயிற்சி மையமாக ஈஷா தான் செயல்படுகிறது.

'மொத்த கட்டுமானப் பகுதிகளில், 80 சதவீத இடம் பசுமை பகுதிகளாக பராமரிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் நீதிபதிகளை ஈஷா மையத்திற்கு அழைத்துச் சென்று காட்டவும் தயாராக இருக்கிறோம்' என்றார்.

மேலும் சிவராத்திரி உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ளதால், வழக்கின் விசாரணையை அதற்கு பின் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை ஏற்று, வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

- புதுடில்லி சிறப்பு நிருபர் -

ஈஷா மையத்துக்கு எதிராக 2 ஆண்டு கழித்து மேல்முறையீடு ஏன்? - தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

புதுடெல்லி: சுற்றுச்சூழல் அனுமதியின்றி கட்டுமானங்களைக் கட்டியுள்ளதாக ஈஷா யோகா மையத்துக்கு எதிராக 2 ஆண்டுகள் கழித்து, தமிழக அரசு மேல்முறையீடு செய்திருப்பது ஏன் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் சுற்றுச்சூழல் துறையின் அனுமதியன்றி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி, தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பிய நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2022 டிசம்பரில் ரத்து செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கே.சிங் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது ஈஷா யோகா மையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி, “ஈஷா யோகா மையத்தில் உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து அனைத்து அனுமதிகளும் முறையாகப் பெறப்பட்டுள்ளன.

அதேநேரம், சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை என அனுப்பப்பட்ட நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே ரத்து செய்துவிட்டது. கல்வி நிலையங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், யோகா கற்றுக்கொடுக்கும் ஈஷா மையத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை. தற்போது தமிழக அரசு வேறு ஏதோ காரணங்களுக்காக இந்த மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது” என்றார்.

சந்தேகத்தை எழுப்புகிறது: அப்போது நீதிபதிகள் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான பி.எஸ்.ராமனிடம். “தமிழக அரசு 2 ஆண்டுகள் கழித்து இந்த மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருப்பதன் நோக்கம் என்ன, உரிய நேரத்தில் உச்ச நீதிமன்றத்தை அணுகாதது ஏன். அரசின் இந்த செயல்பாடுகள் சந்தேகத்தை எழுப்புகிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் முறையாக செயல்படவில்லை எனக்கூறி மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் பிறப்பித்து இருப்பது உரிய காரணமாக தெரியவில்லை. சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உட்பட்டு அங்கு கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு எந்த தடையும் இல்லை.

அதேநேரம் தற்போது அங்கு சின்னதாக குடில் அமைக்கப்படவில்லை. லட்சக்கணக்கான சதுர அடியில் உங்கள் கண்முன்பாகவே கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. தற்போது அதை இடிக்க வேண்டுமென்றால் அதை எப்படி அனுமதிப்பது, யோகா என்பது கல்வி மையம் இல்லையா, அங் குள்ள கட்டுமானங்கள் மனிதர் களுக்கு அபாயம் விளைவிக்கக் கூடியது என நீங்கள் கூறவில்லை.

மாறாக அங்கு சுற்றுச் சூழலைப் பேண இயற்கையான ஒளி, காற்று, பசுமைவெளி இருக்கிறதா என்றும், கழிவுநீர் மையம் முறையாக செயல்படுகிறதா என்பதை அதிகாரிகள் உறுதி செய்திருக்க வேண்டும்” என்றனர்.

அதற்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரான பி.எஸ்.ராமன், “இரு துறைகளுக்கிடையே நிலவிய குழப்பம் காரணமாக மேல்முறையீடு செய்ய காலதாமதம் ஆனது. கடந்த 2012-ம் ஆண்டு ஈஷா யோகா மையத்துக்கு சுற்றுச்சூழல் துறையின் தடையில்லா சான்று பெற வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் கட்டுமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு அவர்கள் கல்வி மையம் எனக்கூறி விலக்கு கோருகின்றனர்” என்றார்.

அப்போது ஈஷா யோகா மையம் தரப்பு மூத்த வழக்கறிஞரான முகுல் ரோஹ்தகி, "நாட்டிலேயே மிகச்சிறந்த யோகா மையமான இங்கு தற்போது 20 சதவீத இடத்தில் மட்டுமே கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மீதமுள்ள 80 சதவீதம் பசுமை வெளியாக விடப்பட்டுள்ளது. பிப்.26 அன்று மாசி மகா சிவராத்திரி விழா ஈஷா யோகா மையத்தில் நடைபெறவிருப்பதால் அதன்பிறகு இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்” என்றார்.

அதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளனர்.

No comments:

Post a Comment

சசி தரூர்: ‘சட்டவிரோத இந்திய குடியேறிகளை நாடு கடத்த அமெரிக்காவுக்கு முழு உரிமை உண்டு.

Shashi Tharoor: ‘US is entirely entitled to deport illegal Indian immigrants… I’m only unhappy they sent them in military plane’ Senior Cong...