Tuesday, May 13, 2014

பழைய ஏற்பாடு - நியாயப் பிரமாணங்கள் உருவான கதை

பழைய ஏற்பாடு எனப்படும், யூத மதப் புராணக் கதைகள் கொண்ட புத்தகம், எபிரேய மொழ்யில் வரையப்பட்டவை. இதில் முதல் 5 புத்தகங்கள் சட்டங்கள் எனப்படும், இவற்றின் கதாசிரியர் மோசே எனப்படும். (படிக்க)
    
இவற்றில் உலகம் ஆரம்பத்தில் படைத்தது முதல்  அனைத்து சம்பவங்களையும் முறையாக தொகுத்தது போலத் தோற்றம் வரும். இதன் கதைப்படி, கல்தேயர் நாட்டைச் சேர்ந்த ஆபிரகாமை, இஸ்ரேலிற்கான எல்லைத் தெய்வம் யாவே அல்லது கர்த்தர், தேர்ந்தெடுத்து, அவன் வாரிசுகளுக்கு கானான் எனப்படும் இஸ்ரேலின் மீதான ஆட்சி உரிமை தந்தார். இதுவே யூத பைபிளின் அடிப்படை.
ஆபிரகாமிற்கு சில தலைமுறை முன்பு, தேவ குமாரர்கள் மனிதப் பெண்களோடு, உடலுறவு கொள்ள அரக்கர்கள் நிறைய தோன்ற, பூமி முழுமையும் அனைத்து உயிர்களையும் கொல்ல பிரளய வெள்ளத்தால் பைபிள் தெய்வம் மூட, அதற்கு முன்பு நோவா என்பவர் குடும்பத்தையும், எல்லா உயிரினங்களையும் ஒரு கப்பலில் இட்டு, காப்பதாகவும் ஒரு கதை. இதற்குப்பின் ஆபிரகாம் கதை.
இந்தக் கதைகள் எல்லாம் பைபிள்படி எப்படி எழுதப்பட்டன, என பைபிளே தரும் தோற்றம் என்ன என்பதைப் பார்க்கலாம்.
ஆபிரகாமின் பேரன் காலத்தில் பஞ்சம் வர தன் குடும்பத்தோடே 70 பேராக எகிப்து செல்கின்றனர். அங்கே சில காலம் வாழ்ந்தபின் எபிரேயர் மக்கள் தொகை வேகமாக வளர ஆண்குழந்தைகளை கொலை செய்யுமாறு எகிப்து மன்னர் சொல்ல 2 தாதிகள் செய்யவில்லை.  எபிரேயர்களால் ஆண் குழந்தைகளை வளர்க்க முடியாத சூழ்நிலையில் மோசேயின் தாய் குழந்தையை புதரில் விட்டுவிட, எகிப்து அரச குடும்பத்தில் வளரும்படி செய்கிறார். அவர் எபிரேயர்களுக்கு உதவிட பார்க்கிறார். பின் ஒதுங்கிறார். இஸ்ரேலின் எல்லை கடடவுள் இவரிடம், எபிரேயர்களை ஒன்றிணைத்து, எகிப்து மன்னனிடம் சென்று இஸ்ரேல் செல்ல அனுமதி கேட்குமாறு சொல்கிறார். எகிப்து மன்னன் ஏற்றாலும், கர்த்தர் அவர் மனதைக் கடுமைப் படுத்தி, எகிப்து மக்களுக்கு 10 விதமான பெரும் தொல்லைகள் தர பின் ஆடு, மாடு பொருட்களோடு எகிப்தியர் யூதர்களை அனுப்பி வைக்க, கிட்டத்தட்ட 30 லட்சம் யூதர்கள் எகிப்திலிருந்து இஸ்ரேல் வருகின்றனர்.
 பஞ்சத்ற்கு எகிப்து செல்ல அங்கே அடிமைப் பட்டிருந்த எபிரேயர்களை மோசே   தலைமையில் வர   - செங்கடல் இரண்டாகப் பிரிந்து வழி விட ஒரே இரவில் 30 லட்சம் எபிரேயர்  செங்கடலைத் தாண்டியதாகக் கதை. பின் இஸ்ரேல் வர 40 வருடம் ஆனதாம். வரும் வழியில் கர்த்தர் கொடுத்த கதைகளே பழைய ஏற்பாட்டின் சட்டங்கள்(முதலைந்து நூல்கள்) பகுதி.
மோசே சட்டங்கள் கர்த்தர் தர, இதற்குப் பின்பு, இஸ்ரேலியர் தங்கள் வரலாறை முறையாக எழுதி வைத்ததின் தொகுப்பே பழைய ஏற்பாடு எனும் தோற்றத்தைப் பார்க்கலாம்.
பைபிளை நடுநிலையோடு முழுமையாக ஆராய்பவர்கள் கண்டது, மோசே சட்டத்தில் கர்த்தருக்கு ஒரேஒரு இடத்தில் மட்டும் பலி, என்றெல்லாம் இருக்க, தீர்க்கர்கள் கூட பல இடங்களில் பலி செய்து வழிபட்டதாகக் கதையில் உள்ளதைக் கண்டனர். பின் மேலும் ஆராய மோசே சட்ட்ங்கள் எனும் புத்தகங்கள் உருவான கதை பைபிளிலேயே உள்ளதை கண்டனர்.

1 இராஜாக்கள் 6:1சாலொமோன் அவ்வாறே ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தான். இஸ்ரவேலர்கள் எகிப்தை விட்டு வெளியே வந்து 480 ஆண்டுகள் ஆகியிருந்தன. இப்போது சாலொமோன் அரசனாகி நான்கு ஆண்டுகள் ஆகியிருந்தன. இது ஆண்டின் இரண்டாவது மாதமாகவும் இருந்தது.

சால்மன் காலம் பொ.மு.970- 930 எனக் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. மோசே  காலம் அதற்கு 480 வருடம் முன்பு எனில் பொ.மு 16 - 15 நூற்றாண்டு ஆகும். 

பொ.மு.15ம் நூற்றாண்டிலிருந்த்து மோசே சட்டம் வைத்து வாழ்ந்தும் பின் முறையாக வரலாறு உள்ளதாகவும் புனையப்பட்டுள்ள நிலையில் கிழே உள்ள கதையைக் கண்டனர்.

 2 இராஜாக்கள்22:8 தலைமைக் குரு இல்க்கியா எழுத்தன் சாப்பானை நோக்கி, ஆண்டவரின் இல்லத்தில் ஒரு சட்ட நூலைக் கண்டெடுத்தேன் என்று சொல்லி, அந்நூலைச் சாப்பானிடம் கொடுக்க, அவனும் அதைப் படித்தான். 10 மேலும் அவன் அரசரிடம், குரு இல்க்கியா என்னிடம் ஒரு நூலைக் கொடுத்துள்ளார் என்று கூறி, அரசர் முன்னிலையில் அதைப் படித்துக் காட்டினான்.11 அரசர் சட்டநூலின் வார்த்தைகளைக் கேட்டதும் தம் ஆடைகளைக் கிழித்துக்கொண்டார்.12 பின் குரு இல்க்கியாவையும் சாப்பானின் மகன் அகிக்காமையும், மீக்காயாவின் மகன் அக்போரையும், எழுத்தன் சாப்பானையும் அரச அலுவலன் அசாயாவையும் நோக்கி, அரசர் இட்ட கட்டளை இதுவே:13 நீங்கள் போய் என்னைக் குறித்தும், மக்களைக் குறித்தும், யூதா முழுவதைக் குறித்தும் கண்டெடுக்கப்பட்ட இந்நூலில் என்ன எழுதப்பட்டுள்ளது என்று ஆண்டவரின் திருவுளத்தைத் தெரிந்து வாருங்கள். 16ஆண்டவர் கூறுவது இதுவே: யூதாவின் அரசர் படித்த அந்த நூலின் வார்த்தைகளின்படி, நான் இந்த இடத்திற்கும் அதில் வாழ்வோர்க்கும் தீங்கு வரச் செய்வேன்.17 ஏனெனில், அவர்கள் என்னைப் புறக்கணித்து விட்டு, வேற்றுத் தெய்வங்களுக்குத் தூபம் காட்டினர். அவர்கள் தங்கள் கைவினையான சிலைகள் அனைத்தாலும் எனக்குச் சினமூட்டினர். எனவே இவ்விடத்தின்மேல் கொண்ட என் சினம் கனன்று எரியும்: அதைத் தணிக்க இயலாது.

இந்த ராஜா காலத்தில் மோசே சட்டம் தேடிக் கண்டு பிடித்தனராம்.  ஆனால் எஸ்ரா காலத்தில் வேறொரு கதை

நெகேமியா 8: ஆண்டின் ஏழாவது மாதத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அவர்கள் ஒன்றாயிருந்தார்கள். அவர்கள் ஒருமனப்பட்டு தண்ணீர் வாசலுக்கு முன்னால் திறந்தவெளியில் அனைவரும் கூடினார்கள். அந்த ஜனங்கள் அனைவரும் எஸ்றா எனும் வேதபாரகனிடம் மோசேயின் சட்டப் புத்தகத்தைக் கொண்டுவர வேண்டுமென்று கேட்டார்கள். அதுதான் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கர்த்தரால் கொடுக்கப்பட்ட சட்டப் புத்தகம். எனவே, ஆசாரியனான எஸ்றா அங்கே கூடியுள்ள ஜனங்களின் முன், சட்டப் புத்தகத்தைக் கொண்டுவந்தான். இதுவே அம்மாதத்தின் முதல் நாளாகும். இது அந்த ஆண்டின் ஏழாவது மாதமாகும். அக்கூட்டத்தில் ஆண்களும் பெண்களுமாகக் கவனித்துக்கொள்ளவும் புரிந்துக்கொள்ளவும் போதிய வயதுடையவர்களாக இருந்தனர். எஸ்றா அதிகாலையிலிருந்து மதியம்வரை சட்டப் புத்தகத்திலிருந்து உரத்த குரலில் வாசித்தான். அவன் ஆண்களும் பெண்களுமாய் கவனிக்கவும் புரிந்துகொள்ளவும் போதிய வயதுடையவர்களாக இருந்தவர்களிடம் வாசித்தான். அனைத்து ஜனங்களும் கவனமாகக் கேட்டனர். சட்டப் புத்தகத்தில் கவனம் வைத்தனர்.

எஸ்றா  சட்டப்புத்தகத்தை உரத்த குரலில் ஆண்களும் பெண்களுமாய் கவனித்து புரிந்துகொள்ள வாசித்தான்.  அதாவது எஸ்ரா காலத்தில் சட்டங்கள் உருவானது என்பது தெளிவாக்கும்.  

சாமுவேல், இராஜாக்கள் நாளாகமம் எஸ்றா நெகேமியா - இந்த தலைப்பில் உள்ள புத்தகங்கள் பொ.மு. 400 - 300 வாக்கில் பழங்கதைகளை தொகுத்து, யூத மதத்தினை சீர்படுத்தியதாக சொல்ல்ப்படும்.
பைபிளியல் அறிஞர்கள்படி- 4 பிரிவினர் - எல், யாவே என கடவுள் பெயரை வைத்து புனைந்தவர், ஜெருசலேமில் மட்டுமே என்னும் உபாகமக் குழு, யூதப் பாதிரிகள் லேவியருக்கெ உரிமை எனும் நான்கு பிரிவினர் புனைந்தனர்.இதில் மேலுள்ள ராஜா காலத்தில் உபாகமம் சிலவும், எஸ்ரா காலத்தில் சிலவும் வடிவு பெற, கி.மு. 3ஆம் நூற்றாண்டில் இன்றைய வடிவம் பெற்றது.

இதில், மேலுள்ள ராஜா காலத்தில் மோசே சட்ட நூல் கண்டுபிடித்து எடுத்ததாகக் கதை, இக்காலத்தில் உபாகமத்தின் சில பகுதிகள் புனையப் பட்டதாக பைபிளியலாளர் ஆய்வுகள் மெய்ப்படுத்திகின்றது. எஸ்ரா படித்தது, மோசே சட்டப் பகுதியில் "பா" மரபு, இவர் காலத்திற்குப் பின்பு கிரேக்க காலத்தில் தான் இன்றைய வடிவில் பொ.மு. 300- 200 இடையே சட்டங்கள் உருவாகின என்பது நடுநிலை பைபிளியல் அறிஞர்கள் பைபிள் அடிப்படையில் ஏற்பது.

 இவற்றைப் பல பைபிளியல் நூல்களும் உறுதிப் படுத்துவதையும் காணலாம்.

//In the years, 539 - 333 BCE, the Persian empire was dominant and it was in this period that Judaism consolidated as a religion based on the Bible.
Authoritative tradition which appears to suggest that Ezra, a priest and scribe from Babylon was an agent of Persian Government in establishing the Torah as the nation law of Judeans in Judea and Syria. He was either a contemporary of Nehemiah in the mid 5th Century BCE or lived a century later ..  Nothing outside the Bilbe adds anything of Historical value to the Picture of Moses.// Lions Hand book of Religions ; page- 280
Many laws in the Pentateuch or Torah, the first five books were not different from those of the surrounding nations. " page- 238, Vol.3, Grolier's Encyclopedia.
"Although there was no canonization of a complete tradition text until late 2nd century CE, no change was made in the basic structure of the Pentateuch and Historical books after the 3rd or 2nd Century BCE" . Pictorial Biblical Encyclopedia; Page -173.
//"The OT Genealogies are mostly the work of the Pentateuchal Priestly writer in the Persian Period from 6th to 4th Century BCE. .. Some such as Genesis Chapters 4-5 have parellels in Babylonian Literature".// New Catholic Encyclopedia, Vol-6, Page 319

மோசே தான் சட்ட்ங்கள் பெற்றதாக் ஏசு சொன்னதாக சுவிசேஷங்கள் புனைகின்றன.

மாற்கு 10:3இயேசு அவர்களிடம் மறுமொழியாக, ' மோசே உங்களுக்கு இட்ட கட்டளை என்ன? ' என்று கேட்டார். 4 அவர்கள், ' மோசே மணவிலக்குச் சான்றிதழ் எழுதி அவரை விலக்கிவிடலாம் என்று அனுமதி அளித்துள்ளார் ' என்று கூறினார்கள்.   5 அதற்கு இயேசு அவர்களிடம், உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே மோசே  இக்கட்டளையை எழுதி வைத்தார்.

செங்கடல்-கதை :  New Catholic Encyclopedia Vol-5 page-745 “Mention of the Red Sea in the Exodus context is a misnomer to be attributed to early Septuaginal editor. One has to glance at any map to see the complete lack of relevance the Red sea has to the entire narrative of Exodus. The Hebrew term Yamsup signifies Reed sea. ” New Catholic Encyclopedia Vol-5 page-745

மோசஸ் எழுதியதான நியாயப்பிரமாணத்தில் செங்கடல் என வந்ததற்கு கிரேக்கர்கள்   தவறான மொழி பெயர்ப்பு  காரணமாம் -அமெரிக்க  கத்தோலிக்க  பல்கலைக்  கழகத்தின்  கத்தோலிக்க கலைக்களஞ்சியம் சொல்கின்றது.  இது  நியாயப்பிராமாணங்கள்  அல்லது  புனையப் பட்டதே பொ.மு. 300௨00 வாக்கில் என்பதைநிருபிக்கும்.
“இஸ்ரயேலரின் வரலாறு”- – ஆர்,எட்வர்ட் சாம், தமிழ் தியொலொஜிகல் புக் க்லப், மதுரை 1996. .( (First Edition in 1966; this is 3rd edition)
ஒருவேளை, இஸ்ரயேலர் எந்தக் காலத்தில் எகிப்துக்குள் சென்றனர் என்ற கேள்வியே தவறாயிருக்கலாம், ஏனெனில் இஸ்ரயேலர் என்ற சிறப்புப் பெயரோடு தனித்தியங்கிய மக்கட் கூட்டம் ஒன்று அக்காலத்தில் இருந்ததில்லை.- பக்- 60
இப்பயண வரலாற்றில் காணப்படும் பல இடங்கள் இன்னும் கண்டு பிடிக்க- வில்லை. எனவே, பயணப் பாதை, எதுவெனத் திட்டமாய்க் கூறுவதற்கு இல்லை. செங்கடலைக் கடந்திருந்தாலும் எகிப்தியக் குதிரை படைகளால் பிடிபட்டிருப்பர். என்வே, இது சாத்தியமென்று கூறப்படும் அளவு அன்று செங்கடல் நீளமுள்ளதாயிருக்கவில்லை எனக் கருத இன்று சான்றுகளுண்டு. – பக்  90- 91
ஆதியாகமம் பெயர்தரும் ஒரு வரலாற்று மனிதர் பெயரைக்கூட புறச்சான்றுகளால் உறுதிப்படுத்த இயலவில்லை. முக்கியமாக, அவர்களின் பெயர்களில் ஒன்றாயினும் கல்வெட்டுக்களில் கிடைக்கவில்லை. எனவே, பொதுவான பொருளில் வரலாறு எழுதுவது இயலாத செயலே. பக் 49

நூல்- : “நிஜங்கள்-விவிலியம் பற்றிய கேள்வி –பதில்” ; –கத்தோலிக்க பைபிளியல் பேராசிரியரும் திருச்சி சலேசிய மாநிலத் தலைவர் தெயோபிலஸ்இப்புத்தகத்திற்கு இரண்டு ஆர்ச் பிஷப்கள் என நிகில் ஒப்ஸ்டட் என்னும் முத்திரை அங்கிகாரம் கொடுத்துமுள்ளனர். 
தொடக்கத்தில் உள்ள முதல் 11 அதிகாரங்கள் சரித்திரத்தில் நிகழ்ந்தவை அல்ல என வல்லுனர்கள் கூறுகிறார்கள். மனிதன் தந்து சமுதாயத்தில் நிலவிய புதிர்களுக்க்ப் பதிலைத் தேடினர்(உ-ம் படைப்பு, பாவம், சாவு, துன்பம்…)இதற்குரிய பதிலகளைப் “படைப்பு” போன்ற புராண (Mythological) கதைகள் வழியாகக் கூறுகிறான், படைப்பை எவரும் பார்த்தது கிடையாது, பார்க்கவும் முடியாது. மனிதனே இந்தப் படைப்பை இப்படிப் பற்றி புரிந்து கொண்டுள்ளதன் விளக்கமே, இந்தக் கதைகளில் கூறப்பட்டுள்ளது போலத்தான் நடந்தன என்று சொல்ல முடியாது. -- பக்கம் 15
அதே சமயத்தில், ஆபிரகாமைப் பற்றி விவிலியத்தில் காணப்படுகின்ற அத்தனை சம்பவங்களையும் உண்மை வரலாற்று நிகழ்வுகளென யாரும் கருத முடியாது. ஏனெனில் விவிலியம் ஒரு இறையியல் வரலாறு. பக்௧17

 இதனிடையே நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று. மேற்கத்திய நாடுகளின் பெரும்பாலனோர் கிறிஸ்துவர், இவர்கள் பைபிள் கடவுள் வார்த்தை எனும் நம்பிக்கையில் 19, 20ம் நூற்றாண்டின் சில புதைபொருள் ஆய்வாளர்கள் எந்த ஒரு தேடுதலையும் பைபிளோடு இணைத்து பைபிள் சரியானது என மேம்போக்கான பார்வையில் புனைந்தனர். ஆனால் கிடைத்த பொருட்களை தெளிவாக ரேடியோ கார்பன் 14 மூலம் தெளிவாக காலம் குறிக்கும் அறிவியல் வர பழைய ஆய்வுகள் தவறு என உடைந்தது.   இதில் ஒரு பெரும் முயற்சி இதில் ஒரு பெரும் முயற்சி  இஸ்ரேல் ப்ராங்கிஸ்டன் எனும் அன்றைய இஸ்ரேல் டெல்-அவிவ் பல்கலைக் கழக புதைபொருள் ஆய்வுத் துறை துணைத் தலைவர் நூல் "The Bible Unearthed" ,   தற்போது தலைவர், இதற்கு பெரும் எதிர்ப்பு ஆரம்பத்தில் எழுந்தாலும் பெருமளவில் ஏற்கப்பட்டது, ஏன் என்றால் ஆய்வின் தரவு தெளிவானது. 
20க்கும் மேற்பட்ட பைபிள் வசனங்களில் ஒட்டகத்தை வீட்டு கொட்டிலில் ஆபிரகாம் வைத்து இருந்ததாகக் கதை.  ஒட்டகங்கள் அரேபியாவில் இருந்தன, அது பற்றி சில கல் குகை வரைபடங்கள் உள்ளன.

ஆனால் முழுமையாக பழக்கப்பட்டு வீட்டு கொட்டிலில் கட்டிவைத்து வாழ்ந்தது எப்போது, என்பதே கேள்வி. இது பற்றி விக்கிபீடியா சொல்வது ஏசுவிற்கு 100 -200 ஆண்டுகள் முன்பு தான் பரவலாக ஒட்டகம் பயன்படுத்தியதைக் காண்கிறோம்இங்கே
// The mention of the dromedary in Exodus 9:3 also suggests a later date of composition – the widespread domestication of the camel as a herd animal did not take place before the late 2nd millennium, after the Israelites had already emerged in Canaan, and they did not become widespread in Egypt until c.200–100 BCE.//
 
தற்போது மேலும் ஒரு தரமான ஆய்வு வெளியீடு, இதுவும் இஸ்ரேலின் டெல் அவிவ் ல்கலைக்கழக ஆய்வாளர்களான லிடார் சேபிர்-ஹென் மற்றும் ஈரேஸ் பென்-ஜோசெப் ஆகியோர்-இதுவரை அறியப்பட்ட அதி புராதன ஒட்டக எலும்புகளில்  மேற்கொள்ளப்பட்ட  கார்பன் வயதறிமுறை ஆதாரங்களைக் காட்டி  மத்திய கிழக்கில் ஒட்டகங்களின் வருகை கிறிஸ்து காலத்திற்கு  9 நூற்றாண்டுகளுக்கு முன்னர்தான்  என இவர்கள் கூறுகிறார்கள்.

இவற்றின் இணைப்புகள் இங்கே ஒன்று, இரண்டு

 நியாயப்பிரமாணங்கள் பொ.மு.300- 200 இடையே  கிரேக்க காலத்தில், அடிமைப்பட்டு இருந்த காலத்தில், மக்களை நாம் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள், இந்நாட்டு ஆட்சி உரிமை நமக்கு இஸ்ரேலின் எல்லை தெய்வம் தந்தது எனப் புனையப் பட்டவையே.

10 comments:

  1. உங்கள் கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டும் என்று நினைத்து சிலவற்றிற்கு எழுதினேன், ஆனால் பின்னர்தான் புரிந்தது நீங்கள் வடிகட்டின முட்டாள் என்று எதையும் புரியாமல் ஒரு கேள்வி கேட்டு அதற்க்கு சம்பந்தம் இல்லாமல் பதில் கூறுவது வாடிக்கை என்பதை தெரிந்து உங்கள் மடமைக்கு பதில் எழுதுவதை நிறுத்திவிட்டேன், நீங்கள் கூறும் இந்த மடமை எந்த ஒரு மாற்றமும் ஏற்ப்பட போவதில்லை.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. மிரேக்கல்,
      வசை மொழிகள் வேண்டாம்... பொறுமையாய் இருங்கள்... இந்த தளத்தில் எழுதப்படும் கட்டுரைகள் சரித்திரத்தை ஆராயும் நோக்கில் அல்ல. அப்படி இருந்தால் இயேசுவை சரித்திர நபர் அல்ல என சொல்லிய தேவப்பிரியா திருவள்ளுவரை சரித்திர நபர் என ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். கிறித்தவர்களைத் திட்டி தீர்ப்பது மட்டுமே இந்த தளத்தின் குறிக்கோள்... கீழுள்ள பதிவை படித்துப் பாருங்கள்...

      http://rakthasaatchi.blogspot.in/2014/05/thiruvalluvar-jesus-historicity.html

      இங்கு வெளிடப்பட்டுள்ள கட்டுரைகள் சிலவற்றிற்கு நானும் பதில்கள் பதித்தேன்... ஆனால் அதற்கு பதில் சொல்லாமல் எனக்கு இவர்கள் அளித்த பெயர் என்ன தெரியுமா "மழுப்பாளர்", "பாவம், கிறித்தவத்தை காப்பாற்ற முயல்கிறார்"... கிண்டல்கள் மட்டும் தான் வந்து கொண்டிருக்கின்றன. பதில் வரவே வராது...

      நாம் வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றை எடுத்துக் காட்டினால் செல்லவே செல்லாது, இவர்கள் எடுத்துக் காட்டினால் மட்டும் தான் செல்லும்...

      தேவப்பிரியாவால் பதில் அளிக்க முடியாத நிலை வந்தால் போதும், யாராவது ஒருவர் உடனே வந்துவிடவார், "தேவப்பிரியா சொல்வது மட்டும் தான் சரி, தேவப்பிரியா சொல்வது மட்டும் தான் சரி, தேவப்பிரியா சொல்வது மட்டும் தான் சரி" என தீர்ப்பு கூறி செல்வார்...! நீதிபதிகளின் பிரொவைலைச் செக் செய்ய சொடுக்கினால் அது மறைக்கப்பட்டிருக்கும், அல்லது அதன் "பிளாக்ஸ் ஐ ஃபாலோ" பட்டியலில் பகடு மட்டும் இடம்பெற்றிருக்கும்...!

      இன்னொரு விஷயம், இவர் எழுதும் கட்டுரைகளை கவனியுங்கள், "கோரேசு ராஜா தான் கர்த்தரின் கிறிஸ்து" என தலைப்பிட்டு ஒரு கட்டுரை எழுதியிருப்பார். ஆனால் அதற்கு சம்பந்தமில்லாத விஷயங்கள் நிறைய சொல்லப்பட்டிருக்கும். அப்படியிருந்தால் எப்படி நம்மால் மறுப்பு சொல்ல முடியும்? 100 குற்றச்சாட்டுகளை ஒரே கட்டுரையில் எழுதி வைத்திருப்பார், அதில் பல தலைப்போடு தொடர்பு இல்லாதவை. 1 குற்றச்சாட்டுக்கு பதில் எழுதவே ஒரு பதிவு நீளம் பிடிக்கும், எனவே நாம் அத்தனைக்கும் பொறுமையாக நீளமாக பதில் எழுதினால் உடனே ஒருவர் வந்து விடுவார்... "வழ வழவென்று எழுதியுள்ளீர்கள்" என திட்டுவார்! ஆனால் தேவப்பிரியாவை ஒரு டாப்பிக்கை மையமாக வைத்து எழுதுங்கள் என சொல்லவே மாட்டார்...

      தளாராதீர்கள் மிரேக்கல், உங்கள் முயற்சிகளைக் கைவிட வேண்டாம். நாமும் நம் கட்டுரைகளும் தேவப்பிரியாவிற்கும், அவரது நண்பர்களுக்கும், கிறித்தவத்தின் மீது வெறுப்புக் கொண்டவர்களும் அருவருப்பாக இருக்கலாம், படிக்க பிடிக்காமல் இருக்கலாம், ஆனால் ஒரு சில கிறித்தவர்களுக்காவது உதவுமே... அவர்களுக்கு அது பயன்யுடையதாய் இருக்கும்...

      இந்த கம்மண்டை நான் வெளியிட்ட குற்றத்திற்காக எனக்கு வரப்போகிற அவமானங்களை இதற்கு பின்பு வரும் கம்மண்ட்களில் காணவும் :‍)

      நடுநிலையான வாசகர்களுக்கு, இங்கு நாங்கள் என்ன கம்மண்ட் எழுதினாலும் செல்லாது, எனவே, நீங்களே இருதரப்பு கட்டுரைகளையும் பரிசோதித்து பார்க்கவும்...

      இந்த கம்மண்டிற்கு கீழ், எங்கள் கட்டுரைகள் எல்லாம் மழுப்பல், பொய் என ஏகப்பட்ட வசைமொழி வரும், இருந்தாலும் நீங்கள் ஒரு முறை அதை படிக்க மறவாதீர்கள்...

      நன்றி...

      Delete
  2. வேதாகமம் உருவான கதை - http://religionsresearch.blogspot.in/

    https://www.facebook.com/VetakamattinMarupakkam?fref=nf

    ReplyDelete
  3. கட்டுரை மிகவும் பெரிதாக இருந்தாலும் மிகத் தெளிவாக உள்ளது. ஒட்ட்கம் கொட்டிலில் கட்டி வளர்த்தது- அதற்கு இஸ்ரேலில் புதைபொருள் ஆய்வு சுட்டிகள்; பிலிஸ்திய ராஜா -அப்ப்ரகாம் கதை கட்டுக் கதை பின்னாள் புனையல் தெளிவாகிறது. 95 வயது கிழவியை ராஜாவும் மக்களும் சைட் அடித்தனராம். கேவலமான கற்பனைகள்.

    யாத்திரை- செங்கடல் இரண்டாக பிரிந்து வழி விட்டது, முழு கட்டுக்கதை. அற்புதம் கட்டுரைகள் நன்று ஒளிர்கிறது.

    ஒரு சந்தேகம் 2 இராஜாக்கள்22: காலத்தில் உபாகமம் முழுதும் வரையப்பட்டதா?

    நெகேமியா 8: காலத்தில் வரையப்பட்டவை எது ?
    முழுமையான பழைய ஏற்பாட்டின் மிகப் பழைய எபிரேய ஏடுகள், எந்த நூற்றாண்டினது, அது பற்றி விளக்கம் தரவும்.

    ஆனந்தன் (ப்ரான்சிஸ்)

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  5. பைத்திய காரா

    ReplyDelete
  6. பைபிளை ஆதரித்தால் பைத்தியகாரத் தனமாகத் தான் மழுப்புவார்கள் கோகுல்

    ReplyDelete
  7. மிராக்கில்- ரக்த சாட்சி- சாகோதரியைத் திட்டுவதை விடுங்கள், பழைய ஏற்பாடும்- புதிய ஏற்பாடும் வரையப்பட்ட காலம் விதம் பற்றிய உண்மைகளை ஏற்று விளக்குங்கள்

    ReplyDelete

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா