http://www.dinamalar.com/district_detail.asp?id=1506786
பிஷப் இவான் அம்புரோஸை கண்டித்து பள்ளி, சர்ச்சினை மூடி மக்கள் போராட்டம் - பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை
பிஷப் இவான் அம்புரோஸை கண்டித்து பள்ளி, சர்ச்சினை மூடி மக்கள் போராட்டம் - பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை
21ஏப்
2016
23:49
2016
23:49
தூத்துக்குடி: தூத்துக்குடி மறை மாவட்ட ரோமன் கத்தோலிக்க பிஷப் இவான் அம்புரோஸை கண்டித்து சவேரியார்புரம் கிராம மக்கள் சர்ச், பள்ளிகளை மூடி உண்ணாவிரதப் போராட்டத்தில்
திருப்பண்டம்:தூத்துக்குடி மறை மாவட்டத்தில் சவேரியார்புரம் உள்ளது. இங்கு சவேரியார் சர்ச்சும், ஆர்.சி., நடுநிலைப்பள்ளியும் உள்ளது. சவேரியார் சர்ச்சில் 125 வது ஆண்டு விழா 2013 ம் ஆண்டு நடந்தது. இங்கு பாதரியாராக ஜார்ஜ் ஆலிவர் உள்ளார்.
சவேரியார் பயன்படுத்தி பொருள், அவரது உடலில் ஒரு பாகத்தை சர்ச்சுகளில் வைத்து திருப்பண்டம் என, அழைக்கப்பட்டு வழிபடுவது வழக்கம். அதே போல் சவேரியார் வலது கையில் உள்ள சிறிய எலும்பு துண்டு புனேயில் உள்ள குருமடத்தில் இருந்து, பாதிரியார் ஜார்ஜ் ஆலிவர் பெற்று வந்துள்ளார். இதற்கென சவேரியார் சர்ச்சில்தனிப்பீடம் அமைத்து அப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
பாதிரியார் மீது நடவடிக்கை
திருப்பண்டத்தை பிஷப் இவான் அம்பு ரோஸ், மணப்பாடு பகுதியில் சவேரியார் வாழ்ந்த பகுதியில் அமைந்துள்ள ,சர்ச்சுக்கு கொண்டு செல்ல முயற்சித்துள்ளார். இதற்கு அப்பகுதி மக்களும், பாதிரியாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந் நிலையில் பாதிரியார் ஜார்ஜ் ஆலிவர் மீது சஸ்பெண்ட் செய்வதற்காக பிஷப் கடிதம்
அனுப்பியுள்ளார். பிஷப்புக்கு மேல் அதிகாரம் படைத்த கருவினால் என்பவர் 6 மாதங்களுக்கு
முன்பு சவேரியார்புரம் சர்ச்சை பார்வையிட்டு சவேரியார் திருப்பண்டத்தை முறையாக
பராமரிப்பு செய்து வழிபட்டு வருகின்றனர் என, தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.
பள்ளி காலிப்பணியிடம்: இங்குள்ள ஆர்.சி., நடுநிலைப்பள்ளியில் 1,200 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு தலைமையாசிரியர் உட்பட 3 காலிப்பணியிடங்கள் உள்ளது. இந்த காலிப்பணியிடத்திற்கு இதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களில் பதவி மூப்பு அடிப்படையில் மூன்று பேரை பணி நியமனம் செய்ய பாதிரியார் ஜார்ஜ்ஆலிவர் பரிந்துரை செய்து பிஷப்புக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பிஷப் இதனை மறுத்து மறை மாவட்டத்தில் பதவி மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும். வெளியில் இருந்து ஆசிரியர்கள்
வருகை தருவார்கள், என தெரிவித்துள்ளார். பிஷப் மற்றும் பாதிரியார்கள் செயல்பாடுகளில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அப்பகுதியினை சேர்ந்த மக்கள் நேற்று பள்ளியை இழுத்து பூட்டினர்.
பள்ளிக்கு வந்த மாணவர்கள் மரத்தடியில் பாடம் நடத்தப்பட்டது. பின் சர்ச்சையும் இழுத்து பூட்டினர். பிஷப் இவான் அம்புரோஸ் செயலுக்கு கண்டனம் தெரிவித்து சவேரியார்புரம் பகுதியில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக நேற்று முதல் 6ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்கள் முடிவடைந்ததால் அவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. முதல் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்., 30 ம் தேதி வரை பள்ளி வேலை நாள் ஆகும். இந்த பிரச்னை காரணமாக அவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை பள்ளி நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டுள்ளது. உண்ணாவிரத போராட்டத்தில் இருப்பவர்கள். இப் பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் ஓயப்போவதில்லை என,உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment