இந்த அய்க்கப் என்றால் என்ன என்பதை அனுபவபூர்வமாக கண்டவன் என்றமுறையின் அந்த அமைப்பு எப்படிபட்ட குதர்க்கமானது என்பது தெரியும்
நான் படித்த கல்லூரியில் அக்கய்ப் இருந்தது, நானும் கொஞ்சநாள் இருந்தேன், ஆனால் எதற்கெடுத்தாலும் விழிப்புணர்வு எனும் பெயரில் அரசுக்கு எதிரான சிந்தனைகளையே அவர்கள் வளர்த்துகொண்டிருந்ததால் விலகிவிட்டேன்.
அதில் இருந்த மற்ற மாணவர்களை நோக்கினேன் , நாளைய புரட்சியாளர்கள் போலவே பேசிகொண்டிருந்தார்கள். அதாவது மாணவர்களுக்கு ஒரு வெறியூட்டும் வேலையினைத்தான் இது செய்கின்றது
அது என்ன அய்க்கப்? அய்யாகண்ணு நிறுவணமா? இல்லை
All India Catholic University Federation என்பதன் சுருக்கம் (AICUF) என வரும்.
கவனியுங்கள் அது அகில இந்திய கத்தோலிக்க மாணவர்களின் கூட்டமைப்பு, அதில் கத்தோலிக்க மரபினை, அதன் சிறந்த கருத்துக்களை பகிர்ந்து அகில இந்திய அளவில் கத்தோலிக்க மாணவர்கள், நல்ல கிறிஸ்தவர்களாக வளர வழிசெய்தால் சிக்கலே இல்லை.
ஆனால் நடப்பது என்ன?
எல்லா மத மாணவர்களும் அதில் பங்கெடுக்கலாம், மருந்துக்கும் கிறிஸ்துவத்தை பற்றி சொல்லமாட்டார்கள், மாறாக போதிப்பது எல்லாம் இந்தியாவில் அரசு அப்படி செய்கின்றது, இப்படி செய்கின்றது, விழிப்புணர்வு வேண்டும், புரட்சி வேண்டும், இளைஞர்கள் உஷாராக இருக்கவேண்டும் இன்னபிற.
முழுக்க முழுக்க அரசுக்கு எதிரான கருத்துக்கள், நாடு அமைதியாக இருக்கவே கூடாது எனும் சிந்தனைகள்.
அன்பையும் ஒற்றுமையினையும் போதிக்க வந்த இயேசுபிரானின் போதகர்கள் அங்கு போதிப்பதெல்லாம் ஒரு மாதிரியான துவேஷங்கள், பிரிவினைகள் இன்னும் ஏராளம்.
நாம் அதில் இருந்த காலங்களில் வாஜ்பாய் பிரதமர், நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது நாடு. அவரும் அமைதிக்கான முயற்சியினை எடுத்து பாகிஸ்தானுக்கு எல்லாம் பஸ் விட்டு பெருந்தன்மையாக நடந்துகொண்டிருந்தார்
ஆனால் இங்கு போதித்தது என்ன? இந்துத்வா நாடாகின்றது, ஐயகோ அழிகின்றது என கடும் அட்டகாசம்
அன்றே அந்த இயக்கம் மீது மதிப்பு போயிற்று, சமூக ஒற்றுமையோ, நல்ல அமைதியான இந்தியாவோ இவர்களுக்கு பிடித்தமானது அல்ல என்பது நன்றாக விளங்கிற்று.
இந்த கூடங்குள எதிர்ப்புகளை அன்றே மாணவர்களுக்கு சொல்லி வெறியூட்டினார்கள், கண்ணால் கண்டவன் நான்.
மிக உறுதியாக சொல்லலாம், அய்க்கப் என்பது ஒரு நக்சலைட் போன்ற மனப்பான்மையுள்ளோர் உருவாகும் இடம். அவர்கள் போதனை அப்படித்தான் இருக்க்கும்
நாட்டுக்கும் அரசுக்கும் எதிரான கருத்துக்களை விஷமாக மாணவர் மனதில் விதைப்பார்கள். அறிந்தும் அறியாத பதின்ம வயதில் இருக்கும் மாணவர்கள் மனதில் அது விஷமாக ஏறிவிடும். பின் அவர்களால் இந்நாட்டிற்கு எப்படி நன்மை விளையும்?
புரட்சி, போராடு, மாற்றியமை என்றெல்லாம் ஏற்றிவிடுவார்கள். ஆனால் கல்லூரிக்குள் தேர்தல், சில வசதி குறைபாடுகள் என்று உரிமைகுரல் எழுப்பினால் விட மாட்டார்கள்.
ஆம் அவர்களை பொறுத்தவரை கல்லூரியில் அமைதிகாக்க வேண்டும், எப்படி இருந்தாலும் பொறுத்துகொள்ள வேண்டும், மீறினால் டிசி வரும் இன்னும் என்னெல்லாமோ வரும்.
ஆனால் கல்லூரிக்கு வெளியே அவன் போரடவேண்டும் உரிமை குரல் எழுப்பவேண்டும், எப்படி இருக்கின்றது இந்த தத்துவம்?
இந்த அய்கப் என்பது சில வெளிநாட்டு மூளைகளால் நடத்தபடுவது, பாதிரியார்கள் எனும் போர்வையில் பல விஷ சிந்தனைகளை விதைக்க நடத்தபடுவது
ஆனால் வெளியே பெரிதாக தெரிவதில்லை என்பதுதான் விஷயம்.
அப்படி திருச்சி வளனார் அதாவது திருச்சி ஜோசப் கல்லூரியின் அய்க்கப் அமைப்பு சீமானை பேச அழைக்கின்றதாம்.
அய்க்கப் ஒரு நல்ல இயக்கம் என்றால் சீமானை அழைக்குமா? பேசுவதற்கு வேறு யாருமே இல்லையா?
எப்படிபட்ட சிந்தனையாளர்கள், அறிவாளிகள், வாழும் காமராஜரான நல்லகண்ணு போன்ற தியாகிகள் உள்ள மாநிலம் இது, இங்கு சீமான் தான் வரவேண்டுமா?
நக்சலைட்டுகளை போன்ற அபாயகரனான ஆட்களை உருவாக்கும் அய்க்கப் சீமானை அழைப்பதில் என்ன ரகசியம் இருக்க முடியும்?
நாட்டுபற்று கொஞ்சமும் இல்லாத ஒரு விபரீத இயக்கம், அந்நிய நாட்டு தீவிரவாதியின் கொடிபிடிப்பவனை அழைத்து மாணவர்களிடையே பேசவைப்பது வெட்கத்திற்கும், கண்டனத்திற்கும் உரியது
ஆக கிறிஸ்தவ கல்லூரி, கிறிஸ்தவனான சீமானை அழைத்து மாணவர்களை திசைமாற்றுகின்றது என்ற பெரும் களங்கத்திற்கு இடமளித்துவிட்டது திருச்சி செயின்ட் ஜோசப் என்ற புகழ்மிக்க கல்லூரி..
சுஜாதா, அப்துல் கலாம் போன்ற மாமனிதர்களை தந்த அந்த கல்லூரி இந்த தற்குறி சீமானை அழைத்து சில பயங்கரவாதிகளை உருவாக்க தரமிழந்துவிட்டது பெரும் சோகம்..
உறுதியாக சொல்லலாம், இந்த அய்க்கப் இயக்கம் கண்காணிக்கபடவேண்டியது, அதில் பங்கேற்றிருக்கும் மாணவர்களை கண்காணிக்கும் பொறுப்பு பெற்றோருக்கு நிச்சயம் உண்டு..
இவ்வளவுநாள் இல்லையெனினும் இனியாவது அப்பெற்றோர்கள் கண்காணிக்கட்டும்.
இப்படிபட்ட கல்லூரிகளை கண்காணிக்கும் பொறுப்பு அரசுக்கு உண்டு, அவர்கள் கூட்டத்தில் ஒரு காவல்துறை அதிகாரி பங்கேற்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் கூட்டம் நடக்கட்டும்
அங்கு இந்த சீமான் போன்றவர்கள் குதித்தால் அப்படியே அள்ளிகொண்டு செல்லட்டும்,
மாணவபருவம் என்பது மிக கவனமாக உருவாக வேண்டிய பருவம், அவர்களை நல்ல குடிமக்களாக உருவாக்குவதுதான் கல்லூரியின் கடமை. ஒருவித வன்மமிக்க, நாட்டுபற்றில்லாத தலைமுறையினை உருவாக்குவது மாபெரும் தவறு..
அப்படிபட்ட தவறினை கல்லூரிகள் செய்யுமாயின் அவற்றின் மீது அரசு நடவடிக்கை எடுப்பதே வருங்கால தலைமுறைக்கு நல்லது.
திருச்சி கல்லூரியின் அய்க்கப் அமைப்பு, இந்த சீமானை அழைத்து அந்த மாணவர்களை பாழ்படுத்துவதை நாட்டுபற்றுள்ள ஒவ்வொருவரும் கண்டிப்பார்கள்.
அந்த அய்க்கப் இயக்கத்தை கட்டுக்குள் கொண்டுவரவேண்டியது அரசு பொறுப்பு, அது பல குழப்பங்களை நாட்டில் ஏற்படுத்தும்
கத்தோலிக்க மாணவர் பேரவையில் அரசிலுக்கு என்ன அவசியம்? அதிலும் சீமான் எல்லாம் வந்து பேச என்ன உண்டு?
ஈழத்தை எரித்தது போதாது என தமிழகத்தையும் எரிக்க கிளம்பிவிட்டார்கள் இவர்கள்.
நடப்பது எல்லாம் நன்றாக இல்லை, இதனை அரசு வேடிக்கை பார்ப்பதும் சரியல்ல.
ஒரு மண்ணும் தெரியாத , குறுகிய மனப்பான்மையுள்ள வெறிபிடித்த ஒரு வருங்கால சமூகத்தை உருவாக்குவது மாபெரும் பாவம்.
பாரம்பரியமிக்க அந்த திருச்சி வளனார் கல்லூரி இப்படி தரம்தாழ்ந்து போய்விட்டதை எண்ணி அந்த சபையினை தமிழகத்தில் தொடங்கிய பிரான்ஸிஸ் சவேரியார் என்பவர் சிலையினை பார்த்து கண்ணீர் விடத்தான் தோன்றுகின்றது.
அய்யப்பில் இருக்கும் மாணவர்களுக்கு சொல்லிகொள்வது ஒன்றுதான்
நாம் அதில் இருந்த சில நாட்களில் அதற்கு பொறுப்பான பாதிரியிடம் கேட்டோம்
"இப்படி எல்லாம் புரட்சி, விழிப்பு என்றெல்லாம் சொல்லிகொண்டே இருக்கின்றீர்களே?, இதில் இருந்து உருவான பெரும் புரட்சியாளன் யாராவது உண்டா?"
அவர் உடனே பெருமையாக சொன்னார்
"வை,கோப்பால்சாமி போன்றோர் இதில் இருந்தார்களாம் தெரியுமா?"
அதன் பின் நாம் செய்த முதல் வேலை அய்யக்க்பினை தலைமுழுகியது
வைகோ ஏன் இந்திய எதிர்ப்பு பிடித்து அலைந்தார், புலிகளுடன் கைகோர்த்தார், ராஜிவ் கொலைவரை எப்படி அவர் பெயர் அடிபட்டது என்பதெல்லாம் அன்றுதான் விளங்கிற்று.
வைகோ ஏன் இன்றுவரை திருந்தவில்லை என்பது உங்களுக்கும் விளங்கும், மாணவ பருவத்தில் அவருக்கு அப்படி விஷ ஊசி போட்டிருக்கின்றார்கள்.
ஆக மாணவர்களே, யாராவது தீவிரமாக அய்கப்பில் இருந்தால் வைகோ போல் ஆகிவிடுவீர்கள் ஜாக்கிரதை.
கடைசியாக இயேசுநாதர் பாணியில் இந்த நிகழ்வுகளை அனுமதிக்கும் திருச்சி கல்லூரி பாதிரிகளை இப்படி சொல்லிவிடலாம்
"ஏ.. போலி பாதிரிகளே, விரியன் பாம்பு குட்டிகளே, உங்களுக்கு ஐயோ கேடு.."
நன்றி Stanley Rajan
Stanley Rajan
ReplyDelete7 mins ·
தமிழர்கள் சாதி மதம் இல்லாமல் ஒற்றுமையாக இருந்தார்களாம், பின் ஆரியர்கள் வந்து மதத்தை கொண்டுவந்தார்களாம்
இதில்தான் பல்லவர், இன்னபிற மன்னர்கள் எல்லாம் தமிழரை அடிமைபடுத்தினார்களாம்
பின் நாயக்கர்கள் வந்து பிரித்தார்களாம், கொடுமை படுத்தினார்களாம், அடிமைபடுத்தினார்களாம்
சாதியும், மதமும் இருக்கும் வரை தமிழன் பிரிந்தே இருப்பானாம். இல்லாவிட்டால் அவன் ஒற்றுமையில் உலகையே வெல்வானாம்
இப்படி ஒரு கும்பல் சொல்லிகொண்டிருக்கின்றது, முன்பே சொன்னது போல திருச்சி வளனார் கல்லூரியின் நக்சலைட்டுகள் தயாராகும் இடமான AICUF இதை கண்காட்சியாக சொல்லிற்றாம்
இந்த அரைகுறை பைத்தியங்களுக்கு ஒரே கேள்விதான்
தமிழகம் என்று ஒரே இனமாக இருந்தது?
முன்பே அது சேர,சோழ, பாண்டிய இனமாகத்தான் இருந்தது
இதில் கடையேழு வள்ளல், முதலேழு வள்ளல், கொங்கு, தொண்டை மண்டலம் என ஏகபட்ட சிற்றரசும் இருந்திருக்கின்றது, கிட்டதட்ட 25 நாடுகள் இருந்திருக்கின்றன
ஆக தமிழகத்தில் அன்றே பல அரசுகளும், அவற்றிற்கிடையே பெரும் போர்களும் நடந்திருக்கின்றன
புறநானூறு சொல்வதெல்லாம் என்ன?
தமிழர்களுக்கு இடையே நடந்த சண்டையினைத்தான் அவை வீர காவியமாக படைத்திருக்கின்றன
தஞ்சாவூர் கல்வெட்டே சோழன் பாண்டியரை அடக்கிய விதத்தைத்தான் சொல்கின்றது
50 மைலுக்கு ஒரு அரசன், அவனுக்கு 100 மனைவி. அந்த அரசர்களுக்கு இடையே சண்டை என்றுதான் தமிழகம் இருந்திருக்கின்றது
ஈழம் மட்டும் என்ன?
அங்கும் கண்டிக்கு ஒரு அரசன், யாழ்பாணத்திற்கு ஒருவன், வன்னிக்கு ஒருவன் என்றுதான் இருந்திருக்கின்றார்கள்.
இதில் தமிழகம் பெரும் ஒற்றுமையாக இருந்த நாடு போலவும், அந்நியன் எல்லாம் வந்து சாதி மதமாக பிரித்து அடிமைபடுத்தியது போலவும் ஏகபட்ட பில்டப்புகள்
இந்த மாதிரி உளறுபவர்களிடமும், நக்சலைட்டுகள், தீவிரவாதிகளை உற்பத்தி செய்யும் AICUF அமைப்பிடமும் மாணவர்களும் இளைஞர்களும் எச்சரிக்கையாய் இருப்பது நலம்