Tuesday, July 19, 2022

சிஎஸ்ஐ செவித்திறன் குறைவுடையோர் பள்ளி காதுகேளாத மாணவிகளுக்கு பாலியல் 10 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு

சிஎஸ்ஐ  செவித்திறன் குறைவுடையோர் பள்ளியில் பாலியல் சீண்டல்; ஆசிரியர்களை கைதுசெய்யக்கோரி போராட்டம்!

மானாமதுரை சிஎஸ்ஐ செவித்திறன் குறைவுடையோர் பள்ளியில் நடைபெற்ற பாலியல் சீண்டலுக்கு காரணமான ஆசிரியர்களை கைது செய்யக்கோரியும், பணிநீக்கம் செய்ய வேண்டியும் காதுகேளாதோர் சங்கத்தினர் நேற்று போராட்டம் நடத்தினர்.
 
 அந்த போராட்டத்தின் விளைவாக நடத்தப்பட்ட விசாரணையில், 10 ஆண்டுகளாக அம்மாணவிகளுக்கு ஆசிரியர் கொடுத்த பாலியல் தொந்தரவு வெளிச்சத்திற்கு வந்தது. 

கிறிஸ்துவ சர்ச் பாதிரிகள் மட்டுமல்ல - கல்வி நிறுவனங்களிலும் பெண்கள்& குழந்தைகள் மீது பாலியல் வன்கொடுமைசிஎஸ்ஐ காது கேட்புத்திறன் குறைவுடையோர் பள்ளி மாணவிவளை 10 வருடமாக பாலியல் கொடுமை தொடர்கிறது

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சிஎஸ்ஐ செவித்திறன் குறைவுடையோர் உயர்நிலைப்பள்ளி பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

 இந்நிலையில், இப்பள்ளியில் மாணவிகளுக்கு பள்ளியைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் எழுந்து வந்தது.

இதனைத் தொடர்ந்து கடந்த 14ஆம் தேதி காது கேளாதோர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்திலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்திலும் புகார் கொடுத்தனர்.


இந்நிலையில், இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து நேற்று மானாமதுரை தலைமை தபால் அலுவலகம் முன்பு கூடிய காது கேளாதோர் சங்கத்தினர், பாலியல் சீண்டல்களுக்கு காரணமான ஆசிரியர்களை கைது செய்யக் கோரியும் அவர்களை பணி நீக்கம் செய்யக் கோரியும் 50க்கும் மேற்பட்டோர் போரட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து சிஎஸ்ஐ செவித்திறன் குறைவுடையோர் பள்ளி வரை பேரணியாகச் சென்றனர். பேரணியாகச் சென்ற அவர்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகத்தினர் மற்றும் மானாமதுரை போலீஸ் டிஎஸ்பி கண்ணன், இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் பாதிக்கப்பட்டவர்களிடம் மாற்றுத்திறனாளி நல அலுவலர் கதிர்வேல், மானாமதுரை டிஎஸ்பி கண்ணன், மானாமதுரை தாசில்தார் சாந்தி ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், இந்தப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு தமிழ் ஆசிரியரான ஆல்பர்ட் ஆபிரகாம் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக உறுதி செய்யப்பட்டது. மேலும், இவர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியாகவும் மற்றும் காவல் துறை மூலமாகவும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து டிஎஸ்பி கண்ணன் கூறும்போது, மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். மேலும், மாற்றுத்திறனாளி நல அலுவலர் கூறும்போது, இந்தப் பள்ளியில் கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு புகாரின் அடிப்படையில் விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில் இங்கு பணிபுரிந்த ஆல்பர்ட் ஆபிரகாம் மீது புகார் உறுதி செய்யப்பட்டது. மேலும், இந்த பள்ளியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக மாணவிகளுக்கு பல்வேறு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக இந்த ஆசிரியர் மீது ஏற்கெனவே புகார் இருந்ததாக தெரிவித்தார். புகார்கள் கொடுக்கப்பட்டும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், மாற்றுத்திறனாளி மாணவிகளிடம் கொடூர செயலில் ஈடுபட்ட ஆசிரியருக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என கூறினார். மேலும், இதற்கு முன்னர் இதில் இரு ஆசிரியர்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது ஒரு ஆசிரியர் மட்டும் குற்றச்செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் கூறினார்.

தற்போது, காவல்துறை அளித்த தகவலின்படி, ஆல்பர்ட் ஆபிரகாம் மீது போக்சோவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 


https://www.dinamalar.com/news_detail.asp?id=3079428
https://tamil.news18.com/news/sivagangai/tamil-nadu-teacher-booked-under-pocso-for-sexually-abusing-differently-abled-girl-students-for-almost-a-decade-773963.html 

No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...