Monday, June 25, 2012

இயேசு கிறிஸ்து யார்?


இயேசு கிறிஸ்து என்னும் நபர் பற்றி வரலாற்று ரீதியில் எவ்வித சான்றும் கிடையாது.
2005_6025
பெயரில் இரண்டு பெயர்கள் உள்ளதில், இயேசு என்பது பொ.கா. முதல் நூற்றாண்டில் ரோமன் ஏகாதிபத்திய கொடுங்கோல் அரசினால் இஸ்ரேல் என்று அழைக்கப்படும் நாடு அடிமைப்படுத்தப் பட்டிருந்தபோது, ரோமிற்கு எதிரான ஆயுதப் போராட்டக் கலகக்காரர்கட்கான மரணதண்டனையான துக்குமரத்தில் தொங்கவிடப்பட்டு மரணமடைந்தார் என மதம் பரப்பும் புராணக்கதை புத்தகமான புதிய ஏற்பாடு சுவிசேஷங்கள் புனைகின்றன.

கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இத்தை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.
கிறிஸ்து என்பதானது, மேசியா எனும் எபிரேய பட்டத்தின் கிரேக்கம். மேசியா என்றால் மேலே எண்ணெய் தடவப் பட்டவர். இஸ்ரேலின் யூத அரசன், படைத் தலைவர், ஆலயத் தலைமைப் பாதிரி பதவி ஏற்பின்போது எண்ணெய் தடவப் படுதலைக் குறிக்கும் சொல். மேலுள்ள பதவிகட்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்னும் பொருள். எபிரேய யூத மதத்தில் கடவுள் மனிதனாக வருதல் ஏதும் கிடையாது.
தங்கள் பிரித்தாளும் சூட்சிகளால் ஐரோப்பாவின் நாடுகள் உலகை அடிமைப் படுத்தியிருந்ததால், கி.பி., கி.மீ. என்று குறீயேடு பரவியது. ஆனால் இயேசு வாழ்விற்கு ஆதாரம் ஏதும் இல்லாததாலும், அப்படியே புதிய ஏற்பாடு சுவிசேஷக் கதைகள் அடிப்படையில் மத்தேயு சுவிப்படி பெரியஏரோது இரண்டு வயது குழந்தைகளைக் கொலை என்னும் பொ.கா.மு.4கிற்கு முன் அதாவது பொ.கா.மு6ல் பிறந்திருக்க வேண்டும். லூக்கா சுவிக் கதையில் சிரியா கவர்னர் கிரேனியு யூதேயாவை ஆட்சி செய்தபோது மக்கட் தொகை கணக்கீடு போது இயேசு பிறப்பு எனில், ஏரோது ஆர்சிலேயுவை நீக்கி பொ.கா.6ல் கிரேனியு யூதேயாவை ஆட்சி பெற்றபின் பொ.கா.8 வாக்கில் மக்கட் தொகை கணக்கீடு நடந்தது.
(பொ.கா.- பொதுக் காலம்-பன்னாட்டு வரலாற்று ஆசிரியர்கள் முன்பு பயன்படுத்தி கைவிட்ட கிபிஆங்கிலத்தில் Common Era-CE பொ.மு.-பொதுக் காலத்திற்கு முந்தையது- பன்னாட்டு வரலாற்று ஆசிரியர்கள் முன்பு பயன்படுத்தி கைவிட்ட கிமு ஆங்கிலத்தில் BeforeCommon Era-CE)
இயேசு கதைகளை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்பவர்கள் எழுதியுள்ள சுவிசேஷங்கள் புனைகின்றன, இவை அடங்கிய புதிய ஏற்பாடு என்ற புராணக்கதை புத்தககமாகவும், இத்தோடு உள்ளடக்கிய பைபிள்) என்ற பெரிய புராணக்கதை புத்தககமாகவும் கிடைக்கின்றது.

இயேசு கிறிஸ்து கிறித்து இயேசு பிறப்பு பற்றி மத்தேயும் லுக்காவும் புனைந்துள்ளதை இணைத்துப் பார்ப்போம்

நிகழ்வுகள் மத்தேயு விருப்பப்படியான சுவிசேஷம்நிகழ்வுகள் லூக்கா விருப்பப்படியான சுவிசேஷம்
1. தாய் பெத்லஹேமில் வாழ்ந்த மேரி
2 தந்தை பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப்
3 தந்தை முன்னோர் ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா- தாவீதுபரம்பரை
4 தாவீது உறவு முறை தாவீது- மற்றும் படைவீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் உறவின் மகன் சாலமோன் வரிசையில் ஏசு
5 தலைமுறை ஆபிரஹாமிலிருந்து 41வது தலைமுறை
6 பிறந்தது பெத்லஹேமில் யாக்கோபு மகன் ஜோசப் வீட்டில்
7 ஏசு பிறப்பின் போது யூதேயா ஆட்சியாளர் மன்னர் பெரிய ஏரோது- இவர் இறந்தது வ.கா.மு.4 இல்.
8 சூழ்நிலை சோகம்
9 வரலாற்று சம்பவம் ஏரோது மன்னர் இரண்டு வயதுக்கு கீழான குழந்தைகளைக் கொலை செய்தல்
10 கர்ப்ப அதிசயம் பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப் கனவில் வந்ததான தேவதூதன் சொன்னதாக
11 அதிசயக் கதைகள் கிழக்கிலிருந்த நாட்டு ஜோசியர்கள் நட்சத்திரம் பார்த்து, யூதர்களின் ராஜா பிறப்பைக் கணித்து, குழந்தை காண ஜெருசலேம் வந்து ஏரோது மன்னரைப் பார்த்து, பின் பெத்லஹேம் செல்ல- மீண்டும் அதே நட்சத்திரம் தோன்றீ வழிகாட்ட ஏசு வீடி சென்று பின் நேராக தன் நாடு சென்றனர்.
12 ஏசு பிறந்த பின்னர் கனவில் எச்சரிக்கப்பட ஏரோது மன்னர் குழந்தைகளைக் கொலை செய்தற்கு முன்பே அண்டைய நாடு எகிப்து ஓடல்
13 வாழ்வு -ஆரம்பம்-பின் பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப் ஏரோது மன்னருக்கு பயந்து எகிப்து நாட்டில் ஏசு வாழ்வு ஆரம்பம்.ஏரோது மரணத்திற்குப் பின் யூதேயா வராமல் கலிலேயா சென்று நாசரேத்தில் வாழ்ந்தனர்.
1 தாய் நாசரேத்தில் வாழ்ந்த மேரி
2 தந்தை நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்.
3 தந்தை முன்னோர் ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா-தாவீதுபரம்பரை
4 தாவீது உறவு முறை தாவீது வேறோரு வைப்பாட்டி மூலம் பெற்ற மகன் நாத்தன் வரிசையில் ஏசு
5 தலைமுறை ஆபிரஹாமிலிருந்து 57வது தலைமுறை
6 பிறந்தது பெத்லஹேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில்
7 ஏசு பிறப்பின் போது யூதேயா ஆட்சியாளர் சிரிய நாட்டின் கவர்னர் குரேனியு என்பவர்- இவர் பதவி ஏற்றது வ.கா.6 இல்.
8 சூழ்நிலை மகிழ்ச்சி
9 வரலாற்று சம்பவம் ரோம் மன்னர் ஆகஸ்டஸ் சீசர் ஆணையில் சிரிய நாட்டின் கவர்னர் குரேனியு கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு (வ.கா.8)
10 கர்ப்ப அதிசயம் நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்பிற்கு நிச்சயிக்கப்பட்ட மேரியினிடம் நேரில் வந்ததான தேவதூதன்
11 அதிசயக் கதைகள் அறுவடை கால பயிரைக் காத்திட ஆடு மேய்க்கும் சிறுவர், நள்ளிறவைல் வயலில் இருந்தபோது தேவதூதர்கள் வந்து கிரேக்க மொழியில் பாடல் பாடி ஆடி கொண்டாடினர்.
12 ஏசு பிறந்த பின்னர் குடும்பத்தில் முதல் மகன் ஆண் மகன் என்பதற்காக ஜெருசலேம் யூதக் கடவுள் ஆலயத்தில் யூதப் புராண சட்டப்படி மிருகபலி கொலை செய்ய தம்பதிகள் சென்றனர்
13 வாழ்வு -ஆரம்பம்-பின் நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப், மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக பெத்லஹேம் வந்து பின் மிருகக் கொலை/பலிக்காக ஜெருசலேம் சென்று வந்தபின் சொந்த ஊர் நாசரேத்தில் வாழ்ந்தனர்.
பைபிள்-(விவிலியம்) இவை முழுவதுமாக ஆன்மிகக் கருத்துக்களோ இறையியற் நோக்கு கொண்டது அல்ல, பெரும்பாலும், அரசியல் -ஆக்கிரமிப்பு போன்றவற்றை இறைவன் பெயரில் மிகப்பிற்காலத்தில் அரசியல் நோக்கில் புனையப் பட்டவையே ஆகும்.
நாம் காணும் பைபிள்-(விவிலியம்) 16ம் நூற்றாண்டு வரை ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ சர்ச்சினால் சிறைப் படுத்தப் பட்டுயிருந்த்தது, பைபிள் நூலைப் பதிப்பித்த பலர் மதத்திலுரிந்து வெளியேற்றம் ம்ற்றும் மரணதண்டனை என கொலையும் சர்ச்சினால் செய்யப்பட்டனர். மறுப்பியல் (ப்ரோட்டஸ்டண்ட்) அணியினரின் கிளர்ச்சியினால் அதிலும் புத்தகங்கள் மட்டுமே (sola scripture) என்ற கோரிக்கையினால் பைபிள்-(விவிலியம்) சுதந்திரம் பெற்றது.
The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus. Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary NewYork அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறிதி செய்கிறார்.

4 comments:

  1. நாங்கள் நேர்மையாக இரண்டையுமே தருகிறோமெ என கிறிஸ்துவர்கள் சொன்னால் என்ன பதில் சொல்வீர்கள்.

    ReplyDelete
  2. நாசரேத்துக்கும் பெத்லஹேமிற்கும் தூரம் என்ன?

    நிச்சயம் செய்யப்பட்ட நிலையிலான பெண்ணுடன் - 1000 வருடம் முன்பான முன்னோர் ஊருக்கு போக வேண்டுமா? ஏன் ஆபிராகாமின் மெசபடோமியாவின் "ஊர்" போகவில்லையா?

    மாயாண்டி

    ReplyDelete
  3. //நேர்மையாக இரண்டையுமே தருகிறோமெ என கிறிஸ்துவர்கள் சொன்னால் என்ன பதில் //

    பெரிய ஏரோதிற்கு 2 வருடம் முன் எனில் பொ.மு. 6 ல் பிறப்பு.
    கிரேனியூ கவர்னர் ஆக இர்ந்தபோது மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது எனில் பொ.கா. 6 ல் பிறப்பு, இரு வேறு மனிதர்கள் 12 ஆண்டு இடைவெளியில் பிறந்தனர்.

    ஆனால் பட்டியல்படி மத்தேயுவின் ஏசு 41வது தலைமுரை, லூக்காவின் ஏசு 57வது தலைமுறை. 400 வருடம் பின்பு தான் பிறக்க வேண்டும்.

    எது சரி- எது தவறு- ஏன் இரண்டுமே தவறா?

    ReplyDelete
  4. Quiet Interesting

    ReplyDelete

பாதிரியார், கன்னியாஸ்திரிகள் ஆசிரியர் பணி சம்பளத்துக்கு வரி சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்

பாதிரியார், கன்னியாஸ்திரிகள் ஆசிரியர் பணி சம்பளத்துக்கு வரி -சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம் புதுடில்லி, நவ.8- தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும்...