Wednesday, August 6, 2014

அப்போஸ்தலர் பேதுரு யார்- எல்லாமே கட்டுக் கதை தானே

அப்போஸ்தலர் பேதுரு மிக முக்கியச் சீடர். இவரை ஏசு எப்படிச் சேர்த்தார். 
ஏசு பாவமன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றபின்,  மாற்கில் யோவான் கைதிற்குப் பிறகு தான் கலிலேயா வந்து இயக்கம் துவங்குகிறார்.அங்கு பேதுருவை சேர்த்தார்.

மாற்கு1:14 யோவான் கைதுசெய்யப்பட்டபின், கடவுளின் நற்செய்தியைப் பறைசாற்றிக் கொண்டே இயேசு கலிலேயாவிற்கு வந்தார்.
16 அவர் கலிலேயக் கடலோரமாய்ச் சென்றபோது சீமோனையும் அவர் சகோதரரான அந்திரேயாவையும் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.17 இயேசு அவர்களைப் பார்த்து, ' என் பின்னே வாருங்கள்; நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் ' என்றார்.18 உடனே அவர்கள் வலைகளை விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

ஏசுவோடு இயங்கிய பேதுரு தன்னை பேதுரு சேவல் இருமுறை கூவுமுன் மும்முறை நிராகரிப்பார் -என ஏசு சொன்னதாகவும் அப்படியே நடந்ததாகவும் கதை.   

 மாற்கு14: 30 இயேசு அவரிடம், ' இன்றிரவில் சேவல் இருமுறை கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உனக்குச் சொல்கிறேன் ' என்றார்.
72 உடனே இரண்டாம் முறை சேவல் கூவிற்று. அப்பொழுது, ' சேவல் இருமுறை கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய் ' என்று இயேசு தமக்குக் கூறிய சொற்களைப் பேதுரு நினைவு கூர்ந்து மனம் உடைந்து அழுதார்.

நான்காவது சுவியில் கதையே வேறு. யூதேயவின் எல்லையில் ஏசு பாவமன்னிப்பு ஞானஸ்நானியிடம் செல்கிறார். யோவான்ஸ்நானன் சீடர்கள் இருவர் ஏசுவிடம் சேர்ந்ததாகவும் கதை வருகிறது.  

யோவான்1:28 இவை யாவும் யோர்தான் ஆற்றுக்கு அக்கரையிலுள்ள பெத்தானியாவில் நிகழ்ந்தன. அங்குதான் யோவான் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
5 மறு நாள் யோவான் தம் சீடர் இருவருடன் மீண்டும் அங்கு நின்று கொண்டிருந்தார்.  36இயேசு அப்பக்கம் நடந்து சென்று கொண்டிருந்தார். யோவான் அவரைக் கூர்ந்து பார்த்து, ' இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி ' என்றார்.37 அந்தச் சீடர் இருவரும் அவர் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.
40 யோவான் சொன்னதைக் கேட்டு இயேசுவைப் பின்தொடர்ந்த இருவருள் அந்திரேயா ஒருவர். அவர் சீமோன் பேதுருவின் சகோதரர்.41 அவர் போய் முதலில் தம் சகோதரரான சீமோனைப் பார்த்து, ' மெசியாவைக் கண்டோம் ' என்றார். ' மெசியா ' என்றால் அருள்பொழிவு பெற்றவர் என்பது பொருள்.

 இந்தப் பேதுரு நிராகரித்தல் கதையையும் பார்ப்போம்.

யோவான்18:25 சீமோன் பேதுரு அங்க நின்று குளிர் காய்ந்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் அவரிடம், ' நீயும் அவனுடைய சீடர்களுள் ஒருவன் தானே ' என்று கேட்டனர். அவர் ' இல்லை ' என்று மறுதலித்தார்.26 தலைமைக் குருவின் பணியாளருள் ஒருவர், ' நான் உன்னைத் தோட்டத்தில் அவரோடு பார்க்கவில்லையா? ' என்று கேட்டார். பேதுருவால் காது வெட்டப்பட்டவருக்கு இவர் உறவினர்.27 பேதுரு மீண்டும் மறுதலித்தார். உடனே சேவல் கூவிற்று.

இவற்றில் எது உண்மை - இல்லை இரண்டுமே பொய்யா? சரி பார்க்க வேறு எவ்வித வழியும் இல்லை. ஏசு சீடர்கள் வாழ்ந்தனர் என்பதற்கு வரலாற்று ஆதாரம் ஏதும் கிடையாது.  
சொல்லப்படும் கதை சம்பவம் நிகழ்ந்து 40-100 ஆண்டு பின்பு தான் இவை புனையப்பட்டன.
சரி இன்னொரு சுவியில் பார்ப்போம்.

லூக்கா4: பின்பு இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். 

38 பின்பு இயேசு தொழுகைக் கூடத்தைவிட்டு, சீமோன் வீட்டிற்குள் சென்றார். சீமோனின் மாமியார் கடுங்காய்ச்சலால் துன்புற்ற நிலையில் இருந்தார். அவர்கள் அவருக்காக இயேசுவிடம் வேண்டினார்கள்.39 இயேசு அவரருகில் நின்று, காய்ச்சலைக் கடிந்துகொள்ள அது அவரைவிட்டு நீங்கிற்று. 
லூக்கா5:1 ஒரு நாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்றுகொண்டிருந்தார். 

 அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக் கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.4 அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, ' ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள் ' என்றார்.5 சீமோன் மறுமொழியாக, ' ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன் ' என்றார்.6 அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே,7 மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.8 இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, ' ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும் ' என்றார்.9 அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர்.10 சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, ' அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய் ' என்று சொன்னார்.11 அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டு போய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

கலிலேயாவில்  மாமியாரைப் பிடித்த நோய் விரட்டல், மீன் பிடிக்கும்போது, அதிகமாக பிடிக்க உதவியதால் பேதுரு சேர்ந்ததாகக் கதை.
 மாற்கில் யோவான் கைதிற்குப் பிறகு தான் கலிலேயா வந்து இயக்கம் துவங்குகிறார்.

யோவான்3:22 இவற்றுக்குப் பின்பு இயேசுவும் அவர்தம் சீடரும் யூதேயப் பகுதிக்குச் சென்றனர். அங்கே அவர் அவர்களோடு தங்கித் திருமுழுக்குக் கொடுத்து வந்தார்.23 யோவானும் சலீம் என்னும் இடத்துக்கு அருகில் உள்ள அயினோனில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏனெனில் அங்குத் தண்ணீர் நிறைய இருந்தது. மக்கள் அங்கு சென்று திருமுழுக்குப் பெற்றுவந்தார்கள்.24 யோவான் சிறையில் அடைக்கப்படுமுன் இவ்வாறு நிகழ்ந்தது.

சீடர்களுக்கு ஜெருசலேமில் மட்டும் தான் காட்சி, அன்றே பரலோகம் சென்றதாக லூக்காவில் கதை.  

லூக்கா24:50 பின்பு இயேசு பெத்தானியா வரை அவர்களை அழைத்துச் சென்று தம் கைகளை உயர்த்தி அவர்களுக்கு ஆசி வழங்கினார்.51 அவர்களுக்கு ஆசி வழங்கிக்கொண்டிருந்தபோதே அவர் அவர்களிடமிருந்து பிரிந்து விண்ணேற்றம் அடைந்தார்.

யோவான் சுவியில் கடைசி அத்தியாயம் சொல்லும் கதை. 
 ஆனால் யோவான் சுவி தன்னிச்சையாய் கதை வளர்க்கிறது. ஏசு இறந்து கதைப்படி உயிர்த்தபின்னர் மீண்டும் சொந்த ஊர் சென்று, பழைய மீன்பிடி தொழிலில் இறங்கினர்.

யோவான்21:1 பின்னர் இயேசு தம் சீடருக்குத் திபேரியக் கடல் அருகே மீண்டும் தோன்றினார். அவர் தோன்றியது இவ்வாறு:2 சீமோன் பேதுரு, திதிம் எனப்படும் தோமா, கலிலேயாவிலுள்ள கானாவைச் சேர்ந்த நத்தனியேல், செபதேயுவின் மக்கள் ஆகியோரோடு இயேசுவின் சீடர்களுள் வேறு இருவரும் கூடியிருந்தனர்.
6 அவர், ' படகின் வலப்பக்கத்தில் வலை வீசுங்கள்; மீன் கிடைக்கும் ' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே வீசினார்கள். மீன்கள் மிகுதியாய் அகப்பபட்டதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.

இந்தக் கதை லூக்காவில் பேதுரு சீடராக சேருமுன் எனும்படி கதையை மேலே பார்த்தோம். இந்தக் கதை லூக்காவில் பேதுரு சீடராக சேருமுன் எனும்படி கதையை மேலே பார்த்தோம். இப்போது பேதுருக்கு தலைமைப் பதவி தந்தாராம்- இது கத்தோலிக்க போப்கள் இதன் தொடர் என்றிட உதவும் கதை. 

யோவான்21:15 அவர்கள் உணவருந்தியபின் இயேசு சீமோன் பேதுருவிடம்,  'யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், 'ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! 'என்றார். இயேசு அவரிடம், 'என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்' என்றார்.16இரண்டாம் முறையாக இயேசு அவரிடம், ' யோவானின் மகன் சீமோனே, நீ என்மீது அன்பு செலுத்துகிறாயா? ' என்று கேட்டார். அவர் இயேசுவிடம், ' ஆம் ஆண்டவரே, எனக்கு உம்மிடம் அன்பு உண்டு என உமக்குத் தெரியுமே! ' என்றார். இயேசு அவரிடம், ' என் ஆடுகளை மேய் ' என்றார்.17 மூன்றாம் முறையாக இயேசு அவரிடம், ' யோவானின் மகன் சீமோனே, உனக்கு என்னிடம் அன்பு உண்டா? ' என்று கேட்டார். ' உனக்கு என்னிடம் அன்பு உண்டா? ' என்று இயேசு மூன்றாம் முறை கேட்டதால் பேதுரு துயருற்று, அவரிடம், ' ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா? ″ என்றார். இயேசு அவரிடம், ″ என் ஆடுகளைப் பேணிவளர். ″ 18 ' நீ இளைஞனாக இருந்தபோது நீயே இடையைக் கட்டிக்கொண்டு உனக்கு விருப்பமான இடத்தில் நடமாடிவந்தாய். உனக்கு முதிர்ந்த வயது ஆகும்போது நீ கைகளை விரித்துக் கொடுப்பாய். வேறொருவர் உன்னைக் கட்டி, உனக்கு விருப்பம் இல்லாத இடத்திற்குக் கூட்டிச்செல்வார் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன் ' என்றார்.19 பேதுரு எவ்வாறு இறந்து கடவுளை மாட்சிப்படுத்தப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே அவர் இவ்வாறு சொன்னார். இதைச் சொன்ன பின் பேதுருவிடம், ' என்னைப் பின் தொடர் ' என்றார்.

பேதுரு அன்புச் சீடர் பற்றிக் கேட்க ஏசு பதில் என உள்ளது.

யோவான்21:20 பேதுரு திரும்பிப் பார்த்தபோது இயேசுவின் அன்புச் சீடரும் பின்தொடர்கிறார் என்று கண்டார். 21 அவரைக் கண்ட பேதுரு இயேசுவிடம், ' ஆண்டவரே இவருக்கு என்ன ஆகும்? ' என்ற கேட்டார்.22 இயேசு அவரிடம், ' நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால் உனக்கு என்ன? நீ என்னைப் பின்தொடர்ந்து வா ' என்றார்.

 பேதுரு மற்ற சீடர் இறந்தாலும் இந்த அன்புச் சீடர், உயிரோடு இருக்கும்போதே ஏசு இரண்டாவது வருகை என்றாராம்.  இங்கு நம்க்கு என்னும் சொல்லே மிகத் தெளிவாக இந்தக் கதையை புனைந்தது வேறொருவர் எனத் தெரியும்.

யோவான்21:23 .. இவர் இறக்க மாட்டார் என இயேசு கூறவில்லை. மாறாக, ' நான் வரும்வரை இவன் இருக்க வேண்டும் என நான் விரும்பினால், உனக்கு என்ன? ' என்றுதான் கூறினார்.24 இந்தச் சீடரே இவற்றிற்குச் சாட்சி. இவரே இவற்றை எழுதி வைத்தவர். இவரது சான்று உண்மையானது என நமக்குத் தெரியும்.

இங்கு நமக்கு என்னும் சொல்லே மிகத் தெளிவாக இந்தக் கதையை புனைந்தது வேறொருவர் எனத் தெரியும்.

 இந்தப் பேதுரு இரண்டு கடிதம் உண்டு, 2பேதுரு தான் புதிய ஏற்பாட்டில் கடைசியாய் இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் புனையப்பட்டது.

வேண்டும்போது- வேண்டும் விதமாய் சேர்ப்பதும் நீட்டுவதுமாய் புனையப்பட்டதே ஏசு பற்றிய புனைகதைகள்- சுவிசேஷங்கள்.

பேதுரு எங்கே இயங்கினார், மரணம் எப்படி என்பது தெரியாது- கூறப்படும் கதைகள் எல்லாம் புனையப்பட்ட ஆதாரமற்றவையே

2 comments:

  1. Jesus piranthathukku oru country e irukke Jerusalem apdna avaroda seedarkal valnthathukkum atharam irukku ni unmaya therinjukanumna Bible la full a read pannu apram postlam podalam k va

    ReplyDelete
  2. I have read bible and Jesus was an ordinary sinner died for his sins and expected world to end in his life time. The gospel story authors who did not know Jesus made tales to make dead man Jesus as if he was a holy - when JEsus was really a RACIST

    ReplyDelete

'சிங்கம்' போன்ற படங்கள் ஆபத்தான செய்தியை அனுப்புகின்றன: பாம்பே உயர்நீதிமன்ற நீதிபதி

   Films Like 'Singham' Send Dangerous Message: Bombay High Court Judge https://www.newspointapp.com/news/india/films-like-singham-s...