Sunday, December 2, 2012

வரலாற்று இயேசு கிறிஸ்து யார்?

புதிய ஏற்பாடு கதைகளின் நாயகன் ஏசு பற்றி முதலில் புனையப்பட்ட மாற்கு சுவி 70- 75 வாக்கிலானது, கதைப்படியான ஏசு மரணம் 30 வாக்கிலானது. மாற்கு சுவியில் கலிலேயர் ஏசு யூதேயாவின் வனாந்திரத்தில் வாழ்ந்த யோவான் ஸ்நானனைத் தேடி சென்று அவரிடம் பாவமன்னிப்பு அறிக்கை செய்து ஞானஸ்நானம் பெறுதலில் தொடங்கும்.
jesusspectrum.jpg
மாற்கு1:4திருமுழுக்கு யோவான் பாலை நிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார்.5யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர்.6யோவான் ஒட்டகமுடி ஆடையை அணிந்திருந்தார்; தோல்கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் உண்டு வந்தார்.
இயேசு திருமுழுக்குப் பெறுதல்
(மத் 3:13 - 17; லூக் 3:21 - 22)
9 அக்காலத்தில் இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்து யோர்தான் ஆற்றில் யோவானிடம் திருமுழுக்குப் பெற்றார்.

மாற்கு சுவியில் ஏசு ஒரு தச்சர் என்றும், 3 சகோதரர்கள், சில சகோதரிகள் கொண்டவர் எனவும் உள்ளது.
 மாற்கு6:1 அவர் அங்கிருந்து புறப்பட்டுத் தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின் தொடர்ந்தனர்.
3 இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? ' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.

மாற்கு சுவியில் ஏசு வீட்டினருடன் அவருக்கு மேன்மையான உறவு இல்லை எனக் காட்டும் வசனங்களும் உண்டு.
மாற்கு3:20 அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை.21 அவருடைய உறவினர் இதைக் கேள்விப்பட்டு, அவரைப் பிடித்துக்கொண்டுவரச் சென்றார்கள். ஏனெனில் அவர் மதிமயங்கி இருக்கிறார் என்று மக்கள் பேசிக் கொண்டனர்.
இயேசுவின் உண்மையான உறவினர்
(மத் 12:45 - 50; லூக் 8:19 - 21)
31 அப்பொழுது அவருடைய தாயும் சகோதரர்களும் வந்து வெளியே நின்று கொண்டு அவரை வரச் சொல்லி ஆள் அனுப்பினார்கள்.32 அவரைச் சூழ்ந்து மக்கள் கூட்டம் அமர்ந்திருந்தது. ' அதோ, உம் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் வெளியே நின்று கொண்டு உம்மைத் தேடுகிறார்கள் ' என்று அவரிடம் சொன்னார்கள்.33 அவர் அவர்களைப் பார்த்து, ' என்தாயும் என் சகோதரர்களும் யார்? என்று கேட்டு,34 தம்மைச் சூழ்ந்து அமர்ந்திருந்தவர்களைச் சுற்றிலும் பார்த்து, ' இதோ! என் தாயும் என் சகோதரர்களும் இவர்களே.35 கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும் சகோதரியும் தாயும் ஆவார் ' என்றார்.

ஏசு பிறப்பு பற்றி மாற்கு சுவியில் கதை கிடையாது.
லூக்கா  சுவிசேஷம்
மத்தேயு சுவிசேஷம்
1 ஆபிரகாம்
1. ஆபிரகாம்
2 ஈசாக்கு
2. ஈசாக்கு
3 யாக்கோப்பு
3. யாக்கோப்பு
4 யூதா
4. யூதா
5 பெரேட்சு
5. பெரேட்சு (தாமாருக்கு)
6 எட்சரோன்
6. எட்சரோன்
7 ஆர்னி
7. ஆராம்
8 அத்மின்
8. அம்மினதாபு
9 அம்மினதாப
9. நகசோன்
10 நகசோன்
10. சல்மோன்(ஆராகாபுக்கு)
11 சாலா
11. போவாசு
12 போவாசு
12. ஓபேது (ருத்துக்கு)
13 ஓபேது
13. ஈசாய்
14 ஈசாய்
14. தாவீது
15 தாவீது
15. சாலமோன். (உரியாவின் மனைவியிடம் )
16 நாத்தான்
16. ரெகபயாம்
17 மத்தத்தா
17 அபியாம்.
18 மென்னா
18 ஆசா.
19 மெலேயா
19 யோசபாத்து.
20 எலியாக்கிம்
20 யோராம்
21 யோனாம்
21 உசியா
22 யோசேப்பு
22 யோத்தாம்
23 யூதா
23 ஆகாசு.
24 சிமியோன்
24 எசேக்கியா.
25 லேவி
25 மனாசே
26 மாத்தாத்து
26 ஆமொன்
27 யோரிம்
27 யோசியா.
28 எலியேசர்
28 எக்கோனியா (பாபிலோனுக்குச் சிறை)
29 ஏசு
29 செயல்தியேல்
30 ஏர்
30 செருபாபேல்
31 எல்மதாம்
31 அபியூது
32 கோசாம்
32 எலியாக்கிம்
33 அத்தி
33 அசோர்.
34 மெல்கி
34 சாதோக்கு.
35 நேரி
35 ஆக்கிம்
36 செயல்தியேல்
36 எலியூது
37 செருபாபேல்
37 எலயாசர்.
38 ரேசா
38 மாத்தான்.
39 யோவனான்
39 யாக்கோபு.
40 யோதா
40 யோசேப்பு. (மரியாவின் கணவர்)
41 யோசேக்கு
41 யேசு
42 செமேய்

43 மத்தத்தியா

44 மாத்து

45 நாகாய்

46 எஸ்லி

47 நாகூம்

48 ஆமோசு

49 மத்தத்தியா

50 யோசேப்பு

51 யன்னாய்

52 மெல்கி

53 லேவி

54 மாத்தாத்து

55 ஏலி

56 யோசேப்பு

57 யேசு


 80- 90 களில் புனையப்பட்ட மத்தேயு சுவி கதையின் சாரம்
மத்தேயு விருப்பப்படியான சுவிசேஷம்
1. தாய் பெத்லஹேமில் வாழ்ந்த மேரி
2 தந்தை பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப்
3 தந்தை முன்னோர் ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா- தாவீது பரம்பரை
4 தாவீது உறவு முறை தாவீது- மற்றும் படைவீரன் உரியாவின் மனைவி பெத்சபாள் உறவின் மகன் சாலமோன் வரிசையில் ஏசு
5 தலைமுறை ஆபிரஹாமிலிருந்து 41வது தலைமுறை
6 பிறந்தது பெத்லஹேமில் யாக்கோபு மகன் ஜோசப் வீட்டில்
7 ஏசு பிறப்பின் போது யூதேயா ஆட்சியாளர் மன்னர் பெரிய ஏரோது- இவர் இறந்தது .கா.மு.4 இல்.
8 சூழ்நிலை சோகம்
9 வரலாற்று சம்பவம் ஏரோது மன்னர் இரண்டு வயதுக்கு கீழான குழந்தைகளைக் கொலை செய்தல்
10 கர்ப்ப அதிசயம் பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப் கனவில் வந்ததான தேவதூதன் சொன்னதாக
11 அதிசயக் கதைகள் கிழக்கிலிருந்த நாட்டு ஜோசியர்கள் நட்சத்திரம் பார்த்து, யூதர்களின் ராஜா பிறப்பைக் கணித்து, குழந்தை காண ஜெருசலேம் வந்து ஏரோது மன்னரைப் பார்த்து, பின் பெத்லஹேம் செல்ல- மீண்டும் அதே நட்சத்திரம் தோன்றீ வழிகாட்ட ஏசு வீடி சென்று பின் நேராக தன் நாடு சென்றனர்.
12 ஏசு பிறந்த பின்னர் கனவில் எச்சரிக்கப்பட ஏரோது மன்னர் குழந்தைகளைக் கொலை செய்தற்கு முன்பே அண்டைய நாடு எகிப்து ஓடல்.
13
வாழ்வு -ஆரம்பம்-பின் பெத்லஹேமில் தச்சராக தொழில் செய்த யாக்கோபு மகன் ஜோசப் ஏரோது மன்னருக்கு பயந்து எகிப்து நாட்டில் ஏசு வாழ்வு ஆரம்பம்.ஏரோது மரணத்திற்குப் பின் யூதேயா வராமல் கலிலேயா சென்று நாசரேத்தில் வாழ்ந்தனர்.

85 -95 களில் புனையப்பட்ட லூக்கா சுவி கதையின் சாரம்.

லூக்கா விருப்பப்படியான சுவிசேஷம்
1 தாய் நாசரேத்தில் வாழ்ந்த மேரி
2 தந்தை நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்.3 தந்தை முன்னோர் ஆபிரஹாம்-யாக்கோபு-யூதா-தாவீதுபரம்பரை
4 தாவீது உறவு முறை தாவீது வேறோரு வைப்பாட்டி மூலம் பெற்ற மகன் நாத்தன் வரிசையில் ஏசு
5 தலைமுறை ஆபிரஹாமிலிருந்து 57வது தலைமுறை
6
பிறந்தது பெத்லஹேமில் ஒரு மாட்டுத் தொழுவத்தில்
7
ஏசு பிறப்பின் போது யூதேயா ஆட்சியாளர் சிரிய நாட்டின் கவர்னர் குரேனியு என்பவர்- இவர் பதவி ஏற்றது .கா.6 இல்.
8
சூழ்நிலை மகிழ்ச்சி
9
வரலாற்று சம்பவம் ரோம் மன்னர் ஆகஸ்டஸ் சீசர் ஆணையில் சிரிய நாட்டின் கவர்னர் குரேனியு கீழ் மக்கள் தொகை கணக்கெடுப்பு (.கா.8)
10 கர்ப்ப அதிசயம் நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப்பிற்கு நிச்சயிக்கப்பட்ட மேரியினிடம் நேரில் வந்ததான தேவதூதன்
11
அதிசயக் கதைகள் அறுவடை கால பயிரைக் காத்திட ஆடு மேய்க்கும் சிறுவர், நள்ளிறவைல் வயலில் இருந்தபோது தேவதூதர்கள் வந்து கிரேக்க மொழியில் பாடல் பாடி ஆடி கொண்டாடினர்.
12 ஏசு பிறந்த பின்னர் குடும்பத்தில் முதல் மகன் ஆண் மகன் என்பதற்காக ஜெருசலேம் யூதக் கடவுள் ஆலயத்தில் யூதப் புராண சட்டப்படி மிருகபலி கொலை செய்ய தம்பதிகள் சென்றனர்
13
வாழ்வு -ஆரம்பம்-பின் நாசரேத்தில் வாழ்ந்த ஏலியின் மகன் ஜோசப், மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக பெத்லஹேம் வந்து பின் மிருகக் கொலை/பலிக்காக ஜெருசலேம் சென்று வந்தபின் சொந்த ஊர் நாசரேத்தில் வாழ்ந்தனர்
 இந்த இரண்டு கதைகளும், இறந்த மனிதன் ஏசு, தாவீது பரம்பரையினர் எனக் காட்ட, தாவீது வரிசை ஜோசப் குமாரன் எனப் பட்டியல் வரைந்துள்ளனர். 
ஏசுவின் ரோம் ஆட்சியின் நிருபிக்கப்பட்ட குற்ற அட்டை நசரேயன் ஏசு- யூதர்களின் ராஜா என்றிட- அதை லூக்கா-ஜோசப் நாசரேத்தில் வாழ்ந்தவர் பெத்லஹேமில் ஏசு பிறக்க வைக்க கதை உருவாக்கினார்.
மத்தேயு பெத்லஹேமில் வாழ்ந்த ஜோசப் அங்கே பிரசவம் பார்த்து பின்னர் நாசரேத் வர  கதை உருவாக்கினார். 
பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica. 

"The earliest witnesses wrote nothing’ there is not a Single book in the New Testament which is the direct work of an eyewitness of the Historical Jesus."  - Page-197, -A Critical Introduction to New Testament. Reginald H.f. Fuller. Professor OF New Testament, Union Theological Seminary New York 
அதாவது ஏசுவுடன் பழகியோர் ஏதும் எழுதி வைக்கவில்லை; புதிய ஏற்பாட்டு நூல்கள் 27ல் ஒன்று கூட வரலாற்று ஏசுவினோடு பழகிய யாரும் எழுதியது இல்லை, என அமெரிக்க நூயுயார்க் பைபிளியல் பேராசிரியர் ரெஜினால்ட் புல்லர் தன் நூலில் உறிதி செய்கிறார். 
  


வரலாற்று ஏசு பற்றி ஹாவர்ட் பல்கலைக் கழக புதிய ஏற்பாடுத்துறைத் தலைவர் ஹெல்மட் கொயெஸ்டர் சொல்வது:Introduction to the New Testament. New York: DeGruyter, 1982. 2nd ed., 2002-The Quest for the Historic Kernels of the Stories of the Synoptic Narrative materials is very difficult. In fact such a quest is doomed to miss the point of such narratives, because these stories were all told in the interests of mission, edification, cult or theology (especially Christology) and they have no relationship to the question of Historically Reliable information.Precisely those elements and features of such narratives which vividly lead to the story and derived not from Actual Hisorical events, but belong to the form and style of the Genres of the several Narrative types. Exact statements of names and places are almost always secondary and were often introduced for the first time in the literary stage of the Tradition. P-64 V-II
ஒத்த கதை சுவிகள்(மாற்கு, மத்தேயூ, லூக்கா) சொல்லும் புனைக் கதைகளுக்கும் வரலாற்றைத் தேடுவது மிகக் கடினம். வரலாற்று உண்மைகளைத் தேடுபவர்கள் – சுவிகதைகள் எதற்காகப் பு¨னெயப்பட்டுள்ளன என்பதை விட்டுவிடுவர், ஏனென்றால் சுவிகள் – மதம் பரப்ப, சிறு விஷயத்தைப் பெரிது படுத்திட, மூடநம்பிக்கைக் குழு அமைக்க, இறையியல்- (அடிப்படையில் இறந்த ஏசுவைத் தெய்வமாக்கும்) தன்மையில் வரையப்பட்டவை; சுவிகளுள் நம்பிக்கைக்குரிய வரலாற்று விபரங்கள் ஏதும் கிடையாது.சுவிகளின் முக்கியமான புனையல்கள் நம்மைத் தள்ளிக் கொண்டு செல்லும் விவரங்கள் அடிப்படையில் வரலாற்றில் நடந்த சம்பவங்கள் இல்லை, பல விதமாக கதை செய்யும் யுக்தியில் புனையப்பட்டவை, சம்பவங்களில் வரும் நபர்கள் -நடந்த இடங்கள் முக்கியத்துவம் தராமல் பெரும்பாலும் முதல் முறை அவ்வப்போது தரப்படும்.

கிறிஸ்துவ மதப் புராணக் கதை நாயகர் ஏசு, இந்த ஏசு பற்றி நடுநிலையாளர் ஏற்கும்படி ஒரு ஆதாரமும் இல்லை, இதை பிரிட்டானிகா கலைக்களஞ்சியம் கூறுவது
 “None of the Sources of his Life can be Traced on to Jesus himself. He did not leave a Single Known Written Word. Also there are no Contemporary Accounts of Jesus’s Life and Death” – Vol-22, Pg.336 Encyclopedia Britanica.
கிறிஸ்து என்பதானது, மேசியா எனும் எபிரேய பட்டத்தின் கிரேக்கம். மேசியா என்றால் மேலே எண்ணெய் தடவப் பட்டவர். இஸ்ரேலின் யூத அரசன், படைத் தலைவர், ஆலயத் தலைமைப் பாதிரி பதவி ஏற்பின்போது எண்ணெய் தடவப் படுதலைக் குறிக்கும் சொல். மேலுள்ள பதவிகட்கு தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்னும் பொருள். எபிரேய யூத மதத்தில் கடவுள் மனிதனாக வருதல் ஏதும் கிடையாது.
http://pagadhu.blogspot.com/2012/10/100.html

No comments:

Post a Comment

ஈவெராமசாமியார்- மணியம்மாள் திருமணம் பற்றி அண்ணாதுரையார்

 ஈவெராமசாமியார்- மணியம்மாள் திருமணம் பற்றி அண்ணாதுரையார்   அண்ணா எழுதிய கட்டுரை : பெரியார் மணியம்மை திருமணம்     செப்டம்பர் 20, 2023  https:...