Friday, February 21, 2014

இயேசு தாவீது குமாரன் - தாவீதை அறிவோம்

ஏசுவை யூதா- தாவீது பரம்பரை என மத்தேயுவும், லூக்காவும் தன் சுவியின் கதைப்படி

மத்தேயுவின் ஏசு அபிரகாமிலிருந்து 41வது தலைமுறை, பெத்லஹெம் வாழ் யாக்கோபு மகன் ஜோசப் -மேரியின் மகன்
லூக்காவின் ஏசு அபிரகாமிலிருந்து 57வது தலைமுறை, நாசரேத் வாழ் ஏலி மகன் ஜோசப் -மேரியின் மகன்

மத்தேயு6:27 தாவீதின் குமாரனே, எங்களுக்குக் கருணை காட்டும்” 

ரோமன்1: 3 இந்த நற்செய்தி அவருடைய மகனைப்பற்றியதாகும். இவர் மனிதர் என்னும் முறையில் தாவீதின் வழி மரபினர்:


  தாவிதை நாம் அறிவோம்                             Bethsabha

நாடு போருக்கு செல்ல,  போரில் ஈடுபடாதவன் மனைவி  பெத்சபாளை போகித்து பின்னர் அந்த வீரன் உரியாவைக் கொன்றவர் தாவீது 



2சாமுவேல்11:1 இளவேனில் காலத்தில் அரசர்கள் போருக்கு செல்வது வழக்கம். அப்பொழுது தாவீது யோவாபைத் தம் பணியாளரோடும் இஸ்ரயேலர் அனைவரோடும் அனுப்பினார். அவர்கள் அம்மோனியரைத் தோற்கடித்து இராபாவை முற்றுக்கையிட்டனர். தாவீதோ எருசலேமிலேயே தங்கிவிட்டார்.2 ஒரு நாள் மாலை வேளை, தாவீது தம் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் குளித்துக் கொண்டிருப்பதைக் தாவீது கண்டார். அவள் மிகவும் அழகிய தோற்றம் கொண்ருந்தாள். 3தாவீது அவளை யார் என்று கேட்க, ஆளனுப்பினார். அவள் எலியாமின் மகளும் இத்தியர் உரியாவின் மனைவியுமான பத்சேபா என்று கூறினர். 4 தாவீது தூதனுப்பி அவளை வரவழைத்தார். அப்பொழுதுதான் மாதவிலக்கு முடிந்து அவள் தன்னைத் தூய்மைப்படுத்தியிருந்தாள். அவள் தம்மிடம் வந்ததும் அவர் அவளோடு உடலுறவு கொண்டார். பிறகு அவள் தம் இல்லம் சென்றாள்.5 அப்பெண் கருவுற்று தாவீதிடம் ஆளனுப்பி, தான் கருவுற்றிருப்பதாக அவரிடம் தெரிவித்தாள்.
6 அப்பொழுது தாவீது இத்தியனான உரியாவை என்னிடம் அனுப்பி வை என்று யோபாவுக்குச் செய்தி செய்தி அனுப்பினார். யோவாபு உரியாவைத் தாவீதிடம் அனுப்பிவைத்தார். 7 உரியா தாவீதிடம் வந்ததும் அவர் யோவாபின் நலம் பற்றியும் வீரர்களின் நலம் பற்றியும் போரின் போக்குப் பற்றியும் விசாரித்தார்.8 பிறகு தாவீது உரியாவிடம் உன் வீட்டுக்குச் சென்று உன் பாதங்களைக் கழுவிக் கொள் என்றார். உரியா அரண்மனையை விட்டுச் சென்றதும் அவர் பின்னாலேயே அரசர் அன்பளிப்பு அனுப்பி வைத்தார்.9 உரியாவோ தம் தலைவரின் பணியாளர் அனைவரோடும் அரண்மனை வாயிலிலேயே படுத்துக் கொண்டார். தம் வீட்டுக்குச் செல்லவில்லை. 10 உரியா தம் வீட்டுக்கு செல்லவில்லை என்று தாவீது அறிந்ததும் அவரிடம் "நீ நெடும் தொலைவிலிருந்து வரவில்லையா? பின் ஏன் நீ வீட்டிற்குச் செல்லவில்லை?" என்று கேட்டார். 11 அதற்கு உரியா தாவீதிடம் "பேழையும், இஸ்ரயேலரும் யூதாவினரும் கூடாரங்களில் தங்கியிருக்கின்றனர். என் தலைவர் யோவாபும், என் தலைவரின் பணியாளர்களும் திறந்த வெளிகளில் தங்கியிருக்கின்றனர். நான் மட்டும் என் வீட்டிற்குச் சென்று உண்டு குடித்து என் மனைவியோடு இருப்பேனா? உம் மேலும் உம் உயிர் மேலும் ஆணை! நான் அப்படிச் செய்யவே மாட்டேன்" என்று சொன்னார்.12 தாவீது உரியாவிடம், "இன்னும் இங்கேயே தங்கு. நாளை உன்னை அனுப்பி வைக்கிறேன்" என்றார். அன்றும் மறுநாளும் உரியா எருசலேமிலேயே தங்கினார். 14 காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு மடல் எழுதி அதை உரியாவின் கையில் கொடுத்தனுப்பினார். 15அம்மடலில் அவர், "உரியாவைப் போர் கடுமையாக நடக்கும் முன்னிலையில் நிறுத்தி, அவனைவிட்டு பின்வாங்கு. அவன் வெட்டுண்டு மடியட்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். 16யோவாபு நகரை முற்றுகையிட்டுக் கொண்டிருந்த போது வலிமைமிகு எதிரிகள் இருந்த இடத்தை அறிந்து அங்கே உரியாவை நிறுத்தினார். 17 நகரின் ஆள்கள் புறப்பட்டு வந்து யோவாபைத் தாக்கினர். அப்பொழுது போரில் வீழ்ந்தவருள் தாவீதின் வீரர்களும் சிலர். இத்தியர் உரியாவும் மாண்டார்.  
தாவீது - வீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் உறவின் மகன் சாலமோன்
1இராஜாக்கள்4:29 கடவுள் சாலமோனுக்கு மிகுந்த ஞானத்தையும் அறிவுக் கூர்மையையும் கடற்கரை மணலெனப் பரந்த அறிவாற்றலையும் அளித்திருந்தார். 34 சாலமோனின் ஞானத்தைக் கேட்கப் பல்வேறு இனத்தைச் சார்ந்தவர் அவரை நாடி வந்தனர். அவரது ஞானத்தைப் பற்றிக் கேள்வியுற்ற பின்னர் அனைவரும் அவரைத் தேடி வந்தனர்.

தன்னிடம் படைபலம் வர ஒருவன் சொத்தை அபகரிக்க முயல, பின் அவன் மனைவி மயங்க நாபால் என்னும் அவனை கொலை செய்து நாபாலின் மனைவி அபிகாயில் மணந்தார்.

1சாமுவேல் 25:2 கர்மேலில் சொத்துக்களை உடைய ஒருவன் மாவோனில் இருந்தான். அம் மனிதன் செல்வம் மிக்கவன். அவனுக்கு மூவாயிரம் ஆடுகளும் ஆயிரம் வெள்ளாடுகளும் இருந்தன. அவன் கர்மேலில் தன் ஆடுகளுக்கு உரோமம் கத்தரித்துக் கொண்டிருந்தான்.3 அம் மனிதன் பெயர் நாபால், அவன் மனைவியின் பெயர் அபிகாயில், அப்பெண் மிகுந்த அறிவும் அழகும் வாய்ந்தவள்.
9 தாவீதின் இளைஞர்கள் சென்ற நாபாலிடம் தாவீதின் பெயரால் அவை யாவற்றiயும் கூறிக் காத்திருந்தனர்.10 நாபால் தாவீதின் இளைஞர்களிடம், தாவீது என்பவன் யார்? ஈசாயின் மகன் யார்? தங்கள் தலைவர்களைவிட்டுப் பிரிந்து செல்லும் பணியாளர் பலர் உள்ளனர்.11 என் அப்பங்களையும் தண்ணீரையும் உரோமம் கத்திரிப்பவர்களுக்காக நான் அடித்துச் சமையல் செய்த இறைச்சியும் எடுத்து எங்கிருந்தோ வந்த வந்த மனிதர்களுக்கு நான் கொடுப்பதா? என்று பதிலளித்தான்.
23அபிகாயில் தாவீதைப் பார்த்த போது கழுதையினின்று வேகமாக இறங்கி அவர் முன் தரையில் முகம் குப்புற விழுந்து வணங்கினார். .26 இப்பொழுது, என் தலைவரே, நீர் இரத்தத்தைச் சிந்தாதவாறு, நீர் உம் கைகளினால் பழிக்குப் பழி வாங்காதவாறும் உம்மைத் தடுத்தவர் ஆண்டவரே! வாழும் ஆண்டவர் மேலும் உம் இருக்கையின் மேலும் ஆணை! உம் பகைவர்களும் என் தலைவராகிய உமக்கு தீங்கு செய்ய முயல்பவர்களும் நாபாலைப்போல் ஆவார்களாக!35 பின்பு அபிகாலில் தாம் கொண்டு வந்ததை தாவீது அவரிடம் இருந்து பெற்றுக் கொண்டு, அவரை நோக்கி, சமாதனத்துடன் நீ உன் வீட்டுக்குப் போ! உனக்குச் செவிக் கொடுத்து உன் வேண்டுதலை நிறைவேற்றியுள்ளேன் என்றார்.36 அபிகாலில் நாபாலிடம் வந்த பொழுது அவன் அரசவிருந்துக்கு ஒப்பான விருந்தொன்றை தன் வீட்டில் அனுபவித்துக் கொண்டிருந்தான்: அவன் உள்ளம் களிப்புற்றிருந்தது அவன் மிகுந்த குடிப் போதையில் இருந்ததால் பொழுது விடியும் வரை அவர் எதுவும் பேசாதிருந்தார்.37 காலையில் நாபால் திராட்சை மதுவின் போதை தெளிந்தப் பின் அவன் மனைவி இவையனைத்தையும் அவனிடம் கூறினார். அப்பொழுது அவன் அதிர்ச்சிக்குள்ளாகிய கல்லைப் போல் செயலற்றவன் ஆனான்.38 ஆண்டவர் நாபாலை வதைத்ததால் சுமார் பத்துநாள்களுக்குபின் அவன் இறந்தான்.39 நாபால் இறந்து விட்டதைக் தாவீது கேள்வியுற்றபோது, நாபால் கையினால் எனக்கு வந்த இழிவுக்கு எதிராக நீதி வழங்கி தம் அடியானைத் தீமை செய்யாதவாறு காப்பாற்றிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக! 40 தாவீது பணியாளர்கள் கர்மேலில் இருக்கிற அபிகாலிடம் வந்து அவரை நோக்கி, தாவீது உம்மை மணந்து கொள்ள விரும்புகிறார். அதற்காக எங்களை உங்களிடம் அனுப்பினார் என்றார்.41 அவர் எழுந்து தரையில் முகம் குப்புற வீழ்ந்து வணங்கி, இதோ! உம் அடிமைகளாகிய நான் என் தலைவரின் பணியாளர்களுடைய கால்களைக் கழுவவும் பணிப்பெண்ணாக இருப்பேனாக! என்றாள்.42 உடனே அபிகாயில் ஒரு கழுதை மேல் ஏறி விரைந்துச் சென்றார். பணிப்பெண்கள் ஐவர் அவருடன் சென்றார்கள்: அவர் தாவீது தூதர்களை பின் தொடர்ந்து அவருக்கு மனைவியானார். 

ராஜா சவுலின் திருமணமான மனவி மீக்காளை மணக்க 200 பிலிஸ்தியரைக் கொன்று ஆண்குறி நுனித்தோலைக் கொடுத்து பல்தி என்பவன் மனைவி மீக்காளை அபகரித்தான்.

2சாமுவேல் 3:  13 தாவீது நல்லது உன்னோடு நான் உடன்படிக்கை செய்து கொள்கிறேன். ஆனால் உன்னிடமிருந்து நான் ஒன்று கேட்கிறேன்: அதாவது நீ என்னுடன் வரும் போது சவுலின் மகள் மீக்காலை கொண்டு வரவேண்டும். இல்லையெனில் என் முகத்தில் விழிக்காதே என்று மறுமொழி கூறினான்.14 அதற்குபின் தாவீது சவுலின் மகன் இஸ்பொசேத்திடம் தூதனுப்பி, பெலிஸ்தியர் நூறு பேரின் நுனித் தோலை ஈடாகக் கொடுத்து நான் மணந்த என் மீக்காலை எனக்குக் கொடு என்ற கேட்டார்.15 இஸ்பொசேத்து ஆளனுப்பி அவளை அவள் கணவன் இலாயிசின் மகன் பல்தியேலிடமிருந்து கொண்டுவரச் செய்தான்.16அவள் கணவனோ அழுது கொண்டே அவளைத் தொடர்ந்து பகுரிம் வரை சென்றான்.

தாவீது - தன் காரியங்களுக்கு கர்த்தரிடம் மன்னிப்பு பெற நடுத்தெருவில் பிற பெண்கள் முன் நிர்வாணமாக நடனமாடி கர்த்தரை மகிழ்வித்தார்.
Photo: யாத்திராகமம் 28:42 அவர்களுடைய நிர்வாணத்தை மூடும்படிக்கு, இடுப்புத்தொடங்கி முழங்கால்மட்டும் உடுத்த சணல்நூல் சல்லடங்களையும் உண்டுபண்ணுவாயாக.

- வசனம் இப்படி சொல்லியிருக்க தேவனுடைய பயங்கரம் விளங்கும் பெட்டிக்கு முன்பதாக பைபிளின் மதிப்பிற்குரிய தலைவனாகிய தாவீது நிர்வாண நடனம் ஆடியதுபோல சிலர் சித்தரிப்பது அவர்களுடைய அறிவீனத்தை மாத்திரமல்ல, அவர்களுடைய துணிகரத்தையும் காட்டுகிறது.அவர்கள் யாரோ மனிதனைக் குற்றப்படுத்த அல்லது இந்த சமுதாயத்தை சீர்திருத்துவதாக நினைத்துக்கொண்டு தங்கள் தேவனாகிய கர்த்தருக்கே அபகீர்த்தியை உண்டுபண்ணுகிறார்கள். இந்த படமானது ஆரோக்கிய கிறிஸ்தவத்துக்காக உருவாக்கப்பட்டதல்ல என்பதையும் இது வேதப்புரட்டுகளை அரங்கேற்றுவோரின் முயற்சி என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் அறியட்டும்.

***ஆதிபாவத்தின் துக்கமே நிர்வாணம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே நிர்வாணமானது வேதம் முழுவதிலும் எந்த நிலையிலும் ஊக்குவிக்கப்படவில்லை.

**சித்திரத்தின் மூலத் தொடுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதில் பின்வரும் வாசகம் சூழ்ச்சியுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.

/// Hey, if dancing in his birthday suit was good enough for King David… (2 Sam 6:14-22) ///

2சாமுவேல்6:20 தாவீது தம் வீட்டாருக்கு ஆசி வழங்க வந்தார். அப்போது சவுலின் மகள் மீக்கால் தாவீதை எதிர் கொண்டு, இழிந்தவன் ஒருவன் வெட்கமின்றித் தன் ஆடைகளைக் கழட்டுவது போல, இஸ்ரயேலின் அரசர் தன் பணியாளரின் பணிப்பெண்களுக்கு முன்பாகத் தம் ஆடைகளைக் கழற்றி இன்று பெருமைக் கொண்டாரே! என்று ஏளனம்21 ஆண்டவரின் மக்கள் மீதும் இஸ்ரயேல் மீதும் தலைவனாக இருக்குமாறு உன் தந்தையும் அவர் தம் வீட்டாரையும் ஒதுக்கிட்டு, என்னைத் தேர்ந்து கொண்ட ஆண்டவர் திருமுன் நான் ஆடினேன்: இன்னும் ஆடுவேன்.22 நான் என்னை இன்னும் என்னைக் கடையவனாக்கிக் கொள்வேன்: நீ குறிப்பிட்ட பெண்களுக்கு முன்பா நான் பெருமை அடைவேன் என்று தாவீது மீக்காலிடம் கூறினார்.23 சவுலின் மகள் மீக்காலுக்குச் சாகும் வரை குழந்தைப் பேறு கிட்டவில்லை.  

திருவள்ளுவர் அடுத்தவர் மனைவியை பார்ப்பவர் பேடி என்கிறார். 

குறள் 148: பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு 
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
மு.வ உரை:
பிறனுடைய மனைவியை விரும்பி நோக்காத ‌பெரிய ஆண்மை, சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று; நிறைந்த ஒழுக்கமுமாகும்.
பைபிள் கர்த்தர் சட்டம் என்ன சொல்கிறது  

உபாகமம் 22:22 ஒரு மனிதன் மற்றொருவனுடைய மனைவியோடு படுத்திருப்பது கண்டு பிடிக்கப் பட்டால், அப்பெண்ணும் அப்பெண்ணோடு படுத்தவனும், இருவரும் சாவர். இவ்வாறு இஸ்ரயேலிலிருந்து தீமையை அகற்று.

அண்ணன் இறந்தால் தம்பி அண்ணியை மணக்க வேண்டும் என்பது கர்த்தர் சட்டம். கொடியவன் ஏரை கர்த்தர் கொன்றிட, தம்பி ஓனான்  அண்ணியுடன் உடலுறவு கொண்டு, அண்ணி பெண் குறியில் விந்து வெளியாகுமுன் நீக்கி கீழேவிட்ட யூதா மகன் ஓனானை கர்த்தர் கொன்றார் (ஆதி 38:710). 

2சாமுவேல்16:  20 அப்சலோம் நபி(தீர்க்கர்) அகிதோபலிடம், நான் என்ன செய்யலாம் என்று அறிவுரை கூறு என்று கேட்டான்.21அகிதோபல் அப்சலோமிடம், என் தந்தை தன் வீட்டைக் காக்க இங்கு விட்டுச் சென்றுள்ள வைப்பாட்டியரிடம் சென்று அவர்களோடு உறவு கொள். நீ உன் தந்தையின் வெறுப்புக்கு ஆளாகிவிட்டாய் என்று இஸ்ரயேல் அனைவரும் கேள்விப்படுவர். உன்னொடு இருப்பவர் கை ஓங்கும் என்றான்.22 அப்சலோமுக்காக மாடியில் ஒரு கூடாரம் அடைக்கப்பட்டது. இஸ்ரயேல் முழுவதும் அறிய, அப்சலோம் தன் தந்தை தாவீது வைப்பாட்டியரோடு உறவு கொண்டான்.23 அந்நாளில் அகிதோபலின் ஆலோசனை கடவுளின் வாக்காக கருதப்பட்டது. இவ்வாறு தான் தாவீது அப்சலோமும் அகதோபலின் அனைத்து ஆலோசனைகளையும் கருதினர்.
தாவீதின் தன்மையையும் கர்த்தர் செய்ததுவும் இதுவே. இந்த தாவிதின் குமாரன் ஏசு

திருக்குறள் கடவுள் வாழ்த்து - இயேசு கிறிஸ்து

திருக்குறள் கடவுள் வாழ்த்து – இயேசு கிறிஸ்து

  

குறள் 1: 
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது

 36 ‘ சட்ட அறிஞர்-போதகரே, திருச்சட்ட நூலில் தலைசிறந்த கட்டளை எது? ‘ என்று கேட்டார்.37 அவர், ‘ உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு மனத்தோடும்  உன் இஸ்ரேலின் ஆண்டவராகிய கர்த்தரிடம் அன்பு செலுத்து. ‘ 38 இதுவே தலைசிறந்த முதன்மையான கட்டளை. 

பைபிளின் கொள்கை- அதற்கு தனி சிறு எல்லை தெய்வம் கர்த்தர். முழு உலகுக்கு இல்லை

(திருவள்ளுவ்ர் எழுதிய திருக்குறளை கிறிஸ்துவர்கள் எவ்வளவு தூரம் அவமானப் படுத்த இயலுமோ அவ்வளவு செய்துள்ளனர், திருக்குறளிற்கு 20ம் நூற்றாண்டில் பொருந்தாத பல உரைகளை எழுதியதை வைத்து - திருவள்ளுவர் திருக்குறள் -தமிழர் பண்பாட்டு  நூல் இல்லை - கிறிஸ்துவ பைபிள் கதை நூலின் தழுவல் என புனைந்தனர். சர்ச் 100% காசில் தமிழ் கிறிஸ்துவத் துறை என ஆரம்பித்து பைபிள் போதனையால் தான் திருக்குறள் வந்தது, அதன் எழுச்சியே சைவம், வைணவம் என பல பிதற்றல் முனைவர் பட்டக் குப்பைகள் வழங்கப் பட்டுள்ளன.)
குறள் 2:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
மு.வ உரை: தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.
குறள் 3:
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

மு.வ உரை: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

கர்த்தர் சொன்னதை செய்தால் கர்த்தரின் கருணை என்ன?

குறள் 4:
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
 இயேசு சீடருக்கு சொன்னது
மத்தேயு10:5 5 இயேசு இந்தப் பன்னிருவரையும் அனுப்பியபோது அவர்களுக்கு அறிவுரையாகக் கூறியது: ‘ ‘ பிற இனத்தாரின் எப்பகுதிக்கும் செல்ல வேண்டாம். சமாரியாவின் நகர் எதிலும் நுழைய வேண்டாம்.6 மாறாக, வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள்.கானானியப் பெண்ணிடம் 
மத்தேயு15: 24 இயேசு மறுமொழியாக, ‘ இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடம்  மட்டுமே நான் அனுப்பப்பட்டேன் மற்றவ்ர்களுக்கு அல்ல ‘  என்றார். 26 இயேசு  மறுமொழியாக, ‘ பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.

யூதரல்லதோரை நாய் எனக் கேவலாமாய் கீழ்த்தரமாய் விமர்சித்தார் இயேசு.

குறள் 5:
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
மு.வ உரை: கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.
குறள் 6:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
மு.வ உரை: ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.
 மத்தேயு11:18 எப்படியெனில், யோவான் வந்தபோது அவர் உண்ணவுமில்லை, குடிக்கவுமில்லை. இவர்களோ ‘ அவன் பேய்பிடித்தவன் ‘ என்கிறார்கள்.19மானிட மகன் வந்துள்ளார்; அவர் உண்கிறார்; குடிக்கிறார். இவர்களோ, ‘ இம் மனிதன் பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரி தண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன் ‘ என்கிறார்கள். எனினும் ஞானம் மெய்யானது என்பதற்கு அதை ஏற்றுக் கொண்டோரின் செயல்களே சான்று. ‘ 
இயேசு தன் ஐம்புலன் களை அடக்கவே இல்லை

குறள் 7:
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
மு.வ உரை:
தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.
 மாற்கு8:17 இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, ‘ நல்ல போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? ‘ என்று அவரைக் கேட்டார்.18 அதற்கு இயேசு அவரிடம், ‘ நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே.
மத்தேயு8:19 அப்பொழுது மறைநூல் அறிஞர் ஒருவர் வந்து, ‘ போதகரே, நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன் ‘ என்றார்.20 இயேசு அவரிடம், ‘ நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு. மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை ‘ என்றார்.21 இயேசுவின் சீடருள் மற்றொருவர் அவரை நோக்கி, ‘ ஐயா, முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்து விட்டு வர அனுமதியும் ‘ என்றார்.22 இயேசு அவரைப் பார்த்து, ‘ நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப்பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள் ‘என்றார்.
மாற்கு15:33 நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது.34 பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ‘ எலோயி, எலோயி, லெமா சபக்தானி? ‘என்று உரக்கக் கத்தினார். ‘ என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? ‘என்பது அதற்குப் பொருள்.

 இயேசு கடவுளும் இல்லை- நல்லவரும் இல்லை

குறள் 8:
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.’
மு.வ உரை:அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.
குறள் 9:
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
மு.வரதராசனார் உரை:கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.
குறள் 10:
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
மு.வரதராசனார் உரை:இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறிதி செய்கிறார்.

பைபிள்-(விவிலியம்) இவை முழுவதுமாக ஆன்மிகக் கருத்துக்களோ இறையியற் நோக்கு கொண்டது அல்ல, பெரும்பாலும், அரசியல் -ஆக்கிரமிப்பு போன்றவற்றை இறைவன் பெயரில் மிகப்பிற்காலத்தில் அரசியல் நோக்கில் புனையப் பட்டவையே ஆகும்.
ஏசு தன் வாள்நாளில் உலகம் அழியும் எனத் தெளிவாக பலமுறை புலம்பினார்.  

  • Sri Sathya Sai Baba devotees attending the special mass at the Santhome Cathedral during the weekend.
    Sri Sathya Sai Baba devotees attending the special mass at the Santhome Cathedral during the weekend.

  

ஏசு மிகச் சாதரண மனிதன் மட்டுமே. எபிரேயரான அவரைப் பற்றி அவரை பார்க்கவே இல்லாத நபர்கள் கிரேக்க மொழியில் புனைந்த புதிய ஏற்பாட்டின் ஒரு சில வசனங்களை மிகைப் படுத்தி கடவுளக்குவது பயனற்ற வேலை

குன்றத்தூர் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்த கிறிஸ்தவ கல்லுாரிக்கு 5 லட்சம் அபராதம் – உயர் நீதிமன்றம் உத்தரவு!

  குன்றத்தூர் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்த கிறிஸ்தவ கல்லுாரிக்கு 5 லட்சம் அபராதம் – உயர் நீதிமன்றம் உத்தரவு! சென்னை அடுத்த குன்றத்துாரில...