Thursday, October 26, 2017

Cheating ways of Christian Mercenary Conversions like a Prostitute

மதம் மாறமுடியாது என்று மறுத்தாலும், எதிர்த்தாலும் ஆண்கள் இல்லாத நேரத்தில் வந்து சிறார் மற்றும் பெண்களை மதம் மாற்ற முயலும் கிறிஸ்தவ மிஷனரிகள் – நரிக்குறவர்களும், உண்மையான மிஷி-நரிகளும்!

https://antihidnu.wordpress.com/2014/01/20/narikuravar-protested-and-complained-against-christians-for-conversion-activities/

மதம் மாறமுடியாது என்று மறுத்தாலும், எதிர்த்தாலும் ஆண்கள் இல்லாத நேரத்தில் வந்து சிறார் மற்றும் பெண்களை மதம் மாற்ற முயலும் கிறிஸ்தவ மிஷனரிகள் – நரிக்குறவர்களும், உண்மையான மிஷி-நரிகளும்!
Narikuravar protest against christian conversion
Narikuravar protest against christian conversion – நன்றி நக்கீரன்
நரிக்குரவர்களிடம் நரித்தனம் காட்டும் மிஷிநரிகள்: புதுக்கோட்டை அருகே ரெங்கம்மாள் சத்திரத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட நறிக்குறவர்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் காளி உள்ளிட்ட கடவுளை வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக (டிசம்பர் 2013 முதல்) அந்த பகுதியை சேர்ந்த மல்லி மற்றும் வேதையன் ஆகியோர் வேறு மதத்திற்கு மாறிவிட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து மல்லி மற்றும் வேதையன் ஆகியோர் புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு சிலருடன் சேர்ந்து கொண்டு நறிக்குறவர் காலனியில் வசித்து வரும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் மதமாற்றம் செய்ய முயற்சி செய்வதாக கூறப் பட்டது. சிறுவர்களை வழிபாட்டிற்கு பெரியவர்களுக்கு தெரியாமல் அழைத்து கொண்டு சென்று விடுவதாகவும் பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்[1].  இதுவே சட்டப்படிக் குற்றமாகும். நீயாய-தர்மங்களைப் பற்றி அவர்கள் என்றுமே கவலைபடாததால், அவற்றைப் பற்றி சொல்வதில் ஒன்றும் அர்த்தமில்லை.
Narikuravar protest against christian conversion - நன்றி நக்கீரன்
Narikuravar protest against christian conversion – நன்றி நக்கீரன்
புகார் கொடுத்த பிறகும் மோசடியில் ஈடுபடும் கிறிஸ்தக்கூட்டங்கள்: தாங்கள் மதம் மாறமாட்டோம் என்று கூறினாலும் அவர்கள் மதமாற கட்டாயப்படுத்துவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீசாரிடம் நறிக்குறவர்கள் புகார் அளித்துள்ள நிலையில்[2] 19-01-2014 அன்றும் ஒரு சிலர் குறவர் காலனிக்கு வந்து ஒரு குறிப்பிட்ட மதத்தை / கிருத்துவத்தைச் சேர்ந்த நெறிகள் அடங்கிய 10 கட்டளைகள் என்ற பெயரில் ஒரு விளம்பர பலகையை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று விட்டு முன்பு வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இப்படித்தான் விற்க்கவேண்டும் என்றால், அவர்களது கடவுளது தகுதி முதலியவற்றை அறிந்து கொள்ளலாம்! இதனை அவர்கள் விரும்பவில்லை, எதிர்க்கவும் செய்தனர். இதனையடுத்து நறிக்குறவர் காலனி சங்க தலைவர் வேலன் தலைமையில் மதமாற்றம் செய்ய முயற்சிப்பவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி இன்று காலணியில் 100க்கும் மேற்பட்டோர் காலனியில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனையடுத்து மறியலை குறவர்கள் கைவிட்டனர்[3].
Narikuravar protest against christian conversion - நன்றி நக்கீரன்
Narikuravar protest against christian conversion – நன்றி நக்கீரன்
இந்து அமைப்புகளின் கண்டனம்: இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற  பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் புதுக்கோட்டையில் கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி  நடைபெற்று வருவது குறித்து கண்டனம் தெரிவித்தனர். மேலும், தமிழக அரசு இப்பிரச்சினையை தொடக்க நிலையிலேயே தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்[4]. இன்றைய நிலையில் ஓரளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், இந்து அமைப்புகள் தட்டிக் கேட்பது வரவேற்க்கத் தக்கதே. ஆனால், “இந்துக்கள்” என்று சொல்லிக் கொண்டு, இவர்களே பல குழுக்களில் பிரிந்து, மற்றவர்களைக் குழப்பி வருகிறார்கள் என்பதும் கண்டிக்கத் தக்கதே.
Narikuravar protest against christian conversion - நன்றி நக்கீரன்
Narikuravar protest against christian conversion – நன்றி நக்கீரன்
ஜூலை 2012ம் இதே மாதிரி பொள்ளாச்சியில் புகார் கொடுத்துள்ளனர்: கிறிஸ்தவ மதத்துக்கு மாறும்படி கட்டாயப்படுத்துவதாக, இந்து நரிக்குறவர் சமூகத்தினர், குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில், சப்-கலெக்டரிடம் புகார் கொடுத்தனர்[5]. பொள்ளாச்சி அருகேயுள்ள ஐந்து கிராமங்களில், இந்து நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அதிகளவில் உள்ளனர். இச்சமூகத்தை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள், ஆர். பொன்னாபுரத்தில் வசிக்கின்றன. ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும், கிறிஸ்துவ மதத்தினர், இந்து குறவர் இனத்தை சேர்ந்தவர்களை, மத மாற்றம் செய்ய கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது. இச்சூழலில், ஐந்து நரிக்குறவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள், கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்டனராம். இச்சமூகத்தை சேர்ந்த ஆண்கள், பகல் நேரத்தில் வேலைக்கு சென்றவுடன், ஊருக்குள் கிறிஸ்தவ மத போதகர்கள் நுழைந்து, பெண்களுக்கு தேவையான பொருட்களை கொடுத்தும், குழந்தைகளுக்கு விளையாட்டு பொம்மைகள், பிஸ்கட் தந்தும், மத மாற்றம் செய்ய முயற்சிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது[6]. இதுதொடர்பாக, நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த தேசிங்கு, ராஜேந்திரன், இந்து முன்னணி அமைப்பு மாவட்ட செயலர் உள்ளிட்டோர், நேற்று நடந்த குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில், சப்-கலெக்டரிடம் புகார் கொடுத்தனர்.
Narikuravar protest against christian conversion - நன்றி நக்கீரன்
Narikuravar protest against christian conversion – நன்றி நக்கீரன்
புதுவழியை அதாவது மோசடியை பின்பற்றும் மிஷனரிகள்: ஆண்கள் இல்லாத நேரங்களில், சிறுவர்கள் மற்றும் பெண்களிடம் தங்களது கைவரிசையைக் காட்டுகின்றனர் என்று பார்க்கும் போது, எவ்வளவு கேவலமாக நடந்து கொள்கின்றனர் என்று தெரிகிறது. ஆங்கிலேயர்கள் தாங்கள் ஏதோ உத்தமர்கள் போன்று இவர்களை குற்றம் புரியும் இனங்களுடன் சேர்த்து பட்டிலியலிட்டுக் கொடுமைப் படுத்தினர். ஆனால், இன்றும் கிருத்துவ மிஷனரிகள், இவ்வாறு நாகரிகம் வளர்ந்தும், மிகக்கொடுமையான எண்ணங்களுடன், குரூரக் குற்ற எண்ணங்களுடன் இப்படி மோசடி செய்து வருகின்றனர். ஆகவே, இவர்களை எந்த சட்டத்தில், எந்த வகையான பிரிவில் சேர்ப்பது என்று தெரியவில்லை.
கிருத்துவர்களின் முயற்சிகள் தோற்றது ஏன்?: இது – குறவர்கள் மதம் மாற்றத்தை எதிர்த்த நிலைப்பாடு, மறியல், எதிப்பு, புகார் முதலியன – நிச்சயமாக மிகமுக்கியமான செய்தியாகும். கிருத்துவ மிஷனரிகளின் பொய்ப்பிரச்சாரம், சரித்திர புரட்டல், இறையியல் மோசடிகள் அனைத்தையும் வெளிப்படுத்துவதாகும். “நரிக்குறவர்” என்பவரை நரிபிடிப்பவர்கள், பறவைப்பிடிப்பவர்கள் என்றுதான் குறிப்பிடுகின்றனர்[7]. “ஜிப்சி” போன்ற மக்களுடனும் ஒப்பிட்டு எழுதி வருகின்றனர்[8]. டி. எஸ். பிரகாஷ் போன்றோர் இவர்களை மதம் மாற்ற முயன்றிருக்கிறார்[9], ஆனால் வெற்றியடைவில்லை[10]. வலிய வந்து நிதியுதவியும் அளித்து வருகின்றனர்[11]. மனிதனை பலியிட்டுப் புசித்தல் என்ற இறையியலை மீது ஆதாரமாக ஆரம்பித்துப் பிறகு, இடைக்காலத்தில் மாற்றியமைக்கப் பட்டு “யுகாரிஸ்ட்” பெயரில் வளர்ந்த மதம் தான் கிருத்துவம். இதனால், அவர்கள் தாங்கள் எந்நாட்டிற்குச் சென்றாலும், அங்கிருப்பவர்கள் எல்லோரும் தங்களைப் போன்றே நாகரிகமற்று இருக்கும் மக்கள் என்றே நினைப்பது அவர்களுக்கு அவர்களுக்கு வழக்கமாக இருந்து வந்தது. ஆனால், இந்தியாவிற்கு வந்தபோது, அவர்களுக்கு பெருத்த அதிர்ச்சி ஏற்பட்டது. ஒரு நிலையில், தமது மதத்தின் மூலமே இந்தியாவிலிருந்து தான் ஆரம்பித்தது என்ற எண்ணமும் தோன்றியது. உலகம் ஊழியில் மூழ்கி மறைந்து, பிறகு மனித இனம் தோன்றி வளர்ந்து பெருகிய கதைகளுக்கு ஆரம்பத்தைத் தேடிய போது, இந்தியாதான் என்று தெரிந்து கொண்டுனர். அவ்வகையில் தான், நரிக்குறவர்களை தம் முன்னோடிகள் என்று நினைத்து ஆராய்ச்சி மேற்கொண்டனர். ஆனால், அவர்களது எண்ணங்களின் ஆழங்களில் இந்திய இதிகாச-புராணங்கள் இருப்பது கொண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த உண்மையினை மறைக்கத்தான், அவர்கள் அமுக்கி வாசிக்க ஆரம்பித்தனர்.
சோமன்னாவை நினைவுப் படுத்திய பெரியவர்: இப்பொழுதும், ஒரு பெரியவர் கிருத்துவர்களை எதிர்த்ததோடல்லாமல், தங்களது நம்பிக்கையின் படி, ஒரு மணி, கற்ப்பூரம் இடும் பலகை மற்றும் இசைக்கருவி சகிதம் வந்து, தெருவில் உட்கார்ந்து, அந்த இசைக்கருவியை இசைக்க ஆரம்பித்தது, எனக்கு “சோமன்னத்துடி” என்ற படத்தின் நாயகன் “சோமன்னா”வின் ஞாபகம் தான் வருகிறது. பஞ்சத்தினால், ஒரு கிராமத்தில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. வயல்கள் காய்கின்றன; கால்நடைகள் ஒன்றொன்றாக இறக்கின்றன; ஏன் மனிதர்கள் கூட இறக்கிறர்கள்; கிராம மக்கள் அக்கிராமத்தை விட்டு வெளியேற ஆரம்பிக்கின்றனர்; ஆனால், சோமன் தனது துடியை வாசித்துக் கொண்டு மழை வரும் என்று நம்பிக்கையோடு அங்கேயே இருக்கிறான்; அந்நிலையில் கிருத்துவ மிஷனரிகள் வந்து அவர்களுக்கு உதவுவது போல உதவி மதம் மாற்றுகின்றனர்; சோமன்னனின் தம்பியை மதம் மாற்றுகின்றனர்; அவனை வைத்து சோமன்னாவை மதம் மாற்றத் தூண்டுகின்றனர்; சொமன்னா மறுக்கிறான்; வருத்தத்தோடு தனது துடி/பறையை அடித்து முழக்குகிறான்; மழை வருகிறது; அத்தோடு கதையும் முடிகிறது! எனவே, இத்தகைய பெரியவர்கள் இருந்தாலே போதும், யாரும் ஒன்றும் செய்து விடமுடியாது. இப்பொழுது ஆர்.எஸ்.எஸ், பிஜேபி மற்ற இந்து அமைப்புகள் இந்த பெரியாரை மதிக்க வேண்டும், பாராட்ட வேண்டும்.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளில் சிக்கிய நரிக்குறவர்கள்: ஆங்கிலேயர்கள் அவர்களை அடக்குமுறையில் ஒழிக்கவும் திட்டமிட்டனர். அதன்படியே அவர்களை குற்றபுரியும் மக்களிங்கள் சட்டம் [Criminal Tribes Act 1871] கீழ் கொண்டு வந்தனர். சுதந்திரம் பெற்றப் பிறகுதான், அவர்களது நிலை உயர ஆரம்பித்தது. ஆனால், கிருத்துவர்கள் இந்த உண்மைகளையெல்லாம் மறைந்து, அவர்களை ஏதோ உயர்த்துவோம் என்பது போல நடித்து சமூகத்தில் பிரிவினை ஏற்படுத்த முயன்று வருகின்றனர். இதுதான் இவ்விசயத்திலும் வெளிப்பட்டுள்ளது. மோசடி மூலம் எப்படி அவர்கள் மதம் மாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது அப்பட்டமாக வெளிப்பட்டுவிட்டதால், அரசு உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமல்லாது, சமூக ஆராய்ச்சியாளர்கள், மற்ற பேராளர்களின் அவர்களது கீழ்த்தரமான காரியங்களைக் கண்டிக்க வேண்டும்.
வேதபிரகாஷ்
© 20-01-2014

[1] தினமணி, புதுகைஅருகேநரிக்குறவர்காலனியில்மதமாற்றம்பொதுமக்கள்புகார், By மோகன்ராம், புதுக்கோட்டை, First Published : 19 January 2014 05:35 PM IST
[3] இரா.பகத்சிங், மதம்மாறகட்டாயப்படுத்துகிறார்கள்நறிக்குறவர்கள்மறியல், நக்கீரன், ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2014.
[6] தினமலர், நரிக்குறவர்சமூகத்தினர்மதமாற்றம்சப்கலெக்டரிடம்பொதுமக்கள்புகார், ஜூலை 23, 2012.
[7] G. Srinivasa Varma, Vaagri Boli. J.P. Vijayathilakan, Studies… Madras: Madras Christian College. They catch small birds, such as the parrot, but never eat the canary, which is sacred to the Goddess.
[8] William J. Jackson, Rituals of a “Gypsy” Tribe: The Vagri or Narikuravar ,  Religious Studies, Indiana Univ.-Purdue Univ., Indianapolis
Regional American Academy of Religion Conference, Bloomington, IN, 4/8/1989

No comments:

Post a Comment

மதுரையில் மாநகராட்சி இளம் பெண் ஊழியரிடம் 4 வருடம் உல்லாசமாக இருந்து குழந்தை பிறந்த பின் கழட்டிவிட்ட திருமணமான பாஸ்டர் மீது புகார்.

மதுரையில் பாஸ்டர் செய்த வேலை.. "கணவன் மனைவியாய் வாழ்ந்தோமே".. கமிஷனர் ஆபீசுக்கு ஓடிய மாநகராட்சி பெண்  By Hemavandhana Updated: Wed...