Saturday, June 8, 2013

ஏசு கிறிஸ்து - மத்தேயு நற்செய்தி கதாசிரியர் கப்சாக்களும்

இயேசு கிறிஸ்து நிறுவிய இறையாட்சி பற்றிய நற்செய்தியைத் திருத்தூதர் மத்தேயு முதன்முதலில் எழுதினார் என்றும் அதனை அரமேய மொழியில் எழுதினார் என்றும் திருச்சபை மரபு கருதுகிறது.

மத்தேயு எபிரேய மொழியில் எழுதவில்லை என்பதை நாம் காண்போம்

 மத்தேயு1:18 இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். 19 அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். 20 அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, 'யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.21 அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்' என்றார். 22 'இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன.

 மத்தேயு எபிரேய மொழியில் எழுதவில்லை என்பதை நாம் காண்போம்
எபிரேய மூல மொழியில் அல்மாஎன்ற சொல் உள்ளது -அது இளம் பெண் எனக் குறிக்கும்.
கன்னி என்பதற்கு எபிரேயச் சொல்  பெதுலா .
ஆனால் கிரேக்க செப்துவகிந்து மொழிபெயர்ப்பில் தவறாக இளம்பெண் என்பதற்கு கன்னி என உள்ளது.

மத்தேயு சுவி கதாசிரியர்- மேரியை விவாகரத்து செய்ய ஜோசப் கனவில் 
தேவதூதன் ஏசையாவின் தவறான கிரேக்க வசனத்தை சொல்லி அது தீர்க்க தரிசனம் என்கிறார். ஜோசப் எபிரேயர்- அவரிடம் எதற்கு தவறான கிரேக்கம்-
 மத்தேயுவிற்கு எபிரேயம் தெரியாது.

 எசாயா7:13 அதற்கு எசாயா: தாவீதின் குடும்பத்தாரே! நான்சொல்வதைக் கேளுங்கள்: மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ?14 ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்: அக்குழந்தைக்கு அவள் 'இம்மானுவேல்' என்று பெயரிடுவார்.
வெற்றி ஆர்ப்பரிப்போடு இயேசு எருசலேமில் நுழைதல்
 மத்தேயு 21

(மாற் 11:1 - 11; லூக் 19:28 - 38; யோவா 12:12 - 19)
1 இயேசு தம் சீடரோடு எருசலேமை நெருங்கிச் சென்று ஒலிவ மலை அருகிலிருந்த பெத்பகு என்னும் ஊரை அடைந்தபோது இரு சீடர்களை அனுப்பி,2 ' நீங்கள் உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் செல்லுங்கள். சென்ற உடனே அங்கே கட்டிவைக்கப்பட்டிருக்கிற ஒரு கழுதையையும் அதனோடு ஒரு குட்டியையும் காண்பீர்கள். அவற்றை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள்.3 யாராவது உங்களிடம் ஏதேனும் சொன்னால், ' இவை ஆண்டவருக்குத் தேவை ' எனச் சொல்லுங்கள். உடனே அவர் அவற்றை அனுப்பிவிடுவார் ' என்றார்.4 ' மகள் சீயோனிடம் சொல்லுங்கள்: இதோ உன் அரசர் உன்னிடம் வருகிறார்; அவர் எளிமையுள்ளவர்;5 கழுதையின் மேல் ஏறி வருகிறார்; கழுதைக்குட்டியாகிய மறியின் மேல் அமர்ந்து வருகிறார் ' என்று இறைவாக்கினர் உரைத்தது நிறைவேற இவ்வாறு நிகழ்ந்தது.6 சீடர்கள் போய் இயேசு தங்களுக்குப் பணித்த படியே செய்தார்கள்.7 அவர்கள் கழுதையையும் குட்டியையும் ஓட்டிக் கொண்டு வந்து, அவற்றின் மேல் தங்கள் மேலுடைகளைப் போட்டு, இயேசுவை அமரச் செய்தார்கள்.
எபிரேயம் தெரியாது இரண்டு கழுதைகள் மேல்- ஒரு தாய்- குட்டி இரண்டு மேல் ஏசு சவாரி செய்ததாக சொல்கிறார்.                                  
ஏசு 2 கழுதை மேல் சென்று இருந்தால் அவரை மக்கள் பைத்தியம் என்றே சொல்லி இருப்பர். மத்தேயுவிற்கு எபிரேயம் தெரியாது. 

 மத்தேயு 2:19 ஏரோது காலமானதும், ஆண்டவருடைய தூதர் எகிப்தில் யோசேப்புக்குக் கனவில் தோன்றி,20 ' நீர் எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்குச் செல்லும். ஏனெனில் குழந்தையின் உயிரைப் பறிக்கத் தேடியவர்கள் இறந்து போனார்கள் ' என்றார்.21 எனவே, யோசேப்பு எழுந்து குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரயேல் நாட்டுக்கு வந்து சேர்ந்தார்.22 ஆனால் யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார்; கனவில் எச்சரிக்கப்பட்டுக் கலிலேயப் பகுதிகளுக்குப் புறப்பட்டுச் சென்றார்.23 அங்கு அவர் நாசரேத்து எனப்படும் ஊருக்குச் சென்று அங்குக் குடியிருந்தார். இவ்வாறு, ' நசரேயன் என அழைக்கப்படுவார் ' என்று இறைவாக்கினர்கள் உரைத்தது நிறைவேறியது. 


 யூதேயாவில் அர்க்கெலா தன் தந்தைக்குப்பின் அரசாளுவதாகக் கேள்விப்பட்டு அங்கே போக அவர் அஞ்சினார்- தந்தைக்குப்பின் கலிலேயாவை அரசாண்டதுவும் ஏரோது மகன் அந்திப்பா தான்.

The nature of Matthew's Pesher is best illustrated by 2:23, which states that Jesus settled down in Nazareth  "that what was spoken by the Prophets might be fulfilled, " namely "HE" SHOULD BE CALLED A NAZARENE"; now here is the Old Testament we do not have such a statement.
Page -16; K.Luke; Companion to New Testament.

″நசரேயன்″ என அழைக்கப்படுவார் ' என்று இறைவாக்கினர்கள் உரைத்தது -பழைய ஏற்பாடு எங்கேயும் கிடையாது.
மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில் பைபிள்  விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ்பேராசிரியராக இருந்தகாலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ் அவர்கள் "The Real Jesus" என்ற தன்நூலில் பின் வருமாறு சொல்லுகிறார்,
"Whereas Synoptic record most of Jesus ministry is located in Galilee, John place most of it in Jerusalem and its neighbourhood." - Page-27 - THE REAL JESUS.

இப்படியான கதாசிரியர்கள் சொன்ன கதையை நம்புவது அறிவுள்ளோர் செய்வதல்ல.
நண்பர் ரிச்சர்ட் அவர்கள்- மத்தேயு கதாசிரியர் ஏன் சீடர் என்பதை மறுக்கிறீர் என்றார்?

இது பற்றிய கத்தோலிக்க பைபிள் விளக்க நூல்- இரு ஆர்ச் பிஷப் அங்கீகாரத்தோடு எழுதப்பட்ட நூலில் உள்ளதைப் பார்ப்போம்.
//The tradition of the existence of an Aramaic or Hebrew version of Matthew also generates more problem than it solves. ..
Why does Papias say Hebrew, when Jesus spoke Aramaic? Did Papias have any special reasons for placing Matthew's Gospel before Marks? All these questions indicate that the ascription to Matthew the apostle and the tradition of an Aramaic or Hebrew version of Matthew involve too many problems for us place much reliance on them in interpreting the Gospel. //
Page-863. Daniel J.Harrington. S.J. in "The Collegeville Bible Commentary"

Monday, June 3, 2013

ஏசு கிறிஸ்து- கன்னிப் பிறப்பு கட்டுக்கதைகள்

தெய்வீகமாக்கிய பைபிள் கட்டுக்கதைகள்-1
 2005_6025
மாற்கு 6:3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.4 இயேசு அவர்களிடம், ' சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர் 'என்றார்.

The  Greek Word in Mark 6:3 for brothers and sisters - that are used to designate the relationship between Jesus and the relatives have the meaning of Full Blood Brothers and Sisters Sisters in the Greek speaking World of the Evangelist's time and would naturally be taken by his Greek readers in this way. Page-337 New Catholic Encyclopedia Vol-9

கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு- பற்றி தெரிந்து கொள்ள உள்ள ஒரே ஒரு வழி சுவிசேஷக் கதைகளே.இந்த நான்கு கதாசிரியர்களில் முதலில் வரையப்பட்டது மாற்கு தான். இதன் காலம் பொ.கா. 65-75ல்.
மான்செஸ்டர் பழ்கலைக்கழகத்தில் வேதாகம விமர்சனம் மற்றும் விவாதத்திற்கான ரைல்ண்ட்ஸ் பேராசிரியராக இருந்த, காலம் சென்ற பேராசிரியர் F F புரூஸ் அவர்கள் "The Real Jesus" என்ற தன் நூலில் பின் வருமாறு சொல்லுகிறார்,
The Conclusion usually (and I think rightly) drawn from their comparitive study, is that Gospel of Mark (or something very like it) served as a source for Gospel of Matthew 7 Luke, andthat two also had access to a collections of saying of Jesus (Conveniently labelled "Q"}  .....   Page -25.

பொ.கா. 30 அல்லது 33, சுவிசேஷக் கதைகளின் நாயகர் மரணம் அடைந்தார். இவர் சீடர்களுடன் ஒரு வருடத்திற்குக் குறைவாகவோ அல்லது இரண்டு வருடங்களோ இயங்கினார்ஏசு கதை சொல்லும் முதல் புனையல் 65-75,அதாவது ஏசு மரணத்திற்கு 4045 வருடம் பின்பு, அன்றைய சராசரி ஆயுள் 42. முதல் சுவிசேஷக் கதைகள் புனைந்தபோது கண்ட சாட்சிகள்- மிகவும் குறைவு.

மாற்கு சுவிசேஷக் கதை, கலிலேயாவைச் சேர்ந்த ஏசு, யூதேயாவின் வனாந்திரத்தில் வாழ்ந்த யோவானிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கும்ஏசு பிறப்புக் கதைகள் கிடையாது. மேலே பார்த்தபடி ஏசுவிற்கு உடன்பிறந்த சகோதர சகோதரிகள் உண்டு.இவை மத்தேயு லுக்கா சுவிசேஷங்களில் முதல் ஓரிரு அத்தியாநங்களாக உள்ளன. இவற்றை பைபிளியலில் குழந்தைப் புனையல்கள் எனப்படும்
இவை பற்றி அமெரிக்காவின் கத்தோலிக்க பல்கலைக் கழகத்தின் புதிய கத்தோலிக்கக் கலைக் களஞ்சியம் கூறுவது-"குழந்தைப் புனையல்கள் என்பவை பிற்காலத்தில் மிகைப்படுத்தப்பட்டவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, சர்ச்சின் அப்போஸ்தலர் கதைகள்-யோவானிடம் பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கி ஈஸ்டர் அன்று சொர்கம் சென்றார் என்பதோடு மட்டுமே இருந்தது.."
There seems to be no doubt that Infancy Narratives of Matthew and Luke were later additions to the original body of the Apostolic Catechesis, the content of which began with John the Baptist and end with Ascension. Vol-14 Page- 695-New Catholic Encyclopedia 
நிகழ்வுகள் மத்தேயு விருப்பப்படியான சுவிசேஷம்
நிகழ்வுகள் லூக்கா விருப்பப்படியான சுவிசேஷம்
1.         1.தாய் பெத்லஹேமில் வாழ்ந்த மேரி
2 தந்தை பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப்
3 தந்தை முன்னோர் ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா- தாவீதுபரம்பரை
4 தாவீது உறவு முறை தாவீது- மற்றும் படைவீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் உறவின் மகன் சாலமோன் வரிசையில் ஏசு

5 தலைமுறை ஆபிரஹாமிலிருந்து 41வது தலைமுறை

6
பிறந்தது பெத்லஹேமில் யாக்கோபு மகன் ஜோசப் வீட்டில்
7
ஏசு பிறப்பின் போது யூதேயா ஆட்சியாளர் மன்னர் பெரிய ஏரோது- இவர் இறந்தது .கா.மு.4 இல்.

8
சூழ்நிலை சோகம்

9
வரலாற்று சம்பவம் ஏரோது மன்னர் இரண்டு வயதுக்கு கீழான குழந்தைகளைக் கொலை செய்தல்

10 கர்ப்ப அதிசயம் பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப் கனவில் வந்ததான தேவதூதன் சொன்னதாக

11
அதிசயக் கதைகள் கிழக்கிலிருந்த நாட்டு ஜோசியர்கள் நட்சத்திரம் பார்த்து, யூதர்களின் ராஜா பிறப்பைக் கணித்து, குழந்தை காண ஜெருசலேம் வந்து ஏரோது மன்னரைப் பார்த்து, பின் பெத்லஹேம் செல்ல- மீண்டும் அதே நட்சத்திரம் தோன்றீ வழிகாட்ட ஏசு வீடி சென்று பின் நேராக தன் நாடு சென்றனர்.

12
ஏசு பிறந்த பின்னர் கனவில் எச்சரிக்கப்பட ஏரோது மன்னர் குழந்தைகளைக் கொலை செய்தற்கு முன்பே அண்டைய நாடு எகிப்து ஓடல்
13 வாழ்வு -ஆரம்பம்-பின் பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப் ஏரோது மன்னருக்கு பயந்து எகிப்து நாட்டில் ஏசு வாழ்வு ஆரம்பம்.ஏரோது மரணத்திற்குப் பின் யூதேயா வராமல் கலிலேயா சென்று நாசரேத்தில் வாழ்ந்தனர்.
1 தாய் நாசரேத்தில் வாழ்ந்த மேரி

2
தந்தை நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்.
  
3 தந்தை முன்னோர் ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா-தாவீதுபரம்பரை

4 தாவீது உறவு முறை தாவீது வேறோரு வைப்பாட்டி மூலம் பெற்ற மகன் நாத்தன் வரிசையில் ஏசு

5 தலைமுறை ஆபிரஹாமிலிருந்து 57வது தலைமுறை

6 பிறந்தது பெத்லஹேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில்
7 ஏசு பிறப்பின் போது யூதேயா ஆட்சியாளர் சிரிய நாட்டின் கவர்னர் குரேனியு என்பவர்- இவர் பதவி ஏற்றது .கா.6 இல்.

8
சூழ்நிலை மகிழ்ச்சி

9
வரலாற்று சம்பவம் ரோம் மன்னர் ஆகஸ்டஸ் சீசர் ஆணையில் சிரிய நாட்டின் கவர்னர் குரேனியு கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு (.கா.8)
10 கர்ப்ப அதிசயம் நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்பிற்கு நிச்சயிக்கப்பட்ட மேரியினிடம் நேரில் வந்ததான தேவதூதன்

11
அதிசயக் கதைகள் அறுவடை கால பயிரைக் காத்திட ஆடு மேய்க்கும் சிறுவர், நள்ளிறவைல் வயலில் இருந்தபோது தேவதூதர்கள் வந்து கிரேக்க மொழியில் பாடல் பாடி ஆடி கொண்டாடினர்.

12 ஏசு பிறந்த பின்னர் குடும்பத்தில் முதல் மகன் ஆண் மகன் என்பதற்காக ஜெருசலேம் யூதக் கடவுள் ஆலயத்தில் யூதப் புராண சட்டப்படி மிருகபலி கொலை செய்ய தம்பதிகள் சென்றனர்

13 வாழ்வு -ஆரம்பம்-பின் நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப், மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக பெத்லஹேம் வந்து பின் மிருகக் கொலை/பலிக்காக ஜெருசலேம் சென்று வந்தபின் சொந்த ஊர் நாசரேத்தில் வாழ்ந்தனர்.
ChristChild2.jpg  570_bc.jpg
கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இத்தை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.


குன்றத்தூர் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்த கிறிஸ்தவ கல்லுாரிக்கு 5 லட்சம் அபராதம் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

  குன்றத்தூர் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்த கிறிஸ்தவ கல்லுாரிக்கு 5 லட்சம் அபராதம் – உயர் நீதிமன்றம் உத்தரவு! சென்னை அடுத்த குன்றத்துாரில...