Sunday, June 24, 2012

ஆபிரகாம் கட்டுக்கதைகளும், யாத்திராகமம்- விடுதலைப் பயணம் கட்டுக்கதையே


 ஆதியாகமம் 11:28 ஆரான் தான் பிறந்த நாட்டில் ஊர் என்ற கல்தேயர் நகரில் தன் தந்தை தெராகிற்கு முன்பே இறந்தான். 29 ஆபிராமும், நாகோரும் பெண் கொண்டனர். ஆபிராமின் மனைவி பெயர் சாராய். நாகோரின் மனைவி பெயர் மில்கா. மில்கா ஆரானின் மகள். மில்கா, இசுக்கா ஆகியோரின் தந்தை ஆரான். 

http://en.wikipedia.org/wiki/Chaldea    Chaldeans -கல்தேயர் -இப்பெயர்களே  பொ.மு. 1000- 600 இடையிலே தான். இன்னுமொரு கதை ஆபிரகாம் கதையில் - 
   இயேசு ஒரே நேரத்தில்                                                                           தாய் குதிரை மற்றும் குட்டி மீது அமர்ந்து                                                                        ஜெருசலேம் வந்தார்.  

ஆதியாகமம்24: 29-30 அவளுக்கு ஒரு சகோதரன் இருந்தான். அவன் பெயர் லாபான். அவள் சொன்னதையெல்லாம் அவன் கேட்டான். அவன் அவளது காதணிகளையும் கடகங்களையும் பார்த்துவிட்டு கிணற்றருகே ஓடினான். அங்கு கிணற்றருகில் ஒட்டகங்களையும், வேலையாளையும் கண்டான்.   31 அவனிடம், “ஐயா, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே உங்களை எங்கள் வீட்டிற்கு வரவேற்கிறோம். இங்கே வெளியே நீங்கள் நின்றுகொண்டிருக்க வேண்டாம். நீங்கள் இளைப்பாற ஒரு அறையை ஏற்பாடு செய்துள்ளேன். உங்கள் ஒட்டகங்கள் தங்கவும் ஏற்பாடு செய்துள்ளேன்” என்றான்.  32 ஆபிரகாமின் வேலைக்காரன் அந்த வீட்டிற்குப் போனான். லாபான் அவனுக்கு உதவினான். ஒட்டகங்களுக்கு உணவு கொடுத்தான்.

ஒட்டகங்களை மனிதன் பழக்கப்படுத்தி பயன்படுத்தியதே பொ.மு. 9ம் நூற்றாண்டில் தான். ஆபிரகாம், மோசே தாவீது காலத்திற்கு எல்லாம் பின்னே தான். 

ஆதியாகமம்: 12:10 – 20 கர்ட்தர் தேர்ந்தெடுத்த கானான் தேசத்தில் பஞ்சம் வர எகிப்து செல்ல எகிப்து மன்னன் ஆபிரகாம் மனைவி சாராளை காதலோடு நோக்குவதைத் தடுக்க சாராளைத் ஆபிரகாம் தங்கை என்றாராம்.  ஆதியாகமம்20:1-11பிறகு மீண்டும் இதே கதை கேரார் நாட்டில். கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்குவிடமும் சாராள் தங்கை என்றதாக கதை  

                                                               
75 வயதில் சாராள் அழகில்                        90 வயதில் சாராள் அழகில்
 எகிப்து மன்னர் மயங்கியபோது            பிலிஸ்திய  மன்னர் மயங்கியபோது இந்த இரண்டு கதையில் ஆபிரகாமின் மனைவி கிழவி, இரண்டாவது கதையின் போது மாதவிடாய் நின்றுபோனவள். ஆனால் ஒரு நாட்டு ராஜா கிழவியை காதலுடன் பார்த்ததாக் கேவலமான கதை.  

ஆபிரகாம் மகன் ஈசாக்கும் இதே கதை அதுவும் இதே  கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்குவிடமும் எனக் கதை ஆதியாகமம்26:1-6

ராஜா அபிமெலேக்கு என்பது பிலிஸ்தியப் பெயர். பொ.மு.12- 8 ஆம் நூற்றாண்டிற்குப் பின் வந்தவர்கள். ( ஆனால் ஆபிரகாம் பொ.மு.20ம் நூற்றாண்டுகாரர்)
ஆபிரகாம் – இசாக் கதை பற்றி யூதக் கலைகளஞ்சியம் சொல்வது -இந்தக் கதைகள் பிதாக்கள் கர்த்தரிடம் செல்வாக்குடையவர்கள்-பாதுகாப்பு பெற்றவர்கள்,  மனைவிகள் அழகானவர்கள் எனக்காட்ட புனையப்பட்ட கதைகள்
Jewish Encyclopedia,
“From the point of view of the history of culture these episodes are very instructive. But it is not very probable that Abraham would have run the risk twice. Moreover, a similar incident is reported in regard to Isaac and Rebecca (Genesis 34:6-11). This recurrence indicates that none of the accounts is to be accepted as historical; all three are variations of a theme common to the popular oral histories of the Patriarchs. That women were married in the way here supposed is not to be doubted. The purpose of the story is to extol the heroines as most beautiful and show that the Patriarchs were under the special protection of the Deity.”
images?q=tbn:ANd9GcQrkWG1vqY7lDNPNUW_kUbrlOR-3DQQaAN0cWEX28Z4Y92biOAtxg  images?q=tbn:ANd9GcSdd8XFP7FLL_0LwNeS1U5PuuIMfdUAQ9PWFQB5C2_dgv3O4anv images?q=tbn:ANd9GcSD6i6yZutlw4RPZxFZZq4NLMb0LX-GOKNh8lt6L-CQrn8RC2mo
பைபிளின் அடிப்படை ஆணிவேர் கதை- எபிரேயர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள்; இன்றைய இஸ்ரேல் – கானான் தேசம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு. பாபிலோனின் அன்னியரான ஆபிரஹாம் கர்த்தரால் தேர்ந்தெடுத்து அவர் வாரிசுகளுக்கு மட்டும் அரசியல் ஆட்சியுரிமை. பேரன் காலத்தில் பஞ்சம் வர தன் குடும்பத்தோடே 70 பேராக செல்கின்றனர். அங்கே சில காலம் வாழ்ந்தபின் எகிப்தியர் வேகமாக வளர ஆண்குழந்தைகளை கொலை சுய்யுமாறு எகிப்து மன்னர் சொல்ல தாதிகள் செய்யவில்லை.  எபிரேயர்களால் ஆண் குழந்தைகளை வளர்க்க முடியாத சூழ்நிலையில் மோசேயின் தாய் குழந்தையை விடுடு, எகிப்து அரச குடும்பத்தில் வளரும்படி செய்கிறார். கர்த்தர் சொல்ல மோசே தலைமயில் 30 லட்சம் எபிரேயர்கள் எகிப்திலிருந்து வெளியேரி வந்ததாகக் கதை.
வழியில் இர்ந்த செங்கடல் இரண்டாகப் பிரிந்து வழிவிட ஒரே இரவில் 30 லட்சம் எபிரேயர் அப்பக்கம் செல்ல துரத்தியவர்களை கடல் விழுங்கியதாம். பின்னர் சாக்கடலும் வழிவிட்டதாம். பின் கானான் நாட்டு மண்ணின் மைந்தர்களை கொலை செய்து அடிமைப்படுத்தி எபிரேயர்கள் தங்கள் பகுதியை கைப்பற்றியதாகக் கதை.
அப்போஸ்தலர் நடபடிகள்7:5 இங்குக் கடவுள் அவருக்கு ஓர் அடி நிலம்கூட உரிமையாகக் கொடுக்கவில்லை. அவருக்குப் பிள்ளையே இல்லாதிருந்தும் இந்த நாட்டை அவருக்கும் அவருக்குப் பின் வரும் அவர் வழி மரபினருக்கும் உடைமையாகக் கொடுக்கப்போகிறேன் என்று கடவுள் வாக்குறுதி கொடுத்தார்.6 மேலும், அவர்தம் வழிமரபினர் வேறொரு நாடடில் அன்னியராய்க் குடியிருப்பர்.நானூறு ஆண்டுகள் அவர்கள் அங்கே அடிமைகளாகக் கொடுமைப்படுத்தப்படுவார்கள் என்று கடவுள் கூறியிருந்தார்14 பின்பு யோசேப்பு தம் தந்தை யாக்கோபையும் தம் உறவினர் அனைவரையும் அங்கு வருமாறு சொல்லி அனுப்பினார். அவர்கள் எழுபத்தைந்து பேர் இருந்தனர்.15 யாக்கோபு எகிப்து நாட்டுக்குச் சென்றார். அவரும் நம் மூதாதையரும் அங்கேயே காலமாயினர்.
ஆதியாகமம்46:2726 யாக்கோபின் புதல்வர்களுடைய மனைவியரைத் தவிர அவரது வழிமரபாக எகிப்தில் குடிபுகுந்தோர் மொத்தம் அறுபத்தாறுபேர்.27எகிப்து நாட்டில் யோசேப்பிற்குப் பிறந்த புதல்வர்களோ இருவர். ஆகவே எகிப்தில் குடிபுகுந்த யாக்கோபின் குடும்பத்தார் எல்லோரும் எழுபதுபேர் ஆவர்.
போனது 70 பேர். திரும்பிவந்தது -
எண்ணாகமம் 1:45 ஆக மொத்தம் இஸ்ரயேலில் மூதாதையர் வீடுகள் வாரியாக இருபது வயதுக்கும் அதற்கு மேலும் போருக்குப் போகத்தக்கவர்களாக எண்ணப்பட்ட இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கை:46 மொத்தம் எண்ணப்பட்டோர் ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்றைம்பது பேர். 6,03550
எண்ணாகமம்26:51ஆக, இஸ்ரயேலின் ஆண் மக்கள் தொகை ஆறு லட்சத்து ஓராயிரத்து எழுநூற்று முப்பது-6,01,730
யாத்திராகமம்12:37இஸ்ரயேல் மக்கள் இராம்சேசிலிருந்து சுக்கோத்துக்கு இடம் பெயர்ந்து சென்றனர். இவர்களில் குழந்தைகள் தவிர நடந்து செல்லக்கூடிய ஆடவர் மட்டும் ஏறத்தாழ ஆறு லட்சம் பேர் ஆவர்.-6,00,000.
இது லேவியர் ஜாதி இல்லாமல், பின் மனைவிகள், குழந்தைகள், கிழவர்-கிழவிகள்.
70 பேர் இரண்டே தலைமுறையில் 30 லட்சம் ஆனர்.
யாத்திராகமம் 1:.8இவ்வாறிருக்க, யோசேப்பை முன்பின் அறிந்திராத புதிய மன்னன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.9 அவன் தன் குடிமக்களை நோக்கி, ″ ″ இதோ, இஸ்ரயேல் மக்களினம் நம்மை விடப் பெருந்தொகையதாயும் ஆள்பலம் வாய்ந்ததாயும் உள்ளது.
15எபிரேயரின் மருத்துவப் பெண்களான சிப்ரா, பூவா என்பவர்களிடம் எகிப்திய மன்னன் கூறியது:16 ″ ″ எபிரேயப் பெண்களின் பிள்ளைப் பேற்றின்போது நீங்கள் பணிபுரிகையில் குறிகளைக் கவனியுங்கள்: ஆண்மகவு என்றால் அதைக் கொன்றுவிடுங்கள்: பெண்மகவு என்றால் வாழட்டும்″ ″ .17 ஆனால், அந்த மருத்துவப்பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால் எகிப்திய மன்னன் தங்களுக்குக் கூறியிருந்தபடி செய்யவில்லை. மாறாக, ஆண் குழந்தைகளையும் அவர்கள் வாழவிட்டார்கள்.
-21இம்மருத்துவப் பெண்கள் கடவுளுக்கு அஞ்சியிருந்ததால், அவர் அவர்கள் குடும்பங்களைத் தழைக்கச் செய்தார்
யாத்திராகமம்2:லேவி குலப்பெண் ஓர் ஆண்மகவை ஈன்றெடுத்தாள்: அது அழகாயிருந்தது என்று கண்டாள்: மூன்று மாதங்களாக அதனை மறைத்து வைத்திருந்தாள்.3 இதற்கு மேல் அதனை மறைத்து வைக்க இயலாததால், அதனுக்காகக் கோரைப்புல்லால் பேழை ஒன்று செய்து அதன்மீது நிலக்கீல், கீல் இவற்றைப் பூசினாள்: குழந்தையை அதனுள் வைத்து நைல்நதிக் கரையிலுள்ள நாணல்களுக்கிடையில் விட்டுவைத்தாள்.4 அதற்கு என்ன ஆகுமோ என்பதை அறிந்துகொள்ளக் குழந்தையின் சகோதரி தூரத்தில் நின்று கொண்டிருந்தாள்.5 அப்போது பார்வோனின் மகள் நைல்நதியில் நீராட இறங்கிச் சென்றாள். அவள் தோழியரோ நைல் நதிக்கரையில் உலாவிக்கொண்டிருந்தனர். அவள் நாணலிடையே பேழையைக் கண்டு தன் தோழி ஒருத்தியை அனுப்பி அதை எடுத்தாள்: அதைத் திறந்தபோது ஓர் ஆண் குழந்தையைக் கண்டாள்: அது அழுதுகொண்டிருந்தது.6 அதன் மேல் அவள் இரக்கம் கொண்டாள்.
இந்த குழந்தை மோசேயின் 80வது யயதில் யாத்திரை எனக் கதை.
அப்போஸ்தலர் நடபடிகள்7:5,6,14 மேலே சொன்னவை. இங்கே 70 பேர் 400 வருடம் .
பவுலின் கலாத்தியர் கடிதம் 3:17 ல் 430 வருஷம்
மோசே இறக்க யோசுவா தலைமியில் வந்தவர்கள் 12 கோத்திரங்களும் இஸ்ரேலைப் பிரித்துக் கொண்டதாகக் கதை. அதில்
யோசுவா 17:1 யோசேப்பின் முதல் மகனான மனாசேயின் குலத்திற்குக் கிடைத்த நிலப்பகுதியின் விவரம்: மனாசேயின் முதல் மகனும் கிலயாதின் தந்தையுமானமாக்கிர் போர்வீரனாக இருந்ததால் அவனுக்குக் கிலயாதும் பாசானும் அளிக்கப்பட்டன.
இந்த மாக்கீர் கதையைப் பார்ப்போம்.
ஆதியாகமம் 50:22 யோசேப்பும் அவர் தந்தையின் வீட்டாரும் எகிப்தில் குடியிருந்தனர். யோசேப்பு நூற்றுப்பத்து ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார்.23 எப்ராயிமின் மூன்றாம் தலைமுறையைப் பார்க்கும் வரையிலும் மனாசேயின் மகன் மாக்கிரின் குழந்தைகள் தம் மடியில் விளையாடும் வரையிலும் யோசேப்பு உயிர் வாழ்ந்தார்.
 1.ஜோசப் தலைமுறை- மகன் - 2.மானசே-பேரன் - 3.மாக்கிரின் போது திரும்பி வந்தாயிற்று
ஜோசப் உயிரோடு இருக்கும்போதே "மாக்கீர் குழந்தைகள் தம் மடியில் விளையாடும் வரையிலும் யோசேப்பு உயிர் வாழ்ந்தார்."
ஜோசப் உயிரோடு இருந்தபோது மாக்கீர் குழந்தை பெற்றாயிற்று; கதைப்படி 40 வருடம்
 பயணம்- பின் மாக்கீர் இஸ்ரேல்
சென்றதைப் பார்த்தோம். 
எகிப்தினர் ஆண்குழந்தைகளை கொலை செய்த்தாக வேறு கதை. 120 வயதில் மோசே இஸ்ரேல் வருமுன் இறந்ததாக் கதை, அப்படி என்றால் அவர் மாகிரினும் வயதில் பெரியவர், அதாவது குழந்தைக் கொலை கதைகள் எல்லம் பொய்.

உண்மை என்ன?

இஸ்ரேல் தலை நகர்- டெல் அவிவ் பல்கலைகழக அகழ்வாராய்ச்சித் துறைத் தலைவர்.
பைபிள்-குலைக்கப் படுகிறதா -அகழ்வாய்வு உண்மைகளில்? -நேர்மையான அகழ்வாராய்ச்சிகள் ஆபிரஹாம் முதல் சாலமன்
வரை அனைத்துமே தவறு. ஜெருசலேமில் சாலமன் காலத்திற்குப் பிறகு தான் மக்கள் குடியேற்றமே நடைபெற்றன. இவற்றை
சொல்லும் நூல் -
The Bible Unearthed :Archaeology’s New Vision of Ancient Israel and the Origin of Its Sacred Texts எழுதியவர்Finkelstein, Israel, and Silberman, Neil Asher, Simon & Schuster 2002,
ISBN 0-684-86912-8
images?q=tbn:ANd9GcQKTd8J-ltk9SQS8WHiqk1z2vDmwD9x_x40BKHf6NbALej9zzWI
http://www.mediafire.com/view/?y177tc2oa3tegam

இந்நூல் சொல்வது-எகிப்க்து சென்றது 40 வருடம் 30 லட்சம் பேர் பயணம் எல்லாமே கட்டுக் கதை.

ஆபிரகாம் கதையின் அடிப்படை/

ஆதியாகமம்15:18 அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, “எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள 19கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20 இத்தியர், பெரிசியர், இரபாவியர் 21 எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்” என்றார்.
ஆதியாகமம்20:16 “உங்கள் தேவனாகிய கர்த்தர், உங்களுக்குத் தருகின்ற தேசத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ளப் போகிற நகரங்களில் இருக்கின்ற ஒவ்வொருவரையும் கொன்றுவிட வேண்டும். 17 அங்குள்ள ஜனங்கள் இனங்களான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகியவற்றை முழுமையாக அழித்துவிட வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் இதைச் செய்யக் கட்டளையிட்டுள்ளார்.  

  ஒரு நாட்டில் வாழ்ந்து வரும் மண்ணின் மைந்தரைக் கொன்று அன்னியரை குடிவைத்தர் என்னும் கொள்கையே கடவுள் விரோத அருவருப்பனாதாக உள்ளது.
இஸ்ரேல் சுற்றி எழுந்த அகழ்வாய்வுகள் பைபிள் புராணக்கதைகளை முழுமையாக தவறு என்று நிருபிக்கிறது. அரசியல் ஒற்றுமை ஏற்படுத்த பொ.ச.300௨00 இடையே எழுந்தது தான் பழைய ஏற்பாடு என்னும் யூதர்களின் பைபிள். ஆபிரகாம் கதை வெற்று புனையல், அவ்வாறு ஒரு மனிதன் வாழ்ந்தார் என்பதற்கு ஆதாரமில்லை, அதிலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதெல்லம் தெளிவான சிந்தையுள்ளோர் யாரும் இவ்வாறு  யாரும் ஏற்க இயலாத வெற்று கற்பனை.

14 comments:

 1. ஒரு பெரிய ஆய்வு.

  ஓரளவு சொன்ன பார்த்ததில் நீங்கள் சொன்ன வசனங்கள் சிலதைப் பார்த்தேன்.

  யூதர்களின், பைபிளின் அடிப்படை நம்பிக்கையை கேள்விக்குறி ஆக்குகிறீர்கள். பதிலளிப்பார்களா கிறிஸ்துவர்களும்

  ReplyDelete
 2. தாத்தா தலைமுறையில் எகிப்து வந்தனர். பேரன் பரம்பரையில் திரும்பி வந்தனர்.

  பாவம் கர்த்தர்! பாவர்ம் பரிசுத்தா ஆவி! இப்படி தப்பு தப்பாய் ஏன் உளறுகிறது. ஆனால் இதற்கும் குஜா தூக்கும் பாதிரியார்கள்.


  http://www.tektonics.org/af/exoduslogistics.html

  //After the first generation, let’s assume that his children start intermarrying, so no one is added to the clan via that route.

  Generation// Starting population + Births - Deaths = Population
  2// 24 + 108 - 0 = 132
  3 // 132 + 594 - 2 = 724
  Now, if this rate continued, the population at the end of 430 years would be over 50 billion (if you don’t believe me, do the math). But, to save that Christmas money, let’s assume that the Mustrealites start getting conservative in the 4th generation, and only have 4 kids per family, or 1.15 per person. (The numbers are rounded, so they may not add up exactly.)

  Generation Starting population + Births - Deaths = Population
  4 // 724 + 869 - 22 = 1,535
  5 // 1,535 + 1,765 -108 = 3,191
  6 // 3,191 + 3,670 - 594 = 6,267
  7 // 6,267 + 7,208 - 833 = 12,643
  8 // 12,642 + 14,539 - 1,765 = 25,417
  9 // 25,416 + 29,229 - 3,670 = 50,976
  10// 50,976 + 58,622 - 7,208 = 102,390
  11// 102,390 + 117,748 - 14,539 = 205,599
  12// 205,599 + 236,439 - 29,229 = 412,809
  13// 412,809 + 474,731 - 58,622 = 828,918
  14// 828,918 + 953,256 - 117,748 = 1,664,426
  15// 1,664,426 + 1,914,090 - 236,439 = 3,342,077
  At the end of 15 generations, which would not even take the full 430 years needed, the total population is well over the 3 million most commentators suggest as the total population, and without any strain to credulity, or even any miraculous intervention. Skeptical objections to the growth of the Israelite population are simply unreasonable.

  Objection: By this logic, if Joseph's clan can grow from 70 to 2.5 million in 430 years then surely there is nothing to stop every other man's clan from doing the same.//

  மாயாண்டி

  ReplyDelete
 3. நீங்கள் மாக்கீர் ஒரு நபரின் தலைமுறையை மட்டும் காட்டுகிறிர்களே.


  வேறு ஏன் மோசேயின் தலைமுறையைப் போட்டு சரி பார்த்துப் பாருங்கள்

  கர்த்தரை சோதிக்காதீர்கள். பரீசுத்த ஆவியை பழிக்காதீர்கள்

  ReplyDelete
 4. நண்பர் தமிழர் - முழுமையாக பைபிளை ஆய்வு நோக்கில் சொன்னால் //கர்த்தரை சோதிக்காதீர்கள். பரீசுத்த ஆவியை பழிக்காதீர்கள்//
  ஆனால் ஒரு வரியைப் பிடித்து அதை ஆதரிக்க மழுப்பல்வாதிகள்விடும் பொய் பார்த்தீர்களா?

  தேவப்ரியா நின்ங்கள் வேறொரு சந்ததி மூலம் இரண்டு தலைமுறை என்பதை நிருபியுங்கள்.

  ReplyDelete
 5. பைபிளின் பழைய ஏற்பாஅட்டு கதைகளின் ஆணிவேர் யாத்திரை- கர்த்தர் மீட்டு வந்தார்- அதையே தவ்று என்கிறீர்களே.

  குரான்ம் யாத்திரையை 90 முறை சொல்கிறதாம்?

  நல்ல கதை

  ReplyDelete
 6. இந்த விஞான் உலகில் இக்கதைகளை நம்புபவர்கள்
  அதுவும்
  அறிவியல்
  பொய் என்ற பின்னும் உள்ளரோ?

  ReplyDelete
 7. இந்த எகிப்தில் எபிரேயர் துன்பப் படுவர் என ஆபிரகாமிடமே கர்த்தர் சொன்னதாக் உள்ளதில் 4 தலைமுறை என வருகிறது.

  போன தலைமுறையும், வரும் தலைமுறையும் கழித்தால் 2 தான்.

  யாக்கோபு- ஜோசப்- மானசே - மாக்கீர்.

  ஆனால் மாக்கீர் ஜோசப் உயிரோடு இருந்தபோதே பிறந்தார் எனில் ஆண்குழந்தைக் கொலை, மோசே வேறு வீட்டில் வாழல் எல்லாம் வெற்று கற்பனைக் கட்டுக்கதை.

  ReplyDelete
 8. //4 தலைமுறையில் எகிப்திலிருந்து திரும்புவீர் என கர்த்தர் சொன்னார்.//

  அந்த வசனம் தரவும்.

  காமெடி 30 லட்சம் ஆக கணக்கு.

  ReplyDelete
 9. அடடடா இவங்க அப்படியே ஒழுங்கு, வானரப்படையோடு ராமர் இலங்கைக்கு சென்றார், சீதையை மீட்டார் என்கிறீர்களே, அது என்ன யாத்திரை? அதுக்கு இது எவ்வளவோ தேவல...

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. http://miraclefaith123.blogspot.com/2014/05/1_12.html

  ReplyDelete
 12. http://miraclefaith123.blogspot.com/2014/05/2_12.html

  ReplyDelete
 13. http://miraclefaith123.blogspot.com/2014/05/3.html

  ReplyDelete
 14. http://www.apologeticspress.org/apcontent.aspx?category=6&article=796

  ReplyDelete