Monday, August 4, 2014

பைபிள் புராணமில்லை கட்டுக்கதை தான்

அரேபியப் பாலைவன நாடுகளில் ஒன்றான இஸ்ரேல் நாட்டின் மதப் புத்தகமே எபிரேய பைபிள், இதன் கிறிஸ்துவ வடிவம் பழைய ஏற்பாடு. கிறிஸ்துவர்கள் பொ.கா. முதல் நூற்றாண்டில் இஸ்ரேலில் வாழ்ந்ததாகவும், ரோமன் ஆட்சியால் ஆயுதக் கலக்காரர்கள் தண்டனையில் மரணமான இயேசுவை தெய்வீகர் எனப் புனையும் புதிய ஏற்பாடு கதைச் சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை என இஸ்ரேலியர் 2000 ஆண்டுகளாக இயேசுவை ஏற்பதில்லை?.
பழைய  ஏற்பாடு எனும் எபிரேய பைபிளின் தன்மை என்ன?
ஆதியாகமம்15:7 ஆண்டவர் ஆபிராமிடம், "இந்நாட்டை உனக்கு உரிமைச் சொத்தாக அளிக்க உன்னைக் கல்தேயரின் ஊர் என்ற நகரிலிருந்து இங்கு அழைத்து வந்த ஆண்டவர் நானே" என்றார். 
18 அன்றே ஆண்டவர் ஆபிராமுடன் ஓர் உடன்படிக்கை செய்து, "எகிப்திலுள்ள ஆற்றிலிருந்து யூப்பிரத்தீசு பேராறுவரை உள்ள 19கேனியர், கெனிசியர், கத்மோனியர், 20 இத்தியர், பெரிசியர், இரபாவியர் 21 எமோரியர், கானானியர், கிர்காசியர், எபூசியர் ஆகியோர் வாழும் இந்நாட்டை உன் வழிமரபினர்க்கு வழங்குவேன்என்றார். 
உபாகமம்20:12 அது உன்னிடம் சரணடையாது உனக்கு எதிராகப் போர் தொடுத்தால், நீ அதை முற்றுகையிடு.13 கடவுளாகிய ஆண்டவர் அதை உன்கையில் ஒப்படைக்கும்போது,அதிலுள்ள எல்லா ஆண்களையும் வாளால் கொன்றுவிடு.  14 ஆனால், பெண்களையும் சிறுவர்களையும், ஆடு மாடுகளையும் நகரிலுள்ள அனைத்தையும் உன் கொள்ளைப் பொருளாகக் கொள். உன் கடவுளாகிய ஆண்டவர் எதிரியிடமிருந்து உனக்குக் கொடுத்துள்ள கொள்ளைப் பொருள்களை நீ அனுபவிக்கலாம்.15 இந்த நாடுகளைச் சாராத தொலையிலுள்ள எல்லா நகர்களுக்கும் அவ்வாறே செய்வாய்.16 ஆனால், இந்த மக்களின் நகர்களை உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்கு உரிமைச் சொத்தாகக் கொடுத்துள்ளதால், அதில் உயிர் வாழும் எதையும் கொல்லாமல் விடாதே. 17 இத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், இவ்வியர் மற்றும் எபூசியர் அனைவரையும் உன் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டபடி அழித்தொழிப்பாய்....
 


வேறு நாட்டில் வாழ்ந்த ஒருவனை அழைத்து அன்னியர் இவருக்காக ஆட்சி உரிமை தந்து, அந்த கானான் நாட்டின் மண்ணின் மைந்தர்கள் இஸ்ரேலின்   சிறு எல்லை தெய்வம் கர்த்தர் செய்ததாகக் கதை. இந்த அரசியல் ஆட்சி உரிமையே பைபிளின் அடிப்படை.


இந்தக் கதைகள் எப்பொழுது வரையப்பட்டன, இவை நடைபெற்ற சம்பவங்களா?
எகிப்தின் நைல் நதியிலிருந்து ஈராக்கின் எபிராய்து நதி வரை உள்ள பிரதேசம் என்றுமே இஸ்ரேலியர் கீழ் வந்ததில்லை.
கதையின் ஆபிரகாம் காலம் பொ.மு. 20-21ம் நூற்றாண்டு. ஆனால் இவருக்கு 5 நூற்றாண்டு பின் எகிப்தில் எபிரேயர் அடிமைப்பட்டு வாழ்ந்தபோது, மோசே தலைமையில் வெளியேறி வரும்போது மோசேக்கு இஸ்ரேலிற்கான சிறு எல்லை தெய்வம் யவ எனப்படும் எகோவா, கூற மோசே எழுதியதாகக் கதை.
பழைய ஏற்பாடு - நியாயப் பிரமாணங்கள் உருவான கதை.
 ஆனால் இந்த பழைய ஏற்பாட்டின் முதல் 5 புத்தகங்களில் உள்ள சட்டங்கள் மிகவும் தாழ்ந்த முன்னேற்றம் கொண்டதாக இருப்பினும், பல விஷயங்கள் ஆய்வில் பொய்த்து - மோசே சட்டங்கள் என்பவை பொ.மு.300- 150 வாக்கில் தான் புனையப்பட்டன என பைபிளியல் அறிஞர் ஏற்பதைப் பார்த்தோம்.

 வேறு நாட்டில் வாழ்ந்த ஒருவனை அழைத்து அன்னியர் இவருக்காக ஆட்சி உரிமை தந்து, அந்த கானான் நாட்டின் மண்ணின் மைந்தர்கள் இஸ்ரேலின்   சிறு எல்லை தெய்வம் கர்த்தர் செய்ததாகக் கதை. இந்த அரசியல் ஆட்சி உரிமையே பைபிளின் அடிப்படை.
ஆய்வு நூல்-R.E. Gmirkin- “ Berossus and Genesis, Manetho and Exodus: Hellenistic histories and the date of the Pentateuch” - இந்த நூல் மிகத் தெளிவாக கிரேக்கப் பாரம்பரியங்கள்- பக்கத்து நாடுகளில் எபிரேயர்கள் பற்றி உள்ள ஆதாரங்கள்,  ஆதியாகம நூலில் உள்ள பல நாடுகள்அவை அப்பெயரில் இயங்கிய காலம் எப்போது என ஆராய்ந்து – பொ.ச.270 வாக்கில் தான் நாடுகள் அப்பெயர்களில் இயங்கின என நிருபித்தார். கிரேக்க செப்துவகிந்தும் எபிரேயமும் ஒரே நேரத்தில் தான் புனையப்பட்டன எனக் காட்டுகிறார்.இஸ்ரேல் சுற்றி எழுந்த அகழ்வாய்வுகள் பைபிள் புராணக்கதைகளை முழுமையாக தவறு என்று நிருபிக்கிறது. அரசியல் ஒற்றுமை ஏற்படுத்த பொ.ச.300-200 இடையே எழுந்தது தான் பழைய ஏற்பாடு என்னும் யூதர்களின் பைபிள்.

 மேலும் பொ.மு.1ம் நூற்றாண்டின் சாக்கடல் சுருள்கள் கிடைத்துள்ளன. இவற்றில் மோசே சட்டங்களில் யாவே கர்த்தர் தன் ஆலய இருப்பிடம் என தேர்ந்தெடுத்தது சமாரியாவின் கெர்சிம் மலையை என உள்ளது.
ஆனால் அவை மாற்றப்பட்டு, பின் நாளில் தேர்ந்தெடுக்கும் இடத்தில் என மாற்றி, அது ஜெருசலேம் எனவும் அங்கு சாலமோன் ஆலயம் கட்டி அது பாபிலோனியர் இடிக்க மீண்டும் கட்டப்பட்டதாகக் கதை.
http://en.wikipedia.org/wiki/Solomon's_Temple
There is no direct archaeological evidence for the existence of Solomon's Temple. This building is not mentioned in surviving extra-biblical accounts.

பழைய ஏற்பாடு- மோசேயின் நியாய பிரமாணம்- மோசடிகள்  

இவ்வாறு சமாரியர் யூதரிடம் பிரிந்தது பொ.மு. 122இலாம். அப்போது வரை கர்த்தர் உறைவிடம் கெர்சிம் மலை தான், ஆனால் நம்மிடம் உள்ள பைபிளில் ஜெருசலேம் எனவும் சாலமன் பெரும் ஆலயம் கட்டியதாகவும் கதை.

ஜெருசலேமில் சாலமோன் கட்டியதான தேவாலயமோ, ஏன் எஸ்ரா -நெகேமியா காலத்து தேவாலயம் என்பதிலிருந்து புதைபொருள் அகழ்வாராய்ச்சியில் ஒரு செங்கல் கூடக் கிடைக்கவில்லை.
ஆனால் ஜெருசலேமில் அப்போது வாழ்ந்த மக்கள் தொகை 1000 பேருக்கும் குறைவே என இஸ்ரேலின் டெல்-அவிவ் பல்கலைகழக ஆசிரியர் கட்டுரையின் சில பகுதிகள்.
PERSIAN PERIOD FINDS FROM JERUSALEM: FACTS AND INTERPRETATIONS -ODED LIPSCHITS; INSTITUTE OF ARCHAEOLOGY, TEL AVIV UNIVERSITY.
http://www.jhsonline.org/Articles/article_122.pdf 
On the one hand, Zwickel (2008: 216–217), mainly on the basis of
the descriptions and lists in Nehemiah, estimated that the population
of the city before the days of Nehemiah was about 200 people
and afterwards about 400 or 600 people.3 Finkelstein (2008: 501–
507), on the other hand, expressed a similar view, though rooted in
the archaeological data. According to Finkelstein, only some parts
of the Southeastern Hill of Jerusalem were populated in this period,
leading him to conclude that the settled area consisted of c. 20–25
dunam. According to his calculations, the population in the city
during Nehemiah’s period was about 400 people, including women
and children (i.e., about 100 men).

செங்கடல்-கதை :  New Catholic Encyclopedia Vol-5 page-745 “Mention of the Red Sea in the Exodus context is a misnomer to be attributed to early Septuaginal editor. One has to glance at any map to see the complete lack of relevance the Red sea has to the entire narrative of Exodus. The Hebrew term Yamsup signifies Reed sea. ” New Catholic Encyclopedia Vol-5 page-745

மோசஸ் எழுதியதான நியாயப்பிரமாணத்தில் செங்கடல் என வந்ததற்கு கிரேக்கர்கள்   தவறான மொழி பெயர்ப்பு  காரணமாம் -அமெரிக்க  கத்தோலிக்க  பல்கலைக்  கழகத்தின்  கத்தோலிக்க கலைக்களஞ்சியம் சொல்கின்றது.  இது  நியாயப்பிராமாணங்கள்  அல்லது  புனையப் பட்டதே பொ.மு. 300-100 வாக்கில் என்பதைநிருபிக்கும்.
"Although there was no canonization of a complete tradition text until late 2nd century CE, no change was made in the basic structure of the Pentateuch and Historical books after the 3rd or 2nd Century BCE" . Pictorial Biblical Encyclopedia; Page -173.
//"The OT Genealogies are mostly the work of the Pentateuchal Priestly writer in the Persian Period from 6th to 4th Century BCE. .. Some such as Genesis Chapters 4-5 have parellels in Babylonian Literature".// New Catholic Encyclopedia, Vol-6, Page 319

“இஸ்ரயேலரின் வரலாறு”- – ஆர்,எட்வர்ட் சாம், தமிழ் தியொலொஜிகல் புக் க்லப், மதுரை 1996. .( (First Edition in 1966; this is 3rd edition)
ஒருவேளை, இஸ்ரயேலர் எந்தக் காலத்தில் எகிப்துக்குள் சென்றனர் என்ற கேள்வியே தவறாயிருக்கலாம், ஏனெனில் இஸ்ரயேலர் என்ற சிறப்புப் பெயரோடு தனித்தியங்கிய மக்கட் கூட்டம் ஒன்று அக்காலத்தில் இருந்ததில்லை.- பக்- 60
இப்பயண வரலாற்றில் காணப்படும் பல இடங்கள் இன்னும் கண்டு பிடிக்கவில்லை. எனவே, பயணப் பாதை, எதுவெனத் திட்டமாய்க் கூறுவதற்கு இல்லை.செங்கடலைக் கடந்திருந்தாலும் எகிப்தியக் குதிரை படைகளால் பிடிபட்டிருப்பர். என்வே, இது சாத்தியமென்று கூறப்படும் அளவு அன்று செங்கடல் நீளமுள்ளதாருக்கவில்லை எனக் கருத இன்று சான்றுகளுண்டு. – பக்  90- 91
ஆதியாகமம் பெயர்தரும் ஒரு வரலாற்று மனிதர் பெயரைக்கூட புறச்சான்றுகளால் உறுதிப்படுத்த இயலவில்லை. முக்கியமாக, அவர்களின் பெயர்களில் ஒன்றாயினும் கல்வெட்டுக்களில் கிடைக்கவில்லை. எனவே, பொதுவான பொருளில் வரலாறு எழுதுவது இயலாத செயலே. பக் 49
நூல்- : “நிஜங்கள்-விவிலியம் பற்றிய கேள்வி –பதில்” ; –கத்தோலிக்க பைபிளியல் பேராசிரியரும் திருச்சி சலேசிய மாநிலத் தலைவர் தெயோபிலஸ்இப்புத்தகத்திற்கு இரண்டு ஆர்ச் பிஷப்கள் என நிகில் ஒப்ஸ்டட் என்னும் முத்திரை அங்கிகாரம் கொடுத்துமுள்ளனர். 
தொடக்கத்தில் உள்ள முதல் 11 அதிகாரங்கள் சரித்திரத்தில் நிகழ்ந்தவை அல்ல என வல்லுனர்கள் கூறுகிறார்கள். மனிதன் தந்து சமுதாயத்தில் நிலவிய புதிர்களுக்க்ப் பதிலைத் தேடினர்(உ-ம் படைப்பு, பாவம், சாவு, துன்பம்…)இதற்குரிய பதிலகளைப் “படைப்பு” போன்ற புராண (Mythological) கதைகள் வழியாகக் கூறுகிறான், படைப்பை எவரும் பார்த்தது கிடையாது, பார்க்கவும் முடியாது. மனிதனே இந்தப் படைப்பை இப்படிப் பற்றி புரிந்து கொண்டுள்ளதன் விளக்கமே, இந்தக் கதைகளில் கூறப்பட்டுள்ளது போலத்தான் நடந்தன என்று சொல்ல முடியாது. -- பக்கம் 15
அதே சமயத்தில், ஆபிரகாமைப் பற்றி விவிலியத்தில் காணப்படுகின்ற அத்தனை சம்பவங்களையும் உண்மை வரலாற்று நிகழ்வுகளென யாரும் கருத முடியாது. ஏனெனில் விவிலியம் ஒரு இறையியல் வரலாறு. பக்௧17
ttp://en.wikipedia.org/wiki/Jews
According to archaeologists, however, Israelite culture did not overtake the region, but rather grew out of Canaanite culture.  

ஆனால் எபிரேயருக்கு எந்த தொடர்புமில்லை எனத் தெளிவாக பைபிளியல் அறிஞர்கள், புதைபொருள் அறிஞர் ஏற்றவைகளின் படங்களைப் போட்டு மழுப்பலாளர் செய்பவை போர்ஜரிக்கும் கீழ்த்தரமானது.

வஞ்சக அரசியல் சூழ்ச்சியாய் புனையப்பட்ட கதையே ஆபிரகாம் கதைகள். பைபிள் புராணமில்லை கட்டுக்கதை தான்!

No comments:

Post a Comment

காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா

 காலில் செருப்பு, நெருப்பு இல்லத அடுப்பு பொங்கல் போட்டோ ஷூட் செய்த தமிழர் விரோத்கள்- மனிதர்களா