Monday, August 25, 2014

இயேசு கிறிஸ்து பெற்ற பாவமன்னிப்பு ஞானஸ்னானம்

இறந்த மனிதன் ஏசுவை தெய்வீகர் ஆகக் காட்டும் ஒரு புனையலைப் பாரிப்போம். 
  

மாற்கு 1 :ஆகையால் யோவான் வந்தான். அவன் வானாந்தரப் பகுதியில் மக்களுக்கு ஞானஸ்நானம் வழங்கினான். அவன் மக்களிடம் மனம் மாறியதைக் காட்டும்படியான ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளும்படி சொன்னான். அப்பொழுது அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும் என்றான். யூதேயா நாட்டினரும் எருசலேமில் வாழ்கின்ற அனைத்து மக்களும் அவனிடம் வந்தனர். அவர்கள் செய்த பாவங்களை அறிக்கையிட்டனர். யோர்தான் ஆற்றின் கரையில் யோவான் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்.

கலிலேயாவில் உள்ள நாசரேத் நகரத்திலிருந்து இயேசு அப்பொழுது அங்கே வந்தார். அவர் யோர்தான் ஆற்றில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார்.

யோவான் ஸ்நானகரிடம் இயேசு பாவ மன்னிப்பு ஞானஸ்நானம் பெற்றார் என்பதும் அது பெற்றபின் தான் தெய்வீகர் எனவும் தெளிவாக கதை
மாற்கு1:10 அவர் தண்ணீரிலிருந்து வெளியேறியபோது வானம் திறக்கப்பட்டதைக் கண்டார். பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப் போல அவரிடம் கீழே இறங்கினார். 11 “நீர் என்னுடைய மகன். நான் உம்மிடம் அன்பாய் இருக்கிறேன். நான் உம்மிடம் மிகவும் பிரியமாய் இருக்கிறேன்” என ஓர் அசரீரி வானத்திலிருந்து கேட்டது.
மத்தேயு3:16 இயேசு ஞானஸ்நானம் பெற்று, நீரிலிருந்து மேலெழுந்து வந்தபோது, வானம் திறந்து, தேவ ஆவியானவர் ஒரு புறாவைப் போலக் கீழிறங்கி அவரிடம் வருவதைக் கண்டார். 17 வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. அக்குரல்,, “இவர் (இயேசு) என் குமாரன். நான் இவரை நேசிக்கிறேன். நான் இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன்” எனக் கூறியது.
வானத்தின் குரல் இயேசுவிடம் சொன்னதா? அல்லது மக்களிடம் சொன்னதா? சுவிசேஷக் கதாசிரியர்கள் மாற்றி- மாற்றி கதை கட்டுவது காணலாம். 
முதல் மூன்று சுவிகள்படி- இயேசு யூதேயாவில் பாவ மன்னிப்பு ஞானஸ்நானம் பெற்று பின் , யோவான் ஸ்நானகர் கைதாகிட கலிலேயா சென்றபின்னர் தான் சீடர் சேர்க்கிறார்.

மாற்கு 1 :14 இதற்குப் பிறகு யோவான் சிறையில் அடைக்கப்பட்டான். இயேசு கலிலேயாவுக்குச் சென்று, தேவனிடமிருந்து பெற்ற நற்செய்தியைப் போதித்தார்.  

ஆனால் யோவான் சுவியில் ஏசு தனி இயக்கம் ஆரம்பித்து யூதேயா நந்தபோது- யோவான் ஸ்நானகர் தனித்து இயங்கியதும்- தன் சீடர்களை ஏசுவைப் பின்பற்ற சொல்லாது தானே இயங்கியதும் தெளிவாக உள்ளது. 

யோவான் 3:22 அதற்குப் பிறகு, இயேசுவும் அவரது சீஷர்களும் யூதேயா பகுதிக்குப் போனார்கள். அங்கு இயேசு தன் சீஷர்களோடு தங்கி ஞானஸ்நானம் கொடுத்தார். 23 யோவானும் அயினோனில் ஞானஸ்நானம் கொடுத்து வந்தான். அயினோன், சாலிம் அருகில் உள்ளது. அங்கே தண்ணீர் மிகுதியாக இருந்ததால் யோவான் ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தான். மக்கள் அவனிடம் போய் ஞானஸ்நானம் பெற்றார்கள்.24 (இது யோவான் சிறையில் அடைக்கப்படும் முன்பு நிகழ்ந்தது).
  

எது உண்மை? தெரியாது? ஏதோ ஒன்று சரியாக இருக்கலாம்! அல்லது இரண்டுமே பொய்யாக இருக்கலாம்.  இயேசு பாவ மன்னிப்பு ஞானஸ்நானம் பெற்ற போது அதிசயம் கதைகள் உண்மை இல்லை. 


 ஏசு மரணத்திற்கு 20 ஆண்டு பின்பு ஒரு கதை.

இயேசு பெயரில் -ஞானஸ்நானம்  இல்லை. 
அப்போஸ்தலர் பணி18:24 அலக்சாந்திரியாவில் பிறந்த அப்பொல்லோ எனும் பெயருடைய யூதர் ஒருவர் எபேசு வந்தடைந்தார். அவர் சொல்வன்மை மிக்கவர்: மறைநூல்களில் புலமை வாய்ந்தவர்.25ஆண்டவரின் நெறிகளைக் கற்றறிந்தவர்: ஆர்வம்மிக்க உள்ளத்தோடு இயேசுவைப்பற்றிய செய்தியைப் பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தார். ஆனால் அவர் யோவான் கொடுத்த திருமுழுக்கை மட்டுமே அறிந்திருந்தார்.

இயேசு - பவுல் அனைவரும் தங்கள் வாழ்நாளில் உலகம் அழியும் என்றனர். 

அவர்கள் சொன்னவை நடக்கவில்லை. இயேசு சாதாரண மனிதர் - தன் பாவத்திற்காக மரணமானார்.

உபாகமம்24:16 பிள்ளைகளுக்காகத் தந்தையரும், தந்தையருக்காகப் பிள்ளைகளும் கொல்லப்பட வேண்டாம். அவரவர் தம் பாவத்திற்காகக் கொல்லப்படட்டும்.



No comments:

Post a Comment

SC orders probe into Caste certificates issuance in Tamil Nadu

  ‘Prima facie a huge racket’: SC orders probe into caste certificates issuance in Tamil Nadu A bench comprising Justice JB Pardiwala and Ju...