Monday, August 6, 2012

இயேசு கிறித்து நல்லவரா?


மாற்கு 10:17 இயேசு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, ' நல்ல போதகரேநிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? ' என்று அவரைக் கேட்டார்.18அதற்கு இயேசு அவரிடம், ' நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்?கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவருமில்லையே. 


Jesus&women  
மாற்கு 7: 24 இயேசு எழுந்து அங்கிருந்து புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை.25 உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது.26 அவர் ஒரு கிரேக்கப்பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார்.27 இயேசு அவரைப் பார்த்து, ‘ முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.28 அதற்கு அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே ‘ என்று பதிலளித்தார்.29 அப்பொழுது இயேசு அவரிடம், ‘ நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம்மகளை விட்டு நீங்கிற்று ‘ என்றார்.30அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார். 
 ஏசு தன் சீடர்களொடு இயங்கியபோது நடந்து கொண்டதையும் ஒன்றிணைத்துப் பார்ப்போம்.முடிவு.
மத்தேயு: 5:44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.
 மத்தேயு-1521 இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார்.22அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, ‘ ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள் ‘ எனக் கதறினார்.23 ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, ‘ நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும் ‘ என வேண்டினர்.24 அவரோ மறுமொழியாக, ‘ இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற்போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன் ‘ என்றார்.25 ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, ‘ ஐயா, எனக்கு உதவியருளும் ‘ என்றார்.26 அவர் மறுமொழியாக, ‘ பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல ‘ என்றார்.27 உடனே அப்பெண், ‘ ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே ‘ என்றார்.28 இயேசு மறுமொழியாக, ‘ அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும் ‘ என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.


லுக்கா சுவி எனப்படும் புனையலை எழுதியவர் இந்த சம்பவத்தை முழுமையாக விட்டு விட்டார்-ஏன்? ஒரு கத்தோலிக்க பேராசிரியரே சரியான காரணம் தந்துள்ளார்.As a Gentile, Luke found the Story of Syro Phonician Women (and especially the remarks about Dogs) offensive in Mark7:-30 and therefore left it out.
Companion to Bible, Vol-2 NewTestament P-30, Author K.Luke, Theological Publication of India, Bangalore. (
இந்த நூல் இரண்டு கத்தோலிக ஆர்ச்பிஷப்பிடம் ரோமன் கத்தோலிகக் கோட்பாடுகளுக்கு ஒத்துள்ளது- அச்சிடலாம், தடையில்லை என முத்திரை பெற்ற நூல்.Nihil obstate and Imprimatur)

images

லுக்கா கதாசிரியர் ஒரு யூதரல்லாதவர், கிரேக்கப் சிரிய பெனிசிய பெண்ணிடமன சம்பவத்தில் ஏசு யூதரல்லாதவர்களை நாய் என்பதையும் வீட்டினர் சிந்தும் எச்சிலை உண்பதும் என்பவைமிகுந்த வேதனை தருபவை -அருவருப்பானவை என்பது உணர்ந்து நீக்கி விட்டார்.

penitents2_1382345c.jpg


 இயேசு சொல்லியதானதாக மத்தேயு சுவியிலுள்ள மலைப் பிரசங்கம், இதுவே இரண்டு மூன்றாகப் பிரித்து தரையில் செய்ததாக லுக்கா சுவிக் கதாசிரியர் புனைந்துள்ளார்.இந்த மலைப் பிரசஙத்தில் ஏசு நிறைய ந்ல்ல போதனைகள் கூறுவதாக அமைந்துள்ளது. அவற்றில் சில நாம் காண்போம்.


'நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம். ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம்வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ' - மத்தேயு 5:39-41 
'இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்இயேசு அவனை நோக்கி: நான் தகாத விதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.- யோவான் : 18:22-23 
 கர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் (Wine) மதுவையும் (Strong Drink) குடிக்கவேண்டாம். பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம்பண்ணும்படிக்கும், கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். - லேவியராகமம் : 10: 8 - 1
 மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது. இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். (Wine) திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் (Wine) திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு. ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதன்படி செய்யுங்கள் என்றாள். யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார். அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டு போங்கள் என்றார். அவர்கள் கொண்டுபோனார்கள். அந்தத் (Wine) திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் (Wine) திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து: எந்த மனுஷனும் முன்பு நல்ல (Wine) திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல (Wine) ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான். (யோவான் 2:1-10)


நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம் குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் - Wine - திராட்சரசமும் கூட்டிக்கொள். - 1 திமோத்தேயு 5:23 
எப்படியெனில், யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் (Wine) திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான். அதற்கு நீங்கள்: அவன் பிசாசுபிடித்திருக்கிறவன் என்கிறீர்கள். மனுஷகுமாரன் போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார். அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் - Winebibber - மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள். - லூக்கா 7:34, மத்தேயு 11:19  

 வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாதுவாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். - மத்தேயு 15:11


 தந்தையின் மரணத்திற்கு செல்லக்கூடாது என்று தடுத்த இயேசு:

அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார். - மத்தேயு - 8 :21 - 22
 இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள். அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான். தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார். - மத்தேயு 12 : 56 - 50

 மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது. இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திராட்சரசங்குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். அதற்கு இயேசு 'ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை' என்றார்.  யோவான் 2 : 1-4




images (2) 

ஏசு தன் சீடர்களொடு இயங்கியபோது நடந்து கொண்டதையும் ஒன்றிணைத்துப் பார்ப்போம்.முடிவு.
மத்தேயு: 5:44. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள். 
  ஏசு வாழ்வில் நடந்தது
மத்தேயு: 10: . 5. இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால், நீங்கள் புறஜாதியார் நாட்டுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், 6. காணாமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். 7. போகையில், பரலோகராஜ்ஜியம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.send 
 ஏசு வாழ்வில் நடந்தது

ஏசு வாழ்வில் நட்ந்தது-பகைவருக்காக ஜெபம்
யோவான்: 17நீர்,என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள்.9. நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர்எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்;
20. நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னைவிசாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்

 ஏசு வாழ்வில் நடந்தது

பகைவருக்காக ஜெபம் போய் சாபம்.11. எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள். 12. ஒரு வீட்டுக்குள் நீங்கள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள். 13. அந்த வீடு பாத்திரமாயிருந்தால் நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால் நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்கு திரும்பக்கடவது; 14. எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள். 15. நியாயத்தீர்ப்பு நாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

மாற்கு 15: 34நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது.34பிற்பகல் மூன்று மணிக்கு இயேசுஎலோயி,எலோயிலெமா சபக்தானி? ' என்று உரக்கக் கத்தினார்.இறைவாஇறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்? ' என்பது அதற்குப் பொருள்.37இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார்.



மத்தேயு:24: 23. ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேல் பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.


மத்தேயு:27: 34. இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 35. வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.
மத்தேயு:27:27. மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்கு வரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். 28.பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும். 29. அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக்கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். 30. அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதை பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். 31. வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள்.



ஒரு இயக்கத் தலைவன் தன் தொண்டர்களை சரியாக மதிப்பிட்டு பணிகளைப் பிரித்துத் தர வேண்டும். யூதாஸ் ஸ்காரியோத்துவைத் பணப்பை வைத்துக் கோள்ள ஏசு பணித்தாராம். இவர் தலைமை பண்பு இங்கு குறைபாடுள்ளது என்பது தெரியும்.
யோவான்: 13: 26. இயேசு பிரதியுத்தரமாக, நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோஅவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகியயூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்.27. அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான்.
29. யூதாஸ் பணப்பையை வைத்துக்கொண்டிருந்தபடியினால், அவன் போய், பண்டிகைக்குத்தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது, தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும்படிக்காவது,இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள்.
யோவான்: 12:4. அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப்போகிறவனுமாகியசீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து,5. இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான்.6. அவன் தரித்திரரைக் குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன்திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச்சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்
யூதரல்லாதவர்களைப் பன்றி-நாய் என்பவர், தலைமைப் பண்பு இல்லாதவர். சமாரியரிடம் நேரடியாக கேலி பேசியவர். தினமும் நிமிடத்திற்கு 400-600 ஆடு பலியும், தலைமைப் பாதிரி 88 புறா சாப்பிடச் சொல்லும் சட்டங்கள் முழுமையாக தொடரும் என்கிறார்.

1 comment:

  1. வணக்கம் சகோ,

    அருமையான் பதிவு.வரலாற்றில் இயேசு ஒருவர் வாழ்ந்தார் என்பதை நான் ஏற்பது இல்லை.அதிக பட்சம் இப்படி ஒருவரின் மரபுக் கதை சார்ந்த பேகன் மதம் கிறித்தவ்த்திற்கு முன்பே இருந்தது என்று மட்டுமே சொல்வேன்.

    பாலின் கடிதங்களில் இயேசுவின் வாழ்வில் நட்ந்த சம்பவங்கள் குறிப்பிடப் படாமல் இருப்பதும்,இக்கடிதங்கள் சுவிசேசங்களுக்கு முந்தையதே என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க்கன.

    யூதர்களின் பழைய ஏற்பாட்டுக்கு தகுந்தபடி 4 சுவிசேஷங்களை எழுதி இம்மனித்ரை மேசியாவாக சித்தரிக்கும் முயற்சி என்ற கண்ணோட்ட்டத்தில் சுவிசேசங்களைப் பார்ப்பது என் வழக்கம்.

    இந்த சுவிசேசங்கள் எழுதியவர்கள் இயேசுவின் சீடர்கள் அல்ல,மேலும் ஒருவரை ஒருவர் அறியாதவ்ர்களாக இருந்ததினால் மட்டுமே இயேசுவை சித்தரிப்பதில்,வரலாற்றில் விளக்குவதில் முரண்படும் கருத்துகள் ஏற்பட்டு இருக்கலாம்.

    எழுதியவர்கள் யூத மத எதிர்ப்பு கொள்கை கொண்டதும்,அதே சமயம் பழைய ஏற்பாட்டு சட்டங்களை கிறித்தவ உடமையாக்கும் நோக்கமும் புலப்படுகிறது.யூதர்கள்தான் இயேசுவின் கொலைக்கு காரணம்,ரோமர்கள் அல்ல என்ற விள்க்கமும் சுவிசேசங்களில் வருகிறது.யூத எதிர்ப்பு இனவெறியை இது நியாயப் படுத்துகிறது.இயேசுவை கொன்ற இரத்தப் பழி எங்கள் மேலும்,யூத வம்சத்தின் மேலும் தொடருட்டும் என யூதர்களே கூறுவது போன்ற‌ சித்தரிப்பும் சிந்திக்க தக்கது!!!!!!!!!!

    இயேசு சித்தரிக்கப்படும் விதமும் மனிதப் புனிதர் அல்ல என்பதையும் இப்பதிவில் தெளிவாக விள்க்கியதற்கு பாராட்ட்டுகள்.

    அக்காலத்தில் ஒரு த்லைவன் எப்படி இருக்க வேண்டுமோ அப்படியே சித்தரித்து இருக்கிறார்கள் என்பதே சரியான் புரிதல்.அதை விட்டு அவர் பாவம் செய்யாத தேவ மைந்தன் ,அவதாரம்,பலியாடு அவர் கொல்லப்பட்டதால் உலகிற்கு மீட்பு வந்தது என்பது உளரல் மட்டுமே.

    தொடர‌ட்டும் பணி நன்றி சகோ!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா