Tuesday, March 18, 2025

ஔரங்கசீபின் காசி சிவாலய இடிப்பும் – அதற்கு உறுதுணையாக தேசத் துரோகக் காங்கிரஸ் கும்பல் இட்டுக் கட்டியப் பொய்களும் ! “ - பகுதி 1 // “ முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் ( Muhi al-Din Muhamm

 

காசி – 7. K.Kandasamy Sir

  ஔரங்கசீபின் காசி சிவாலய இடிப்பும்அதற்கு உறுதுணையாக  தேசத் துரோகக் காங்கிரஸ் கும்பல் இட்டுக் கட்டியப் பொய்களும் ! “ - பகுதி  1

// “ முகலாயப் பேரரசர் ஒளரங்கசீப் ( Muhi al-Din Muhammad (c. 1618 – 3 March 1707), commonly known as Aurangzeb (  'Ornament of the Throne'), was the sixth Mughal emperor, reigning from 1658 until his death in 1707. His regnal name is Alamgir I ( 'Conqueror of the World'), which derived from his title, Abu al-Muzaffar Muhi-ad-Din Muhammad Bahadur Alamgir Aurangzeb Badshah al-Ghazi ) வங்காளத்தின் மீது படையெடுப்பு நடத்த வேண்டிய நிலையில் அவர் வாரணாசி நகரத்தை அடைந்தார் . பேரரசருடன் அவருடைய நட்பில் இருந்து ஹிந்து அரசர்களும் உடன் வந்து இருந்தனர் . வாரணாசி ஸ்ரீ காசி விஸ்வநாதப் பெருமானை வழிபாடு செய்ய ஹிந்து அரசர்களுடன் கூட வந்திருந்த அரசிகளும் , மற்ற ராஜக் குடும்பத்துப் பெண்களும் விரும்பினர் . ஹிந்துக்களின் வழிபாட்டு உரிமையைப் போற்றியப் பேரரசர் ஒளரங்கசீப் அனுமதி கொடுத்ததும் , உடனே அரசியரும் , பெண்களும்  மட்டும் சிவாலய வழிபாட்டுக்குச் சென்றனர் (  இந்த வழிபாட்டுக்கு ஏன் அரசர்கள் போக விருப்பம் தெரிவிக்கவில்லைஎன்பது முதல் வினா ) . வழிபாடுகளை முடித்து விட்டுத் அனைத்துப் பெண்களும் திரும்பிய நிலையில் குஜாரத் பகுதி கட்ச் தேச இராணி ( Rani of Kutch ) மட்டும் திரும்பவில்லைஅவரைக் காணவில்லை என்ற கூறப்பட்டது . அந்த இராணியை எங்குத் தேடினும் அகப்படவில்லை .  இதனைக் கேள்வியுற்ற ஹிந்துக்களின் நலன் நாடும் பேரரசர் உடனே இராணுவ வீரர்களை எல்லா இடத்திலும் அனுப்பி இராணியைத் தேடிக் கண்டுபிடிக்க உடனே ஆணை பிறப்பித்தார் . அந்த இராணுவ வீரர்கள் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தேடிய பொழுது , ஒரு ரகசிய பாதாள அறையைக் கண்டுபிடித்தனர் . அந்த நிலவறையில்  நுழைந்து பார்த்தபொழுது அந்த இராணுவ வீரர்கள் ஒரு பயங்கரக் காட்சியைக் கண்ணுற்றனர் . காணாமல் போன இராணி தன்னுடைய நகைகள் அனைத்தையும் இழந்து அழுது கொண்டு இருந்தாள் . இராணி அமர்ந்த இடம் , ஸ்ரீ காசி விஸ்வநாதர் இலிங்கத் திருமேனி இருக்கும் புனிதமான இடத்தின் நேர் கீழாக உள்ள நிலவறைப் பகுதி  . இராணியை விசாரித்தப் பொழுது , “அந்த சிவாலயப் பூசகர்கள் / குருக்கள் சில பேர் தன்னைத் தாக்கி , நகைகளைப் பிடுங்கிக் கொண்ட படு பாதகமான செயலைச் செய்தார்கள் " எனப் புகார் அளித்தாள். “

 இராணுவ வீரர்கள் மேலும் பலரிடம் தீவிரமாக விசாரணை செய்ததில் , இந்தப் பூசகர்கள் / குருக்கள் கூட்டம் இவ்வாறு சிவாலயம் வரும் செல்வர்களைத்  தாக்கி , அவர்களது செல்வத்தைக் கவர்வது வழக்கம் என்று தெரிய வந்ததது. இதனைக் கேட்ட பேரரசருடன் உடன் வந்த அனைத்து ஹிந்து அரசர்களும் மிகுந்த சினம் கொண்டு உடனே முகலாயப் பேரரசர் ஒளரங்கசசீபைச் சந்தித்து , சிவாலயப் பிராமணர்களின்  கொடுங்கோன்மையை ஒடுக்க விண்ணப்பம் செய்து கொண்டார்கள் . முழு விவரத்தையும் கேட்டறிந்த கருணை உள்ளம் கொண்ட பேரரசர் ஹிந்து அரசர்களின் குறையைத் தீர்க்கும் வண்ணமாகவும் , கொலைகார பிராமணர்களின் கொட்டத்தை அடக்கவும் முடிவு செய்தார் .

என்ன அந்த முடிவு ?

காசி விஸ்வநாதர் சிவலாயத்தை இடித்து , கொலைகார பிராமணர்களை தண்டிக்க  எதுவாகஅந்த சிவாலயத்தை இடித்துத் தள்ள உத்தரவு இட்டார் . இவ்வாறு ஹிந்துக்களை / ஹிந்து அரசர்களை காக்கத்தான் இந்த காசி சிவாலயம்  இடிக்கப்பட்டதே அன்றி அதற்குக் காரணம் பேரரசரின் பிற மதச் சகிப்பின்மை அன்று ! “ //

பயங்கரமான இந்த கதையைஇல்லை , இல்லை ஒரு வரலாறாக தன்னுடைய நூலில் “ Islam and Indian Culture ”  எழுதியவர்  B N பாண்டே (Bishambhar Nath Pande 23 December 1906 – 1 June 1998 was a freedom fighter, social worker, and parliamentarian in India. Pande devoted his life to the cause of national integration, and to the spread of the Gandhian way of life. ) என்பவர் . பாண்டேவிடுதலைப் போராட்ட வீரர் என்றும் , காந்தியவாதி என்றும் அறியப்பட்டவர் , பண்டித ஜவர்ஹலால் நேரு அவர்களுக்கு அணுக்கமான நண்பர் . பாண்டே பின்னாளில் ஓடியா மாநில ஆளுநராகவும் பதவி வகித்தவர் . பத்மஸ்ரீ மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கான இந்திரா காந்தி விருது பெற்றவர் .

பாண்டே எழுதிய வரலாறு எனபது பொய்யான வரலாறு என்பது நாமே உணரும் போது இந்தப் பொய்களை Dr விக்ரம் சம்பத்  போன்ற வரலாற்று அறிஞர்கள் இந்த வரலாற்றை கண்டனம் செய்துள்ளது வியப்பு அல்ல  . அது குறித்து இந்தப் பதிவின் பகுதி – 2 இல் ( முடிந்தால் ! ) காணலாம் !

எது , எப்படியோ !  Minority  Appeasement அரசியலில்  மஹாத்மாகாந்தியை விடவும் , அவரது சீடரும் , காங்கிரஸ்காரருமான பாண்டே முந்தி விட்டார் !

Reference : Waiting for Shiva / Unearthing the truth of Kasi Gyan Vapi - Dr Vikram Sampath.

காசி – 8.

ஔரங்கசீபின் காசி சிவாலய இடிப்பும்அதற்கு உறுதுணையாக தேசத் துரோகக் காங்கிரஸ் கும்பல் இட்டுக் கட்டியப் பொய்களும் ! “ - பகுதி 2.

முதல் பதிவில் ( பகுதி 1 இல் )  பாண்டே எழுதியவரலாறுகண்டோம் . இந்தப் பதிவில் அந்தவரலாற்றில்உள்ள பொய்களைக் குறித்து காணலாம் :

அந்த வரலாற்றுப் பொய்கள் பின்வருமாறு :

1.  ஔரங்கசீபின் படைகள் வங்காளம் சென்றன , ஆயினும் அவன் கூடவே காசி வழியாக வங்காளம் சென்றான் என்பதற்கு வரலாற்று ஆவணமே இல்லை .

2 . இராணிகள் , பெண்கள் ஸ்ரீ விஸ்வநாதப் பெருமானை வழிபாடு செய்யச் செனறனர் , ஆனால் ஏன் அவர்களுடன்  ஹிந்து கணவன்- ராஜாக்கள் செல்லவில்லை ? கணவனும் , மனைவியும் தம்பதி ஸமேதராக திருக்கோவில் வழிபாடு செய்வதே நமது பக்தி மரபு .

3. திருக்கோயில் வழிபாட்டுக்குச் சென்ற அரசியர் / பெண்கள் கூட்டம் தகுந்த வீரர்களின்  பாதுகாப்புடன் ஏன் கூட்டிச் செல்லப்படவில்லை ?

4. ஆலயப் பிராமணப் பூசகர்களுக்கு பணமோ ,நகையோ வேண்டுமென்றால் , அந்த ஹிந்து ராஜாக்களிடம் கேட்டிருந்தால் அவர்களே தானம் வழங்கி இருப்பார்களே ? ஹிந்துக்கள் - பிராமணர்களுக்கு தானம் வழங்கவேண்டும் என்பது சாத்திர விதி .இது  ஒரு சாதாரண ஹிந்துவுக்கு தெரியும் பொழுது , செல்வர்களான அரசர்களுக்கு தெரியாதா ?

5. ஆலயப் பூசகர்கள் தவறு செய்து இருந்தால் , அவர்களை ஔரங்கசீப் தண்டித்தல் முறையே , ஆயினும் பொதுமக்கள் வழிபடும் ஆலயத்தை இடித்தல் என்பது எவ்வாறு முறையாகும் ? ஷேக் முகமதி என்பவன் ஔரங்கசீப் காலத்தில் வாழ்ந்த ஒரு சூபி . அவன் கலகம் செய்தான் எனவும் , இஸ்லாத்துக்கு எதிராக இருந்தான் எனவும் குற்றஞ் சாட்டப்பட்டது . ஷேக் முகமதி  தன்னை படைகள் கைது செய்யக்கூடும் என அஞ்சி , ஒரு மசூதிக்குள் சென்று ஒளிந்து கொண்டான் .  ஔரங்கசீப் அவனை மசூதிக்குள் சென்று கைது செய்ய உத்தரவிட்டான் , ஆயினும் அதற்காக அந்த மசூதி இடிக்கப்படவில்லை .

6.  மத வெறியனும் , கொடுங்கோலனுமான ஔரங்கசீப் மதுரா மற்றும் பல ஹிந்துப் புனித தலங்களை அவனுடைய ஆட்சிக் காலத்தில் இடித்துத் தள்ளினான் . இந்தத் திருக்கோவில்களில் எந்த ஹிந்து தேசத்து இராணியும் கொள்ளை அடிக்கப்பட்டு அவமானப் படுத்தப்படவில்லையே .

பாண்டே தன்னுடையவரலாற்றுக்குக் குப்தா (  Parmeshwari Lal Gupta (P. L. Gupta 1914 – 2001  was an Indian numismatist who collated previous research on Indian Numismatics in the post-Independence era )   என்பவரின் நூலை ஆதாரம் காட்டுகிறார் .

பாண்டே மற்றும் குப்தா ஆகிய இருவரும் தங்களுடைய வரலாற்றுப் பொய்களையும் , கட்டுகதைகளையும் எங்கு இருந்து பெற்றனர் ?

அது மூத்த காங்கிரஸ்காரரான  பட்டாபியிடம் ( Dr Bhogaraju Pattabhi Sitaramayya  24 November 1880 – 17 December 1959  was an Indian independence activist and political leader in the state of Andhra Pradesh. He was also the first governor  1 November 1956 – 13 June 1957  of Madhya Pradesh. His books include Feathers and Stones, The History of Congress, and Gandhi and Gandhism. )  இருந்தே கற்றுக் கொண்டனர் .

மருத்துவரும் , காங்கிரஸ் கட்சியின் வரலாறு எழுதியவரும் , காந்தியவாதியுமான பட்டாபியின் ‘ Feathers and Stone ‘  என்ற நூலில் காசி கோயில் இடிப்பு குறித்து எழுதினார் :

//  ( மேலே சொன்ன கட்ச் இராணி கதை ) This story of the Benares Masjid was given in a rare manuscript in Lucknow which was in the possession of a respected Mulla who had read it in the Ms ( Manuscript ) . And who though he promised to look it up and give the  Ms ( Manuscript ) to a friend, to whom he had narrated the story , died without fulfilling his promise. The story is little known and the prejudice , we are told , against Aurangzeb persists  // .

1939 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில்மஹாத்மாகாந்தியின் முழு ஆதரவு பெற்ற பட்டாபி , ‘ நேதாஜிசுபாஷ் சந்திர போசை எதிர்த்து நின்றார் . இந்தத் தேர்தலில் பட்டாபிமண்ணைக் கவ்வினர் ‘ . ‘ பட்டாபியின் தோல்வி என்னுடைய தோல்விஎன காந்தி வருந்தி அறிக்கை விட்டார் .

 Minority Appeasement அரசியலில் பாண்டே போல , பட்டாபியும்  கை தேர்ந்துவிளங்கினார் . அதற்காகப் பொய்களை வரலாறாகவும்  எழுதியும் உள்ளார் .

பட்டாபியின் பொய்களைக் கண்டிக்கும்  வரலாற்று அறிஞரான Dr விக்ரம் சம்பத் எழுதுகிறார் :

//  It becomes clear to the reader how a story of some unnamed mullah quoting an unnamed manuscript termed as ‘ rare ‘ about which he shared with an unnamed friend , gets repeated so many times by those in positions of authority in the political and academic scene that it starts assuming a veneer of authenticity. Contemporary and authoritative sources of Aurangazeb’s times like ‘  Masir – I – Alamgiri ‘ are viewed with utter suspicion for alleged exaggeration of the emperor’s bigotry. But these unnamed , unknown manuscripts start  assuming great importance and historical validity. Demonizsng the Brahmin , undermining the Hindu faith , and glorifying and acting as apologists for Islamic bigots is a clear pattern one can see here . This undocumented , unverified and malicious propaganda then began to gain acceptability in the hallowed portals of academics and professional historians    //

பொய்களே வரலாறாக திரிக்கப்படும் காங்கிரஸ்கலாச்சாரம் ‘ , Minority  Appeasement   அரசியல் கலந்த காந்தியம் முதலியனவற்றை  அடையாளம் கண்டு ஒதுக்குவோம் !

No comments:

Post a Comment

கீழடி பொதுக் காலத்தின் ஆரம்ப ஆண்டுகளில் வியாபாரிகளின் சிறிய குடியிருப்பாக இருந்திருக்கலாம்

  Keeladi! Vaigai is a small river, rain dependent. It could not have sustained a large community in that age. It could not have had the re...